Share:
Notifications
Clear all

எனதுயிரே 29

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 29

தன்னை அடிமையாக்கும் விதமாகவே நடந்து கொள்கிறான் என எண்ணி, "நான் என்ன ஓடி போகவா போறேன்..இந்த வீட்டை விட்டு வெளியே போனால் என் குடும்பம் தானே சாகும் அப்படி நான் வெளியே போய்டுவேனா?" என கேட்டாள்..

அதை கேட்டு அவனோ அவளின் குத்தலை புரிந்தாலும், "அந்த பயம் இருந்தால் சரி" என்க

அவளோ, "ஏன் என்னை புடிச்சிட்டு இருக்க நான் ஓடி போயிடுவேன்னு உனக்கு பயமா?" என மென்மையாக என்றாலும் நக்கலாக கேட்டாள்..

அவனோ பதிலுக்கு, "எனக்கு என்ன பயம்? அப்படி எனக்கு பயம் இருந்தா உன்னை இப்படி உட்கார வைச்சு இருப்பேனா? எனக்கு பயம் இல்லாததால் தானே உன்னை என்னோட பொண்டாட்டி ஆக்கி இருக்கேன்" என கேட்டவன் மேலும் நெருங்கி அவளின் கழுத்து வளைவில் அவனுடைய முகத்தை உரச அவளுக்கு கூசியது..

அவளின் கூச்சத்தை பார்த்து அவனுக்கு மோகம் கரைபுரண்டு ஓட, "சரி வா உள்ளே போலாம்" என கூற

"மெதுவா போலாம் எல்லாம் அதுக்கு தானே எப்ப பண்ணினா என்ன?  எனக்கு கொஞ்சம் இங்கே இருக்கணும்" என்க

அவனோ ஒரு மாதிரியாக இருந்தாலும், "அப்புறம் வரலாம் வா" என்றான்..

"அவ்ளோ அவரசமா நேரம் காலம் இல்லாமல்? இப்படித்தான் பல பேர் கிட்ட நேரம் காலம் இல்லாமல் போயிருப்பியா?" என அவள் கேட்டாள்..

அவனுக்கு அவளுடைய பதில் கோபத்தை கொடுத்தாலும் அவனோ தன் கோபத்தை அடக்கி, "இதுக்கு எல்லாம் நேரம் காலம் இல்லையே? எப்ப தோணுதோ அப்ப பண்ணலாம் அதுக்கு தான் லைசன்ஸ் இருக்கே" என்க

அவள் அவனை பார்த்து, "ஆமாம் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் நேரம் காலம் எல்லாம் பார்த்து வராது..இதெல்லாம் ஒரு உணர்வு இருக்கு அது எங்கே உனக்கு புரிய போகுது.. மிருகமா நீ இருக்கும் போது மிருக குணத்தை தானே உன்கிட்ட எதிர்பார்க்க முடியும்..சரி வா போலாம் இல்லைன்னா என்னோட அப்பா மற்றும் என்னோட அண்ணாவை ஏதாவது பண்ணிட போற" என அவள் மீண்டும் குத்தினாள்..

அதை கேட்டவன் பொறுமை காற்றில் பறந்தது.. "என்ன டி கொழுப்பா?" என அவன் முறைத்து கேட்டான்..

அவளோ, "எனக்கு என்ன கொழுப்பு அதெல்லாம் இருக்க கூடாதே.. சரி வா உனக்கு தான் அவசரம் ஆச்சே இங்கே பண்ணலாமா? இல்லை உள்ளே போய் பண்ணலாமா? உன்னால தான் எதையும் அடக்க முடியாதே?" என மீண்டும் கூறவும் அவன் கடுப்பாகி அவள் தலை முடியை கொத்தொடு அழுத்தி பிடித்தவன், "என்ன டி நினைச்சிட்டு இருக்க, என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு ரேப் பன்றவன் மாதிரி இருக்கா?" என்க

அவளோ அந்த வலியிலும், "ஆமாம் அதுல என்ன சந்தேகம்.? எனக்கு அதை செஞ்சவன் தானே நீ" என்க

அவனோ மேலும் கடுப்பாகி அவளின்  கழுத்தில் கிடந்த தாலியை காட்டி, "அப்போ இது என்ன? உனக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன?" என கேட்டான்..

