எனதுயிரே 27
.
அத்தியாயம் : 27
அவளின் திகைத்த விழிகளை பார்த்தவன், "என்ன அப்படி பார்க்கிற சீக்கிரம்?" என அவனுடைய சட்டை பட்டன்களை அவிழ்க்க துவங்கினான்..ஆம் அவனுக்கு இந்த நொடி அவள் அவனுக்கு வேண்டும் அவ்வளவே..
அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை அவள் இருக்கும் மனநிலையில் இதெல்லாம் என்ன என்பது போல அவளுக்கு தோன்றியது.. ஆம் அவளுடைய மனநிலைக்கும், அவனுடைய மனநிலைக்கும் வித்தியாசம் நிறைய இருந்தது..அவனின் அவசரம் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..
அவனோ அதற்குள் சட்டையை கழட்டி, அவனின் புஜத்தையும் அவனின் முறுக்கு ஏறிய உடலை காட்டியபடி நிற்க, அவள் கண் முன் தெரியும் அவனுடைய திண்ணிய மார்பில் அவள் பார்வை பட்டு அவளின் முகம் சிவந்து பீதியை கூட்ட அவளோ, "இதெல்லாம்.." என பதட்டத்தில் இழுத்தாள்..
அவனோ, "அதைத்தான் சொல்றேன் இதெல்லாம் வேண்டாம் கழட்டிட்டு வா" என அவளின் உடையை காட்டி கூறினான்..
அவளோ உடனே பதறி, "நான் சொல்றது இந்த மாதிரி எல்லாம் வேணாம்" என கூற, அவனோ நக்கலாக சிரித்து, "ஏன் டி தாலி கட்டுறதுக்கு முன்னாடியே உன்னை முழுசா பாத்துட்டேன்.. தாலி கட்டி நான் என்ன பூஜை பண்ணவா உன்னை கூட்டிட்டு வந்தேன்?" என்று கேட்டான்..
அதை கேட்டு அவளோ அதிர்ந்து கொண்டிருக்கும் பொழுதே அவன் அவள் அருகே வந்தவன் அவளின் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்தான்..
இழுத்த விசைக்கு அவன் மார்பில் அவள் வந்து விழ அவனும் அவளை தன்னுள் புதைத்து கொள்ள முடிவெடுத்தாள்..
அவளோ அவனிடம் இருந்து விலக பார்க்க, அவன் முகத்தை கைகளில் ஏந்தி, "உனக்கு என்ன வேணும் உன்னோட அண்ணன், அப்பாவை விடனும் அவ்வளவு தானே கண்டிப்பா விட்டுடுவேன்.. அதுக்கு முன்னாடி நீ வா" என அவளை தூக்கி மஞ்சத்தில் போட்டவன் அவள் மேல் படற துவங்கினான்.. அவளை வேறு யோசிக்க எல்லாம் அவன் விடவில்லை..
அவளோ அவனின் தீண்டல்களை பார்த்து ஒரு பதறியவள் உள்ளம் குலுங்கியது..அவளின் அதிர்ச்சியை பார்த்தவன், "அவளின் முகத்தை பார்த்து என்னோட கைகள் உன் மேனியில் படாத இடமில்லை.. ஒவ்வொரு முறையும் நான் தொடும்போதெல்லாம் பதட்டப்பட்டு கொண்டே இருந்தா நீ சாகும் வரை பதட்டப்பட வேண்டியது தான் லைசன்ஸ் வாங்கி முறையா எல்லாம் பண்ண போறேன் அதை தடுக்காத" என்றான் சாணக்கியன்..
அதை கேட்டவள் அவன் சொன்ன உண்மை அவளை சுட்டது..ஆம் இவன் என்ன என்னை இதெல்லாம் செய்யாததா என்னை தான் இவன் ஏற்கனவே நாசம் செய்து விட்டானே என நினைத்தாள்.. அந்த நினைப்பே அவளை கொன்றது...
ஆனால் அவனோ அவளை ஒவ்வொரு அணுவாக ரசித்து ரசித்து அவளை ரசிக்க தூண்டி அவளின் பதட்டத்தை குறைத்து, அவளோடு கலக்க முற்பட்டான்...ஆம் அவள் மீது அவனுக்கு கரை புரண்ட மோகம் வந்தது..
அவளோ ஆரம்பத்தில் துடிக்க இனி எல்லாம் முடிந்தது இனி என்ன இருக்கிறது என எண்ணியவள் அவனோடு போராடிய வன்மையான போராட்டத்தில் அவளும் கூடி கலந்து விட்டாள்..ஆரம்பத்திலேயே அவனுடைய தொடுகைக்கு அவளுடைய உடல் பழக்கப்பட்டு இருந்தது..
அப்படி இருக்க இப்போது அவனின் வேட்கைக்கு அவளே விருந்தாக அமைய அது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது..அவள் உடல் இவ்வளவு அற்பமானதா என எண்ணினாள்..
