இதயம் 18
கண்ணாடி இதயமடி
இதயம் : 18
அந்த இரு மாதமும் பயங்கரமான காற்றும் மழையும் வெளுத்து வாங்க தேவாவும் ,அன்பும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்..அவர்களுக்கு சந்தோஷமே ஏனெனில் வெளியே எங்கேயும் செல்ல வேண்டாமே ஒருவர்க்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தனர்... அதே போல அவன் இட்ட அவனது சங்கிலியே அவளது தாலியாக மாற புதிதாக ஒன்றை அவன் அவளுக்கு அணிவிக்கவில்லை..
அதேயே தாலி போல பாவித்தவளுக்கு எதுவும் நியாபகத்துக்கு இல்லை.. விட்டால் அவளது பெயரை கூட மறந்து விடுவாள் போல அவளுக்கு அவன் மீது பைத்தியமே பிடித்து இருந்தது..அவள் மனம் முழுவதும் அவன் மட்டுமே..அவனும் வெகுவாக மாறி இருந்தான் அவனுடைய மன அழுத்தம் வெகுவாக குறைந்து விட்டது..அவன் நார்மல் மனிதன் போல இருக்க துவங்கி விட்டான்..எல்லா விஷயங்களிலும் ஒரு துள்ளல் காணப்பட்டது..மிகவும் மகிழ்ச்சியுடன் அவனது தொழிலில் பல நாட்களுக்கு பிறகு இறங்கி இருந்தான்..எங்கே செல்லும் போது அவளை அழைத்து செல்வான்.. இப்போதும் கூடுதல் நேரத்தை வீட்டில் தான் செலவு செய்கிறான் அப்போது தானே அவளுடன் காதல் லீலைகள் புரிய இயலும்..
காலை எழுந்தார்கள் என்றால் ஒரு கப்பில் அவனது மடியில் காபி குடிப்பது முதல் ஒரே நேரத்தில் குளியல் ஒரே தட்டில் உணவு என ரொம்பவே நெருக்கமாக இருக்க யார் கண் பட்டதோ அவர்கள் நெருக்கத்தை தடை செய்ய பிரபு தேவா எஸ்ட்டேட்க்கு வந்தான்..
முன்னறிவிப்பு ஏதும் இன்றி அவனது கார் காம்பௌண்ட்க்குள் நுழைய, " டேய் மச்சி "..என்று தேவா வெகு நாட்களுக்கு பிறகு சிரித்த முகத்தோடு தன் நண்பனை வரவேற்றான்..
அவனும் ஆரத்தழுவி கொண்டு காரின் பின் சீட்டை திறக்க அங்கே ஒரு குழந்தை தான் எங்கே இருக்கிறோம் என புரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டு இருந்தது அந்த குழந்தைக்கு ஒரு ஒன்றரை வயது இருக்கலாம் ..
அந்த குழந்தைக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரிப்படாமல் முழிக்க பிரபுவோ , "இன்பா என்ன பார்க்கிற"... என்று அவனை எடுப்பதற்கும்
வீட்டுக்குள் இருந்து அன்பு ஓடி வரவும் சரியாக இருக்க அன்பை கண்ட குழந்தை, " அம்மா"... என்று தெளிவாக கூறி சிரிக்க அந்த இடத்தில் அன்பு உடைந்தாள்..
எவ்வளவு நாள் ஆகிற்று அவளது செல்லத்தை கண்டு..
"இன்பா குட்டி அம்மா கிட்ட வாங்க"... என்று கூற
இன்பா ஓடி வந்து தாவினான்..அந்த இடத்தில் இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த தேவாவின் விழிகளுக்கு என்ன குழந்தையா அதுவும் அம்மா சொல்றா அப்போ இவளோட குழந்தையா என அவன் அதிர அவன் மட்டும் தான் அதிர்ந்தானே ஒளிய வேறு யாரும் அதிர்வில்லை..
"அம்மா பார்த்ததும் என்னை மறந்துட்டியா ??"... என்று பிரபுவும் கேட்க அன்பரசியின் கண்கள் முழுவதும் இன்பா ஆக்கிரமித்து இருந்தான்...அவள் தேவாவை ஏறிட்டும் பார்க்காமல் இருக்க தேவாவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது..
"என்ன டா இப்படி பார்க்கிற அது நம்ம அன்பரசி குழந்தை டா உன்கிட்ட வேலைக்கு வரதுக்காக குழந்தைய காப்பகத்துல விட்டு இருந்தா ..கூடவே அவளோட அம்மாவும் அங்கே தான் இருந்தாங்க இப்போ அவங்க அம்மா இறந்துட்டாங்க செய்தி சொல்ல எவ்வளவோ முயற்சி செஞ்சேன் முடியல அவங்க இறுதி காரியத்தை எல்லாம் நான் தான் முன்னிருந்து நடத்தி முடிச்சேன்..
