எனதுயிரே 4
.
அத்தியாயம் : 4
வேகமாக தன் மகனுக்கு அழைத்தார்.. அவனும் இப்போது தான் அந்த சாணக்கியனிடம் பேசியதில் சற்று கடுப்பாக அமர்ந்து இருக்கும் போது தான் அவர் அழைக்க, "சொல்லுங்க ப்பா" என்றான்..
"தம்பி நம்ம அம்முவை காணோமாம்... இப்பதான் மாணிக்கம் வந்து கத்திட்டு போறான்.. எங்கே போனான் என்று தெரியவில்லை" என்று கூறவும் விஷயத்தை கேட்டு அகிலன் பதறினான்..
பிறகு அகிலனின் போலீஸ் மூளை வேகமாக ஆராய்ச்சி செய்ய நொடியில், "அப்பா இது அந்த சாணக்கியன் வேலையாக தான் இருக்கும் அப்பா" என கூறியவன் காதில் இப்பொழுது சாணக்கியன் பேசிய வார்த்தைகளில் பொருள் புரிய ஆரம்பித்தது...
அவன் தான் சற்று முன் உன்னுடைய கல்யாணத்தில் சந்திப்போம் என்று கூறியிருந்தான்.. அப்போது அவன் தான் இதை செய்திருக்கிறான் என்பதை புரிந்த அவன், "அப்பா எப்படி இருந்தாலும் நான் அவளை அவன்கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வரேன் கவலைப்படாதீங்க" என்று கூறியவன் அடுத்த நொடி தனக்கு அழைப்பு வந்த எண்ணுக்கு அழைத்தான்..
விக்கி போன் அலறவும் அங்கு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த சாணக்கியன், "அந்த போலீஸ்காரன் தான் கூப்பிடுறான்" என்று விக்கி போனை கொடுக்க, "விஷயம் வெளியே தெரிந்திருக்கும் அதுதான் கதற கூப்பிடுறான்" என்று போனை வாங்கியவன் ஆன் செய்ய, "டேய் எதுவா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா மோத மாட்டியா போயும் போயும் பொம்பளையை கடத்தி வச்சிருக்க?.. உன் அப்பாவை ஜெயிலில் போட்டா நீ பொம்பள பிள்ளையை கடத்துவியா?" என்று அகிலன் ஆவேசத்தில் கத்தினான்..
அதைக் கேட்ட சாணக்கியன் பலமாக சிரித்து, "டேய் அவளை தூக்கி 24 மணி நேரத்துக்கு மேல ஆச்சுடா வெண்ண.. இப்பதான் புதுசா கண்டுபிடிக்கறியா? நீ எல்லாம் போலீஸ் வேலைக்கு வந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கு மேடை ஏத்துறதுக்குள்ள விடிஞ்சிடும்" என்று அவன் நக்கல் அடிக்க அகிலனின் சமநிலை மாறியது..
"இதோ பார் அவள் உன்கிட்ட தான் இருக்கான்னு தெரிஞ்சு போச்சு.. மரியாதையா என்னுடைய அம்முவை என்கிட்ட கொடுத்திடு" என அகிலன் கொந்தளித்து கூறினான்..
"என்னது அவளோட பெயர் அம்முவா? ஏதோ அமிர்தவர்ஷினினு சொன்னாங்க.. அம்மு நல்ல பெயர் இனிமேல் அவள் உன்னோட அம்மு கிடையாது என்னோட அம்மூமூமூ..." என இழுத்து சொன்னான்.. வேண்டும் என்று அகிலனை வெறுப்பேற்ற கூறினான்...
அதை கேட்டு அகிலன் கடுப்பாகி, "இதோ பார் தேவை இல்லாமல் மோதிட்டு இருக்காத உனக்கும் எனக்கும் பிரச்சனை நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க.. நான் உன்னுடைய அப்பாவை கைது பண்ணி இருக்கேன்.. அதுக்காக என் வீட்டு பொண்ணு மேல எல்லாம் கையை வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று அகிலன் கூறினான்...
"கையை வைக்கவா அதெல்லாம் சோலியையே முடிச்சிட்டேன்.. உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கு போ.. இதெல்லாம் நீ என்கிட்ட மோதும் போது யோசிச்சு இருக்கணும்.. இப்பதானே நான் ஆரம்பித்து இருக்கிறேன்.. இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.. இதுக்கே இப்படி ஆடினா எப்படி? நீ என்னை தொட்டு இருக்க கூடாது.. ஆனால் தொட்டுவிட்ட அதுக்கான தண்டனை உனக்கு கிடைக்க வேண்டாம் இனிமேல் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் இனி நீயா நினைச்சாலும் இதுல இருந்து உன்னால வெளியே போக முடியாது ரொம்ப நேர்மையா இருக்கியோ அந்த நேர்மையை சோதிக்கிற காலம் வரும் கண்ணா...
அப்புறம் பை தி வே எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் கல்யாணத்துக்கு வந்துடு சரியா?" என்று கூறும்போது கண்களை திறந்து சுற்றும் முற்றும் எதுவும் விளங்காமல் தன் கோலத்தை பார்த்து அதிர்ந்து அந்தப் போர்வையை எடுத்து தன் உடலில் சுற்றி, "யாராவது இருக்கீங்களா? காப்பாத்துங்க..ஹெல்ப் ஹெல்ப்" என்ற சத்தம் கேட்க அதை கேட்ட சாணக்கியன் நக்கலாக சிரித்து, "என்ன சத்தம் கேட்குதா?" என அகிலனிடம் கேட்டான்..