"இதுக்கு எல்லாம் முன்னாடியே என்னோட சம்மதம் இல்லாமல் என்னை அனுபவிச்சவன் தானே நீ? இந்த தாலி எல்லாம் மனசும், மனசும் சம்மந்தப்பட்ட விசயம்..உனக்கு எல்லாம் எங்கே அது புரிய போகுது உனக்கு தேவை எல்லாம் என்னோட உடல் அது உனக்கு நான் சாகும் வரை கிடைக்கும் எடுத்துக்கோ" என்றாள் ஆத்திரமாக..

அதை கேட்டவன் அவளின் சிகையை பற்றி, "அப்போ உன்னோட மனசை என்னால வெல்ல முடியாதுன்னு சொல்றியா?" என்க

"ஆமாம் முடியவே முடியாது..உன்னை எனக்கு எந்த சூழலிலும் பிடிக்காது..என் உடலை நீ என்னை மிரட்டி வெல்லலாம்..ஆனால் என் மனசில் உனக்கு இடம் என்னைக்கும் கிடையாது.."என்ற சற்று திமிராகவே பதில் கூறினாள்..அவனின் கோபமான முகத்தை பார்க்கவும் அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டது...

"அப்போ உடம்பு தான் எனக்குன்னா உன் மனசு யாருக்கு டி?" என அவன் கேட்க,

அவனை வேண்டும் என்று வெறுப்பேற்றும் விதத்தில், "அது என்னிக்கும் அகிலனுக்கு மட்டும் தான்..என்னிக்கும் அகிலன் தான் முதலில்" என்க

அதை கேட்டவன் வெறிகொண்டு விட்டான்..

ஏற்கனவே தன் தாய் செய்ததில் கோபத்தில் இருந்தவனுக்கு ஆறா வடுவாக அகிலன் பேசியது மனதில் இருக்க அதை நினைவுபடுத்தும் விதத்தில் அவனுக்கு பின் தான் நீ என்கவும் சாணக்கியனுக்கு அதை எளிதில் எடுத்து கொள்ள முடியவில்லை..

அதனால் அவளை பார்த்து, "இதுக்கு தண்டனை உனக்கு கிடையாது..அந்த அகிலனுக்கு உண்டு..நீ பேசினதுக்கு அவன் அனுபவிப்பான்" என கூறி விட்டு அவன் எழுந்து சென்று விட்டான்..

ஐயோ இவன் ஏதாவது அகிலனை செய்து விடுவானா ஏதோ இவனை வெறுப்பேற்ற பேச போய் அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என நினைத்தவள் நேராக அவனிடம் ஓடி செல்ல அவனும் விருவிருவென அவனுடைய அறைக்கு சென்று விட்டான்..

அவளும் அரக்க பறக்க ஓடி சென்றவள் அவனிடம் போய் நின்று, "என்னை செய்த மாதிரி அவனை எதுவும் செஞ்சுடாத.. அகிலன் ரொம்ப பாவம் அவனை மேலும் மேலும் நோகடிக்காத.. உன்னால அவன் பட்ட வலிகள் எல்லாம் போதும் மேலும் அவனை துன்புறுத்தாத.. நான் ஏதோ என் மனதில் இருந்ததை சொல்லிட்டேன் அதை வைத்துவிட்டு அகிலனை கஷ்டப்படுத்தாத" என்று அவள் அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வரவும் அவனுடைய கோபம் மேலும் பன் மடங்காகியது..

அவனோ, "இதை நீ சொல்லாம இருந்திருந்தா கூட நான் அப்படியே விட்டு இருப்பேன்.. ஆனால் நீ அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு என்கிட்ட பேச வந்த பார்த்தியா இதுக்கே ஏதாவது ஆப்பு அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும் அதை கொடுக்கிறது நானா மட்டுமா தான் இருப்பேன் டி" என்றான் அவன்..

