எனதுயிரே 26
.
அத்தியாயம் : 26
"சாணக்யா.. உன் அம்மா மூலமா விஷயத்தை கேள்வி பட்டேன்..அதைப்பற்றி எல்லாம் நீ ஏன் கவலைப்படுற விடு கண்டவன் பேசுனது எல்லாம் நினைச்சுட்டு இருக்காத.. உன் அம்மாவும் நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. இடையில் வந்த வாழ்க்கை இடையிலேயே போயிடுச்சு அவ்வளவுதான் விஷயம் அதனால நீ உன்னோட அம்மாவை தப்பா நினைக்க வேண்டாம்" என்று நெடுஞ்செழியன் தன் மகனிடம் கூற அவன் அவரிடம், "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நான் அவங்களை தப்பா நினைக்கல அப்பா" என்று கூறினாலும் மனதுக்குள் அவ்வளவு ஆத்திரம் அடங்கி இருந்தது... ஆனால் ஏனோ அந்த இடத்தில் தன் தாயின் மீது தான் அவனுக்கு கோபம் இருந்ததே ஒழிய தன் தந்தையின் மீது கோபம் இல்லை..ஒரு வேளை தன் தாய் அகிலனின் தாயாக இல்லாமல் இருந்திருந்தால் அவன் மன்னித்திருப்பானோ என்னவோ ஆனால் அகிலனால் தன் தாயை ஒதுக்கி வைக்க முடிவு செய்தான்..
அகிலன் முன் தன் தாயால் தோற்று போய் விட்டோம் என நினைத்தான்..அகிலனின் நக்கல் பேச்சும், அவனின் திமிரான பேச்சையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாமல் அவனை ஏதாவது செய்து விட வேண்டும் என நினைத்தான்..
அப்படி இருக்க, இந்த பக்கம் அகிலன் நெடுஞ்செழியனை கைது செய்ய முடிவு செய்தான்... அந்த பக்கம் சாணக்கியன் அகிலனின் கொட்டத்தை அடக்க அமிர்தாவின் பின்னால் சுற்ற துவங்கினான்..
அவளின் விவரங்கள் அடி முதல் நுனி வரை எல்லாம் அவன் விசாரித்து கையில் வைத்து இருக்க,
அதில் அவனுக்கு பெரிதாக வேலையை இல்லாமல் போய்விட்டது..ஆம் அமிர்தாவின் அண்ணன் அவர்களின் கம்பெனிகளின் ஒரு கிளையான பெங்களூரு நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான் அவனை பின் தொடர்ந்ததில் அவன் மது, மாது, போதை மருந்து என அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் கொடுமையான ஒருவன் தான் அவன்..
அப்படி இருக்க இவளை அடைய இவன் ஒருவன் தான் துருப்பு சீட்டு என அவன் நினைக்க அவன் நினைத்தது போலவே சாணக்கியனின் கம்பெனியில் கையாடல் செய்து விட்டான்..
அந்த விவரம் அவனுடைய காதுக்கும் வந்து விட அதை வைத்து காய் நகர்த்த முடிவு செய்த சாணக்கியன்... அப்படி தான் வகையாக சிக்கினாள் அமிர்தா...
இவர்களுக்குள் நடக்கும் எதுவும் தெரியாத அமிர்தா திருமண வேலைகளில் மூழ்கி இருந்தாள்..அகிலன் தான் அவளின் மனதை மாற்ற இதை எல்லாம் செய்து இருக்க அவளும் தன் தந்தைக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லையென்றாலும் அவளுடைய விருப்பம் தான் பெரிது என தந்தை ஒதுங்கி கொள்ள அவளோ தன் நண்பர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுக்க துவங்கி விட்டாள்..கல்யாண கலை வந்து விட்டது என கூறினாள்..
இங்கே பிரதாப் சாணக்கியன் கம்பெனியில் கையாடல் செய்து அவன் முன்னால் இப்பொழுது கூனி குறுகி நின்று கொண்டு இருந்தான்..இப்படி சிக்குவோம் என அவன் எதிர்பார்க்கவில்லை..இவன் கையாடல் செய்யவில்லை என்றாலும் இவனை தூக்கி இருப்பார்கள் அது வேறு விசயம்..ஆம் அவனுடைய ஆட்கள் அவனை அடி வெளுத்து விட்டார்கள்..
"என்ன பிரதாப் இவ்வளவு அமௌண்ட் எடுத்து இருக்க? எனக்கு நாளைக்கு காலைக்குள் என் பணத்தை வைக்கணும் இல்லை நீ ஜெயிலுக்கு எல்லாம் போக மாட்ட போட்டு தள்ளிடுவேன்.. உன்னை மட்டும் உன் மொத்த குடும்பத்தையும் தூக்கிடுவேன்" என கூறினான்..
