எனதுயிரே 10
.
அத்தியாயம் : 10
ஆனால் அவள் கோபப்படும் நிலையில் இல்லை என்பது தான் உண்மை..அதே நேரம் அறிவழகன் தன் மகனை அழைத்து, "என்னப்பா இது எல்லாம் அவன் கையில் எப்படி அம்மு சிக்கினா?" என கேட்க
"எனக்கும் தெரியலப்பா"
"அவன் என்னமோ கல்யாணம் செய்யணும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்கான்.. அவனோட அப்பாவை கைது பண்ணினதற்காக இப்படி செஞ்சி இருப்பானோ" என்று அறிவழகன் சந்தேகப்பட்டு கேட்க, "எனக்கும் அந்த சந்தேகம் இல்லாமல் இல்லைப்பா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அவன்கிட்ட இருந்து எப்படி அம்முவை மீட்கணும்னு எனக்கு தெரியும் கண்டிப்பா நான் மீட்டு இருப்பேன்" என்று அகிலன் கூறினான்.. ஆனால் அகிலனுக்கு பாவம் அது நடவாத காரியம் என தெரியவில்லை...
அதே நேரம் காலையில் இருந்து நடந்த களேபரத்தில் மிகவும் பயந்து போய் இருந்தார் தாமரை...கணவனின் கைது மற்றும் மகனின் தீடிர் பேட்டி எல்லாம் சேர்ந்து அவர் பயந்து போய் இருந்தார்..
அவனை எவ்வளவோ முறை அழைத்து பார்த்தும் சாணக்கியன் போனை எடுக்கவில்லை..அப்படி இருக்க, அவர் மிகவும் பயந்து போய் இருந்தார்..ஒரே மகன் என செல்லம் கொடுத்து வளர்த்தது தவறாக போய் விட்டது என அவன் எண்ணி கொண்டு இருந்தார்..
சாணக்கியன் நேராக தனி விமானம் மூலம் விக்கி மற்றும் அமிர்தாவை அழைத்து கொண்டு சென்னையில் மதியம் மூன்று மணிக்கு சென்று விட்டான்..
பிறகு அங்கு அவனுக்காக வாகனம் காத்து இருக்க அங்கு இருந்த நிருபர்களின் கேள்விக்கு எல்லாம் பதில் அளிக்காமல் கையசைத்து விட்டு வண்டியில் ஏறியவுடன், டிரைவரை வேறு வாகனத்தில் செல்ல சொல்லிவிட்டு விக்கி வண்டியை ஓட்டினான்..."நேரா வீட்டுக்கு தானே அம்மா கூப்பிட்டு இருக்காங்க" என்று விக்கி கூற,
"வேண்டாம்..நேரா பீச் ஹவுஸ் போ" என அவன் கூறினான்..
"அங்கே அம்மா தனியா இருக்காங்க டா.. காலையில் நடந்த சம்பவத்திலிருந்து ரொம்ப பயந்து போய் இருக்காங்க எனக்கே 10 முறை கூப்பிட்டாங்க" என்க
"அதெல்லாம் போகலாம்..நேரா அங்கே போ.. நான் சொன்னதை மட்டும் செய் விக்கி இல்லை செவுள்ளே நல்லா விழும்.. நானும் பார்த்துட்டு இருக்கேன் ஓவரா அட்வைஸ் பண்ணிட்டு இருக்க எனக்கு தான் அட்வைஸ் பண்ணுனா பிடிக்காதுன்னு தெரியும்ல" என கூறினான்..
அதை கேட்டு விக்கி வாயை மூடிக்கொள்ள,பஅவளுக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை..பேசவும் முடியவில்லை அவனிடம் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை என்ற நிலையில் தவிக்க அவளுடைய தவிப்பை பார்த்தவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அவள் தோளில் கையை போட இந்த முறை அவள் மறுக்கவில்லை..
