எனதுயிரே 7
.
அத்தியாயம் : 7
அவளின் ஒவ்வொரு உணர்வையும் பார்த்து ரசித்த அவனோ ஏதோ எண்ணுக்கு அழைக்க, "அண்ணே போட்டுடவா" என எதிரில் இருந்து கேட்க சாணக்கியன் அவளுடைய முகத்தை பார்க்க அவளோ பீதியாகி இருக்க, "எங்க கழுத்தில் தானே கத்தியை வைச்சு இருக்க?" என கேட்க
"ஆமாம் அண்ணே"
கொஞ்சம் ஆழமாக கத்தியை அவள் கழுத்தில் இறக்கு..ஆனால் அவன் சாக கூடாது அந்த மாதிரி இறக்கு" என இவன் கூறவும் அதை கேட்டு அவன் இறக்க அந்த காட்சியை அவளுக்கு தெளிவாக காட்ட அவளுடைய அண்ணன் பயபட்டு வேண்டாம் என கதற அதை கேட்டு அவள் துடித்தவள், "வேணாம் கத்தியை இறக்க சொல்லு" என கூறவும் அவனோ, "கத்தியை இறக்கு டா" அவன் இலேசாக இறக்கி விட்டான்..ஐயோ என பிரதாப் கத்த அவனின் கழுத்தில் இலேசாக வழிந்த இரத்தத்தை பார்த்து இவள் மேலும் கதற
"சொல்லு நான் ம்ம் என சொன்னால் போதும் உன்னோட அண்ணன் கதையை முடிச்சிடுவாங்க சொல்லு" என்று அவன் துரிதப்படுத்தினான்...
அவளோ அவனின் செயலால் நொந்து போய், "இன்னும் என்கிட்ட என்ன இருக்குன்னு சொல்லி நீ என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்ற அதுதான் மொத்தமா என்னை பழி வாங்கிட்டல்ல" என்க
அதைக் கேட்டு அவன், "இன்னும் இருக்கே இது மட்டும் உனக்கு பத்தாது.. கூடவே அந்த அகிலனுக்கும் பத்தாது.. நீ என் கூட இருக்கும்போதெல்லாம் அவன் அதை நினைத்து வருந்தனும் அதுதான் எனக்கு வேணும்.." என்று அவன் ஆடாமல் அசையாமல் அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு கூறினான்...
அதை கூறும் போது அவனுள் ஒரு அழுத்தம் இருந்தது.. அந்த அழுத்தத்தை அவன் அவளுடைய இடையிலும் கொடுக்க, அவளுக்கு அவனுடைய செய்கையும் பேச்சும் ஒருவித அச்சத்தை உண்டு பண்ணியது.. அவள் இப்பொழுது இல்லை என கூறினால் அவள் அண்ணனும் உயிரோடு இருக்க மாட்டார்கள் அவளுடைய தந்தையும் உயிரோடு இருக்க மாட்டார்கள் அவனால் இரண்டு உயிர் பலியாகும்.. என யோசித்தவளுக்கு தன்னால் அவர்களின் உயிரை காவு வாங்க விருப்பம் இல்லை...ஆம் அவள் கண் முன்னே கழுத்தில் இரத்தம் வழிந்தபடி அவளுடைய அண்ணன் துடித்து கொண்டு இருக்கிறானே..
இருந்தாலும் அவன் சொல்வதற்கு கட்டுப்படவும் அவளுக்கு விருப்பம் இல்லை.. அப்படி இருக்க, அவளை பார்த்து, "நான் உன்கிட்ட மோதினது தப்பு தான் ஆனால் அதுக்கு இப்படி ஒரு தண்டனை எனக்கு தேவையா? நான் இனி உன்னை கல்யாணம் பண்ணினா என்ன? பண்ணலைனா என்ன? அதுதான் எனக்கு உன் அகராதியில தண்டனை கொடுத்துட்டியே நான் தான் ஏற்கனவே உன்னால செத்துகிட்டு இருக்கேன் நீ. இனியும் எனக்கு ஒரு தண்டனை தேவையா? தயவு செஞ்சு அண்ணாவோட கழுத்தில் இருந்து கத்தியை இறக்க சொல்லு" என அவள் கேட்டாள்..
இதை விட அவள் வாழ்கையில் இன்னும் என்ன தண்டனை இருக்க போகிறது என எண்ணி அவள் கேட்டாள்..
அதை கேட்டு, அவன் சற்றும் மசியவில்லை..அவனுக்கு அவன் எதிர்பார்த்த பதில் அவள் வாயில் இருந்து வரும் வரை அவன் விட மாட்டான்..
அதனால், "என்னை பொறுத்தவரை இன்னும் உனக்கு கொடுத்த தண்டனை போதலை.. இன்னும் உனக்கு கொடுக்கணும்னு இருக்கு..ஏன்னா நீ அப்படிப்பட்ட வேலையை எனக்கு பண்ணி இருக்க..
அதுனால உன்னை என்ன பண்ணனும்.. நீ எப்போ சாகனும்னு இனி நான் முடிவு பண்ணிக்கிறேன்.. நீ அதை பத்தி யோசிச்சு கவலைப் பட தேவையில்லை இப்போ முதலில் உன்னுடைய அண்ணனை கொல்லவா? இல்லை உன்னுடைய அப்பாவை கொல்லவா?" என அவன் கேட்டான்..
இரண்டு கண்ணில் எதை முதலில் குத்துவது என கேட்டால் அவள் எதை சொல்லுவாள் என்பது போல இருக்கிறது அவனுடைய கேள்வி.. "பேசாம என்னை கொன்னுடு என்னை இப்படி பண்ணின உன் கூட வாழ்வதை விட வேறு ஒரு தண்டனை எனக்கு இருக்காது பேசாம அவங்க யாரையும் கொல்ல வேண்டாம் நீ என்னை கொன்னுடு" என அவள் கூறினாள்...
