எனதுயிரே 12
.
அத்தியாயம் : 12
அங்கு சென்றதும் யாருமில்லை என்பதை உறுதி செய்து விட்டு கார்மேகம் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கொட்டினார்.. "என்ன நினைச்சிட்டு இருக்க நானும் உன் அப்பாவும் சேர்ந்து என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணினா நீ ஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ற? என்ன திமிர் இருக்கும் உனக்கு?" என மிரட்ட அவருடைய பேச்சு அவனுக்கு கடுப்பை கொடுத்தது..
"இல்லை புரியல" என்றான் சாணக்கியன்.. அவன் இருக்கும் கடுப்பில் இவர் பேசுவது சுத்தமாகவே அவனுக்கு விளங்கவில்லை...
அவரோ, "என்ன டா புரியல எல்லாம் உன்னோட அப்பாவுக்கு வேண்டி தான் பாத்துட்டு இருக்கேன் மரியாதையா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ இல்ல அவ்வளவுதான் சொல்லிட்டேன்" என அவர் மிரட்ட அவனோ சுற்றும் முற்றும் பார்த்து அங்கு திறந்து இருக்க அந்த அறை கதவை அடைத்து விட்டு அவர் அருகே வந்து அமர்ந்தான்..அவர் அமர சொல்லாமலேயே அமர்ந்தான்..
"என்ன சொன்னீங்க" என அவனுடைய காதை குடைந்த படி கேட்க,
அவரோ, "என் பொண்ணை கல்யாணம் பண்ற அப்போ தான் உனக்கு இந்த பதவியில் நிலைக்க முடியும் இல்லை அவ்ளோ தான்" என மிரட்ட,
அவனோ அவருக்கு எதிரே அமர்ந்து அவருக்கும் அவனுக்கும் இடையே உள்ள நாற்காலியில் காலை வைக்க அது மிக சரியாக அவரின் முகத்துக்கு அருகே வைப்பது போல இருந்தது..
அதை கண்டு அவர் எழுந்து நிற்க அவனோ நக்கலாக சிரித்தபடி, "உட்காருங்க மாமா நான் எதுவும் செய்ய மாட்டேன் உங்க முகத்துக்கு மேல காலை வைக்க எனக்கு தெரியாமல் இல்லை என்னை வைக்க வைச்சிட மாட்டீங்க அப்படின்னு நினைக்கிறேன்.. நீங்க இன்னும் என்னை சின்ன பையனா நினைச்சிட்டு இருக்கீங்க மாமா.. என்ன சொன்னிங்க என்னை இந்த பதிவில் இருந்து தூக்கிடுவேன்னா முதலில் உங்களால இந்த பதவியில நிலைத்து நிற்க முடியுமான்னு பாருங்க..
என்னோட அப்பா உள்ள போய்ட்டாரு நீங்களும் ரொம்ப வாய் பேசினா உள்ள போக வேண்டி இருக்கும் நான் எதை சொல்றேன்னு உங்களுக்கு நல்லா தெரியும் அதனால வாயை மூடிட்டு இருந்தா உங்களுக்கு நல்லது..
உங்க பொண்ணுக்கும் எனக்கும் நல்ல ஒரு நட்பு தான் இருக்கு..அது அவளுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும் இதுக்கு இடையில எங்களை வலுக்கட்டாயமா சேர்த்து வைக்கணும்னு நீங்களா இருந்தாலும் சரி அப்புறம் என் அப்பாவா இருந்தாலும் சரி நடக்காது.. அப்புறம் நான் யாரை கல்யாணம் பண்ணனும் யாரை கல்யாணம் பண்ண கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது புரியுதா" என கூற அதை கேட்டு அவர் அதிர்ந்தார்..
அவனோ அவர் முன்னால் காலை ஆட்டி கொண்டே, "மாமா உங்களுக்குத்தான் இந்த பதவி ஆசை எல்லாம் எனக்கு கிடையாது.. என்னை மிரட்டி பார்க்காதீங்க..அது நடக்காது.. இவ்வளவு நாள் என்னைப் பற்றி தெரிஞ்சும் என்னை மிரட்டி பார்க்கிறீங்களே இதெல்லாம் நல்லாவா இருக்கு பதவிக்கு தகுந்த மாதிரி என்கிட்ட பேசுங்க." என்க
அவரோ அவனுடைய பேச்சை கேட்டு திகைத்து நிற்க, அவனோ கூலாக அவரை பார்த்து,"மாமா எனக்கு ஒரு இலக்கு இருக்கு அதை அடைந்து விட்டு நானே இந்த பதிவில் இருந்து போயிடுவேன்... அதுவரை உங்க வழியில் நான் வரமாட்டேன் என் வழியில் நீங்களும் வராதீங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற மரியாதை மீறி வந்தா இறங்கி அடிச்சிடுவேன் யோசிக்கக்கூட மாட்டேன்..
அப்போ மாமா என்னோட கல்யாணத்துக்கு முதல் ஆளாக வந்துடுங்க... முதல்ல என்னோட அப்பாவை வெளியே எடுக்கிற வேலையை பாருங்க இல்ல நீங்க உள்ள போய்ட போறீங்க" என எச்சரிக்கை செய்து விட்டு அவன் செல்ல அவரோ அதை கேட்டு மேலும் திகைத்து அவன் செல்வதையே பார்த்து திகைத்து போய் இருந்தார் அவர்..
அவன் யார் என்று தெரிந்தது தந்தை ஜெயிலில் இருக்கிறார் என எண்ணியும் தன் மகளை அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் ஏதாவது நடந்து விடுமோ என அவனை மிரட்டி பார்த்தது அவருடைய தவறு தான் என்பதை எண்ணி அவர் சமைந்து நின்றார்.. ஏனெனில் இவன் எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவன் தான் என நெடுஞ்செழியன் கூறியதை அவர் மறந்து இவனிடம் பேசியது தவறுதான் என்பதை கார்மேகம் புரிந்து கொண்டார்..
அவன் சென்றதும் தான் அமிர்தா தொப்பு என்று அமர்ந்தாள்..அவள் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருக்க, இப்படி கடவுள் தன்னை இவனிடம் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறானே என நினைத்தாள்.. அவளுக்கு அழுகையாக வந்தது.. அவனை சந்தித்தது முதல் இந்த நொடி வரை இவனை வாழ்க்கையில் சந்தித்து இருக்கக் கூடாதோ என அவள் நினைக்க துவங்கினாள்..
இவள் ஒன்றும் இலேசுப்பட்ட ஆள் இல்லையே முதல் சந்திப்பிலேயே சாணக்கியனின் கன்னத்தில் பளார் என அறைந்த வீரமங்கை ஆகிற்றே அப்படிப்பட்ட வீரமங்கை என்று சாணக்கியனின் படுக்கை அறையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள் எனில் அவள் செய்ததும் அவளுக்கு நினைவு இருக்கும் தானே.. அவள் இப்போது அமைதியாக இருக்கிறாள் எனில் அவளை அமைதியாக அவன் அமர செய்து இருக்கிறான் என்று தானே அர்த்தம்..
அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னாகிற்றோ எதுவும் ஆகி விடக்கூடாது என்ற பீதியில் இருந்தவளுக்கு அவளுக்கு ஆனதை அவள் மறந்து போனாளோ என்னவோ?
அவள் மனம் ஒரு வருடத்துக்கு முன்னோக்கி சென்றது..