அதை கவனித்தவன், "பரவாயில்லையே 24 மணி நேரம் கூட ஆக அதுக்குள்ள பழகிட்ட" என்று கூற, "இதுதான் விதின்னு இருக்கும்போது அதை செஞ்சு தானே ஆகணும்.. உனக்கு உறவுகள் அருமை தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கு உன்கிட்ட இருந்து என்னுடைய உறவுகளை காப்பாத்தணும்னு இருக்கு" என்று அவள் வேண்டா வெறுப்பாக கூறினாள்...
அதை கேட்டவன்,"காப்பாத்து காப்பாத்து நல்லாவே காப்பாத்து எனக்கு நான் என்ன நினைக்கிறேனோ அது தான் நடக்கணும்..உன்னோட அகிலன் மாமா கூட பேசலையா வேணும்னா சொல்லு கால் பண்ணி தரேன்" என்று வேண்டுமென்று வம்பு இழுத்தான்..
அவளும் இவனிடம் பயந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது என்று எண்ணி, "இந்நேரம் அவருக்கு நான் உன் கூட தான் இருப்பேன்னு தெரிஞ்சிருக்கும் என்னை உன்னிடம் இருந்து காப்பாத்தாமல் விட மாட்டார்" என்று கூற அவனும் ஒரு பப்பை இழுத்துக் கொண்டு அவளின் முகத்தை தன் முகத்தை நோக்கி திருப்பி அவ்வளவு நெருக்கத்தில் அவள் முகம் நோக்கி குனிய விக்கிக்கு பின்னாடி என்ன நடக்கிறது என தெரிந்தாலும் அவன் சாலையிலேயே கவனமாக இருந்தான்...
அவளோ அவனுடைய நெருக்கத்தையும் அவனின் சிகரட்டின் நெடி பிடிக்காமல் முகத்தை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து திருப்ப முயல, அவனோ அவளுக்கு விடாமல் அழுத்தி அவனுடைய முகத்தை பார்க்க வைத்தவன், "பார்த்தியா ரொம்ப அடம் பிடிக்கிற அடம் பிடிச்சா இப்படி எல்லாம் வலிக்கும் அதனால அடம் பிடிக்காமல் இரு.. அவனால என்கிட்ட இருந்து உன்னை நீ சாகுற வரை காப்பாத்த முடியாது.. அவன் ஒரு வேளை என்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தினா அதைப் பார்க்க நீ உயிரோடு இருக்க மாட்ட" என்றவன், "நேத்து நடந்தது ஒரு மாதிரியா இருக்கு.. இந்த ரெண்டு கோலிகுண்டு கண்ணு என்னை மட்டும் பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோணுது.. இன்னைக்கு பதவி பிரமாணம் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்.. ஒரு ஷாட் போட மாமனுக்காக ரெடியா இரு" என்க
அவளோ அதை கேட்டு அருவருப்பாக அவனைப் பார்த்தாள் அதை பார்த்ததும் அவனுடைய அகம்பாவம் தலைக்கு ஏற சிகரட்டை மீண்டும் இழுத்து விட்டவன் அதே வாயோடு அவளின் இதழ்களில் தீண்டினான்...அவளோ துடிக்க அவனோ விடாமல் வன்மையாக தீண்ட அவனின் செயலை அவளால் கிரகித்து கொள்ள முடியாமல் போக அவளுக்கு அந்த சிகரெட்டின் நெடியால் தலை சுற்றுவது போல இருந்தது...
ஏற்கனவே அவளின் நெருக்கத்தை அவன் ரசித்தான் ஆம் ஒரு அழகான பெண் அருகே இருக்கும் பொழுது அந்தப் பெண்ணை ரசிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.. பழி வெறி வேறு ரசிப்பது வேறு.. பெண்களை ரசிப்பதில் அவன் வில்லாதி வில்லன் அதில் அவன் ஒரு ரசனைக்காரன்..
