Share:
Notifications
Clear all

எனதுயிரே 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 11

அங்கு அவனுக்கு பதவி பிரமாணம் நடந்து கொண்டு இருந்தது.. கட்சியில் உள்ள பெரிய தலைகளுக்கு இந்த காட்சி சலசலப்பை கொடுத்தாலும், கார்மேகத்தின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்க பல இறுகிய முகங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கு விழா நடந்து கொண்டிருந்தது..

கார்மேகம் அவன் மீது கோபமாக இருக்க, அதை கவனித்து கொண்டே அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி சாணக்கியன் பதவி பிரமாண மேடை ஏறினான்.. கார்மேகத்துக்கு கடுப்பாக இருந்தது பிறகு பேசிக் கொள்ளலாம் என அமைதியாக சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்தார்...

அங்கிருந்த அனைவரின் எதிர்ப்பை பெற்று, "சாணக்கியன் நெடுஞ்செழியன் ஆகிய நான் அறமோடும், பண்போடும் எனக்களித்த பொறுப்பை சிறப்பாக செய்வேன் என்றும் எந்த தனிப்பட்ட பிரச்சனைக்கும் என் பதவியை உபயோகித்துக் கொள்ள மாட்டேன் என உறுதி கொள்கிறேன்" என அவன் பதவி பிரமாணம் செய்தான்..அவனுக்கு முறைப்படி அந்த பதவியை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. அதுவரை இருந்த அவனுடைய மனநிலை மாறியது சாணக்கியனின் உண்மையான குணம் அவனுடைய முகத்தில் வெளிப்பட்டது...

அவனுடைய விழிகள் ஏனோ அங்கு வேண்டும் என்று சாணக்கியனால் வரவழைக்கப்பட்டிருந்த அகிலன் மீது படிந்திருந்தது...ஆம் பதவி ஏற்கும் முன்னே அவனுடைய வேலையை காட்டி இருந்தான் சாணக்கியன்.. என்ன சொல்லி இந்த பதவி பிரமாணத்தை எடுத்து இருந்தானோ அதை அவன் துளியும் செய்யப் போவதில்லை என அவனுக்கு நன்றாகத் தெரியும்.. அதன் முதலடி தான் அகிலனை இங்கு வர வைத்து இருப்பது..

என்னுடைய நிலைமையைப் பார் என அவன் எகத்தாளத்தை காட்ட அவன் அழைத்து இருக்கிறானோ என்னவோ? ஆனால் கடுமையான கோபத்தோடு அகிலன் நிற்க அதை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தான் சாணக்கியன்..

அகிலனுக்கு இங்கு துடித்துக் கொண்டிருந்தது.. ஆனால் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இறுகிப்போய் நின்று கொண்டிருந்தான்..இருவருக்கும் இடையே பல தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தது அதை இருவருமே வெளிக்காட்டி கொள்ளாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்..

இதுதான் வேண்டும் தனக்கு எதிரே கைகட்டி அவன் நிற்க வேண்டும் என்பது மட்டும்தான் சாணக்கியனின் தேவையானது.. அதை நிறைவேற்றிய சந்தோஷத்தோடு அவன் உள்துறை அமைச்சராக மேடையில் இருந்து கீழே இறங்கினான்.. அதில் அவனுடைய தந்தை ஜெயிலுக்கு போனாலும் அவனுக்கு கவலை இல்லை..அதை விட அவனுக்கு இது தான் சந்தோசத்தை கொடுத்தது..

அவனுக்கு காவலாக இதோ அகிலன் ஆவேசமாக அழுத்தத்துடன் நின்று கொண்டு இருக்கிறான்..அவனை பார்த்து கொண்டே நக்கலாக மேடையில் இருந்து இறங்கி வந்தான் அவன்.. அங்கு தூரமாக அகிலன் நின்று கொண்டு இருந்தான்..அவனை வம்பு இழுக்க வேண்டும் என அவன் நினைத்து இருக்க, அதற்குள் சாணக்கியனிடம் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்ல வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டே அவன் தூரமாக நிற்கும் அகிலன் முன்னிலையில் சென்றான்..

அங்கு அவனுக்காக காத்திருந்தவன் கைகளில் பொக்கே இருக்க அதை கொடுக்க அகிலனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் சம்பிரதாயப்படி அகிலன் சாணக்கியன் முன் மீட்ட அதை சிரித்த முகத்தோடு வாங்கிய சாணக்கியன், "என்னோட அப்பாவை உள்ள தள்ளிட்டா நான் அசைந்து விடுவேன் என்று நினைக்கிறயா? உன்னை அசர வச்சிருக்கேன் பார்த்தியா? நீ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டவ நேத்து என்னுடைய ஆசை நாயகி நாளைய என்னுடைய மனைவி எப்படி இருக்க நல்லா இருக்குல்ல" என்க

அதை கேட்ட அவனோ அழுத்தத்தின் உச்சிக்கு சென்ற அவன் அருகில் உள்ள யாரும் கேட்காத குரலில் அதே நேரம் அழுத்தத்தோடு, "இதோ பார் மரியாதையா அம்முவை என்கிட்ட ஒப்படைத்து விடு இல்ல அவ்வளவுதான்" என்க

"உனக்கு என்ன காது செவிடா அதுதான் எல்லா பக்கமும் நியூஸ் கொடுத்து இருக்கேன் நீ கேட்கலையா இல்ல.. பார்க்கலையா உன்னால என்ன புடுங்க முடியுமா அதை புடுங்கு.. நீ அவளை பார்க்கும் போது அவ என் மனைவியா இருப்பா" என கூறினான்..

"தேவையில்லாமல் அவளை இதுக்குள்ள இழுக்காத" என அவன் எச்சரிக்க,

"அப்படி தான் இழுப்பேன்..அவள் மட்டுமில்லை உன்னை சுத்தி யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களை எல்லாம் இழுப்பேன் என்கிட்ட மோதினால் என்ன நடக்கும்னு உனக்கு தெரியனும்ல்ல" என கூறியவனை பார்த்து அவன் தன் கோபத்தை அடக்க,"இப்படித்தான் என் முன்னாடி அடங்கி இருக்கணும் ஆடணும்னு நினைச்சா ஆட்டி வைத்துவிடுவேன் நான்தான் அவளை தூக்கி இருக்கேன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஏன் இந்த உலகத்துக்கே தெரியும் ஆனால் யாரும் என்னை கேள்வி கேட்க மாட்டாங்க அப்படி தூக்கி இருக்கேன் இனி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...இதை நீ என்கிட்ட மோதின ஒரே காரணத்துக்காக செய்றேன்.. இதுல என்னோட அப்பாவை நீ தூக்கினதுக்காக நான் இதை செஞ்சேன்னு நினைக்காத உனக்கும் எனக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு அதுக்காக செய்யறேன்" என அழுத்தமாக கூறி விட்டு பிறர் பார்வைக்கு சாதாரணமா பேசுவது போல பேசி முடித்து விட்டு வணக்கத்தை கூப்பி விட்டு சென்றான்..இங்கு அகிலன் அவனை கொல்லும் ஆத்திரம் இருந்தாலும் போட்டிருக்கும் வேஷம் கருதி அதை அடக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தான் அகிலன்...

அதற்குள் விழா முடிந்ததும் ஆளுநர் சென்றதும் கார்மேகம் உதவியாளர் மூலம் அவனை தன்னுடைய அறைக்கே வர சொல்ல அவனும் அங்கு சென்றான் சாணக்கியன்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top