Share:
Notifications
Clear all

எனதுயிரே 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.அத்தியாயம் : 2

இவர்கள் இப்படி எல்லாம் யோசித்து கொண்டு இருக்க பெங்களூரில் ஒரு உயர்தர ஹோட்டலில் அவனுக்கு என்று புக் செய்து இருந்த சூட்டில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஆடைகள் எல்லாம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக சிதறி கிடக்க, தன்னுடைய படுக்கையை நேற்று இரவு முழுவதும் ஆக்கிரமித்த அவள் அவனுடைய மார்பில் துயில் கொண்டு இருக்க அவளை இறுக்கமாக அணைத்தபடி உறங்கி கொண்டு இருந்த அவனுக்கு எழுந்து கொள்ள மனமே இன்றி இருந்தவனை ஹோட்டல் அறையின் ஹாலிங் பெல் அடித்து அவனை தொல்லை செய்ய அவனுடைய கூரிய விழிகள் கோபத்தோடு விழித்தது..

தன் அருகில் அவனை மயக்கிய மாயக்காரி படுத்து இருக்க, அவளின் சீரான மூச்சுக்காற்று அவன் முகத்தில் பட்டு கொண்டு இருக்க அவனின் தேகம் மேலும் அவளின் உடலோடு உரச அவன் மனம் துடிக்க மீண்டும் மீண்டும் அந்த காலிங் பெல்லின் சத்தம் மீண்டும் அவனை தொல்லை செய்ய, அது போல தொல்லை ஒன்றும் இவளுக்கு இல்லையோ என மீண்டும் அவளை மிக அருகில் பார்த்தவன் இதழ்கள் விரிந்து அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்..

அவன் சாணக்கியன்...பெயரை போன்ற குணத்தை உடையவன்.. அவனுடைய தகப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கும் ஒருவன்..நன்மை என்றால் எங்கு விற்கிறது என கேட்கும் ரகம்.. பணம் காசு கொட்டி கிடக்கிறது என்ற மிதப்பில் என்ன செய்தாலும் என யாரும் கேட்க ஆள் இல்லை என சுற்றுபவன் நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் அவனுடைய அகராதியிலேயே கிடையாது.. சிறுவயதிலிருந்தே பணத்தின் நிழலில் வளர்ந்ததாலோ என்னவோ பிறரின் கஷ்டத்தையும் சரி அவர்களின் நியாயமான கருத்தையும் சரி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவனிடம் கிடையாது.. அவனுக்கு வேண்டுமென்றால் வேண்டும் அவனுக்கு தேவை இல்லை என்றால் தேவையில்லை.. அனைத்து கெட்ட பழக்கங்களும் கெட்ட சகவாசங்களும் உடையவன்... இத்தனை நாள் தந்தையின் பல இல்லீகள் பிசினஸுக்கு பினாமியாக இருக்கும் அவனுக்கு ஏனோ கடந்த சில வருடங்களாக ஆட்சியின் மீது மோகம் வந்தது..பெயருக்கு கட்சியில் இருக்கிறான்.. தந்தையின் பினாமி பிசினஸை மிக நுணுக்கமாக நடத்தி வருகிறான்...

அப்படி இருக்க எப்போதும் இரவு மாதுவை தேடும் ஒருவன் இன்றும் ஒரு பெண்ணோடு இருக்கிறான்..தந்தை கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி கூட அறியாமல் அதுவும் அவனுடைய எதிரியான ஏசிபி அகிலனால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விஷயம் அறிந்தால் அவ்வளவு தான் ருத்ர தாண்டவம் ஆடி விடுவான்..அந்த அளவுக்கு அந்த அகிலனை அவனுக்கு பிடிக்காது..

அப்படி இருக்க அவனால் இவ்வளவு மென்மையாக ஒரு பெண்ணை முத்தமிட முடியும் என்பதை இப்போது தான் உணர்ந்தான் சாணக்கியன்..வன்மைக்கு பெயர் போன அவன் மென்மையாக இன்று முத்தமிட்டானோ என நினைத்தான்..