இப்போ சின்ன குழந்தை வேற எவ்வளவு நாள் தான் அவனை அவனோட அம்மா கிட்ட இருந்து பிரிச்சு வைக்கிறது அது தான் அவனை கூட்டிட்டு வந்தேன்"..என்று ஒரு மூச்சில் நடந்த சம்பவத்தை கூற
"என்ன சார் சொல்றிங்க அம்மா இறந்துட்டாங்களா??"...என்று அதிர்ச்சியாகி கேட்க அவருக்கு வேண்டி தானே அவள் இங்கே வந்தாள்.. அவர் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாரே என துடிக்க பிரபு சமாதானம் செய்து கொண்டு இருந்தான்..
அந்த இடத்தில் தேவா என்ற கருங்கல் சிலை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது கூடவே அவனது மனம் உலைகலன் போல கொதித்து கொண்டு இருந்தது
என்னது மகனா என்று அந்த குழந்தையை பார்க்க குழந்தையும் அவளை உரித்து வைத்து இருந்தது..அப்போ இவள் இவ்வளவு நாள் என்னை ஏமாற்றி இருக்கிறாளா என நெனைத்தவனுக்கு உள்ளம் வெடிக்கவில்லை அவ்வளவே மாற்றான் மனைவியுடன் தான் இவ்வளவு நாள் படுத்து இருந்தேனா என நினைக்கும் போதே அவனது உடல் கூசி சிலிர்த்தது..
அப்போ இன்று காலையில் தானே என் உதிரம் அவளது வயிற்றில் வளர்கிறது என நினைத்து சந்தோசம் கொண்டேன் இப்போது என்ன இது என அவன் குழம்பி நிற்பதற்கு தகுந்தது போல பிரபு அவளுடைய ஜாதகத்தை புட்டு புட்டு வைக்க தேவ ராஜ் மீண்டும் இறுகினான்..
என்ன நெனைச்சுட்டு இருக்கா என்று மனதுக்குள் அங்கே அழுது கொண்டு இருப்பவளையும் குழந்தையும் கண்டவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், " பிரபு நீ வர வரைக்கும் இங்கே இருக்கட்டும்ன்னு தான் இவளை இங்கே நீ அனுப்பி வைச்ச இப்போ அவளை கூட்டிட்டு நீயும் கிளம்பு இன்னிக்கே அவ இங்கிருந்து கிளம்பனும் "..என்று இறுகிய குரலில் கூற பிரபு அன்பு இருவரும் அவனது வாக்கியத்தில் அதிர அவனோ என்னோட வேலை முடிந்தது என்பது போல உள்ளே செல்ல பின்னாடியே ஓடினாள் அன்பு..
"சார் சார்"... என்க அவனோ இறுகிய படி நின்றவன், " இதோ பார் என்னை பேச வைச்சு வேடிக்கை பார்க்காத ஒரு குழந்தைக்கு அம்மா வா இருந்துட்டு தான் என்கூட படுத்து வயித்துல சுமந்துட்டு நின்னுட்டு இருக்கியா?? மரியாதையா கிளம்பிடு இல்ல என்ன நடக்குமுன்னு எனக்கு தெரியாது"... என அவன் கொதித்தான்..
"என்னங்க நான் சொல்றதை"... என்று அவனது தோளை தொட போக தீ சுட்டது போல அவன் நீங்கி நின்றவன், " எனக்கு அடுத்தவன் சாப்பிட்ட எச்சி இலையில் சாப்பிடணும்ன்னு எந்த அவசியமும் இல்லை சீ போடி"... என்றவன் அவனது கதவை முகத்தில் அறைந்தது போல அடித்து சாத்த என்ன நடந்தது என புரியாமல் பிரபு யோசித்து கொண்டே பயணம் செய்ய அவனையும் திட்டி தான் தேவா அனுப்பி இருந்தான் , "எதுக்கு இவளை அனுப்பி வெச்ச எனக்கு கூட்டி கொடுக்கவா??".. என்று கூற
அந்த வார்த்தையை கேட்டதும் அவனுக்கு புரிந்து போனது இவர்களுக்குள் ஏதோ ஒரு உறவு இருந்து இருக்கிறது என்று ஆனால் அந்த விஷயம் அவனுக்கும் அதிர்ச்சியே..அவனது மனதில் அன்பு பல படிகள் தூக்கி பிரபு வைத்திருக்க அதை நொடி பொழுதில் அவளே இறக்கி வைத்து விட்டாள் அவள் ஒரு தரங்கெட்டவள் என இரு ஆண்களுக்கு அவள் தன்னை புலப்படுத்தி கொண்டாள்... பின்னால் ஒரே நாளில் பல இடிகளில் சிக்கியவள் தனது மகன் இன்பாவின் முடியை நீவி விட்டு கொண்டே கண்ணீரோடு மூக்கூர்த்தியை விடை பெற்றாள்…
