Share:
Notifications
Clear all

எனதுயிரே 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 6

    அவளின் நிலையை சரியான மனதில் வைத்து கொண்டு அடிக்க அவனின் அணைப்பில் இருந்து கொண்டே, "ஒரு பெண்ணை இப்படி ஆக்கி தான் உன்னோட பழி வெறியை தீர்த்துக்கணுமா? அப்படி என்ன நான் உனக்கு தீங்கு இளைத்தேன்" என அவள் கேட்டாள்..

அதை கேட்கும் போதே அவளின் குரல் தளதளத்தது.. பின்ன ஒரு ஆடவனின் அணைப்பில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் அந்த போர்வையை மட்டும் ஆடையாக போர்த்தியபடி அவள் நின்று கொண்டு இருந்தாள்...அது மட்டுமா அவளின் பெண்மையை அவன் சூறையாடி அது தெனாவட்டாக அவளிடமே கூறி கொண்டிருக்கும் அவனிடமே மன்றாடி கொண்டு இருக்கிறாளே... இவள் எல்லாம் நாலு பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து அந்த குழந்தைகளை எப்படி ஒரு திறமைசாலிகளாகவும், தைரியமிக்கவர்களாகவும் இந்த சமூகத்திற்கு உருவாக்குவாள் இவளே தனக்கு இப்படி ஒரு நிலைமை ஆனதும் இப்படி பயந்து நடுங்கி கொண்டு இருக்கிறாளே..

இந்நேரம் அவனை நாலு அறை வைத்திருக்க வேண்டாமா என்று அவள் நினைத்தாள்..ஆனால் அவளால் அதை செய்ய முடியாமல் அவளுக்கு நடந்த விஷயத்தில் இருந்து அவளால் வெளியே வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் அமிர்தா...

இவனை ஏற்கனவே அவள் சந்திக்காமல் இல்லை சந்தித்திருக்கிறாள் அவனை சந்தித்த சமயங்களில் எல்லாம் அமிர்தா அவனோடு மோதி இருக்கிறாள்..அகிலனுடன் இருப்பதால் அவள் மோதி இருக்கிறாள்..

அதற்காக தான் இன்று அவன் வைத்து செய்கிறானோ? அப்படி அவள் அவனிடம் பிரச்சனை செய்திருந்தாலும் அவளுடைய கண்ணியத்தை விட்டுக் கொடுத்ததில்லையே ஆனால் இப்பொழுது அந்த கண்ணியத்தையும், மானத்தையும் அவனிடம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையில் அவள் இருக்கிறாளே இப்படி என்னை நிற்க வைத்து விட்டானே என அவள் நினைத்தாள்...

அதைக்கேட்டவன், "ஒரு பெண்ணை பண்ண கூடாது உண்மை தான் ஆனால் என்கிட்ட மோதின உன்னை என்ன வேணாலும் பண்ணலாம்..என்ன டி நடிப்பா பயங்கரமா இருக்கு...ஆனால் நீ என்னமோ எதுவுமே பண்ணாத மாதிரி ஆக்ட் பண்ற அதை தான் தாங்கிக்க முடியல.. இதோ இந்த கன்னத்துல நீ என்னை அடிச்சிருக்க அதை நான் இன்னும் மறக்கல" என அவன் நக்கலாகவும் அதே சமயம் ஒரு பெண்ணின் கைகளால் அடி வாங்கி விட்டோம் என்று ஆத்திரத்திலும் சாணக்கியன் அவள் எந்த கன்னத்தில் அடித்தாளோ அதே கன்னத்தால் அவளின் கன்னத்தை உரசியபடி அவன் பேசினான்..அவளுக்கு அவனுடைய செய்கை கூச்சத்தை கொடுத்தது..

ஆனால் அவனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை இவளையும் சரி இவளுடைய காதலனையும் சரி பழி தீர்த்து விட வேண்டும் என எண்ணி கொண்டு இருக்கிறான்...அதற்காக தான் அவன் இந்த வேலையை செய்து இருக்கிறான்..

அவளோ மனதுக்குள் அவன் எதையும் மறக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, "உனக்கெல்லாம் நல்ல சாவே வராது பாரு" என அவனிடமிருந்து விடுபட முடியாத கோபத்தில் கொந்தளித்து கூறினாள்..

அந்த நொடி அவனுடைய கை அவளின் போர்வைக்குள் நுழைந்து வழுவழுப்பான அவளின் இடையை அழுத்தமாக பிடித்து தன்னோடு சேர்த்து இழுக்க, அவளோ பதறி அவனிடம் இருந்து விலக பார்க்க அவனுடைய அருகாமை அவளை கூச  செய்தது..