மீண்டும் காலிங் பெல் தொல்லை கொடுக்க, எரிச்சல் அடைந்து படுக்கையில் படுத்திருக்கும் அவளின் மீது போர்வையை போர்த்தி விட்டு அங்கிருந்த ஒரு ஷார்ட்ஸை எடுத்து அணிந்து கொண்டு மேலாடை எதுவுமின்றி அவள் உறக்கம் கலையாதவாறு கதவை அடைத்து விட்டு வெளியே கடுமையான கோபத்தோடு, அறைக்கதவை திறக்க அங்கு அவனுடைய தோழன், இல்லை அவனுடைய அடிமை, இல்லை அவனுடைய வலது கை அப்படி என்ன பெயர் வேணுமானாலும் கூறி கொள்ளலாம்..அவன் விக்கி...சிறு வயதில் இருந்து அவனோடு இருக்கிறான் அவனுடைய நண்பன் விக்கி அவன் தான் கதவை தட்டி கொண்டு இருக்க அவனை கண்டதும், "எதுக்கு டா காலிங் பெல் அடிச்சுக்கிட்டே இருக்க மூடிட்டு இருக்க முடியாதா என்ன??" தன் நண்பனை பார்த்ததும் கையை ஓங்க,

அவன் எங்கே அடித்து விடுவானோ என ஒரு அடி நீங்கி நின்று, "சாணக்கியா சொல்றத கேளு முக்கியமான விஷயம் சொல்லத்தான் நான் உன்னுடைய போனுக்கு கூப்பிட்டேன் நீ போனை எடுக்கல வேற வழி இல்லாம தான் காலிங் பெல் அடிச்சேன்" என்று கூறினான்..

அவனோ அழுத்தமான முகத்தோடு, "அப்படி என்ன முக்கியமான விஷயம்.." என கேட்க, "அது வந்து உன்னோட அப்பாவை கைது பண்ணி இருக்காங்க அப்பா இப்போ ஜெயிலில் இருக்காங்க அகிலன் தான் கைது பண்ணி இருக்கான் அறிவழகன் உன்னோட அப்பாவுக்கு எதிரா கொடுத்த கேஸை அவன் எடுத்து நடத்தி அரெஸ்ட் பண்ணிட்டான்...அங்கே சென்னையில் எல்லாமே பரபரப்பா இருக்கு.. அம்மா உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க" என அவன் கூறினான்..

அதை கேட்டதும் ஒரு நொடி திகைத்த அவன் திரும்பி பார்க்க அங்கே ஒருத்தி படுத்து கிடந்த அறையை பார்த்து கொண்டே அவனுடைய முஷ்டி இறுக, "ஹோட்டல் வாசல்ல பிரஸ் நின்னுட்டு இருக்காங்க ஐ திங்க் அவங்க உன்னைத்தான் தேடுறாங்கன்னு நினைக்கிறேன்.. நீ இருக்கிற இடம் தெரிஞ்சு இருக்கும்" என்று கூற, தன் கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன், "அந்த அகிலன் என் வழியில் ரொம்ப குறுக்க வரான்..

அவன் வாழ்கையில் தொட கூடாத இடத்தை தொட்டுட்டான் அதுக்கு அவன் அனுபவிக்க வேணாமா??" என தன் கைகளை தூக்கி நெட்டி முறித்தவன் ஒரு நிமிஷம் என கூறியவன் தன் போனை எடுத்து கொண்டு நன்றாக உறங்கும் அவளது முகத்தை பார்த்து கொண்டே அந்த அறையை அடைத்தவன் அந்த ஹாலில் காத்து இருக்கும் விக்கி முன் அமர்ந்து போனை பார்க்க எண்ணிலடங்கா அழைப்புகள், வீடியோக்கள், செய்திகள் எல்லாம் அவனுக்கு வந்து இருந்தது..

அதை எல்லாம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு கோபம் தலைக்கு ஏற அவன் முன்னே இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்..."அவர் எப்படி இருக்கார் இப்போ?" என தன் தந்தையை பற்றி கேட்க,

"அவர் ஓகே தான் இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வந்துடுவார்..." என கூறும் போதே முதல்வரின் பி ஏ அழைக்க போனை எடுக்க, "ஐயா பேசணும்னு சொல்றாங்க பேசுங்க" என்க

அவனும் அழுத்தமான முகத்தோடு போனை எடுத்தவன், "சொல்லுங்க மாமா" என்க

"மாப்பிள்ளை அப்பாவை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க நீங்க கவலைப்படாதீங்க நான் அதை பார்த்துக்கிறேன் அப்பா வரும் வரை அவரோட பதவியில் நீங்க இருக்கணும்னு அப்பா விருப்பபடுறார்.." என முதல்வர் கார்மேகம் கூறினார்..