அவனை பிடிக்கவில்லை கட்டாயப்படுத்தி தாலி கட்டி இருக்கிறான்.. ஆனால் இப்பொழுது அவனின் கூடலுக்கு அவளுடைய உடலும் கலந்து போகிறதே எப்படி ஒருவேளை தன் உடலும் ஏற்கனவே அவன் தீண்டிய தீண்டலுக்கு பழக்கப்பட்டு விட்டதோ என வருந்த, அவன் அவளை ரசித்து தீண்டி ஒரு பூவை போல அவளை கையாள அவனின் மிருதுவில் அவளும் கலந்து போக இவனுக்கு இப்படி ஒரு மென்மையான பக்கம் இருக்கிறதா என அந்த நேரத்திலும் அவளை நினைக்க வலது எல்லாம் முடிந்து அவளை அணைத்து அவளின் முகத்தில் தன் முகத்தை வைக்க அவளின் விழியோரம் வழிந்த கண்ணீரை பார்த்தவன், அடுத்த நொடி திடுக்கிட்டு அவன் முகம் சூடானது..
அது அவனுடைய முகத்தில் வெளிப்பட்டு அவளை பார்த்து, "இதோ பார் இந்த செண்டிமெண்ட்டா அழுது நடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.. நீ அந்த அளவுக்கு நல்லவளும் இல்ல.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் பின்னாடி சுத்திட்டு இருந்தா அவனும் நல்லவன் கிடையாது.. இந்த ட்ராமா, சிம்பதி பண்ணி நான் உன்னை கொடுமை படுத்துற மாதிரி நீ ஆக்ட் பண்ணினா பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்..
ரியாலிட்டிக்கு வந்துடு.. நான் உன்னுடைய குடும்பத்தை விடனும் அப்படின்னா நீ என்கூட வாழ்ந்து தான் ஆகணும் இந்த வாழ்க்கை நான் உனக்கு மட்டும் கொடுக்கிற அடி கிடையாது அந்த அகிலனுக்கு சேர்த்து கொடுக்கிற அடி..
இப்போ நான் அவங்களை விட்டாலும் அவங்க எந்த மூலைக்கு ஓடி ஒளிஞ்சாலும் என்னுடைய கண் அவங்க மேல இருந்துகிட்டே இருக்கும்.. நீ எப்போ என்னை விட்டு விலகனும் அப்படின்னு முடிவு பண்றியா? அந்த நொடி யாருமே உயிரோடு இருக்க மாட்டாங்க..
நான் நல்லவன் வேஷம் போட்டு நடிக்கிற அகிலன் மாதிரி கிடையாது.. நான் கெட்டவன் அதை சொல்ல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது... எனக்கு யாரும் நல்லவன் பட்டம் கொடுக்க வேண்டாம்..
நான் என்ன நினைக்கிறேனோ அது எனக்கு நடக்கணும் தாலி கட்டிட்டு உன்னை என் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து ஒரு அமைச்சரோட பொண்டாட்டியா இப்போ நீ ஊரறிய தெரிஞ்சிருக்க, அப்படி இருக்கும்போது உன்னை மனைவியா யூஸ் பண்ணிக்காம வேற எப்படி யூஸ் பண்ண சொல்ற? அப்படியே நீ அழுதுகிட்டே இருப்ப! நான் அதை பார்த்து உன்னை முறைச்சுக்கிட்டே இருக்கணுமா அந்த வேலையெல்லாம் நடக்காது சோ பார்த்து கவனமா புத்தியுடன் நடந்து கொள் கொஞ்சம் கொஞ்சமா மாறிடு.. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.
இல்லை என்ன வேணாலும் நடக்கும்.. அந்த அளவுக்கு கடுப்புல இருக்கேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. சோ இனி அகிலன் அப்படி என்கிற அத்தியாயத்தை மறந்து அமிர்தவர்ஷினி சாணக்கியன் அப்படிங்கற அத்தியாயத்திற்கு வா" என்று கூறியவன் அப்பொழுதும் அவளை விடாமல் மேலும் இருக பற்றி கொண்டான்..
அவன் பேசிய பேச்சை கேட்டு அதிர்ந்து போய் இருந்தவள் இவனெல்லாம் மனிதன் தானா மிருகம் அடுத்தவர் உணர்வினை கொஞ்சம் கூட மதிக்காத மிருகம் இவனுக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன்னுடைய உணர்ச்சியை காட்டுவதில் எள்ளளவும் பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவள் உனக்கு என் உடல் தானே வேண்டும் எடுத்துக்கொள் என எண்ணி இனி அவன் முன்னால் ஒரு துளி கண்ணீர் வடிக்கக்கூடாது என முடிவு செய்தாள் அமிர்தா..
அவளோ அவனை பார்த்து, "உன்னை மாதிரி ஒரு மிருகத்துக்கு என்னோட உடல் தான் வேணும்ன்னா எடுத்துக்கோ இதுக்காக நான் அழ மாட்டேன்" என்றாள்..
