எனதுயிரே 30
.
அத்தியாயம் : 30
கார்மேகம் நினைத்தது போலவே நெடுஞ்செழியனை தொடர்பு கொண்டு, "உன் மகன் நினைச்ச மாதிரி கல்யாணத்தை நடத்திட்டான் இப்படி அவன் இருப்பான் என்று நினைத்து கூட பார்க்கல..அப்போ என் பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன பொறுப்பு? ஏதாவது பொண்ணை பிடிச்சு இருந்தா ஏதாவது பண்ணிட்டு அடக்கமா இருக்க வேண்டியது தானே இப்படி எல்லோருடைய மானத்தை வாங்கிட்டான்.. அப்படி என்ன இருக்கு அந்த பொண்ணு கிட்ட எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்??" என்று கார்மேகம் கூறினார்..அவ்வளவு கடுப்பு அவர் முகத்தில் நிறைந்து இருந்தது..
அதைக் கேட்டு கடுப்பான நெடுஞ்செழியன், "யோவ் அவன் ஏதாவது வயசு கோளாறுல எதையாவது செஞ்சிருப்பான் முதல்ல.. என்னை வெளியே எடு.. அப்புறம் நான் எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன்.. ஒன்னும் இல்லாத ஒருத்தியை என் வீட்டு மருமகள் ஆக்குவேன் நீ நினைச்சுட்டு இருக்கியா?? அவளோட சாவு என் கையில் தான்.. உன் பொண்ணு தான் என் வீட்டு மருமகள் அதுல எந்த மாற்றமும் இல்லை..இதுக்கு எல்லாம் காரணம் அந்த போலீஸ்காரன், அவனோட அப்பன் அவனுங்க இரண்டு பேரும் தான் அவங்களை தீர்க்க முடிவு ஒரு பண்ணு..நானும் போனால் போகுதுன்னு பார்த்தால் அவனுங்க என்கிட்டேயே மோதுறாங்க.." என கூற அதை கேட்ட கார்மேகம், "அதை எல்லாம் நான் பண்றேன்..நான் உன்னோட மகன் அப்படின்னு அமைதியா இருக்கேன் இல்லை நடக்கிறதே வேற" என கூறினார் அவர்..
அதை கேட்ட அவர், "நான் சொல்றதை செய்.." எனக் கூறி சில விசயங்களை கூற, அதை கேட்ட கார்மேகம், "சரி நான் பார்த்துக்கிறேன்..உன் பையனை முதலில் அடக்கி வை" என்று கூறினார்..
அவர் சொன்னதை எல்லாம் கேட்ட அவருக்கு மகன் மீது அதிருப்தி ஆனது என்னவோ உண்மை தான்.. ஆம் தான் உள்ளே சென்ற பின் தன் மகன் ஏன் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கேள்வி அவரை குடைந்துக் கொண்டே இருக்க, நெடுஞ்செழியன் குணத்தை பற்றி சாணக்கியனுக்கு தெரியவில்லை..அவர் மகனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி அவரை எதிர்த்து நின்றால் ஒழித்து கட்டி விடுவார்..
அப்படி இருக்க மறுநாள் தன் வக்கீல் மூலம் தன் மகனையும், தன் மனைவியையும் தன்னை காண வருமாறு அழைத்தார்...
வக்கீல் நேரடியாக வந்து விசயத்தை கூற அதை கேட்டவன் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் இருந்தான் சாணக்கியன்..
அவனுக்கு ஏனோ அவனுடைய தந்தையை காண பிடிக்கவில்லை..அவனுக்கு யாரும் வேண்டாம் என தோன்றி விட்டது போலும்..
அதே நேரம் மகனின் ஒதுக்கத்தை கண்டு சகிக்க முடியாமலும் கணவன் ஜெயிலில் இருப்பதாலும் வெறுத்து போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்த தாமரை தன் மகனிடம் நேரடியாக பேச அவருடைய வீட்டுக்கே சென்று விட்டார்..