அதை கேட்டவன், "ஒரு வாரத்தில் அப்பா வெளியே வங்துடுவார் தானே எதுக்கு இப்போ பதவி மாற்றம்?" என கேட்டான்..

"தம்பி அதெல்லாம் வாஸ்தவம் தான் ஒரு வேளை வரலைன்னு வைங்க அப்பா இருந்த பதவியை நாம அப்படியே வைத்துட்டு இருக்க முடியாது..கண்டவங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்க வேண்டும்" என கூறினார்..

அதை கேட்டவன், "சரிங்க மாமா எப்போ பதவியேற்பு நடக்க போகுது?" என கேட்டான்..

"இன்னிக்கு மாலை நீங்க அதுக்குள்ள வந்துடுங்க" என அவர் கூறினார்..

"சரிங்க மாமா.." என கூற, "மாப்பிள்ளை நியூஸ் எல்லாம் விசயம் வெளியே வந்துடுச்சு உங்களை தான் தேடிட்டு இருப்பாங்க அதை நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க.. கவனமா பிரஸ்கிட்ட பேசுங்க அப்புறம் அந்த போலீஸ்காரனை கவனிச்சுக்கலாம்" என கூறினார்..

அதை கேட்ட அவனோ நெற்றியை நீவி விட்டே, "மாமா பதவி ஏற்பாடை மட்டும் நீங்க பாருங்க மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன் அந்த போலீஸ்காரனையும் அந்த அறிவழகனையும் மொத்த குடும்பத்தையும் என்ன பண்ணனும் எனக்கு தெரியும் நீங்க எதுக்கும் கவலை படாதீங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்று அவன் கூறினான்...

அதை கேட்டவர், "சரிங்க மாப்பிள்ளை" என கூறி விட்டார்...

அதன் பின விக்கி, "இனி என்ன பண்ண போற?" என கேட்க,
"டேய் வெண்ணை இனி தான் என்னோட ஆட்டமே.. நீதி, நேர்மை பேசிட்டு அவன் என்கிட்ட மோதுவதற்கு பதிலா அவன் என் அப்பாகிட்ட மோதி இருக்கிறதா நீ நினைச்சுட்டு இருக்கியா? அதற்கு காரணமே வேற அந்த போலீஸ்காரனை எங்கே அடிச்சா எங்க விழுவான் அப்படின்னு எனக்கு நல்லா தெரியும்..அவனுக்கு ஒரு மரண அடி காத்துகிட்டு இருக்கு அதை தாங்கிக்க அவனால முடியாது" என்றான் சாணக்கியன்..

அவன் பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் சாணக்கியன் தான் அவனுடைய தந்தையின் மொத்த வில்லதனமான மூளையும் அவனுக்கு கிடைத்து இருக்கிறது..தந்தை எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடியில்ல இவன் 16,000 அடி கூட பாய்வான் அந்த அளவுக்கு அவன் எதிர்மறை குணத்தை கொண்டவன்...

அவனுக்கு தேவை என்றால் எல்லாம் தேவை அதை எப்படி அடைய வேண்டும் என அவனுக்கு நன்றாக தெரியும்...அகிலன் துவங்கினால் எனில் முடிவு சாணக்கியனால் தான் முடிக்கப்படும்..அவனுடைய முடிவை அவன் எப்போதோ எழுதி விட்டான்...அதன் படி சாணக்கியன் நடத்துவான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை...

