Share:
Notifications
Clear all

எனதுயிரே 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.அத்தியாயம் : 5

அவனை கண்டதும் அவன் தானா தன்னை இப்படி எல்லாம் செய்தது என எண்ணி கொண்டே அவள் அதிர்ந்து, "நீயா" என திகைத்து கேட்டாள்..

அவனோ அவளையும் அவளுடைய கோலத்தையும் பார்த்து கொண்டே ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்க அவளோ அவன் தன் உடலை தான் பார்கிறான் என எண்ணி வேகமாக அந்த போர்வையை எடுத்து மேலும் போர்த்தி கொண்டாள்..

அவனுடைய பார்வையில் அவள் முகம் கோபத்தில் சிவந்தது..அவனுடைய பார்வையே அவளை கூச செய்தது..

அவளுக்கும், அவனுக்கும் இரண்டு மூன்று முறை பிரச்சனை வந்திருக்கிறது.. அகிலனுக்கும், அவனுக்கும் பலமுறை பிரச்சனை வந்திருக்கிறது இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அவளை பலி வாங்கி விட்டானா என அவள் நினைத்தாள்..

அவளோ திகைத்து போய், "என்னை என்ன பண்ணின?" என அதிர்ச்சி நிறைந்த விழிகளில் கேட்க அவனோ, "உன்னையும், என்னையும் பார்த்தா எப்படி தெரியுது?" என அவன் அவளை திருப்பி கேட்டான்..

அவளோ மேலும் திகைக்க, "ஏன் டா இப்படி பண்ணின ஏன் இப்படி பண்ணின?" என அவள் நிலை தடுமாறி கலங்கிய விழிகளில் கேட்டாள்..

"ஏன்னு உனக்கு தெரியாதா? தெரியாத மாதிரி கேட்கிற?" என எதிர்கேள்வி கேட்டான்..

அந்த கேள்வியில் அதிர்ந்து, "ஒரு பெண்ணை கடத்திட்டு வந்து நாசம் செஞ்சு தான் உன்னோட பழி வெறியை நீ எல்லாம் தீர்த்துப்பியா இவ்வளவு கேடுகெட்ட ஜென்மத்தை நான் பார்த்தது இல்லை.. நீ எல்லாம் உயிரோட இருக்க தகுதியே இல்லை டா பொறுக்கி நாயே" என அவள் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டானே என கருதி அவள் கதறினாள்..

அவளின் கதறலை பார்த்து அவன் மேலும் நக்கலாக, "ஆக்டிங் ரொம்ப நல்லா இருக்கு.. ஆனால் அதை பார்க்கத்தான் எனக்கு சமயம் இல்லை.. என்ன உன்னை நான் தூக்கிட்டு வந்தேனா...நீ தானே இந்த ரூமுக்கு வந்த அதை மறந்துட்டியா?..

உன்னை எவன் கூட்டிட்டு வந்தானோ அவன் கிட்ட போய் இந்த கதறலை எல்லாம் போடு என்கிட்ட வேண்டாம்.." என்றதும் அவளுக்கு நேற்று நடந்த சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன... அவள் நேற்று பிரதாப்பை பார்க்கத்தானே வந்தாள் அவன் எங்கே என யோசித்தாள்..

ஆனால் மேற்கொண்டு அவளை யோசிக்க விடாமல் அவன், "அப்புறம் என்ன சொன்ன? ஏண்டி பொறுக்கியா நானா ஆமாம் நான் பொறுக்கி தான்.. நமக்குள்ள நடந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் நீ மறந்திருக்கலாம்.. ஆனால் நான் மறக்க மாட்டேன்.. அதை விட உன்னோட லவ்வர் அந்த அகிலன் அவனை எப்படி சும்மா விட முடியும்? உன்னை வைத்து தானே காரியத்தை சாதிக்க முடியும்.. சோ ரொம்ப கதறாமல் இரு அப்புறம் பொட்டுன்னு போய்ட போறாங்க" என்று கூற அவள் அவன் என்ன சொல்கிறான் என அதிர்ந்து பார்க்க,

"என்ன ரொம்ப ஷாக்கா இருக்கா உன்னை கூட்டிட்டு வந்த உன்னோட அண்ணன்.. அப்புறம் உன்னோட வீட்டுல உன்னை காணலையே அப்படின்னு தவிச்சு போய் இருக்குற உன்னோட அப்பா இப்போ என்னோட கஸ்டடியில் இருக்காங்க..

இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா? உனக்கும், எனக்கும் உன்னோட லவ்வர் அந்த அகிலனுக்கும் இருக்கிற பிரச்சனை அதை எனக்கு முடிச்சே ஆகணும்.. அதுக்கு நான் என்ன வேணாலும் செய்வேன்.. அதற்கான சின்ன உதாரணம் தான் நீ இப்போ ஒட்டு துணி இல்லாமல் என் முன்னாடி நின்னுட்டு இருக்கிறது" என கூறவும், அவளுக்கு ஆத்திரம் அதிகமாகி அவன் அருகே சென்று அவனை அறைய கையை ஓங்க அவனோ அவளின் கையை அப்படியே அவளின் பின் பக்கமாக மடக்கி அவளை தன் உடலில் உரசி நிற்க வைத்து,"ரொம்ப ஆத்திரப்படாதே அப்புறம் எனக்கு மூடு வந்துட போது" என்று கூறி அந்த சிகரெட் நாசியோடு அவள் முகத்தில் ஊத அவள் அப்படியே சிவந்து அவனிடம் இருந்து விலக போராட முடியாமல் தவித்து அவன் கைக்குள் அடங்கி கொண்டாள்...

அவளின் முக சிவப்பை கண்டு, "என்னைப் பேச விடுடி அப்புறம் ரொமான்ஸ் பண்ணலாம்" என்று அவளின் கழுத்து வளைவில் புதைந்தவன் மெல்ல நிமிர்ந்து, "இனி உன்னுடைய அண்ணனுடைய உயிர்.. உன்னோட அப்பாவோட உயிர்.. எல்லாம் என் கையில் தான் இருக்கு.. எப்படி நீ என் கைக்குள்ள அடங்கி இருக்கிறாயோ அதே மாதிரி தான் அவங்களும் அடங்கி இருக்காங்க..

வெளியே ஜம்பமா எல்லாரும் முன்னாடியும் அன்னிக்கு சினிமா டயலாக் அடிச்சுவிட்டியே அதுக்கான தண்டனை கொடுக்க வேண்டாமா? அதுதான் இப்போ நடக்குது.. எனக்கு தான் ஆவேசமா கத்துறது உன்னை கட்டி போட்டு அடிச்சு காயப்படுத்துவது இதெல்லாம் என்னோட சிலபஸ்ல கிடையாது எனக்கு பொண்ணுங்களை பூ மாதிரி ட்ரீட் பண்ணனும் அதுதான் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் நீதான் கேட்கவே மாட்டேங்கறியே

ஆனாலும் நான் உன்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. உன்னோட லவ்வர் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான் அதுக்கும் நீதான் அனுபவிக்க போற என்னன்னு கேட்க போறியா? நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போற? அதுதான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை" என்று கூறவும் அவள் மேலும் அதிர்ந்தாள்..

"என்ன பயமா இருக்கா பயப்படாத நான் வேற ஒன்னும் பண்ண மாட்டேன் நீ எனக்கு மனைவியாகிட்டா நான் உன்னோட குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அப்புறம் நானாச்சு உன்னோட லவ்வர் ஆச்சு.. அதை நாங்க பார்த்துக்கிறோம் உன்னோட குடும்பத்தில் இருக்கிற ஆளுங்க உயிரோடு இருக்கணும்னா நீ இதை செஞ்சுதான் ஆகணும் இதுக்கு சம்மதம் சொல்லாமல் நீ இந்த ரூமை விட்டு வெளியே போக முடியாது" என்று அவன் கூறினான்..

ஏனெனில் அவனுடைய தந்தை கைதான விவரம் அவனுக்கு இப்பொழுது தான் தெரியும்.. அப்படி இருக்க அக்கிலனை பழி வாங்கத்தான் இதெல்லாம் அவன் செய்திருந்தாலும் இப்பொழுது தந்தையின் கைதும் அவனுக்கு இன்று நடக்கப்போகும் பதவி பிரமாணமும் அவனை இதை செய்ய வைத்தது என்று கூறலாம்..

அவன் பேசிய பல விஷயங்கள் அவளுக்கு விளங்கவில்லை என்றாலும் நான்கு விஷயங்கள் விளங்கியது.. அவன் தன்னை நாசம் செய்து விட்டான்.. அகிலனுக்காக தன்னை பழிவாங்கத் துடிக்கிறான்.. தன் தந்தை மற்றும் அண்ணனை கடத்தி வைத்திருக்கிறான்.. அவர்கள் உயிரோடு வர வேண்டுமானால் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இதுதான் அவளுக்கு விளங்கிய விஷயம்..

அப்படி இருக்க, தன் மானத்தை வாங்கி விட்டான் என்று அவள் அழுகையிலும் பதட்டத்திலும் இருக்கையில் மேலும் மேலும் அவளுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் அவன் விஷயங்களை கூறிக் கொண்டே இருக்க அவளால் எதுவுமே சொல்ல முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டாள் அமிர்தவர்ஷினி... அவளின் எல்லா கதவுகளையும் அடைத்து அவளையும் தன் கைக்குள் அடக்கி வைத்து இருக்கிறான் சாணக்கியன்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top