Share:
Notifications
Clear all

எனதுயிரே 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

 

 

அத்தியாயம் : 1

     காலை ஆறு மணிக்கு மிகவும் பரபரப்பாக சென்னை மாநகரம் காணப்பட்டது..ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் நெடுஞ்செழியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டது முதல் அனைவரும் பரபரப்பாக இருக்க, அதுவும் அவரை ஏசிபி அகிலனால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி தான் அனைத்து இடங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டு இருந்தது..அதுவும் வீடு தேடி வந்து கைது செய்து இருக்கிறார்கள்..யாரை பார்த்தாலும் இதை பற்றி தான் பேசி கொண்டு இருந்தார்கள்..

நடப்பு அரசியலின் மிக பெரிய அங்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் கைது செய்யப்பட்டதால் இனி ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என பல அரசியல் கட்சிகளும் பேசிக் கொண்டு இருந்தனர்..

ஏசிபி அகிலன் கடமை தவறாத ஒருவன்.. அவனின் நீண்ட நாள் லட்சியம் இவரை கைது செய்வது தான்..ஆம் உண்மையில் அவர் ஏராளமான ஊழலை செய்திருக்கிறார் இருந்தாலும் அதை வெளியே தெரியாத படி செய்து வர அவரின் முகமூடியை கிழிக்க வேண்டும் என அவன் நினைத்திருந்தான் அவரின் சாம்ராஜ்யத்தை அடித்து நொறுக்க வேண்டும் என நினைத்திருந்தான்..

அதை இப்போது மிக கச்சிதமாக கைது செய்து விட்டான்...இது அவ்வளவு இலேசுப்பட்ட காரியம் இல்லையென்றாலும் அவனின் வைராக்கியத்தால் அதை செய்து இருக்கிறான்.. கைது செய்து சிறையில் அடைத்தபின் அவன் முகத்தில் அவ்வளவு தீவிரம் நிறைந்து இருந்தது..இனியும் அவன் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தாலும் அவனின் முதற்படியை எடுத்து வைத்ததால் அவனுக்கு சற்று ஆறுதலாக அவன் இருந்தான்.. முதல் வெற்றியை ருசித்த தெம்பில் அவன் இருக்கிறான்..இதை செய்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பும் என தெரியும் இருந்தாலும் அவன் இதை செய்து இருக்கிறான்...

ஆனால் அவனை பாராட்ட வேண்டிய கமிஷனர் அவனை பார்த்து, "எதுக்கு அவசரப்பட்டு கைது பண்ணின யாரை கேட்டு செஞ்ச? இனி எவ்ளோ பிரஷர் நமக்கு இருக்கும் தெரியுமா?" என்று கேட்க,

"சார் ப்ராப்பர் கம்ப்ளைன்ட் பார்த்து தான் நான் அரெஸ்ட் பண்ணேன்.. நான் என்னோட கடமையை செய்தேன் அவ்வளவு தான்" என்று அவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, "நான் என்னைக்கும் என் கடமையிலிருந்து தவற மாட்டேன்" என கூற அதைக் கேட்டு அவரும், "இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க தான் பேஸ் பண்ணனும் டிபார்ட்மெண்ட் கூட வரும்னு நீங்க நினைக்க கூடாது" என்று எச்சரித்தார்..

அதற்கு அவனோ, "சார் நான் யாரையும் நம்பி இந்த காக்கி சட்டையை போடல எது வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சட்டத்துக்கு புறம்பான எந்த விஷயத்தையும் நான் செய்யல அதனால எனக்கு பயம் கிடையாது சார்" என்று அவன் கூற, "இதற்கு மேல் உங்க இஷ்டம். நீங்க என்ன உங்களுக்கு எதிரா பண்ணினாலும் ஒரு வாரத்துல வெளியே இருந்து உங்க முகத்துல கரியை பூசுவாங்க அதுக்கப்புறம் நீங்க எப்படி இங்கே இருக்க போறீங்க நானும் பார்க்க தானே போறேன்" என்று கூறினார் கமிஷனர்...

ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட நெடுஞ்செழியன் சிறையில் அடைத்த சிங்கம் போல நடந்து கொண்டு இருந்தார்...அவரை காண அவருடைய ஆட்கள் எல்லாம் வெளியே காத்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.. அவர் எதிர்பார்க்காத தருணத்தில் அவரை அரெஸ்ட் செய்திருக்க இதற்கு சரியான பாடம் புகட்டியாக வேண்டும் என அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்..

அதே நேரம் காவலில் இருந்த போலீசாரிடம் ஃபோனை கேட்க அவரும் கொடுத்தார்.. அதை வாங்கியவர் முதலில் தன்னுடைய வக்கீலுக்கு அழைத்தார்.. "சார் சொல்லுங்க சார் எல்லா பேப்பரும் ரெடி பண்ணிட்டு இருக்கோம் கூடிய சீக்கிரம் எடுத்துடுவோம்" என்று கூற,

"நீ கிழிச்ச போயா முதல்ல.. சீக்கிரம் வேலையை பாரு..இதுக்கு சம்மந்தபட்டவங்களை சும்மா விட கூடாது" என்றவர் வேகமாக கட்சியின் தலைமை மற்றும் முதல் அமைச்சருக்கு அழைக்க அவரும் போனை எடுத்தார்..

"என்னய்யா இப்படி போய் சிக்கி இருக்க?" என முதல்வர் கேட்டார்..ஏனெனில் கைதாகி இருப்பது அவருடைய ஆருயிர் நண்பன் அல்லவா...அவரை தோண்டினால் இவருடைய குட்டுகள் எல்லாம் வெளிப்பட்டு விடும் என்பதால் அவரும் சற்று கலக்கத்துடன் தான் இருந்தார்..