அப்படி இருக்க அவளை ஆசை தீர இதழ் ஒற்றி விடுவிக்க அவளுக்கோ அவனுடைய செய்கை ஒரு வித பதட்டத்தை உண்டு செய்தது.. சுற்றும் முற்றும் யார் இருக்கிறார்கள் என அவன் கவனிக்கவே இல்லையா என அவளின் கை கால்கள் நடுங்கத் துவங்க அதை கவனித்தானோ என்னவோ அவளின் தோளில் மீண்டும் கையை போட்டு அவளை தன்னருகே இழுத்து அமர வைத்து, "மிச்சத்தை ராத்திரி பார்த்துக்கொள்ளலாம் ராத்திரியும் உன்னோட அகிலன் மாமா வந்து காப்பாத்த வருவாரான்னு பார்ப்போம்.. இனி அவனைப் புகழ்ந்து என்கிட்ட பேசின இதைவிட மோசமா உனக்கு நடக்கும் புரியுதா" என்று கூறினான்..
அவனைப் புகழ்ந்தது தான் அவனுக்கு பிடிக்கவில்லை அதனால் தான் அவன் இதை செய்தான் அப்படி இருக்க வண்டி நேராக பீச் ஹவுஸ் சென்றது...அவனின் இந்த செயலால் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது..
மிகப்பெரிய கடல் போன்ற வீட்டை வாழ்கையில் முதன் முறையாக அவள் காண்கிறாள்...அந்த வீட்டுக்குள் அந்த வாகனம் நுழையவும் அவள் கண்ணீரோடு அந்த வீட்டை பார்த்துக்கொண்டு வந்தாள்..
அங்கு சென்று அவளை அழைத்து கொண்டு அவனுடைய அறைக்கு சென்றவன், "என்ன அழுகையா அப்படின்னா வாழ்க்கை முழுவதும் அழுதுட்டு இருக்க வேண்டியதுதான்... நீ இப்படிப்பட்ட ஆளா ஆனால் வெளியே பார்க்கும்போது அப்படியெல்லாம் தோணவில்லையே" என அவன் கேள்வி கேட்டான்..
அதற்கு அவளோ, "உன்னை மாதிரி ஆளுக முன்னாடி எல்லாம் நான் அழ மாட்டேன்" என கூற அதை கேட்டு அவளை ஆழமாக பார்த்தவன், "அதையும் பார்க்கலாம்.. எவ்வளவு நாள் நீ என்கிட்ட தாக்கு பிடிக்கிறேன்னு நானும் பாக்குறேன்" என்க அந்த நொடி அவள் முடிவு செய்தாள் இவன் முன்னால் அழக்கூடாது என்று பிறகு அவள் கண்களை துடைத்துக் கொண்டாள்..
அவனோ, "நீ இங்கேயே இரு பதவி பிரமாணம் முடிச்சிட்டு வரேன்.." என கூற அவளோ, "இங்கே இருந்து நான் தப்பிச்சிட்டா என்ன பண்ணுவ?" என அவள் கேட்டாள்..
அவனோ நக்கலாக அவளை பார்த்து, "ஏண்டி இங்கே உன்னை விட்டுட்டு போறேன்னா அதைக்கூட யோசிக்க மாட்டேனா? இங்கே இருந்து உன்னால ஒரு துரும்பை கூட தூக்கி வெளியே போட முடியாது.. அதுனால தப்பிக்கணும்ன்னு நினைக்காத ஒவ்வொரு தடவையும் என்னை சொல்ல வைக்க மாட்டேன் என நான் நினைக்கிறேன்.. அப்புறம் எனக்கும் உபயோகம் இல்லாமல் நீ பரலோகம் போக வேண்டி இருக்கும்" என்று அவளை இழுத்து ஜன்னல் கதவை திறந்து காட்ட அங்கு அவள் உயரத்திற்கு நான்கு நாய்கள் சுற்றிக் கொண்டிருந்தது. அதை கண்டு அவள் அதிர்ந்தாள்..
அதை பார்த்து, "வெளியே காலை வச்சா அப்படியே பாய்ஞ்சிடும் நான் சொன்னாதான் இவங்க கேப்பாங்க கவனமா இரு சிக்கி சின்னாபின்னம் ஆகிடாத" என்று எச்சரித்துவிட்டு அவன் சென்றான்.. அதை கேட்டு அவள் அதிர அவனோ நக்கலாக சிரித்து விட்டு சென்றான்…
