Share:
Notifications
Clear all

எனதுயிரே 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.

அத்தியாயம் : 32

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு..

அவனை பொறுத்தவரை ஒரு அழகான இரவு.. அவன் கைகளில் மதுக் கோப்பையும், அவனுடைய பார்வைக்கு எதிரே அவனுடைய மனைவியும் இருக்க அவளை ரசித்தபடி அவன் மதுவை அருந்தி கொண்டு இருந்தான்.. அவள் தன்னை இப்படி இருப்பாள் என அவன் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டான்..

அவளோ அவன் வந்து விட்டால் தான் சாணக்கியன் அருகே இருக்க வேண்டுமே அதனால் அவனோடு அமர்ந்து இருந்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பார்த்து கொண்டு இருந்தாள்.. ஏனெனில் அவன் தான் அவளை நுகர்ந்து இழுப்பது போல பார்த்து கொண்டு இருந்தானே..அந்த பார்வையை பார்த்தவளுக்கு அப்படியே கண்களாலேயே அவனுள் புதைவது போல அவளுக்கு இருக்க அவள் முகம் வேகமாக சிவந்தது....

இதுதான் அவளுக்கு மாயமாக இருந்தது.. அவனின் பார்வை அவள் மீது படுகிறது என்று தெரிந்ததுமே அவளுக்கு சிவக்க தொடங்குகிறது அது ஏன்?? எனக்கு தான் அவனை பிடிக்காதே பிறகு ஏன் அவனது பார்வையில் என் உடல் மாறுபடுகிறது என யோசித்தவள் கண்களுக்கு அங்கு பூச்சாடியில் வைக்கப்பட்டு இருந்த வண்ண மலர்களை பார்த்ததும் வேகமாக அவனிடம் இருந்து தன்னுடைய முகசிவப்பை மறைக்கும் பொருட்டு அந்த மலர்களை எடுத்து நுகர்ந்து பார்த்தவள் ஏனோ அவளை அறியாமல் அந்த மலர்களை தன் இதழ்களால் வருடினாள்..

அதை கண்டவனின் மோகம் கரை புரண்டு ஓட அவளை பார்த்து, "பொண்டாட்டி" என இழுத்தான்.. அவளோ அவனை பார்க்கவும் அவனின் விழுங்கும் பார்வையை கண்டு அவள் முகம் மேலும் சிவக்க அதை பார்த்தவன், "இங்கே வா" என மையலாக கையசைத்தான்.. அவளும் அவன் அழைக்கிறான் என அவன் அருகே செல்லவும் அவனோ அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்துக் கொண்டே அவளிடம் தன் கன்னங்களை காட்டி, "கிஸ் மி.." என்றான்..

அதைக் கேட்டதும் அவளுக்கு குப்பென்று சிவந்தது..இவன் என்ன பட்டென கேட்கிறான் என மேலும் அவள் சிவந்து எங்கோ பார்த்துக் கொண்டு, "புரியல" என்க அவனோ மோகத்தில் அவளுடைய கரங்களைப் பிடித்து தன் மடியில் அமர வைத்தவன் ஒரு கையால் அவளின் இடையே அழுத்தி பிடித்து, "கிஸ் மி டி பொண்டாட்டி" என்றான்..

அவளோ அவனுடைய பேச்சும், பார்வையும் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்தாலும் அவன் தன்னிடம் இப்படி கேட்டது இது தான் முதல் முறை அவனாக தன்னை அடைந்தது தான் வரலாறு இப்படி கேட்கும் ரகம் அவன் இல்லை என்றாலும் அவனின் உணர்வை அவளால் படிக்க முடிந்தாலும், "முடியாது" என்க

அவன் அவள் மேல் உள்ள ஆசையில், "பிளீஸ் ஐ நீட் யூ என்னை ரொம்ப அட்மையர் பண்ற நீ என்னோட வாழ்க்கையில நீ வந்ததுக்கு பின்னாடி நான் உன்னை சுத்தி சுத்தி வரேன் அது ஏன் எனக்கு தெரியவே இல்லை எனக்கு இப்போ உன்கிட்ட இருந்து ஒரு கிஸ் வேணும்" என்று பிடிவாதமாக கூற

அவளோ, "என்னால உன்னை கிஸ் பண்ண முடியாது பண்ணவும் மாட்டேன்" என அவன் மடியில் அமர்ந்து கொண்டே எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள்..

"அப்போ நான் பண்ணுவேன்" என அவளின் இதழ்களை கவ்வி இழுத்தான்.. அவனின் உணர்வுகளை அவளுக்கு பறைசாற்றிட அவன் வேகமாக சற்று வன்மையாக அவளின் அதரங்களை சிவக்க வைத்தான்.. கொஞ்சம் வலிக்கவும் வைத்தான்..

தன் தேவை முடிந்து அவளை விட்டு, "ப்ளீஸ் கிஸ் மி இப்போவாவது கிஸ் மீ" என்க,

அவளோ தனக்கு அவனால்  தடைப்பட்ட மூச்சை சரி செய்து கொண்டு, "நீ என்னை என்ன வேணாலும் பண்ணலாம்.. என்னோட உரிமை இல்லாமலே நீ என்னை தொட்டுட்ட.. இனியும் நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்ட.. ஆனால் நான் என் வாழ்க்கையில நானாக உன்னை நாடி வரமாட்டேன் இது சத்தியம்_ என்று கூறவும் அவன் விழிகள் அதிர அவளோ மெல்ல அவன் மடியில் இருந்து எழுந்து நின்று, "சோ என்னால உன்னை கிஸ் பண்ண முடியாது" என்று அவனால் எரியும் தன் உதட்டை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டே கூறிவிட்டு செல்ல முனைய அவனும், "அப்போ நீயா என்னை தொட மாட்டியா?" என அழுத்தமாக கேட்டான்..