அவரோ, "நான் என்ன பண்ணினேன் எல்லாம் அந்த அறிவழகன் பண்ணின வேலை தான்... தினமும் எனக்கு எதிரா கேஸ் கொடுக்கிறதையே வேலையா வைச்சு இருக்கான்.. அவனை முதல்ல" என ஆரம்பிக்க

"யோவ் முதல்ல நிறுத்து நாம பேசிட்டு இருக்கிறது எல்லாமே ரெக்கார்ட் ஆக்கிட்டு இருக்கும் அப்புறம் பேசிக்கலாம்.. நீ அவனை சொரிஞ்சு விட்டு இருக்க அப்போ அவன் அப்படி தான் ஆடுவான்...அதை விடு முதலில் இப்போ உன்னோட பதவிக்கு யாரை போடறது அதை முதலில் சொல்லு நம்ம விசுவாசி செந்தாமரையை போடவா?" என கூற இயற்கையிலேயே யாரையும் நம்பாத நெடுஞ்செழியன், "அதெல்லாம் வேண்டாம் எவனையும் நம்ப முடியாது பேசாம கட்சியில தானே என்னோட மகன் இருக்கான் அவனை போடுங்க" என்று கூற அதைக் கேட்ட முதலமைச்சர் அதிர்ந்தார்..

"யோவ் அவன் சின்ன பையன் அவனை போய் போட சொல்ற அவனுக்கு என்ன விவரம் தெரியும் இதனால நாளைக்கு இதனால கட்சிக்குள்ள பிரச்சனை வரும் தெரியும்ல அவன் கட்சியில் சேர்ந்தே நாலு வருசம் கூட முழுசா முடியல அதுக்குள்ள பதவியா" என்று கூற,

"யோவ் நீ கட்சியை பார்த்துட்டு இருக்க நான் என்னோட பதவியை பார்த்துட்டு இருக்கேன்.. நான் நாளைக்கு வெளியில் வந்து இவனுக ராஜினாமா பண்ண மாட்டேன்னு அராஜகம் பண்ணினா என்ன பண்றது அதுக்குத்தான் பேசிட்டு இருக்கேன் இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு...சும்மா விட சொல்றியா?" என அவர் கூறினார்..

"அதுக்குன்னு உன்னோட மகன் அவன் பொறுப்பா எல்லா வேலையும் செய்வானா?" என அவர் சந்தேகமாக கேட்க

"அதுக்குத்தானே நீங்க இருக்கீங்க.. பதவியில அவன் இருக்கட்டும் மத்தத படிச்ச நாலு பேத்த கூட வச்சுக்க சொல்லுங்க.. நம்ம விசுவாசிகள் நாலு பேரும் இருக்கட்டும் அவங்க சொல்றத படி அவன் செய்யட்டும் போதுமா இதுக்காக என்னால பதவி எல்லாம் எவனை நம்பியும் கொடுக்க முடியாது.. அவன் ஒரு மாதிரி தான் என்னால் அவனை எல்லாம் மாத்த முடியாது என் பதவியும் விட்டுக் கொடுக்க முடியாது நீங்கதான் எதுவா இருந்தாலும் பார்த்து செய்யணும்..என்ன அவனை சந்தேகபட்டுட்டீங்க உங்களுக்கும், எனக்கும் பிறகு அவன் தான் கட்சியை பார்த்துக்கணும் அதை மறந்துடாதீங்க" என அவர் கடுமையாக கூறினார்..

அதை கேட்ட முதல்வர் சரியென கூறினார்..முதல்வரை ஆட்டி வைக்கும் கபடதாரி தான் நெடுஞ்செழியன்..பின்ன முதல்வரின் தோழன் அவரின் வலதுகை அவர்கள் இருவரின் சூழ்ச்சியில் தான் கட்சியே நடந்து கொண்டு இருக்கிறது..அவர்களின் சூழ்ச்சியால் தான் இந்த முறை அவர்களின் கட்சி ஜெயித்து ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது..

அதை எல்லாம் அவர்களால் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது..அப்படி இருக்க மேலும் ஒரு படி போய் நெடுஞ்செழியன் மகனான  சாணக்கியனுக்கும் முதல்வர் கார்மேகம் மகள் வசுந்தராவுக்கும் திருமணம் வேறு நடைபெற இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.. வசுந்தராவின் சம்மத்ததுக்கு வேண்டி முதல்வர் காத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்..

அப்படி இருக்க, எப்படி இருந்தாலும் கார்மேகம் அவனை தான் ஆட்சியில் அமர்த்தியாக வேண்டும்..கார்மேகம் தலை சூடாக இருந்தது இதை வெளியே சொன்னால் என்னை ஆகுமோ என யோசனை செய்து கொண்டு இருந்தார்..

அதே நேரம் தனக்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த சமூக போராளி என்ற முகமூடியில் இருக்கும் அறிவழகனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார் நெடுஞ்செழியன்..

அறிவழகன் ஏன் தொடர்ந்து நெடுஞ்செழியனை குறி வைக்கிறார் என நெடுஞ்செழியனுக்கு தெரியாமல் இல்லை...ஏனெனில் ஒரு காலத்தில் நெடுஞ்செழியன் அறிவழகனுக்கு அப்பேர்ப்பட்ட அடியை கொடுத்திருக்கிறார் அதைத்தான் அவர் திருப்பிக் கொடுக்க நினைக்கிறாரோ என்னவோ?



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top