அதை கேட்டவன் அவளை நக்கலாக பார்த்து, "நான் மிருகம்ன்னா என் கூட கலந்து உருகி இருந்த நீ யாரு?" என பச்சையாக கேட்டான்..
அப்போது அவள் முகம் சிவக்க அவனோ, "பேசும் போது பார்த்து பேசு இல்லாட்டி ரொம்ப ஒபனா நான் பேசிடுவேன் அதைக் கேட்டு நீதான் வருத்தப்பட்டு இருக்கணும் நீ என்ன பேசினாலும் நான் கவலைப்பட போறதில்லை" என்றான் அவன்..
அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டு, "ச்சீ காஜி பிடிச்ச உன்கிட்ட பேசினதே தப்பு தான்" என அவள் முறைக்க, "தட்ஸ் குட்.. இப்படி இருந்துட்டா நமக்குள்ள எந்த பிரச்சினையும் வராது ஏனென்றால் உன்னோட வாழ்க்கை முழுவதும் என்னோட முகத்தை தான் பார்த்தாகணும் நீ எத்தனை நாள் சண்டை போட முடியும் சொல்லு பார்ப்போம்" என்று வாழ்க்கை முழுவதும் உனக்கு இது தான் கதி என்பதை அவளுக்கு மீண்டும் புரிய வைத்தவன் அவளை அணைத்து கொண்டு விட்டத்தை பார்த்து ஆலோசிக்க துவங்கினான்..
அதே நேரம் அகிலன் தன் தந்தை முன் வருத்தத்தோடு அமர்ந்து இருந்தான்..
"அப்பா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என கூறினான்..
அதை கேட்ட அவர், "பரவாயில்லை விடுப்பா..எப்போ இருந்தாலும் எப்படி இருந்தாலும் அமிர்தாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நம்ம கடமை..
நம்ம மேல இருக்கிற கோபத்தில் தான் அவன் அமிர்தாவை பிடிச்சு வெச்சிருக்கான்..அதற்கு முழு காரணம் நாம மட்டும்தான்.. அவளை எந்த சூழ்நிலையிலும் எப்படியாவது நாம மீட்டு மறுபடியும் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு அதற்கு வேண்டியதை பாரு" என்று அறிவழகன் கூறினார்...
அதை கேட்டவன் தலையாட்ட, "இனியும் கவனமாய் இருக்கணும் நெடுஞ்செழியன் மட்டும் தான் உள்ளே போயிருக்கான் அந்த கார்மேகம் இன்னும் வெளியே தான் இருக்கான்.. கார்மேகமும் ஒண்ணும் நல்லவன் எல்லாம் கிடையாது அவனுடைய மகளை சாணக்கியனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தான்.. ஆனால் அந்தக் கல்யாணம் நடக்காம போன கடுப்பு கார்மேகத்துக்கு கண்டிப்பா இருக்கும்.. அதனால எல்லாம் நம்ம அமிர்தா பக்கம் தான் திரும்பும் அமிர்தாவை கவனமா கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும்" என்றார்..
அப்பொழுது அதைக் கேட்ட அவனும், அதுதான் சரி என உணர்ந்து கொண்டு இருந்தாலும் கார்மேகத்தின் மகள் வசுந்தரா அப்பொழுது அவளின் நினைவு அவனுக்கு வந்தது.. எப்படி அவளை இவ்வளவு நாள் மறந்தேன் என நினைத்தான் அகிலன்...அப்பா சொன்னது போல சாணக்கியனுக்கு மிகவும் வேண்டியவள் தான் வசுந்தரா என்பது அவனுடைய நினைவுக்கு வர அவன் மனம் வேகமாக அலசி ஆராய்ந்தது..அதன் படி ஒரு யோசனை அவனுக்கு உருவானது..
ஆம் அவனின் கல்லூரி ஜூனியர் பெண்ணான வசுந்தராவை அகிலனுக்கு நன்றாக தெரியும் அவளுக்கும் அவனை நன்றாக தெரியும் இது போதுமே இது போதும் அனைத்தையும் மாற்றி அமைக்க என எண்ணிக்கொண்டான் அகிலன்...
அவன் மனம் முழுவதும் சாணக்கியனை என்ன செய்து நோகடிக்கலாம் என்றுதான் இருந்தது..
இவர்கள் அண்ணன், தம்பி ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் ஒரு விதத்தில் இருவரின் குணமும் ஒரே போல தான் இருக்கிறது.. இரு மத யானைகள் மோதும் போது சுற்றி இருக்கும் நபர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இதில் யார் வீழ்ந்து போவார் யார் மீண்டு வருவார் என யாருக்கும் தெரியாது அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்...
பெற்றவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து மாறும் பொழுது அது எத்தகைய மாற்றத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் தான் உதாரணமாக இருப்பார்கள்...இதில் இன்னும் பலியாக போவது யார் யாரோ??