அதை கவனித்தவன் அவளின் செவி அருகே குனிந்து, "நான் நான் பார்க்காத என்னடி உன்னுடைய உடம்புல இருக்கு அதுதான் நேத்து எல்லாம் பார்த்துட்டேனே எந்த இடத்தில எத்தனை மச்சம் இருக்குனு கூட எனக்கு தெளிவா தெரியும் இப்ப வேணா சொல்லட்டா என் கை இப்போ பட்ட இடத்தில் உனக்கு ஒரு மச்சம் இருக்கு" என அந்த இடத்தை மிக சரியாக தொட்டபடி அவளை வேண்டும் என்று வெறுப்பேற்றி அவன் கூற, அதை கேட்ட அவளுக்கு அவனின் செய்கையால் அருவருப்பாகி, "எல்லோருக்கும் சாவு வரும் ஆனால் உன்னோட சாவு மிக கொடுமையான சாவா இருக்கும் பார்..என்னோட அகிலன் சும்மா விட மாட்டாரு" என்க

"அதை நான் சாகும் போது பார்த்துக்கிறேன்.. என்னால அந்த அகிலன் சாகுறானா இல்ல அவனால நான் சாகிறேன் நான் பாத்துக்கலாம்...ஆனால் ஒரு வேளை நான் செத்தா என் தலைமேட்டுல  நீ உட்கார்ந்திருப்ப உன்னை உட்கார வைப்பேன்" என்றான்..

அதை கேட்டு அவள், "அதற்கு வேற ஆளை பார்..இப்போவே உன்னை பத்தி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன் பாரு உன்னை சும்மா விடமாட்டேன்" என அவள் கொந்தளித்து கூறினாள்..

அவனுடைய செய்கையும், அவனுடைய பேச்சும் அவளை பேச வைத்தது என்றே கூற வேண்டும்.. ஆனால் அவனோ அதை பற்றி எல்லாம் துளியும் கவலை படவில்லை..இவர்களை இருவரும் அவனை பொறுத்தவரை அனுபவிக்க வேண்டியவர்கள் அதனால் அவளின் கண்ணீரால் அவனின் தலை முடியை கூட அசைக்க முடியாது..

அப்படி இருக்க அவளின் கொதிப்பை எல்லாம் பார்த்து சற்றும் அசராமல் அவன், "ஹே நிறுத்து டி..எனக்கு சாபம் கொடுக்கிறதை நிறுத்து...இப்போ அவனுங்க உயிரோட உனக்கு வேணுமா? வேண்டாமா? உனக்கு என்னமோ உன்னோட அண்ணன் அப்படின்னா உயிருனு கேள்விப்பட்டேன் அப்படியா?" என கேட்க,

அவளோ அவனின் அடுத்த மூவ் அவளுடைய அண்ணன் என்பதை உணர்ந்து அப்படியே அதிர்ந்து தன் முகத்தை திருப்பி அவனை பார்க்க,  "இரு ஒரு நிமிஷம் உனக்கு ஒரு விசயம் இருக்கு என்றவன் நேத்து அண்ணன் கூட இருந்தோமே இப்போ இங்க இருக்கோமே அண்ணனுக்கு என்ன ஆச்சு அதை பற்றி நீ யோசிச்சியா?" என்று கேட்டான்..

"அவனை என்ன பண்ணின?" என அவள் திகைத்து கேட்டாள்..மேலும் அவளுடைய கை கால்கள் நடுங்க துவங்கியது..

அவளோ மேலும் அதிர அதை பார்த்து நக்கலாக இகழ்ந்தவன், "அவன் இப்போ நம்ம கைல தான் இருக்கான் நீ சொல்ற பதில் தான் இருக்கு அவன் உயிரோடு இருப்பதும் இல்லாததும்" என்று கூற

அவளோ நொறுங்கிப் போய், "பிளீஸ் அவனை விட்டிடு..உன்கிட்ட மோதினது நான் என்னை தான் மிச்சம் வைக்காமல் பழி வாங்கிட்ட இன்னும் உன் ஆத்திரம் அடங்கலையா" என அவள் கேட்டாள்..

அவன் சொல்வது சரிதான் நேற்று அவள் அண்ணனிடம் தான் கடைசியாக அவள் இருந்தது.. அதன்பிறகு என்ன ஆனது என அவள் தெரியாமல் முழிக்க, " ஏன் டி நான் எந்த இடத்தில் இருக்கேன் என்கிட்ட மோதும் போது இது எல்லாம் யோசிக்க மாட்டியா? இனி ரொம்ப யோசிக்காத.. பிரோயோஜனம் இல்லை அந்த போலீஸ்க்காரன் இருக்கிற தைரியம் தானே? இனி உன்னை காப்பாத்திக்க யார் வருவாங்கன்னு பார்க்கிறேன்" எனக்கு சமயம் இல்லை சீக்கிரம் சொல்லு உன் அண்ணன் உயிரோட வேணுமா வேண்டாமா?" என்று கூறியவன் அவளின் இடையில் இருந்து கையை எடுத்து அவனுடைய ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்து அவனுடைய போனை எடுத்து ஒரு வீடியோவை அவளுக்கு காட்டினான்..

அதில் அவள் அண்ணன் பிரதாப் கழுத்தில்  கத்தியை வைத்து அழுத்த ஏற்கனவே இவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்தவள் அதைப்பார்த்து மேலும் உடைந்து போனாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top