அவளோ அதிர, "ஏன்டி மிரட்டியோ உருட்டியோ தாலி கட்டிட்டேன்.. ஆனால் உனக்கு புருஷனா தானே இருக்கேன் உனக்கும் எனக்கும் ஆயிரம் இருந்தாலும் ஊர் உலகத்துல உன்னை விட்டு கொடுக்கலையே அந்த அளவுக்கு நான் உண்மையான புருஷனா இருக்க முயற்சி செய்கிறேன் தானே ஆனாலும் சப்போர்ட் அவனுக்கு அப்படித்தானே? நானும் பல தடவை சொல்லிட்டேன் அந்த வாழ்க்கையில் இருந்து இந்த வாழ்க்கைக்கு மாறனும்ன்னு நீ கேட்கவே மாட்டியா" என கேட்க

அவளோ, "இதெல்லாம் உன்னை மாதிரி ஸ்விட்ச் போட்டதும் நடக்கிற விஷயம் கிடையாது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்...உன்னை எல்லாம் புருஷன்னு தயவு செஞ்சு சொல்லாத இதைக் கேட்கும் போது தான் எனக்கு ஆத்திரம் வருது.. நானும் வார்த்தைகளை விடறேன்.. நீ வாழ்நாள் முழுக்க என்னை படுக்க மட்டுமே கட்டிக்கிட்ட ஒருத்தன்.. உன்னுடைய மானம் போகக்கூடாது என்று தாலி கட்டி உக்கார வெச்சிருக்க மத்தபடி வேற எதுவும் கிடையாது நீ என்னுடைய புருஷன் ஆகிட முடியாது..

புருஷன், பொண்டாட்டி, காதல், மனசு இதை பத்தி எல்லாம் உனக்கு ஏதாவது தெரியுமா? நீ ஒன்னும் என்னை ஆசைப்பட்டோ இல்லை நான் உன்னை ஆசைப்பட்டோ நீ என்னை கல்யாணம் பண்ணிக்கல மிரட்டி என்னை உட்கார வைத்திருக்கிற இல்லாட்டி நான் இங்கே இருப்பேன் என்று நினைத்து இருக்கியா இந்த கருமத்தை தூக்கி மூஞ்சில எரிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன்.." என தாலியை தூக்கி காட்டி கூறினாள்..

"இதோ பாரு நீ எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாயோ அதை மட்டும் நிறைவேத்திட்டு போயிட்டே இரு.. இந்த புருஷன், பொண்டாட்டி உறவு எல்லாம் சொல்லிட்டு இருக்க வேலை வேண்டாம்.. நான் தான் எங்கேயும் போக மாட்டேன்.. இந்த வீட்டுக்குள்ளேயே இருப்பேன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்ன புதுசா தேவையில்லாத வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க..

நீ எல்லாம் மனுஷனே கிடையாது.. உன்கிட்ட இதையெல்லாம் சொல்லனும்னு அவசியம் கிடையாது.. கொஞ்சமாக உனக்கு ஏதாவது உணர்ச்சி இருக்கா படுக்கையில் படுக்கிற உணர்ச்சி மட்டும் உணர்ச்சி கிடையாது.. மத்தவங்க மனசையும் புரிஞ்சுக்கணும்.. அதெல்லாம் உனக்கு எங்கே இருக்க போது அடுத்தவங்களை நோகடித்து அதில் சுகம் காண ஒருத்தன் நீ உனக்கு என்ன வேணுமோ? அதை மத்தவங்க என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அடையணும்னு நினைக்கிற ஒருத்தன் நீ..

அதனால இந்த தாலிக்கு கொடுக்கிற மரியாதை எல்லாம் நீ என்கிட்ட எதிர்பார்க்காத கண்டிப்பா கிடைக்காது.. நான் வாழ்நாள் முழுக்க ஜெயில்ல தான் என்னுடைய வாழ்க்கை அப்படின்னு முடிவு பண்ணி உன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்..