திருமணம் ஆகி பத்து நாட்கள் ஆகியும் இனியும் தன்னை பார்க்க வரவில்லை என்பதே அவருக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்தது..
அவர் சென்ற சமயம் வக்கீல் அங்கு இருக்க அவரோ, "சார் உங்க இரண்டு பேரையும் பார்க்க வர சொல்லி இருக்காங்க மேடம்"என கூறினார்..
அதை கேட்ட தாமரை சரி என்றவர் தன் மகனை அவனோ தன் அம்மாவை கண்டதும் பேச்சு முடிந்தது என எழுந்து கொண்டான் அவரை மதிக்கவில்லை அது அவருக்கு கோபத்தை கொடுத்தது..
"வக்கீல் நாங்க வந்துடுறோம் இப்போ எனக்கு என் மகன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என கூறி அவரை அனுப்பி வைக்க அந்த சமயம் அமிர்தா வந்தாள்..
ஆம் ஏதோ சத்தம் கேட்கவும் அவள் வந்து பார்க்க அங்கு இவர்களை எல்லாம் கண்டதும் அவளுக்கு குழப்பமாக இருந்தது...அவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக, "வாங்க" என்க
அவளை பார்த்ததும் அவர் மேலும் எரிச்சல் அடைந்து, "கொஞ்ச நேரம் நீ உள்ளே போ எனக்கு என் மகன் கிட்ட பேச வேண்டியது இருக்கு..உன்னோட மரியாதை எல்லாம் எனக்கு இப்போ வேணாம்" என தாமரை கூற அதை கேட்டவள் எனக்கு என்ன என்பது போல பார்த்து உள்ளே செல்ல முனையும் போது, "என் பொண்டாட்டி இங்க தான் இருப்பா..உங்களுக்கு என்ன சொல்லனுமோ அதை சொல்லிட்டு கிளம்புங்க" என அவளை தன்னருகே இழுத்து நிறுத்தி கூறினான் சாணக்கியன்...
அதை கேட்டு அவள் அவரையும், அவனையும் மாறி மாறி பார்த்து அப்படியே நின்றாள்..அதில் அவன் அங்கேயே நிற்க சொன்னதற்காக பொருள் இருக்க அவள் இருக்கவும் அதை கேட்டு தாமரை, "அப்போ என் வார்த்தைக்கு மரியாதை இல்லையா?" என கேட்டார்..
"அப்படி மரியாதையா நீங்க நடந்துக்கல.. அதனால என்கிட்ட மரியாதையை எதிர்பார்க்காதீங்க எதுக்காக வந்தீங்களோ அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புற வழியை பாருங்க" என்று அவன் கூற அவளுக்கு அதிசயமாக இருந்தது.. சொந்த அம்மாவிடம் ஒரு மகன் பேசும் பேச்சா இது என அவள் நினைத்தாள்..அப்போதும் அவன் மீது தான் அவளுக்கு கடுப்பு ஆனது..
அதுமட்டுமின்றி இருவருக்கும் என்ன பிரச்சனை என அவளுக்கு தெரியாது இருந்தாலும் தந்தை ஜெயிலில் இருப்பதை அறிந்து கொண்டவள் அவனுடைய அம்மா திருமணத்திற்கு வந்ததையும் அதன் பிறகு இங்கு வரவே இல்லையே என அவள் யோசித்து இருக்கிறாள்..
அவனும், அவளும் மற்றும் வேலைக்காரர்களும் இடையிடையே விக்கி வீட்டிற்கு வருவான்.. இவ்வளவு தான் 10 நாட்களில் அவள் கண்ட விஷயம்.. அவளுக்கே அவளுடைய பிரச்சனை தலைக்கு மேலே இருக்க, இதைப் பற்றி எல்லாம் அவள் யோசித்துப் பார்த்ததில்லை.. இன்று அவனுடைய அம்மா கண்ணீரோடு வந்து நிற்கும் பொழுது இவன் மனிதாபிமானம் இல்லாமல் பேசுகிறானே என்று அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை...
