எனதுயிரே 3
.அத்தியாயம் : 3
ஒரு நடுத்தர வீட்டின் முன் நின்றார் மாணிக்கம்..அவருடைய கால்கள் தள்ளாடியது..
"அறிவழகன்! அறிவழகன்! வெளிய வாங்க" என்று அந்த வீட்டின் கதவை படபடவென தட்டினார் மாணிக்கம்..
சத்தம் கேட்டு எழுபது வயது மதிக்கத்தக்க அறிவழகன் வெளியே வந்தார்..இவரால் தான் இன்று தமிழகமே அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறது...ஆம் இவர் கொடுத்த கேஸை வைத்து தான் நெடுஞ்செழியனை கைது செய்து இருக்கிறார்கள்..
அறிவழகன் ஒரு எளிமையான சமூக போராளி.. நியாயத்துக்கு தோள் கொடுக்கும் ஒரு கட்சியில் அவர் இருக்கிறார்.. கட்சியில் இருப்பதால் பதவி ஆசையோ இல்லை மண்ணாசயோ பொன்னாசையோ எதுவும் இல்லாத ஒரு மனிதர்.. கட்சியில் இல்லாதபோதும் அவருடைய சமூக உணர்வை அவர் பல வழிகளில் காட்டி இருக்கிறார்..
இப்பொழுது ஒரு கட்சியில் இருக்கிறார்.. அது ஒன்றும் செல்வ செழிப்பில் இருக்கும் கட்சி அல்ல.. நியாயத்துக்கு போராடும் ஒரு சிறிய கட்சி.. அப்படி இருக்க அவர் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமின்றி பல இடங்களில் உதவி தேவைப்படுவோருக்கு பல உதவிகள் செய்பவர் நியாயத்துக்காக போராடும் குணத்தை கொண்ட ஒருவர்..
அந்த பகுதியில் யாருக்கு என்ன கஷ்டம் என்று இருந்தாலும் அவரை தான் அணுகுவார்கள்...
அப்படி இருக்க, மாணிக்கம் வந்து கத்தி கொண்டு இருந்தார்..அவரின் சத்தத்தை கேட்டு அருகே உள்ள மக்கள் எல்லாம் வெளியே வந்து வேடிக்கை பார்க்க அதை பார்த்து அறிவழகன், "என்ன மாணிக்கம் என்ன பிரச்சினை?" என்றார்..
"என்ன பிரச்சனையா ஏன் யா கேட்க மாட்ட எல்லாம் உன்னால தான் என் பொண்ணை காணோம் யா" என அறிவழகன் என மாணிக்கம் வந்து காலையிலேயே அரை போதையில் வந்து நின்றார்..அவரை கண்ட அறிவழகன் அவர் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்தாலும் அவரின் நிலையை கருதி, "என்ன மாணிக்கம் இப்படி நீ காலையிலேயே தண்ணீ அடிச்சிட்டு வந்து இருக்க?" என்றார்..
"யோவ் என் பொண்ணை காணோம்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா நான் சரக்கு அடிச்சதை பத்தி பேசிட்டு இருக்க?"
"என்ன சொல்ற அம்முவை காணோமா?" என கேட்டார்..
"ஆமாம் நேத்து காலையில் போனவ இன்னும் காணோம்" என அவர் அழுது கூறினார்.. அதை கேட்டு அறிவழகன் அதிர்ந்தார்..
"எனக்கு எல்லாம் தெரியாது.. என் பொண்ணு வேணும் உன் மகன் தான் பெரிய போலீஸ் ஆச்சே.. அவனை இப்போவே என் பொண்ணு எங்கே இருக்கான்னு கண்டு பிடிக்க சொல்லு" என அவர் தள்ளாடி நின்றார்.. அறிவழகன் முகம் குழப்பத்தில் சூழ்ந்தது..
"நான் அகிலன் கிட்ட சொல்றேன்.. விசாரிக்கிறேன்.. நீ உள்ளே வா" என அவர் அழைக்க, அவரோ, "என்னை விடு யா நான் எல்லாம் வரல.. உன்னோட இந்த நாடகத்தை எல்லாம் என் பொண்ணோட வச்சுக்கோ என்கிட்ட எல்லாம் வேண்டாம்...
ஒரு வாரத்தில் அவளுக்கு கல்யாணம்.. அதுவும் உன் மகனோட நான் அப்பவும் சொன்னேன் இதெல்லாம் வேணாம்னு கேட்டால் தானே? நீயும், உன் மகனும் செய்யற விசயத்துக்கு எல்லாம் என் பொண்ணையும் சேர்த்து இழுத்துக்கறீங்க? நானெல்லாம் சாதாரணமான ஆளு..
