எனதுயிரே 31
.
அத்தியாயம் : 31
மகன் இப்படி பேசுவான் என அவர் எதிர்பார்க்கவில்லை..அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது..அதே நேரம் அம்ரிதாவுக்கு எதுவும் விளங்கவில்லை..என்ன நடக்கிறது என புரியாமல் அவள் இருந்தாள்..
அவரோ, "கண்ணா உன் மேல நான் வைச்ச பாசம் பொய்யில்லை..நான் பண்ணினது தப்பு தான்..ஆனால் அதுக்குன்னு என்னை ஒதுக்காத" என அவர் கூறினார்..
அவனோ, "நீங்க உங்களுக்காக அவங்களை ஒதுக்குனீங்க.. நான் எனக்காக உங்களை ஒதுக்குகிறேன்.. நீங்க எனக்கு உலகத்திலேயே யாரை பிடிக்காதோ அவன் முன்னாடி உங்களால நான் அசிங்கப்பட்டதுக்கு காரணம் நீங்க..உங்களால எப்படி முடிஞ்சது.. உங்க வாழ்க்கை உங்க பர்சனல் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.. அதை பத்தி பேசவும் எனக்கு விருப்பமில்லை.. அதை குறையாக பேச அளவுக்கு நானும் யோக்கியன் கிடையாது.. ஆனால் அவனை பெத்த நீங்க என்னை பெற்றிருக்கக் கூடாது" என்று சாணக்கியன் கூறினான்..அது தான் அவனை போட்டு தாக்கியது..
அவன் மீதுள்ள கோபத்தை அவர் மீது இறக்கி அவரை ஒதுக்கி வைத்தான் அவன்..அவரோ செய்வது அறியாது தவித்து அங்கிருந்து செல்ல அவரின் அழுகையை பார்த்த அமிர்தாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது..அவர்கள் பேசி கொள்வது என்ன விசயம் என அவளுக்கு சரியாக புரியவில்லை என்றாலும் அவரை எண்ணி பாவம் பார்த்தாள்...
இவன் என்ன மனுஷன் இவன்..யாரிடமும் இவன் பாசத்தை காட்ட மாட்டானா பெற்ற அம்மாவிடம் கூட இப்படி நடந்து கொள்கிறான் என இருக்க அவனோ யாருடைய முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்..
அப்படி இருக்க அகிலன் இதோ வசுந்தரா முன் அமர்ந்து இருந்தான்..அவள் உள்ளம் படபடத்து கொண்டு இருந்தது..
ஆம் அவளின் மனம் கவர்ந்தவன் முன் அவள் இருந்தாள்..பல வழிகளில் அவள் அவளுடைய மனதை வெளிப்படுத்தி அவனிடம் இருந்தாலும் இவன் இவளை நிராகரித்து இருந்தான்..இவள் கார்மேகத்தின் மகள் என்பதாலேயே வசுந்தரா அகிலனால் நிராகரிக்கப்பட்டு இருக்க, அவளுக்கு அவள் மனதை தொட்டவன் அகிலன் அவனுக்காக தான் அவள் காத்திருக்கிறாள்.. கல்லூரி சீனியர் ஆன அகிலன் மீது அவளுக்கு காதல் வந்தது ஒரு தலை காதல் என்றாலும் அவள் அவளிடம் தன் காதலை பல வழிகளில் புரிய வைக்க முயன்றிருக்கிறாள் ஆனால் அவன் நிராகரித்து விட்டான்..
ஆனால் அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என தூய காதலோடு வசுந்தரா அகிலனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.. இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறியதும் அகிலன் வசுந்தராவை தேடி வந்து இருக்கிறான்..
"எப்படி இருக்க வசுந்தரா?" என அவன் கேட்டான்..
"நல்லா இருக்கேன் உங்க கல்யாணம் நின்னு போயிடுச்சு இல்லையா?" என அவள் உண்மையான வருத்தத்தோடு கூற
"உன்னோடதும் தான்" என்றான்..
அவளோ அமைதியாக, "அப்பா ரொம்ப கட்டாயப்படுத்தினார் ஆனால் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை.. அதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு..அது என்னை பொறுத்தவரை நல்லது தான்" என்று வசுந்தரா கூறினாள்...
அவனோ, "வசுந்தரா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல..நான் உன்கிட்ட ஒரு விசயம் கேட்கிறேன் அதுக்கான பதிலை மட்டும் சொல் என்றவன் இன்னும் என் மேல பழைய காதலோடு நீ இருக்கியா?" என கேட்க அதை கேட்டு அவளுக்கு வியர்த்தது..அவனோ அவளின் உணர்வுகளை படித்து கொண்டு இருந்தான்..