அப்படி இருக்க, "என்கிட்ட ஏன் இப்படி இருக்க? கண்ணா!! அப்படி என்ன பாவம் பண்ணிட்ட நான் என்ன தப்பு செய்தேன்"
"என்ன தப்பு செய்தேன்னு உங்களுக்கே தெரியும்" என்று கூற அதைக் கேட்டவர், "நீ அதைப்பற்றி தான் நினைச்சுட்டு இருக்கியா நான் பண்ணியது தப்பு தான்..நான் இல்லைன்னு சொல்லல.. அதுவும் அவனுக்கு தப்பு பண்ணி இருக்கேன் ஆனால் உன் அளவில் நான் எந்த தப்பும் பண்ணலையே..ஆனால் நீ ஏன் கோபமா இருக்க?" என்று அவர் கூற,
அதை கேட்டவனுக்கு சட்டென்று கோபம் வந்தது அப்போதும் அவனுடைய பெயர் தான் முன்னே அவனுடைய பெயர் பின்னே இது தான் அவனுக்கு பிரச்சனை.. அதாவது அவனின் உணர்வுகளை படிக்கும் அவனுடைய அம்மா ஏன் இவனின் மனதை புரிந்து கொள்ளவில்லை என்பது தான் அவனுக்கு கேள்வியாக உள்ளது..
"சரி அவனுக்கு தானே தப்பு பண்ணி இருக்கீங்க.. அவன் கிட்டயே போயி இருங்க..என்னை ஏன் தொல்லை பண்றீங்க? இனி உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.. இனி நான் என்ன ஆனாலும் சரி.. உங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயமா இருக்கலாம் என்ன பொறுத்த வரைக்கும் பெரிய விஷயம்..உங்களை மாதிரி ஒரு பொம்பளைய நான் பார்த்ததே இல்லை என் வாழ்க்கைல.. எனக்கு நடக்குறதுக்கும், அவனுக்கு நடக்க போவதற்கும் நீங்க மட்டும் தான் காரணமா இருப்பீங்க.." என்றான்..
அதை கேட்டவர் அதிர்ந்து, "நான் சொல்றதை கேளு..அப்படி எல்லாம் எதுவும் எனக்கு நீங்க இரண்டு பேரும் முக்கியம் கொஞ்சம் பொறுத்துப் போங்க" என கூற,
"எப்படி அவன் காலில் விழுந்து கெஞ்சனுமா நான்? நீங்க எதுவும் பேச வேணாம்.. காசுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் தானே அவன் சொன்ன மாதிரி இதெல்லாம் செஞ்சீங்க.. அதுதான் உங்க புருஷன் கோடிக்கணக்கில் ஊரை ஏமாத்தி சம்பாதித்து வெச்சி இருக்காருல அதுல இருந்து செலவு பண்ணி சந்தோஷமா இருங்க..நீங்க அவளை ஒதுக்கி உங்களுக்கு ஒரு வாழ்கையை தேர்ந்தெடுத்துக்கிட்டிங்க.. நானும் எனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிட்டேன்..
இனி என்னை தேடி வராதீங்க என்னை தேடி வந்தா எனக்கு உயிர் கொடுத்தீங்கன்னு கூட பார்க்க மாட்டேன்.. மரியாதை இல்லாமல் பேசிடுவேன் இனி நீங்க என்னை தேடி வரக்கூடாது.. உங்க விசயத்தில் எனக்கு அப்படி இருக்கிற ஒரே ஒரு உறவு என்னோட அப்பா மட்டும்தான்" என அவன் கோபத்தில் கூற அதை கேட்டவர் அப்படியே இடிந்து போய் விட்டார்..