என் பொண்ணு வீட்ல அடக்கம், ஒழுக்கமா வீட்ல இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. நீங்க ரெண்டு பேரும் சமூகத்துக்கு போராடுகிறேன்.. ஊருக்கு நல்லது செய்றேன்னு சொல்லி அதுல என் பொண்ணையும் இழுத்து விட்டுட்டீங்க.. இப்போ பாருங்க என் பொண்ணை காணோம் அவளோட போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு எங்க போனா? என்ன ஆனா எதுவும் தெரியல இந்த கல்யாணம் நடக்குமோ நடக்காதோ எனக்கு அதை பத்தி தெரியாது அது எல்லாம் உங்களோட விருப்பம் என் பொண்ணு என் கண்ணு முன்னாடி வரணும் அவ்வளவுதான் எனக்கு வேணும் உன் மகன் கிட்ட இப்பவே சொல்லு என்னுடைய பொண்ணு வரணும்னு இல்ல நான் உன் வீட்டு வாசல் முன்னாடியே நான் ஏதாவது செஞ்சுடுவேன்.. சொல்லிட்டேன்" என கூறி விட்டு அவர் நடந்து சென்றார்..
அகிலன் மற்றும் அம்மு என்கிற அமிர்தவர்ஷினிக்கு திருமண ஏற்பாடு நடந்திருப்பது உண்மைதான்.. அகிலனும், அம்முவும் நேசிக்கிறார்கள்.. இருவரின் வீடும் அருகருகே உள்ளது சிறு வயதிலிருந்து பழக்கம்.. அறிவழகன் தான் அவர்களின் ஏக குரு அவரின் போதனைப்படிதான் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் அறிவழகனின் சொந்த மகன் அகிலன் என்பதால் அவனை அவர் காவல்துறை அதிகாரி ஆக்கிவிட்டார்..
அதேபோல அம்மு அவரால் ஒரு நல்ல போதனைகளை சொல்லி தரும் குருவாக அதாவது ஆசிரியராக ஒரு நல்ல பள்ளியில் அவள் வேலை செய்கிறாள்... பிரதாப் மட்டும் இவர்களுடன் பெரிதாக கூட்டு வைக்காமல் ஒரு பெரிய கம்பெனியில் சிறிய வேலையில் இருக்கிறான்...
அப்படி இருக்க மாணிக்கத்துக்கு இதெல்லாம் விருப்பமில்லை தாயை இழந்த அமிர்தவர்ஷினி மற்றும் அவளுடைய அண்ணன் பிரதாப் இருவரையும் அவர் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்..
படிக்க வைத்தார் என்று முழுதாக கூறி விட முடியாது.. அவரால் அவருடைய செலவு போக சோறு வேண்டுமானால் போட முடியும் மிச்சம் எல்லாம் அவர்களின் முயற்சி தான் ஏனெனில் குடிக்கு அடிமையான அவரால் அது தான் செய்ய முடியும்.. அம்முவுக்கு அவளுடைய தந்தையை குடித்தால் பிடிக்காது..குடிக்கவில்லை என்றால் பிடிக்கும்.. அம்மா சிறுவயதிலேயே தவறிவிட்டார்.. அம்மா இல்லாத குறையை தந்தை தீர்ப்பார் என பார்த்தால் அவர் அதற்கு மேலே இருக்கிறார் இருந்தாலும் தந்தை ஸ்தானத்தில் அறிவழகன் தான் எல்லா உதவிகளையும் அமிர்தவர்ஷினிக்கும், பிரதாப்க்கும்செய்து வருகிறார்..
இருவரும் கவர்மென்ட் பள்ளியில் படித்தார்கள்.. அங்கு கிடைக்கும் உணவை உணடார்கள்.. இந்த பிள்ளைகளை பார்த்து இரக்கப்பட்டு அறிவழகன் உதவி செய்ய துவங்கினார்.. சிறுவயதில் இருந்தே அகிலன், பிரதாப் மற்றும் அம்மு மூவரும் ஒன்றாக வளர்ந்தார்கள்.. அதில் பிரதாப் மட்டும் இவர்களுடன் அதிகம் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டான்..
சிறுவயதிலிருந்தே அகிலனோடு அம்மு வளர்ந்ததால் என்னவோ அகிலன் மீது தனி பாசம் உண்டு.. அது காதலாக மாறியதா என கேட்டால் தெரியாது.. இப்பொழுது அறிவழகன் இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்த போது இருவருக்கும் மறுக்க பெரிதாக காரணங்கள் இல்லை அதனால் இருவரும் சம்மதம் சொல்லிவிட்டார்கள்..
இதில் மாணிக்கத்திற்கு விருப்பமில்லை என்றாலும் மகளின் முடிவு தான் இறுதி முடிவு என்பதால் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார்...அவருக்கு அறிவழகன் குடும்பத்தாரை பெரிதாக பிடிக்காது.. அதற்கிடையே தான் அவளை காணவில்லை என்ற செய்தியை மாணிக்கம் கொண்டுவர அறிவழகன் பதறிவிட்டார்...
