எனதுயிரே 13
.
அத்தியாயம் : 13
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் கோவாவில் இருந்து பறந்து வந்து கொண்டு இருந்த சாணக்கியனின் ஜாகுவார் சரியான சென்னை வந்ததும் ஆப் ஆகி விட்டது.. வண்டி நின்றதும் டென்ஷன் ஆகி விட்டான் சாணக்கியன்...
"என்ன டா ஆப் ஆகிடுச்சு" என விக்கியிடம் கேட்டான் சாணக்கியன்..
"ஏதாவது ஃபால்ட் ஆகியிருக்கும் அதனால ஆப் ஆயிடுச்சு நான் இரு ஒர்க் ஷாப்க்கு கால் பண்றேன்" என்று விக்கி கூற, சாணக்கியனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. "அது எப்படிடா புதிய ஜாகுவார் பிரச்சனை கொடுக்கும் அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே? வாங்கி முழுசா இரண்டு மாசம் கூட முடியல.. சான்ஸே இல்லை" என்று சாணக்கியன் கேட்டான்
"வாய்ப்பே வராதுன்னு சொல்ல முடியாது..அதெப்படி நீ சொல்லுவ எல்லாமே ஒரு கட்டத்தில் இப்படி தான்.. நீ என்ன கடவுளா நினைச்சதெல்லாம் நடத்த? நாம நினைச்சது எல்லாம் நடக்கனும்னு இல்லை..அதுனால வண்டி எப்படி ஆப் ஆனதுன்னு எனக்கு தெரியல.. உனக்கும் தெரியாது.. தெரிய கூடாது..அதெப்படி எது சொன்னாலும் என்னால எல்லாம் முடியும் அப்படின்னு அடிச்சு விடுற? பார்த்தியா? உன்னால இதை கூட கண்டு பிடிக்க முடியல " என விக்கி அரை போதையில் உளறி கூறினான்..
அது சாணக்கியனுக்கு கொம்பு சீவி விட்டது போல ஆகிவிட்டது.."அப்போ என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்றியா?" என கேட்டுக்கொண்டே கையில் இருந்த பீரை அப்படியே வாயில் கமர்த்தி விட்டு, "அப்போ என்ன சொல்ல வர என்னால எதுவும் முடியாது அப்படின்னு சொல்ல வரியா?". என எப்போதும் போல அவனை அடித்தான்..
சாணக்கியன் சற்று அப்படி தான் அவனுடைய அப்பா அவனின் பலம்..யாரிடமும், எந்த விஷயத்துக்கும் பயப்படாதவன், தவறு என பலருக்கும் நினைக்கும் விசயத்தை தனக்கு சரியென பட்டால் அவன் அதை செய்வான்... கொஞ்சம் முரண்பாடான ஒருவன் தான் அவன்..
"ஆமாம் டா சும்மா என்னை அடிச்சா மட்டும் போதாது.. எல்லோர்க்கும் எல்லாத்தையும் செய்ய முடியும்னு இல்லை" என விக்கி அடி வாங்கினாலும் கூறினான்..அதை அவனின் மற்ற நண்பர்களும் ஆமோதித்தனர்..
அதை கேட்ட அவனுக்கு திமிர் ஏற, "டேய் நான் ராஜா டா என்னோட அப்பா இருக்கிற வரைக்கும் என்னை யாராலயும் அசைக்க முடியாது.. நான் நினைச்சதை அடைந்தே தீருவேன் என்னால முடியாத காரியம் அப்படின்னு ஒன்னு இந்த உலகத்திலேயே கிடையாது ஓவரா பேசின வாய ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன்" என சாணக்கியன் கூறினான்..
அதைக் கேட்டு விக்கி போதையில், "ஓ நீ அப்படி வர.. அப்போ ஒன்னு பண்ணு.. அதோ தூரமா ஒரு பொண்ணு நடந்து போயிட்டு இருக்கா பாரு அவ தலைல ஒரு சிவப்பு கலர்ல ரோஜா பூ இருக்கு அதை நீ எனக்கு கொண்டு வந்து கொடுத்துட்டா நான் நீ சொல்றத நம்புறேன் அப்படி இல்ல அப்படின்னா நான் சொல்றத நீ நம்பு எல்லோராலும் எல்லாத்தையும் நடத்த முடியாது புரியுதா?" என பந்தயம் வைத்தான் விக்கி..
சாணக்கியன் எப்போதும் சறுக்கும் இடம் இது என்பதை சரியாக உணர்ந்து விக்கி அங்கே அடிக்க, "என்ன டா என்னால அவளோட பூவை எடுக்க முடியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? என்னால அவளோட இடுப்பை கூட பிடிக்க முடியும்" என சாணக்கியன் கூற, "நீ சொன்னதை செய் அப்புறம் பார்ப்போம்" என விக்கி கூறினான்..