அதை கேட்டு பிரதாப் பயந்து, "சார் நான் தெரியாம கேட்டேன் என்னை எதுவும் பண்ணிடாதீங்க" என்றான்..
"என்ன என்னை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? காசை எடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தா கண்டுபிடிக்க மாட்டாங்க நினைச்சுட்டு இருக்கியா? அப்படித்தான் நாங்க சம்பாதிச்சிட்டு இருக்கோமா?" என்று கேட்டான்..
அவனோ பயந்து, "சார் என்னை மன்னிச்சிடுங்க எப்படியாவது பணத்தை கொடுத்துடறேன்" என்க
"எப்படி? நீ கொடுப்ப? நான் உன்னை பற்றி எல்லாமே விசாரிச்சிட்டேன் பிரதாப் நீ என்கிட்ட இருந்து எடுத்த பணத்துக்கான 10% சொத்து கூட உங்ககிட்ட கிடையாது.. வே கொடுப்ப? இதுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?" என கேட்க, அவனோ அதை கேட்டு பயந்து விட்டான்..
அதை கேட்டு அவனுடைய காலில் விழுந்த பிரதாப், "தயவு செய்து என்னை விட்டுடுங்க.. நான் எப்படியாவது பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் எதுவும் செஞ்சுடாதீங்க" என கெஞ்ச அவனது பயத்தை உணர்ந்த சாணக்கியன் மிக தந்திரமாக, "நீ இவ்வளவு செய்தும் நான் ஏன் அமைதியா இருந்தேன் அப்படினா உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகணும்" என்றான்..
அவனோ முழிக்க சாணக்கியன், "நீ இதுல இருந்து தப்பிக்கணும் அப்படின்னா உன்னுடைய தங்கச்சியை நீ என் கூட அனுப்பி வைக்கணும்" என்று கூறினான்..
அவனோ முழிக்க, "உன்னோட தங்கச்சிக்கும் எனக்கும் ஒரு வாய்க்கால் பிரச்சனை இருக்கு.. அதை தீர்த்துக்க உன் தங்கச்சி என் கண்ணு முன்னாடி வந்து நிற்கணும் மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்று கூற அவனும் அதை ஒப்புக்கொள்ளவில்லை...
பிறகு அடித்து உருட்டி மிரட்டி அவனை பணிய வைத்தனர்.. பிறகு பிரதாப் தன் தங்கையிடம் தன்னை பார்க்க பெங்களூரு வர சொன்னான்..அவனை சுற்றி ஆட்கள் சூழ்ந்து அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தனர்..
அவளும் அங்குள்ள தன் தோழிக்கு பத்திரிக்கை வைக்க வருவதாக கூறியவள் தன் அண்ணனை காண வர அவனுடைய கோலத்தை கண்டவள் அதிர்ந்தாள்..
"என்னாச்சு?" என கேட்க
"ஒரு விபத்து பைக்கில் வரும் போது விழுந்துட்டேன்" என பொய் கூறியவன் சுற்று முற்றும் பார்க்க அங்கு சுற்றியும் சாணக்கியனின் நாட்கள் சூழ்ந்திருந்தனர்..
பிறகு உயிர் பயத்தால் அவன் தன் தங்கை என்றும் பாராமல் போதை மருந்தை கலந்த ஜூசை தன் தங்கைக்கு கொடுத்து விட்டான் அந்த கயவன்..அவனும் போதையின் பிடியிலும் அவன் செய்த தவறுக்காக தன் தங்கையை பழி கொடுத்த வீரன் தான் பிரதாப்..
அண்ணன் கொடுத்த ஜூசை குடித்த அன்பு தங்கைக்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை.. இதோ இப்போது அந்த சாணக்கியன் மனைவியாக அவனிடத்தில் இருக்கிறாள்...
தன் தந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காகவும் தன் பாசமிகு அண்ணனின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னை இறையாக்கி இருக்கிறாள் அந்த பாசமிகு தங்கை..
அப்படி இருக்க எல்லா பக்கமும் சுற்றி சுற்றி பின்னப்பட்டு இருந்த இந்த கொடிய வலையில் தெரியாமல் நுழைந்து விட்டாள் அமிர்தா..
அவளுக்கு இன்றைய அகிலன் மற்றும் அறிவழகனை தான் தெரியுமே தவிர அவர்களின் கடந்தகால வாழ்க்கை எல்லாம் அவளுக்கு தெரியாது..