"கண்டிப்பா மாட்டேன்"

"ஒருவேளை தொட்டுட்டா?" என்று அவன் கேட்க அவளோ, "நானா உன்னை தொடணும்னா நான் உன்னை நேசிக்கணும் கண்டிப்பா அது இந்த ஜென்மத்தில் நடக்காது அதனால இதுவும் நடக்காது" என்று தன் மேல் உள்ள தைரியத்தில் கூற அதைக் கேட்டதும் அவனுடைய ஈகோ டச் ஆனது.. மெல்ல அவளைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாக, "கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் நடக்க வைப்பேன்" என்க

"இது நீ என்னை மிரட்டி, கடத்தி, என்னை அடைஞ்சது மாதிரி இல்லை என்னோட மனசு சம்பந்தப்பட்ட விஷயம் நீ என்னுடைய உடலை வேணா அடையலாம். ஆனால் என்னுடைய மனசை தொடக்கூட முடியாது.. என்னுடைய மனசில் உனக்கு இடம் கண்டிப்பா கிடைக்காது.. அதை நான் கேரண்டியா சொல்லுவேன்" என்று அவள் கூறவும்,

அதைக் கேட்டவன் மனம் உள்ளுக்குள் கிளர்ந்து கொண்டு இருந்தாலும், "அதை நான் அப்புறம் பாத்துக்கிறேன் சேலஞ்ச்.. நீயா என்னை கிஸ் பண்ற நாள் கண்டிப்பா வரும் அப்போ இதே பதிலை நீ சொல்றியா இல்லையான்னு நான் பார்க்கிறேன்" என்று கூறினான்..

அவளும் நக்கலாக சிரிக்க அதைக் கண்டவன், "அதுவரைக்கும் உன்னை நானே தொட்டுக்கிறேன் எனக்கு அதுல வெட்கமெல்லாம் கிடையாது" என்று அவளை தூக்கிக்கொண்டு படுக்க அறைக்கு சென்று விட்டான்...

   இரவு நடந்த ஆட்டத்தில் சுகமாக சாணக்கியன் உறங்கி கொண்டு இருந்தான்.காலை வேளையில் அமிர்தா உறக்கம் கலைந்து கண்களை திறந்து பார்த்தாள்... எப்போதும் போல ஒரு வலிய கரம் அவளை தழுவி இருந்தது..அவளும் அவனுடைய மார்பில் தலை வைத்து படுத்து இருந்தாள்... திண்ணிய மார்பில் இருந்து இதயம் துடிக்கும் ஓசையை கேட்கும் பொழுது அவளுக்கு மூச்சு அடைத்தது..இனம் புரியா உணர்வு அவளை ஆட்கொண்டது..ஆம் நேற்று அவனிடம் அப்படியெல்லாம் பேசியதாலா என அவளுக்கு சொல்ல தெரியவில்லை..

ஏதோ ஒன்று அவளை தாக்கியது.. முறையற்ற முறையில் அவன் அவளிடம் நடந்து கொண்டாலும் அவளுக்கு ஏதோ ஒன்று அவனிடம் ஈர்க்கிறது என்று கூறினால் மிகையாகாது..

கிட்டத்தட்ட அவனோடு அவள் வாழ துவங்கி 45 தினங்களுக்கு மேல் ஆகியிருக்கும்..ஒரு வழியாக இந்த வாழ்கையை அவள் பழகி கொண்டாள்..

அவன் அவளை பெரிதாக தொல்லை எல்லாம் செய்வதில்லை  அவன் இருக்கும் நேரம் எல்லாம் அவள் அவனோடு இருக்க வேண்டும் என்பதை தவிர அவன் எந்த விதமான தொல்லையும் அவளுக்கு கொடுக்கவில்லை..

அவளை பொறுத்தவரை அவள் நினைப்பது போல தான் அவன் மீது அவளுக்கு வெறுப்பும் இல்லை, விருப்பமும் இல்லை..அதே நேரம் இந்த கயவன் செய்ததை எல்லாம் மறக்கவும் இல்லை..

அப்படி இருக்க இன்று காலையில் எழுந்ததும் என்னவோ உணர்வு அவளை ஆட்கொள்ள அவள் கண்கள் அவனை தழுவியது ..

இது என்ன என்பது போல எண்ணி அவள் அருகே நல்ல உறக்கத்தில் அவனுடைய முகத்தை பார்க்க அவள் முகம் சிவந்தது.. இது என்ன மாயம் என்பது போல எண்ணி அவளுக்கு உறங்கும் போது பார் என்னவோ நல்லவன் போல இருக்கிறான் அதுவே எழுந்து விட்டால் அவ்வளவு தான் என எண்ணியபடி மெல்ல எழுந்தவள் தலை சுற்றியது...பின் சில நொடிகளில் சரியானது..அதை அதை சாதாரணமாக விட்டு விட்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top