Share:
Notifications
Clear all

எனதுயிரே 28

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 28

  அது ஒரு அழகான மாலை பொழுது.. இளம் சிவப்பு நிறத்தில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்த சமயம்..

வெளியே பீச்சில் இருந்து வீசும் காற்று அமிர்தா மேனியை தழுவி கொண்டு இருந்தது..அவளோ அந்த இயற்கையை ரசித்து கொண்டு காலாற நடந்து கொண்டு இருந்தாள்..

கிட்டத்தட்ட அவனை திருமணம் செய்து இன்றோடு பத்து நாட்கள் ஆகி விட்டது..காலையில் அவன் சென்றால் மதியம் உணவுக்கு வருவான்..என்னவோ அக்கறை உள்ள கணவன் போல காலை ஒரு முறை மதியம் ஒரு முறை அவளை அழைத்து நலம் விசாரிப்பான்..

எல்லாம் நடிப்பு என அவள் அந்த தருணத்தில் நினைத்து கொள்வாள்..யாரை ஏமாற்ற அவன் இதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறான்..பொறுக்கி என நினைப்பாள்..

அவளுடைய அண்ணன் மற்றும் அப்பாவை விட்டுவிட்டேன் என திருமணம் முடிந்த மறுநாள் அவன் கூறி இருந்தாலும் அது அவளுக்கு சிறு சந்தோஷத்தை கொடுத்து இருந்தாலும் அதற்கு பரிகாரமாக இந்த பத்து இரவுகளையும் சூரையாடி இருக்கிறான் அந்த கள்வன்..

அவளுக்கும்  அந்த இரவுகள் ஒரு வகையில் பழக்கப்பட்டு போனது..அவன் தொடும் போதெல்லாம் அவளுடைய உடலும் அதற்கு பழகி போய் இருக்க, அவனுடைய முத்தமும் அவனுடைய அணைப்பும் அவளுக்கு தேவையானது போல அவள் ஆகி இருந்தாள் என்பதை அவன் அப்படி ஆக்கி விட்டான் என்று தான் கூற வேண்டும்..

என்னவோ காதலித்து இரு மனமும் ஒத்து திருமணம் செய்தது போல அவன் அவளிடம் நடந்து கொள்வதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அவளும் இந்த பத்து நாளும் வீடே கதி என்று இருந்தாள்..ஒரு வெறுமையான வாழ்க்கையாக அவளுக்கு இருந்தது.. ஜெயில் கைதி போல அவள் உணர்ந்தாள்..

அவன் இனிமையாக அவளோடு இருப்பது போல தான் அவளுக்கு தோன்றுகிறது..அவளால் தான் அவனோடு ஒன்ற முடியவில்லை..

அவன் தான் கூறி இருந்தானே இந்த வாழ்க்கைக்கு பழகிக் கொள் என்று அப்படி இருக்க, அவளும் பழகி வருகிறாளோ என அவளுக்கு தோன்ற துவங்கியது..

அதுவே நெருஞ்சி முள்ளாக அவளை குத்த அவளோ அவனுடைய தோட்டத்தில் நடந்து கொண்டே இருந்தவள் கண்ணுக்கு அந்த நீச்சல் குளம் தென்பட அதை பார்த்து கொண்டே நடந்தவள் கண்ணில் ஒரு ரோஜா மலர் தென்பட்டது.. அதை எடுத்து காதில் குத்திக் கொண்டு அந்த நீச்சல் குளத்தின் தீட்டில் அமர்ந்து அப்படியே தன் கால்களை மட்டும் தண்ணீருக்குள் விட்டபடி அமர்ந்து கொண்டாள்..

அது அவளுக்கு சுகமாக இருந்தது..அந்த சுகத்தை கெடுக்கும் விதமாக அவன் வந்தான்..

அவனுடைய காரின் சத்தத்தை கேட்டதும் அவளுக்கு அப்போது இருந்த இனிமை வடிந்தது போல இருந்தாலும் அப்படியே அமர்ந்து கொண்டாள்..அவன் வீட்டுக்கு வந்தாலே அவளை ஒட்டி கொண்டு தானே இருப்பான் என நினைக்கும் போது எரிச்சலாக இருந்தது..

அவனும் வீட்டுக்குள் நுழையும் அவனுடைய பார்வை அவளை தேடியது.. அவள் உள்ளே இருப்பாள் என  பார்க்க அங்கே இல்லை..அவனும், "அமிர்தா.. அம்ரிதா.." என எல்லா பக்கமும் தேட அவனுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கியது..

ஆம் இந்த பத்து நாட்களாக அவன் நுழையும் அவள் கண்ணில் பட்டு இருப்பாள் இப்போது அது இல்லை என்றதும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை..அதிலும் இப்போதைக்கு அவனை பொறுத்தவரை அவனாக அவனுக்கு உருவாக்கிய உறவு அவள் மட்டும் தான் இருக்க அவள் இல்லை என்றதும் அவனால் அதை ஏற்று கொள்ள முடியாமல் போனது..

அதுவும் அவன் அழைத்தும் அவள் இல்லை என்றதும் அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. இவள் என்னை ரொம்ப கடுப்பு ஏத்தி பார்க்கிறாள் என நினைத்தான்..

அவன் அழைப்பதையும் தேடுவதையும் கண்ட வேலைக்கார பெண், "அம்மா தோட்டத்தில் இருக்காங்க" என கூறினார்.. அதை கேட்டு அவன் அங்கு ஆத்திரத்தோடு செல்ல அங்கு அவள் அமர்ந்து இருந்த கோலத்தை பார்த்து அவனுடைய கோபம் எல்லை கடந்து அவனும் அவள் அருகே சென்று ஒட்டியபடி அமர்ந்து கொண்ட சாணக்கியன் மனம் இலேசாகி, "உன்னை எங்கே எல்லாம் தேடுறது?" என இயல்பாக கேட்டான்..

அவன் உரசி அமரவும் சற்று நீங்கி அமர போனவள் தோளில் அவன் சம்மதம் இன்றி கையை போட்டு தன்னோடு இழுத்து கொள்ள அவளுக்கு இலேசான ஆத்திரம் மூண்டது..அடக்கி கொண்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top