"என் மனசுல அன்னைக்கும், என்னைக்கும், எப்பவுமே நீங்க மட்டும் தான் இருப்பீங்க அகிலன்.. நீங்க என்னோட அப்பாவை நினைத்து என்னை ஒதுக்கி வச்சீங்க ஆனால் நான் அதுக்கெல்லாம் அசர மாட்டேன்.. என்னுடைய முதல் காதல் நீங்கதான் உங்களை தவிர வேறு யாரையும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. நீங்க கிடைக்கலனாலும் பரவால்ல நான் இப்படியே இருந்துட்டு போயிடுவேன் ஆனால் உங்களை மட்டும் மறக்க மாட்டேன் இது சத்தியம்" என அவளோட முடிவை கூறினாள்..
அதை கேட்டவன், "என்னோட வாழ்க்கையில என்னென்னமோ ஆயிடுச்சு.. நமக்குள்ள இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லித்தான் நான் ஒதுங்கி இருந்தேன் இப்போ எல்லாம் மாறிடுச்சு வாழ்க்கையை வெறுமையாய் இருக்கு..நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என கேட்டான்..
அதை கேட்டவள் அதிர்ந்து போய், "நிஜமா தான் சொல்றீங்களா?" என கேட்க அவனோ சட்டென்று அவளுடைய கையை பிடித்து, "இத்தனை நாள் ஏதோ எண்ணத்தில் இருந்துட்டேன்..உனக்கே தெரியும் நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.. நீ எத்தனையோ முறை என்கிட்ட கேட்டும் நான் அதை தட்டி கழிச்சு இருக்கேன்.. இனி நீயாவது என்னை ஏத்துக்கோ... வாழ்க்கையே வெறுத்த மாதிரி இருக்கு.. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரியல" என கூறினான்..
அதை கேட்டவள் வருந்தி தன் தோழன் செய்ததற்கு மிகவும் வருந்தி, "அவன் அப்படி செய்தது தப்பு தான்.. ஆனால் நான் சொன்னால் எல்லாம் அவன் கேட்க மாட்டான்.. அவன் எதுக்காக இப்படி செஞ்சிருக்கான்னு தெரியல.. ஆனாலும் அவன் செஞ்சது தப்புதான் உங்களுக்கு பார்த்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது அந்த பொண்ணை ரொம்ப காதலிக்கிறேன்னு சொன்னான்" என இழுக்க,
"காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்னை பழி வாங்கணும் அதுக்காக இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.. பரவாயில்லை விடு அவனை நான் பார்த்துக்கிறேன்.. எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு எனக்கு எங்கேயாவது போகணும் நீ என்கூட வர முடியுமா? எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்கு" என கேட்டான்..
அதை கேட்டவள், அவன் மனது மிகவும் வருத்தத்தில் உள்ளது என்பதை புரிந்தும் அவன் மீது அவள் வைத்துள்ள காதல் மனது வேகமாக சரி என தலையாட்ட வைத்தது..
ஆம் வசுந்தரா அகிலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள்..அந்த அளவுக்கு அகிலனை அவளுக்கு ஏனோ பிடிக்கும்.. முதல் காதல் என்பதாலோ என்னவோ தன்னை இரண்டாம் பட்சமாக அவன் அமிர்தா இல்லாததால் தேடி வந்திருக்கிறான் என்று கூட யோசிக்காமல் அவன் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் தலையை ஆட்டி வைத்து விட்டாள்..
உண்மையில் அவள் ஒரு அப்பாவி..அம்ரிதாவை போல கூட அவள் கிடையாது.. தந்தை என்ன செய்கிறார் என புரியாது.. தோழன் எதற்காக இதை செய்தான் என தெரியாது.. இவ்வளவு ஏன் தனக்கு எதிரே இருக்கும் அவளுடைய மனம் கவர்ந்த அகிலன் எதற்காக மீண்டும் தன்னை தேடி வந்து இருக்கிறான் என்று கூட அவளுக்கு தெரியாது..
ஆனால் அவன் வந்ததில் சந்தோஷம் கொண்டு அவள் இருக்கிறாள்.. அதைவிட அவன் திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டது அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திருக்கிறது வேறு எதைப் பற்றியும் அவள் பேசிக்கொள்ள வில்லை..
அவனின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வசுந்தரா சிக்க அவனோ உள்ளுக்குள் வஞ்சத்தை வைத்து தான் இந்த முடிவை எடுத்தான்.. அதுக்கு பலியாக அவளை வைத்து அவனை தீர்க்க முடிவு செய்தான் அகிலன்…
