Share:
Notifications
Clear all

எனதுயிரே 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 8

அவனும் சற்று அழுத்தமான முகத்தோடு அவளின் கையை விடாமல் பிடித்து இருந்தான்.. அவளோ யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் இருந்தாள்.. இவனுடன் விக்கியும் நிற்க அவர்கள் மூவரையும் சரமாரியாக மீடியாக்கள் போட்டோ எடுத்தார்கள்..

"சார் நீங்கதான் இனிமேல் உள்துறை அமைச்சராமே இன்னைக்கு உங்களுக்கு பதவியேற்பு விழா நடக்கப் போகுதாமே.. பதவியேற்பு நடக்குறதுக்குள்ள நீங்க இருக்கீங்க" 

"ஆமாம் நானும் இப்போ தான் கேள்விப்பட்டேன்.. தலைமையில் இருந்து இப்பதான் அழைப்பு வந்தது" என அவன் எதுவுமே தெரியாதது போல கூறினான்..

"உங்க அப்பாவுடைய கைதை பத்தி என்ன சொல்றீங்க? அவர் நிறைய ஊழல் செய்து இருக்கிறதா சொல்றாங்க.. ஒரு கட்சித் தலைவர் ஆன அறிவழகன் உங்க அப்பா மேல கொடுத்த வழக்கை பற்றி நீங்க எப்படி பார்க்கிறீர்கள்" என அவர்கள் கேள்வி கேட்டனர்..

"இது எதிரணி செய்த சதி.. இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் அறிவழகன் தான் கூடிய சீக்கிரம் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட இருக்கிறது.. அப்போ நீங்க இதே கேள்வியை அவருடைய மகன் கிட்ட கேளுங்க வெளிய நல்லவர் மாதிரி அவரு நடிச்சிட்டு இருக்காரு.. கைது செய்தா பெரிய பிரச்சனை வெடிக்கும்னு சொல்லி விடியற்காலையில் கைது பண்ணி இருக்காங்க இதிலிருந்தே அப்பா மகன் இரண்டு பேருடைய யுக்தி உங்களுக்கு தெரியலையா" என அவன் அறிவழகனையும் அதே நேரம் அகிலனையும் தாக்கினான்...

"என்ன சார் இப்படி சொல்றீங்க? அப்போ உங்க அப்பா ஊழல் பண்ணவே இல்லைன்னு சொல்றீங்களா?"

"அப்படி எங்க அப்பா ஊழல் பண்ணி  உங்ககிட்ட தான் கொடுத்து வச்சிருக்கார்ன்னு நான் சொன்னா நீங்க அதை ஒத்துப்பீங்களா? மத்தவங்களை குறை சொல்லும் போது பார்த்து குறை சொல்லுங்க ஆதாரபூர்வமான எந்த விஷயமும் நிரூபிக்கப்படாமல் மத்தவங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்.. கட்சியில் சம்பாதித்து தான் நாங்க பிழைக்கணும்னு அவசியம் எங்களுக்கு இல்லை" என எச்சரிக்கை செய்தான்.. அதைக் கேட்டு அந்த கேள்வியை கேட்ட நிருபர் வாயை மூடிக் கொண்டார்..

"இவ்வளவு பெரிய கட்சியில எவ்வளவோ முக்கியமான ஆட்கள் இருக்கும் பொழுது இரண்டு மூன்று வருடம்தான் நீங்க கட்சியில் இருக்கீங்க உங்களுக்கு இவ்வளவு பெரிய பதவி கொடுத்ததை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க நீங்க அனுபவசாலி கிடையாது அதை நீங்க ஒத்துக்குறீங்களா..?" என கேட்க

"எல்லாமே அனுபவத்துல தான் கத்துக்க முடியுமா என்ன?.. இந்த உலகத்தில் எல்லோரும் அனுபவசாலிகளா இருந்துட்டு எந்த வேலைக்கும் வருவதில்லைங்க? நீங்களுமே ஒரு காலத்தில் அறிமுக நிருபர் தான் அப்படித்தானே" என அவர்களை எதிர்கேள்வி கேட்டான்..

"சார் அப்போ உங்க பக்கத்துல இருக்கிறது யாரு சார் நீங்க பொண்ணுங்க விஷயத்தில் ஒரு மாதிரின்னு கேள்விப்பட்டோம் ஆனால் இந்த மாதிரி சமயத்திலும் ஒரு பெண்ணை கூட்டிட்டு சுத்துறீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?" என வேறொருவர் கேள்வி கேட்டார்..

அதைக் கேட்டதும் அவனுக்கு சுர்ரென்று இருந்தது.. அருகில் இருந்தவளோ யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. ஆனால் அவளை ஒவ்வொரு உணர்வையும் லைவாக டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தார்கள்..அதை அவளை தேடி கொண்டு இருந்து அகிலனின் பார்வைக்கும் பட்டது..

