Share:
Notifications
Clear all

எனதுயிரே 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 9

அவன் கொடுத்து பேட்டியை உலகமே வேடிக்கை பார்த்தது.. அகிலன் நினைத்தது போல, அமிர்தவர்ஷினி அவனிடம் தான் இருக்கிறாள் என்றாலும் அவன் கூறிய விஷயத்தை எல்லாம் கேட்டு அவள் எதிர்க்காமல் அவள் இருக்கிறாளே என அகிலன் திகைத்து நின்றான்.. அகிலன் முதல் முதல்வர் கார்மேகம் வரை அனைவரும் ஆத்திரத்தத்துடன் தான் இருந்தனர்..

"இவனை உள்துறை அமைச்சர் ஆக்கனும்னு அவனோட அப்பன் சொன்னதுக்காக இவனை ஆக்கலாம் என்று பார்த்தால் இவன் உன்னை கல்யாணம் பண்ணிக்காம எவளோ ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பேட்டி கொடுக்கிறான் என்ன தைரியம் இருக்கும்?" என்று வசுந்தராவை பார்த்து கேட்டார் கார்மேகம்..

அதற்கு அவளோ, "அப்பா நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறோம்ன்னு என்னைக்காவது சொல்லி இருக்கோமா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு போகட்டும்..எனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை" என அவள் கூறினாள்..

அதை கேட்ட அவர், "அப்படி எல்லாம் விட முடியாது இப்போவே அவனை கூப்பிட்டு என்ன விசயம்னு கேளு" என அவர் கொந்தளித்து பேசினார்..ஏனெனில் அவருடைய மகளின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கிறதே...ஏனெனில் அவருக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள் அப்படி இருக்க இவனை பட்டை தீட்டி தான் கட்சியை இவன் கையில் வரும் காலத்தில் ஒப்படைக்க வேண்டும் என நெடுஞ்செழியன் மற்றும் கார்மேகம் இருவரும் முடிவு எடுத்து இருந்தார்கள்...

அப்படி நெடுஞ்செழியன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் ஒரு கயிறு கார்மேகத்திடம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க அவர் முடிவு செய்து இருந்தார்.. ஆனால் அது இப்படி தவிடு பொடியாகும் என அவர் நினைக்கவில்லை..

"அதனால் என்ன பண்ணுவியோ ஏது பண்ணிவியோ தெரியாது..இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்" என அவர் கூற வசுந்தரா செய்வது அறியாது மனதுக்குள் சாணக்கியனை திட்டினாள்..

   காரில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போதே ஒரு எண்ணில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்தது.. எல்லாம் அவனுடைய பேட்டியை பார்த்து தான் அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவன் அமைதியாக இருந்தான்..எந்த போனுக்கும் அவன் பதில் சொல்லவில்லை...ஆனால் அவன் ஃபோனில் மீண்டும் ஒரு அழைப்பு வந்தது..

அதை எடுத்து பார்க்க வசுந்தரா தான் அழைத்து இருந்தாள்.. தன் மகளை இவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என கார்மேகம் நினைத்து இருந்தால் இவன் ஏதோ ஒரு பெண்ணை காட்டி திருமணம் செய்ய போகிறேன் என கூறுகிறானா என கார்மேகம் கடுப்பாக வசுந்தராவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க அதற்கு தான் என்ன விஷயம் என கேட்க வசுந்தரா அழைத்து இருந்தாள்..

ஃபோனை எடுத்ததும், "என்ன டா மினிஸ்டர் ஆகல அதுக்குள்ள நீ கொடுத்த பேட்டி எல்லாம் பலமா இருக்கு என்னமோ கல்யாணம் பண்ணிக்க போறியாம் எனக்கே தெரியல.." என  கேட்டாள் அவள்..

அதை கேட்டு பலமாக சிரித்த அவன் தன் அருகே அமைதியாக அமர்ந்து வரும் அமிர்தாவின் தோளில் சாய்ந்து கொண்டே, "அதுதான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே அதனால இப்போதைக்கு இவளை கல்யாணம் பண்ணிக்கிறேன் உனக்கு எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்போ சொல்லு உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா" என்று அவன் கூறினான்..

அதை கேட்ட அமிர்தா அதிர்ந்தாள்... எதிர்பக்கம் இருந்த வசுந்தரா, "அப்போ என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?"  என்று கேட்க, "உன்னை எப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேனோ அப்போ இருந்தது நீதான் எனக்கு பொண்டாட்டி இவ நான் தாலி கட்டினாலும் கட்டலைனாலும் எப்பவும் சைடு தான்.. நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு உனக்கு தெரியாதா தெரிஞ்சும் நீ என்கிட்ட கேள்வி கேட்க கால் பண்றியா?" என அவன் கேட்டான்.. அதை கேட்டு அமிர்தவர்ஷினி எரிச்சல் அடைந்தாள்...

அதற்கு அவளோ, "அப்பா ரொம்ப கோபமா இருக்காரு" என்க

"அதை நான் பார்த்துக்கிறேன் நீ வேணும்னா சொல்லு உனக்கு முதலில் தாலி கட்டுறேன் இரண்டாவது இவளுக்கு கட்டுறேன்" என அவன் கூற அவளோ, "போடா எப்போ பாரு இதே வேலை தானா உன்னை கல்யாணம் பண்ணி நான் மத்தவங்க சாபத்துக்கு ஆளாகிறதா?" என அவள் கேட்டாள்...

"என்ன டி இப்படி சொல்லிட்ட" என்க

"நீ பண்ணின பாவம் அப்படி" என கூறவும்

"இப்பவே இப்படி சொன்னா எப்படி? அப்போ நான் பண்ண போறதுக்கு எல்லாம் நம்ம லிஸ்ட்ல பாவம், அனுதாபத்துக்கு எல்லாம் வேலையே இல்லை சரி சாயந்திரம் வந்துடு" என கூற அவளோ, "முயற்சி பண்றேன்" என கூறி வைத்து விட்டாள்..

இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.. ஆனால் பெரியவர்கள் தான் அதற்கு முயன்று கொண்டு இருக்க வசுந்தராவுக்கு தான் அவனுடைய பேட்டி நிம்மதியை கொடுத்தது.. அவளுக்கு அவனை திருமணம் செய்ய வேண்டுமென எந்த விருப்பமும் இல்லை அப்படி இருக்க அவன் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு உள்ளுக்குள் அவளுக்கு மகிழ்ச்சி பரவியது ஆனால் இவர்கள் இருவரின் பேச்சை கேட்ட அமிர்தாவுக்கு தான் கடுப்பாக இருந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top