எனதுயிரே 25
.
அத்தியாயம் : 25
சாணக்கியன் இந்த விசயத்தில் இடிந்து போய் நின்று கொண்டு இருக்க அதை பார்த்து சிரித்த அகிலன், "உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கிட்டத்தட்ட முப்பது வருஷமா காத்திட்டு இருக்கேன்..உன்னோட அம்மா முகத்திரையை உன் முன்னாடி கிழிக்க காத்திட்டு இருக்கேன்..பணம், பதவி இருந்தா மட்டும் எதையும் அடைஞ்சிட முடியாது.. இவ்வளவு கேவலமான பேக்ரவுண்ட் அதுல பிறந்தவன் தான் நீ..
நீ வந்து என்னை கேள்வி கேட்கிற? அப்படித்தானே?..
இனி என் பக்கமோ, என்னோட அம்மு பக்கமோ வந்துடாத அவ்வளவுதான்.. இப்பவும் எனக்கு உன் முன்னாடி இதெல்லாம் சொல்லணும்னு நான் நினைக்கல.. ஆனால் சொல்ல நீ வச்சுட்ட உனக்கு இருக்கிற திமிரை அடக்கணும்னு சொல்லித்தான் இதையெல்லாம் நான் சொன்னேன்... இப்போ வந்த வேலை முடிஞ்சிடுச்சு பார்த்து ஒழுக்கமா இருந்துக்க தம்பி" என்று அகிலன் மேலும் சீண்டவும் சாணக்கியன் பொங்கி எழுந்து விட்டான்...
அதுவரை அவனால் அதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தான்..தாமரை குலுங்கி அழுவதை பார்த்தாலும் அவனால் சமாதானம் கூற முடியவில்லை..சமாதானம் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை..அவனால் தன் அம்மாவின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
தாமரையோ சாணக்கியன் முகத்தை பார்த்து தவித்து கொண்டு இருந்தார்..அவன் எதாவது தன்னை தவறாக எண்ணி விடுவானோ என நினைத்து, "கண்ணா, அவன் சொல்ற மாதிரி இல்ல.. அப்பாவும் நானும் காதலிச்சது உண்மை ஆனால் என்னோட வீட்ல அவரை நிர்பந்திச்சு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க.. எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை..அப்பாவோட பணத்தைப் பார்த்து எல்லாம் நான் மறுபடியும் அவரைத் தேடிப் போல என்னோட காதல் அதுக்காகத்தான் போனேன்" என அவர் சாணக்கியன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என எண்ணி அவர் கூறினார்..
அதைக் கேட்டு அகிலனுக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை.. ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் இவரை எல்லாம் அவன் மனுஷியாக கூட மதிக்கவில்லை.. இவர் இப்படி பேசுவதற்காகவே சாணக்கியனை குத்தி நோகடிக்க வேண்டும் என நினைத்தான்..அது நடந்து விட்டது அதில் இன்பம் கண்டான் அகிலன்.
பேரிடி என்று சொன்னால் பெரிய இடிதான் சாணக்கியன் தலையில் அகிலன் இறக்கினான்.. அதில் அகிலனின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தன் தாய் இப்படிப்பட்டவரா என கிரகித்துக் கொள்ள முடியாதவனுக்கு அகிலன் முன் தோற்று போக மட்டும் நினைக்கவில்லை..
அதனால் சாணக்கியனின் குணம் பற்றி தெளிவாக தெரியாத அகிலன் முன்னால் சாணக்கியன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை ஒன்றை வெளியே விட்டு, "அவ்வளவு தானே.. இதை போய் பெரிய விஷயமா சொல்லிட்டு இருக்க.. இவங்களுக்கு என்ன வேணா இருந்திருக்கலாம் இப்போ ஒரு குடும்பம் இருக்குல்ல நீ என்ன நினைக்கிறியோ அது நடக்காது.. இனிமேல் தானே உனக்கும் உன்னோட காதலிக்கும் இருக்கு.. இதோ பார் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் பேசி என்னை ஓரங்கட்டலாம்னு நினைச்சுடாத..
அதெல்லாம் நடக்காது.. இனி தான் என்னோட ஆட்டமே இருக்கு அதை வேடிக்கை மட்டும் பார், பை த வே இந்த விஷயத்தை எல்லாம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் வரட்டா.. இனி என் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்.. நீயும் பிரச்சினையை சந்திக்க தயாராய் இரு நானும் எதிரி நினைச்சேன் ஒரு வழியில நீ எனக்கு அண்ணன் தான் போல அண்ணனும் தம்பியுமா மோதுவோம்" என்று தன் அம்மாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டே கார் வரை திமிராக அகிலன் சொன்ன விஷயம் தன்னை பாதிக்கவில்லை என்பதை அகிலனுக்கு உணர்த்த வேண்டும் என்று கருதி அவன் அதை செய்ய அகிலன் அவனின் ஒவ்வொரு உணர்வையும் படித்துக்கொண்டு அங்கேயே நின்றான்...
கார் வரை கையைப் பிடித்துக் கொண்டு சென்றவன் காரருகே சென்றதும் கையை விட்டு, "ஏறுங்க" என்றான்.. அவரோ காரில் ஏறி இவன் தப்பா நினைத்து கொள்வானோ என எண்ணி, "நான் சொல்றதை கேளு சாணக்யா அவன் சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனால் எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை.. எனக்கும் உன் அப்பாவுக்கும் தான் பொருத்தம்.. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப காதலிச்சோம் ஆனால் அவர் ஜெயிலுக்கு போனதினால எங்க கல்யாணம் நடக்கல.. அதுக்குள்ள என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.. அந்த வாழ்க்கையில் எனக்கு விருப்பமில்லை திரும்ப தான் நான் எனக்கு பிடிச்ச வாழ்க்கைக்காக நானும் உன் அப்பாவும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது மற்றபடி வேறு எதுவுமே கிடையாது" என்று தன் மகன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ எனக்கு உறுதி உண்மை எல்லாம் கூற அதைக் கேட்டவன் பதில் ஏதும் சொல்லவில்லை அப்படி அமைதியாக இருந்தான்... ஆனால் அவனுக்கு கோபம் கோபமாக கோபமாக வந்தது..ஏற்று கொள்ள முடியவில்லை..அவன் அம்மா செய்த காரியத்தை அவ்வளவு எளிதாக அவனால் கிரகித்து கொள்ள முடியவில்லை...அகிலன் அப்போது எனக்கு முன் என் அம்மாவின் வயிற்றில் பிறந்தவன் என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை..
அவன் அமைதியாக இயல்பாக இருப்பதைப் போல நடித்தவன் தாமரை தன்னை தவறாக நினைக்க கூடாது என எண்ணி அவர் வரும் வழியில் எல்லாம் அழுது புலம்புவதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தவன் அவருக்கு ஆதரவும் கொடுக்கவில்லை..
வீட்டுக்கு வந்தும் அவன் எதுவும் பேசாமல் இருந்தான்.. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன் தாயிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான்.. அப்படியே வீட்டுக்கு வருவதுமில்லை விஷயம் நெடுஞ்செழியன் காதுக்கு சென்றாலும் நெடுஞ்செழியன் தாமரையின் வருத்தத்தை உணர்ந்து தன் மகனிடம் பேச போனார்..