அவன் அந்த கேள்வியை கேட்டவர்  முகத்தை பார்த்து, "நான் பொண்ணுங்க விஷயத்துல ஒரு மாதிரின்னு யாரு உங்க ஒய்போ இல்ல உங்க கூட பொறந்தவங்க யாராவது சொன்னாங்களா? இல்லை நான் தப்பா நடக்கும்பொழுது நீங்க எனக்கு ஏதாவது காவல் காத்துட்டு இருந்தீங்களா?  இல்லை என் மேல ஏதாவது கேஸ் தான் இருக்கா? எப்படி இவ்வளவு ஈசியா என்னை பத்தி தவறா கணிச்சு சொல்றீங்க? அதுவும் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு முன்னாடியே கேக்குறீங்க?" என அவன் கேட்டான்.. அவர் சொன்ன பதில் அவருடைய முகம் வெளுத்தது

அவனுடைய எதிர்பாராத இந்த கேள்வியை கேட்டு அனைவரும் அதிர்ந்து போக அந்த கேள்வியை கேட்ட நிருபரை பார்த்து, "கேள்வி கேட்கும் போது பார்த்து கேள்வி கேளுங்க நான் பதில் சொன்னா அதை தாங்கிக்க கூடிய மனநிலையும் உங்களுக்கு வேணும்.. மைக் இருக்குனு சொல்லி என்ன வேணாலும் கேட்கலாம் என்று கேட்காதீங்க இதெல்லாம் என்ன எதிராளிகள் இந்த மாதிரியெல்லாம் காசு கொடுத்து கேட்க சொன்னார்களா? அதனாலதான் கேக்குறீங்களா?" என அவன் திருப்பி கேட்கவும் அந்த நிருபரின் வாய் மூடிக்கொண்டது..

"இதோ பாருங்க பதவிப்பிரமாணம் முடிந்ததும் என்னுடைய அப்பாவை வெளியில எடுப்பேன்.. அவர் மேல எந்த தப்பும் இல்லை அப்படின்னு சட்டமே சொல்லும்.. சட்டத்துக்கு புறம்பாக நாங்க எதையும் செய்ய மாட்டோம்.. நீதி, நேர்மை, நியாயம் இதுதான் எங்களுடைய வழி அல்லது தயவு செஞ்சு குறுக்கே வராதீங்க.. ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் ஒரு பிரபல கட்சியில இருக்கேன் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக என் மேல அவதூறு பரப்பாதீங்க...

அதுக்கு முன்னாடி இன்னும் ஒரு வாரத்தில் எனக்கும் என்னுடைய நீண்ட நாள் காதலியான அமிர்தவர்ஷினிக்கும், எனக்கும் கல்யாணம் நடக்கப்போகுது.. அதுக்கு நீங்க எல்லாரும் வரணும் ரொம்ப நன்றி" என்று கூறிவிட்டு அவளின் தோள் மீது கைபோட்டு அழைத்துக் கொண்டு சென்று விட்டான்...

அவனுடைய பதிலையும் அவனுடைய பொய்களை பார்த்து அவள் திகைத்து போய் இருந்தாள்..இவன் என்ன நிமிடத்திற்கு ஒரு வார்த்தை மாற்றி மாற்றி பேசுகிறான் இவனால் எப்படி இந்த அளவுக்கு இயல்பாக நடிக்க முடிகிறது என்று அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை... ஒரு அரசியல்வாதி ஆவதற்கான எல்லா திறமைகளும் இருந்தது என்பதை தான் அவள் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறாளே!

ஆம் அவளால் எதுவுமே பேச முடியாமல் அவளுடைய தொண்டை அடைத்து இருந்தது.. பல கேமராக்கள் அவளின் வாய் அருகே இருந்தாலும் அவளுக்கு பேச்சே எழவில்லை... இந்த நொடியை பயன்படுத்தி அவள் அவனை தக்கவிதமாக மாற்றி வைத்திருக்க முடியும் ஆனால் அவளால் செய்ய முடியவில்லை இதுதான் அவனுடைய யுத்தியோ என்னவோ அவளால் வாயையே திறக்க முடியவில்லையே..

பின்ன இருக்காதா அவளுடைய அண்ணனின் கழுத்தில் வழிந்த ரத்தத்தை பார்த்து தானே அவள் அமைதியாக இருக்கிறாள்..இன்னும் அவன் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் அவன் கொடுக்கும் அழுத்தத்தை அவளால் தாங்கிக்க கொள்ள முடியவில்லை..

முதன் முறையாக அவள் அவன் கண்ணில் தான் பட்டு இருக்க கூடாதோ என எண்ணினாள்..அதோடு மட்டுமின்றி தானும் அவனிடம் மோதி இருக்க கூடாதோ என நினைத்தாள்..

ஆனால் இனி யோசித்து என்ன பயன் இல்லையா? இங்கே இவள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் எனில் அங்கே அகிலன் மற்றும் அறிவழகன் இந்த காட்சியை பார்த்து திகைத்துப் போய் இருந்தார்கள்... அவன் அவர்களுக்கு எதிராக விளையாட துவங்கி விட்டான் நெடுஞ்செழியனை சிக்க வைத்து ஜெயிலில் அனுப்பியது போல இவனையும் நேர்மையாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் அகிலனின் எண்ணம் நிறைவேறுமா?



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top