தெளிவாக அவளின் சத்தம் அகிலனுக்கு கேட்க மேலும் அவன் பதறி, "டேய் நீ பண்ணினது எவ்ளோ பெரிய க்ரைம் தெரியுமா இதுக்காக உன்னை நான் சும்மா விடமாட்டேன்.. மரியாதையா அவளை என்கிட்ட கொடுத்துடு" என்று கூற
"க்ரைம் எல்லாம் எனக்கு க்ரீம் சாப்பிடற மாதிரி நான் சாப்பிட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. க்ரைம் இவளா வந்து சொன்னா தானே க்ரைம் ஆகும்.. அவள் வெளியே சொல்ல மாட்டா கவலைப்படாதே அதை நான் பாத்துக்குறேன்..." என கூறவும்,
"டேய் சாணக்கியா..." என அம்முவின் குரல் கேட்டது முதல் அகிலன் கத்த, "என்ன சத்தமா கத்து என் காதுக்கு குளு குளு என்று இருக்கு.. இதுதான் எனக்கு வேணும்.. என்ன தைரியம் இருந்தா என்னோட அப்பாவை உள்ள வச்சிருப்ப உட்கார்ந்த இடத்திலிருந்து உன்னோட சோலியை முடிச்சேன் பார்த்தியா
நீ பண்ணின தப்பு தான்.. ஆனால் அது உன்னை சுற்றி இருக்கும் உங்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் அதை நீ யோசிக்க மறந்துட்டியே.. மோதும் போது இதெல்லாம் யோசிக்கணும்.. காக்கி சட்டை போட்டா பத்தாது மூளை வேணும் மிஸ்டர் அகிலன்.. நீ தான் நீதி, நேர்மை, நியாயம்னு சுத்துற எனக்கு எல்லாம் அதெல்லாம் கிடையாது தூக்கி போட்டு மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்... இப்ப பாரு உன்னால அவள் தான் பாதிக்கப்படுறா.. பரவால்ல நேத்து நல்லாவே கம்பெனி குடுத்தா ஐ லைக் தட்..சும்மா சொல்ல கூடாது அழகா தான் இருக்கா..சரி நீ இப்ப போ.. நான் இன்னொரு ரவுண்டு போயிட்டு பதவி பிரமாணம் எடுக்க வரேன் அப்போ எனக்கு சல்யூட் பண்ண காத்துகிட்டு இரு வரட்டா" என்று கூறியவன் ஃபோனை வைத்தான்.. "சாணக்கியன் உன்னை சும்மா விட மாட்டேன்" என அகிலன் கத்தியது காற்றில் கரைந்தது..
அதற்குள் அமிர்தா கத்தி கொண்டு இருக்க, "இரு டி வரேன்" என்று சத்தம் போட்டான்..
இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த விக்கி, "டேய் என்ன டா இதெல்லாம் ஆறு மணிக்கு நீ சென்னையில் இருக்கணும் டா.. இப்போ போய் இந்த பஞ்சாயத்து எல்லாம் வச்சுட்டு இருக்க" என்று விக்கி கேட்க, "டேய் அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் சும்மா அட்வைஸ் எல்லாம் தூக்கிட்டு வராத என்றவன் கொஞ்சம் வெயிட் பண்ணு வெளியே எல்லாரும் என்ன மூடுல இருக்கானு தெரிஞ்சு வச்சுக்கோ நான் இவளை கவனிச்சிட்டு வரேன்.. அப்படியே ஒரு நல்ல வெள்ளை சட்டையா ஆர்டர் போட்டு வை தேவைப்படும்" என்று கூறிவிட்டு சாணக்கியன் உள்ளே சென்றான்... அதைக் கேட்டு விக்கி அவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்...
இதுதான் சாணக்கியன் எதையும் அவ்வளவு ஆழமாக எடுத்துக் கொள்ள மாட்டான்.. அவன் எதையாவது ஆழமாக எடுத்துக் கொண்டால் அது அவனுக்கும் பிரச்சனையாக இருக்கும்.. அதை விட எதிராளிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் அப்படிப்பட்ட ஒருவன் தான் அவன்..
இங்கே கதவுகள் அடைக்கப்பட்டு இருக்க அவளால் திறக்க முடியாமல் தடுமாறி கதவை தட்டி கொண்டு இருந்தாள்.. அவளுடைய நிலை அவளை நிலை கொள்ள செய்து இருந்தது..
அவள் முகத்தில் பயம் நிறைந்து இருந்தது.. அவளின் நிலையே கூறியது அவளை யாரோ நாசம் செய்து இருக்கிறார்கள் என்று அவளின் கை கால்கள் வெடவெடக்க துவங்கியது.. ஒரு வாரத்தில் திருமணம் அப்படி இருக்கும் இப்படி ஒரு நிலைமை அவளுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால் இத்தனைக்கும் அவள் ஒரு ஆசிரியை அவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது யார் இதை செய்தது என்ன தான் பக்குவப்பட்ட பெண் என்றாலும் அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை அப்பொழுதுதான் அவளுக்கு பக்குவமே இல்லை அவள் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பெண் என்பதை அவள் உணர்ந்தாள்..
அவள் தவித்து நிற்கும் பொழுது தான் கலைந்த தன் கேசத்தை நீவியபடியே வாயில் சிகரெட்டை ஊதி கொண்டு மேலாடை எதுவுமின்றி ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே கூலாக வந்தான் சாணக்கியன்..
உள்ளே நுழைந்தவன் கதவை அடைக்க, அவனையும் அவனுடைய கோலத்தை கண்டு திகைத்தாள்..