அப்படி இருக்க, அவனுடைய போனை மீண்டும் எடுத்து பார்க்க அதில் எல்லாம் நெடுஞ்செழியன் கைது செய்த வீடியோவும் கூடவே இன்று மாலை சாணக்கியன் உள்துறை அமைச்சராக பதவி ஏற்கப் போக இருப்பதற்கான செய்திகளும் வந்த வண்ணம் இருந்தன...ஆனால் அவன் கண்ணில் அவனுடைய அப்பாவை அவன் அழைத்து சென்றது மட்டும் தான் அவன் கண்ணில் பட்டு கொண்டு இருந்தது..

அதை பார்த்த சாணக்கியன், "விக்கி கூப்பிடு டா அந்த போலீஸ்காரனை" என மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டே கூற விக்கி அழைத்தான்..

அகிலன் ஃபோன் அலறவும் அகிலன் போனை எடுக்க, ஹலோ என்ற அவனுடைய குரலை கேட்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சாணக்கியன், "டேய் டோமரு காக்கி சட்டை போட்டா பெரிய இவனா டா நீ?"  என கேட்டான் சாணக்கியன்..

அந்தக் குரலைக் கேட்டதும் சாணக்கியன் தான் அழைக்கிறான் என்பதை புரிந்து கொண்ட அகிலன், "என்ன உன்னோட அப்பனை அரெஸ்ட் பண்ணிட்டேன்னு கதறிட்டு இருக்கியா அடுத்தது நீ தான்.." என்று அகிலன் கூறினான்..

"அது உன் கனவிலும் நடக்காது டா" என கூற

"ஏன்டா நீ எல்லாம் என்ன கிழிச்சிட்டேன்னு சொல்லி உனக்கெல்லாம் ஆட்சியில பதவி கொடுக்கறாங்க..பதவியில் இருந்த உன்னோட அப்பாவையே தூக்க தெரிஞ்ச எனக்கு உன்னை தூக்க தெரியாதா?" என்று கூறினான் அகிலன் அவனுடைய குரலில் அவ்வளவு நக்கல் தென்பட்டது..

அதைக் கேட்டு கோபம் கொண்ட சாணக்கியன், "என்னோட அப்பாவை நீ தூக்கிருக்கலாம்.. ஆனால் என்னை தூக்குறது ரொம்ப கஷ்டம்.. நான் வரேன் மோதிக்கலாம்.. நேருக்கு நேரா மோதிக்கலாம்..இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம் ஓகே.. அப்புறம் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் அமைச்சரா உன்னோட கல்யாணத்துல சந்திப்போம்" என அதே நக்கலாக பதில் அளித்த சாணக்கியனை பார்த்து, "அதுவரைக்கும் நீ வெளியே இருந்தா என்னோட கல்யாணத்துக்கு வா பார்த்துக்கலாம்" என்று அகிலனும் கூறினான்...

அதை கேட்டு பலமாக சிரித்த சாணக்கியன், "டேய் நான் சாணக்கியன் டா என்கிட்ட மோதிட்ட இனி உன்னை முடிச்சிட்டு தான் அடங்குவேன் டா.. உனக்கு என்னை பத்தி தெரியாது உன்னோட வாழ்க்கையிலும் சரி என்னோட வாழ்க்கையிலும் சரி நான் தான் கேம் சேஞ்சர்.. என்னால மட்டும்தான் எப்பவும் உன் வாழ்க்கையை மாத்த முடியும் அதை நீ நெனச்சாலும் மாற்ற முடியாது" என கூறி விட்டு போனை வைத்தான்...அந்த சிரிப்பில் பல அர்த்தம் உள்ளதை அகிலனால் இப்போது அறிய முடியாது..ஆனால் அவன் அறியும் போது சாணக்கியனின் குணம் நன்றாக தெரியும்..

அதே நேரம் அதே ஹோட்டல் அறையில் மெல்ல உறக்கம் கலைந்து தான் எங்கு இருக்கிறோம் என சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு அடித்துப் போட்ட வலியை உடல் கொடுத்தாலும், அவளுடைய கண்களுக்கு பரிச்சயம் இல்லாத இடமாக தோன்றினாலும் மெல்ல அவளுடைய அசைவில் அவளை போர்த்தி இருந்த போர்வை விலக ஒட்டு துணி இல்லாமல் அவள் படுத்திருக்கவும் அவளைப் பார்த்து அவளுக்கு இடி போல அந்த காட்சி அவள் மூளைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top