அப்படி இருக்க, விக்கி தலையில் ஒரு தட்டு தட்டிய சாணக்கியன் காரை விட்டு இறங்கி செல்ல, "டேய் என்னடா அவனை போக விட்டுட்ட ஏதாவது பிரச்சினை ஆக போகுது டா பெண் விஷயம் வேற அவன் மாட்டிக்க போறான் டா அவன் பொண்ணுங்க விசயத்துல வீக் ஆச்சே" என அவனுடைய வேறொரு நண்பன் கூறினான்..
"டேய் அவனை பத்தி தெரியாமல் பேசுற அவ்ளோ சீக்கிரம் அந்த பொண்ணை தொட மாட்டான் அது எனக்கு தெரியும் எதுவும் ஆகாது பாரு அந்த பொண்ணு பஸ் ஏற போயிட்டு இருக்கா இவன் எங்கே அந்த பெண்ணை தொட்டு பூவை எடுக்க போறான்" என விக்கி தன் நண்பனை பற்றி பெருமையாக கூறினான்..
அதே நேரம் இன்று மாலை அமிர்த வர்ஷினி வேலை செய்யும் பள்ளியில் ஆண்டு விழா நடக்க இருப்பதால் காலையிலேயே நேரமாக செல்ல வேண்டும் என நினைத்து இருந்தாள்..ஆனால் லேட்டாகி விட அவளோ அரக்க பறக்க அந்த பஸ்ஸை பிடிக்க சென்றாள்..
அப்போது அவளின் நீண்ட கூந்தலை பின்னி அதில் ஒரு ஒற்றை ரோஜா பூவை சூடி இருந்தாள்..அதை தான் அவன் எடுக்க அவள் பின்னால் வந்து கொண்டு இருக்கிறான் சாணக்கியன்.. அவனுக்கு கொஞ்சம் அசிங்கமாக தான் இருந்தது..ஒரு பெண்ணின் தலையில் உள்ள பூவை அவன் எடுக்க அவள் பின்னால் இப்படி செல்வதா என அவனுக்கு இருந்தது.. அவன் பின்னால் தான் பலரும் சுற்றி கொண்டு இருக்க இப்போது அவன் ஒரு பெண்ணின் பின்னால் செல்வது அவனுக்கு என்னவோ போல இருந்தது..
அவன் அவனுடைய அப்பாவுக்காக கட்சியில் இணைந்து இருந்த சமயம் வேறு அவனை பலருக்கும் தெரிய வாய்ப்புகள் இல்லையென்றாலும் எதாவது ஆகி விடுமோ என்ற நெருடல் அவனுக்கு இருந்தது என்னவோ உண்மை தான் அவனின் தந்தை நெடுஞ்செழியன் அவருக்கு தான் அவன் அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தது..
ஆனால் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை ஆனாலும் அவர் விடாமல் தொல்லை செய்ய ஏதாவது ஒன்று இரண்டு விசயங்களில் தலை காட்டுவான்...அப்படி இருக்க, அவன் இதோ இப்போது அவள் பின்னால் செல்ல அவளின் வரி வரியான பின்னல் அவனை ஈர்க்க அவளின் முகம் எப்படி இருக்கும் என அறிய அவன் அவள் பின்னால் செல்ல அவளோ அதற்குள் பஸ்ஸில் ஓடி ஏறி விட்டாள்..
இவனோ அவளுடைய தலையில் உள்ள பூவை எடுத்தே ஆக வேண்டும் என எண்ணி அவனும் ஓடி சென்று பஸ்சில் ஏறி விட்டான்.. பஸ் முழுவதும் பயணிகள் கூட்டம் நிறைந்து இருந்தது..
அவனும் ஓடி ஏறி விட்டான் பஸ்ஸில் கூட்டம் வழிந்து கொண்டு இருக்க அவள அருகே செல்வது மிக சிரமமாக இருந்தது இருந்தும் அவன் ஒவ்வொருவரையாக கடந்து கடந்து அவன் சென்று அவளுக்கு பின்னால் ஒரு ஆண் இருக்க அதற்கு பின்னால் அவன் நின்று கொண்டான்..
அதற்குள் டிக்கெட் எடுக்க கண்டக்டர் சொல்ல, அவனும் எடுத்து விட்டு நின்று விட்டான்..இன்னும் அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை அவன் கண்கள் முழுவதும் அவளின் பின்னழகில் தான் நிலைத்து இருந்தது..