மத்தபடி உனக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.. இந்த தாலி ஒன்னு கட்டிட்டதால நீ என்கிட்ட எல்லா உரிமையும் எடுத்துக்கலாம்னு நினைக்காத.. நீ என்னுடைய உடலை வேணாலும் ஜெயிக்கலாம் இப்பவும் சொல்றேன் என்னுடைய மனசை நீ ஒரு நாளும் ஜெயிக்கவே முடியாது" என்று அவள் அவனை செருப்பால் அடிப்பதுபோல பேசவும் அதைக் கேட்ட சாணக்கியனின் முகம் மேலும் அழுத்தமாகியது..

அவன் முகமே கூறியது.. அவள் பேசிய பேச்சு அவனுக்கு ஒரு தாக்கத்தை உண்டு பண்ணி இருந்தது என்னவோ உண்மை தான் அப்படி இருக்க, அவன் தான் எந்த சூழலிலும் மற்றவர்கள் பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டானே.. அதை கேட்டு அவன் அழுத்ததோடு அவளை பற்றி, "இதோ பார் எனக்கு உன்னோட உடம்பு தான் தேவை அப்படின்னா தாலி கட்டி உன்னை ஊரறிய உனக்கே பிடிக்காம நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.. நீ எனக்கு மனைவியா வேணும் அப்படிங்கறதனாலதான் நான் தாலி கட்டி உன்னை மனைவியா ஏத்து இருக்கேன்.. உன்னுடைய மனசை பத்தி எனக்கு கவலை கிடையாது.. எனக்கு என்னுடைய மனசை பத்தி அக்கறை இருக்கு.? அதுனால தான் டி நீ எனக்கு பொண்டாட்டியா இங்க இருக்க.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் நல்லதா போச்சு.. எனக்கு இப்படிப்பட்ட ஒரு பொண்டாட்டி தான் தேவை ஏன்னா எப்ப பாரு அழுதுட்டு மூலைல கண்ண கசக்கிட்டு இருக்கிற பொண்டாட்டி வேண்டாம் லைஃப் போர் அடிச்சிடும்..

என்னை எதிர்த்து என்கிட்ட பேசினா தானே ஒரு கிக் இருக்கும் இப்போ அந்த கிக் இருக்கு.. உனக்கு பொண்டாட்டி சொன்னா தானே பிடிக்காது.. இனிமேல் உன்னை நான் கூப்பிடுறது பொண்டாட்டின்னு தான் சொல்ல போறேன்.. என்ன பண்ண போறேன்னு பார்ப்போம் சரியா? உன்னை அப்படியே சும்மா விட்டா போதாது போலவே இனிமேல் எனக்கான எல்லா வேலையும் நீயே பார்த்திடு சும்மா இருக்கும் போது தான் தேவையில்லாமல் ஏதாவது யோசிக்க சொல்லு என்னைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டே இரு அப்போ என்னை உனக்கு பிடிக்க ஆரம்பிச்சுடும்" என்க,

அவளோ கண்களில் எரிச்சலோடு அவனை கொல்லும் ஆத்திரத்தில் இருக்க, அந்த தருணத்தில்  அவள் அருகே வந்து அவளின் துடிக்கும் இதழ்களை மேலும் அவனுடைய இதழ்களால் துடிக்க வைக்க அந்த அதிர்ச்சியில் அவளின் கோபங்கள் கரைய துவங்க அதே போல அவளை யோசிக்க விடாமல் அவளுடைய ஆடைகளும் அவளுடைய உடலில் இருந்து அவனால் கரைய துவங்கி இருந்தது..

என்ன தான் அவளிடம் அவன் அவளுடைய கோபத்துக்கு பதிலடி கொடுத்து இருந்தாலும் அவள் பயந்தது போல ஒரு சம்பவம் ஒன்று அகிலனுக்கு அரங்கேறியது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top