அதே போல சாணக்கியன் மற்றும் அவனது தந்தை மிக பெரிய கயவர்கள் என்பது தெரியுமே தவிர, சாணக்கியன் மற்றும் அகிலனுக்கு என்ன உறவு என்று தெரியாது..
அவள் இதுவரை எண்ணிக் கொண்டிருப்பது அவள் மோதியதற்காகவும், அகிலன் மோதியதற்காகவும் தான் தன்னை அவன் கடத்தி இருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு சூழ்ச்சி வலை உள்ளது பாவம் அவளுக்கு தெரியாது..
அவளுக்கு எல்லாம் அவளுடைய தந்தை மற்றும் அண்ணனை அவனிடமிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான் அவளுடைய தலையாய நோக்கம்..
அதன் படி திருமணம் முடிந்ததும் அவளை அழைத்து கொண்டு அவன் சென்று விட்டான்..அங்கு அவனுடைய அம்மா தவிப்பாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான் சாணக்கியன்..அதை கண்டு தாமரை வருந்தினார்..அவனுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை..
அவளோ வீட்டுக்கு சென்றதும் அவனுடைய சென்றதும் அவனோ மாலையை கழட்டி வைக்க அவளோ மாலையை கழட்டியவள் அவனருகே சென்று, "அதுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இனியாவது என்னுடைய அப்பாவையும் அண்ணனையும் விடு" என்று அவள் அவளைப் பார்த்து கேட்டாள்..
அதற்கு அவனும் அவளை தலை முதல் கால் வரை அப்பொழுதுதான் பார்ப்பது போல பார்த்தான்.. நல்ல சிவப்பு நிற பட்டுடுத்தி அதற்கு தகுந்த ஆபரணங்கள் அணிந்து அவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல பொன் மஞ்சள் தாலி மின்ன அவனுள் அவள் என்னவள் என்ற உணர்வை அது கொடுக்க, அது அவனுள் மோகமாக மாறியது..
அவளோ அவன் என்ன பதில் சொல்வான் என தவிப்பாக பார்க்க அவனும் அவளை தவிப்பாக தான் பார்த்தான்..ஆம் அவனருகே நின்று அவனுடைய முகத்தை பார்த்து கேட்க அவனுடைய பார்வை வேறு விதமாக மாறியது..
அவனுடைய தவிப்பு அவளை எப்படியாவது அடைய வேண்டும் என இருக்க, அவனின் ஊசி குத்தும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியாதவள் வேகமாக தலையை தாழ்த்தி, "தயவு செஞ்சு அவங்களை விடு" என்று கூற
"அவங்களை நான் விட்டா நீ அவன் கூட ஓடலாம்ன்னு பார்க்கறியா?" என அவன் கேட்டான்..
அதற்கு அவளோ அதிர்ந்து, "சத்தியமா நான் பண்ண மாட்டேன்" என்க
"அதை நான் எப்படி நம்புறது?" என அவன் அவள் மேனியை அளந்து கொண்டே கேட்டான்..
அவளோ, "நான் என்ன செஞ்சா நீ நம்புவ?" என்க
"நீ எனக்காக என்ன செய்ய தயாராக இருக்க? அதை சொல்லு?" என்றான் அவனும் மோகமாக..
அவளோ ஆவேசத்தில், "நான்தான் நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று சொல்லிட்டேனே.. சொல்லு.. இப்போ நான் என்ன சொன்னா நீ நம்புவ நான் என்ன செய்யணும்னு சொல்லு செய்கிறேன்.. நான் உன்னை விட்டு போக மாட்டேன்.. அவங்களை மட்டும் விட்டுடு உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை பாவம் அவங்கள ஏன் இடையில் கொண்டு வர நான் என்ன செய்யணும்னு நீ சொல்லு நான் அதை செய்கிறேன்" என்று அவள் கூறினாள்..
"நான் சொல்லிடுவேன் நான் சொன்னதும் வார்த்தை மாறிட மாட்டியே" என அவன் கேட்டான்..
அவளோ, "இல்லை மாட்டேன்" என அவன் குணம் தெரியாமல் கூற
"அப்போ நீ போட்டு இருக்கிறதை எல்லாம் அவிழ்த்துட்டு வா" என்றான்.. அதை கேட்டு அவளோ முழிக்க அவனோ அசையாமல், "அது தான் என்ன வேணாலும் செய்யறேன்னு சொன்னியே.. எனக்கு இப்போ நீ வேணும்.. அதுக்கு தடை உன் உடை.. அதை நீக்கிட்டு என்கிட்ட வா" என எதுகை மோனையோடு அவன் கூற அவளோ சிலை போல திகைத்து நின்றாள்..