அதுக்கு அவனோ, "நீ தான் அதுக்கான பதிலை சொல்லிட்டியே என் கூட வாழ்வதை விட உனக்கு பெரிய தண்டனை இருக்காது அப்படின்னு இது தான் உனக்கு தண்டனை.. அடுத்து அகிலன் அப்புறம் அவனோட அப்பன் நீங்க எல்லோரும் எங்க இருந்து என்கிட்ட மோதிட்டு இருக்கீங்க.. இப்போ என்னுடைய ஆட்டம் நீ அனுபவிச்சு தான் ஆகணும் இப்ப சொல்லு என்ன பண்ணனும் இன்னும் உன் அண்ணன் கதறிட்டு தான் இருக்கான் யோசிக்க உனக்கு சமயம் இல்லை.. கத்தியை கொஞ்சம் ஆழமா இறக்க சொல்லிடுவோமா" என அவன் கேட்டான்..
கத்தியை வைத்து மிரட்டுவது போல இருந்தது அவனுடைய செய்கை அவன் சொல்வதை செய்யாவிட்டால் அவளைக் கொன்றால் கூட அவள் கவலைப்பட மாட்டாள் அவளுடைய குடும்பத்தை அல்லவா அவன் நாசம் செய்கிறேன் என கூறுகிறான்..
தன் அண்ணனின் கதறலை தாங்கி கொள்ள முடியாத அவள், "நான் இதுக்கு சம்மதிக்கிறேன் ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் உன்னால வரக்கூடாது.. தயவுசெய்து கத்தியை இறக்க சொல்லு" என கூறினான்..
"அது நீ என்கூட இருக்கிறதை பொறுத்து இருக்குது நீ என்கூட இருக்கிற வரை அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.. எனக்கு எதிரா நீ எப்போ திரும்புறயோ அப்போ எனக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது" என அவன் வாக்குறுதி கொடுத்தான்.. அதன் பிறகு, "டேய் கத்தியை எடுங்க டா இரத்தம் வெளியே போகாமல் மருந்து போடுங்க" என கூறி போனை வைத்து விட்டான்..
இவனெல்லாம் ஒரு மனிதனா? இப்படியும் ஒரு அரக்கன் இந்த உலகத்தில் இருப்பார்களா என அவள் நினைக்க அவனோ அவளை யோசிக்க விடாமல், "என்ன அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்கலாமா" என கேட்க
அவளோ சரி என கூற அதை கேட்டவன், "சரி நல்ல பொண்ணு இப்படி நான் சொன்னது நல்ல விதமா கேட்டு நடந்திருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது இப்போ என்ன பண்ற டிரஸ் எல்லாம் மாட்டி தலை எல்லாம் சீவி ரெடியாகி என் கூட ஜோடியா வர கீழே பிரஸ் நிக்கிறாங்க அவங்க முன்னாடி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நான் சொல்ல போறேன் அப்போ நீ என்ன சொல்லணும் நாங்க ரெண்டு பேரும் காதலிச்சுட்டு இருக்கோம்.. கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லனும் புரியுதா" என கூற அதை கேட்டு அவள் அதிர, "ரொம்ப ஷாக் ஆகிட்டு இருக்காத எனக்கு அதை டைம் இல்லை" என கூறினான்..
அதன் பிறகு அவளுக்கு யோசிக்கும் திறன் ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து போனாள் அவன் சொன்னது போல எல்லாம் செய்ய, அவனும் அதற்குள் தயாராக வந்தவன் அவளின் அலங்காரத்தை பார்த்து திருப்தி கொண்டவன் அவளின் வீங்கிய கண்ணை மறைக்க ஒரு கூலிங் கிளாஸ் எடுத்து அவனே மாட்டி விட்டு, "இப்போ ஓகே வா" என அவளின் தோளை தொட அவளோ விலகி நின்றாள்..
அதை பார்த்தவன், "இனி உன் உடலில் என் கை படாத இடமில்லை அமிர்த வர்ஷினி.. இதோ பார் நான் உன்னை பழி வாங்க தான் இதை எல்லாம் செய்யறேன் உன்னோட அண்ணா, அப்பா உயிரோட இருக்கணும்னா நான் சொன்னதை செய் இப்படி அடம் பண்ணிட்டு இருந்த அவ்ளோ தான் சொல்லிட்டேன் உன் அண்ணன் கழுத்தில் போட்ட கீரலை அப்படியே அவனோட தொண்டைக்குள் இறக்கிடுவேன்" என்றான்
அவன் சொன்னதை கேட்டு அவள் மேலும் பயந்து போக அதை பார்த்து அவனோ, "என்னை அந்த அகிலன் மாதிரி நினைச்சுடாத நானெல்லாம் ஏதாவது நினைச்சேன் வை அது அடைஞ்சிடுவேன் அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்" என்று மேலும் மிரட்ட அவள் இவன் செய்தாலும் செய்வான் என எண்ணி அமைதியாக இருந்தாள்..
பிறகு அவளின் தோளில் கையை போட்டுக்கொண்டு வெளியே வர விக்கி அவர்கள் இருவரையும் பார்த்து, "டேய் இதெல்லாம் சரி வருமா?" என்று கேட்டான்..
"அதை நான் பார்த்துக்கிறேன் நீ மூடிட்டு வாடா" என்று கூறியவன் அவளோடு வெளியே காலை வைக்க காத்திருந்தவர்கள் போல பிரஸ் அவனை சூழ்ந்தது..
