எனதுயிரே 14
.
அத்தியாயம்: 14
பின்னாடியே இவ்வளவு அழகா இருந்தா அவள் முகம் எப்படி இருக்கும் என நினைத்தான்... பெட் வைத்திருப்பதால் அந்த பூவை பறிக்க அதற்கு அவளுக்கு பின்னால் செல்ல அவன் முயன்று கொண்டு இருக்க, இங்கு அமர்தாவுக்கு எரிச்சலாக இருந்தது..
பஸ்ஸில் ஏறியது முதல் யாரோ ஒருவன் அவளை உரசி கொண்டே இருந்தான்..அவளால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை...எரிச்சல் அடைந்து அவள் நின்று கொண்டு இருக்க அந்த சமயம் பார்த்து, பேருந்தை ஓட்டுநர் சடன் பிரேக் போட சாணக்கியன் அவள் தலையில் உள்ள பூவை எடுக்க முயலவும், அமிர்தாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவன் அவளின் இடையை பிடிக்கவும் சரியாக இருந்தது...
அவளும் எவ்வளவோ பொறுமையாக இருந்தவள் தன் இடையை பிடித்தவனை திரும்பி பார்க்கவும் டிரைவர் சடன் பிரேக் போடவும் சரியாக இருக்க அமிர்தா திரும்பும் பொழுது சாணக்கியனின் கை அவளின் தலையில் இருந்து பூவை எடுத்து இருந்தான்..அவன் உயரமாக இருக்க அவளுடைய பூ சாணக்கியன் கையில் இருக்க, அவளுக்கு பின்னால் நின்று அவளின் இடுப்பை பிடித்து கொண்டிருந்தவன் சற்று என்று ஒன்றும் நடவாவதவன் போல நீங்கி நின்று கொண்டான்..
அவள் பார்வைக்கு சாணக்கியன் தான் இடுப்பை பிடித்தான் என அவள் நினைக்கவும், அவள் எதை பற்றியும் யோசிக்கவில்லை..ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை அறைந்து, "நீயெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பிறக்கல பஸ்ஸில் வந்தா பொண்ணுங்க இடுப்பை பிடிக்கிறது தான் வேலையா? அவ்வளவு அரிப்பு இருந்தா எங்கேயாவது போக வேண்டியது தானே" என கேட்டாள்..
இதை அவன் எதிர்பார்க்கவில்லை..அவளை முதன் முறையாக பார்க்கும் போதே அவளின் ஆத்திர விழிகளும் அவளின் கையின் சூட்டை தான் அவள் பரிசாக கொடுத்தாள் அமிர்தா..
அதுவும் அவனைப் போன்று ஒருவனுக்கு இது மிகப்பெரிய அவமானம்... ஒன்று அவன் அதை செய்யவில்லை.. இரண்டாவது ஒரு பெண்ணின் கையால் இத்தனை பேர் முன்னிலையில் அடி வாங்கி விட்டோமே என்று அகங்காரம் அவனுள் வந்து போனது என்னவோ உண்மைதான்...
இருவரின் பார்வையும் மோதலில் தான் முதன் முறையாக சந்தித்துக்கொண்டது.. அதற்குள் பஸ்ஸில் உள்ள அனைவரும் சாணக்கியனை திட்ட அவனுடைய விழிகள் அதை எதையும் பார்க்கவில்லை அவளுடைய கண்களை மட்டும் தான் சந்தித்துக் கொண்டிருந்தது.. அந்த விழிகளில் அவ்வளவு ஆத்திரம் நிறைந்திருந்தது.. தன்னை இவள் வேண்டும் என்று அவமானப்படுத்தி விட்டாள் தான் எதையும் செய்யவில்லை என நினைத்தான்..
ஆனால் அவளுக்கோ அவன் கையில் அவள் வைத்த பூ மற்றும் அவளின் இடையை அவன் பிடித்து இருக்கிறான் என்ன திமிர் இருக்க வேண்டும் என இருந்தது..
அவனுடைய தந்தை வேறு பிரபல கட்சியில் இருக்க அது வேறு அவனுக்கு நினைவுக்கு வந்து தொல்லை செய்தது.. பல நாள் சுற்றுலா சென்று வந்ததால் காடு போல அவன் வளர்த்தி வைத்திருந்த தாடியும் கலைந்த கேசமும் அவனை மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் போனது.. அவனும் அதுபோல தந்தையின் பிரபல வெளிச்சத்துக்குள் பெரிதாக அவன் தன்னை காட்டிக் கொள்ளாததால் ஏனோ யாருக்கும் அவனை பெரிதாக தெரியவில்லை.. ஆனால் அவள் எப்படி தன்னை அடிக்கலாம் என்ற ஆத்திரம் அவனுக்கு வந்தது...
"யார் மேல டி கையை வைச்ச?" என அவன் கேட்டான்.. கேட்கவில்லை என்றால் அவன் சாணக்கியன் இல்லை.. அந்த அளவுக்கு அவனுக்கு அவமானமாக இருந்தது.. அவன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணிடம் அடி வாங்குகிறான் அவனுக்கு இருக்கும் திமிருக்கும், அகங்காரத்துக்கும் இடி போல விழுந்த அடி அவனை மேலும் ஆத்திரத்துக்குள் தள்ளியது..
"நீ தான்டா யாரை டின்னு சொல்ற?" என அவள் எகிறினாள்.. அவளுக்கு ஆத்திரம் தன் மீது ஒருவன் கையை வைத்து விட்டானே இவனை எல்லாம் சும்மா விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் அவள் இருந்தாள்..
"என்ன டி யார் உன் மேல கையை வைச்சா? நான் கையை வைக்கும் அளவுக்கு நீ இல்லை.." அவன் கூறினான்..
"என் மேல கையை வைச்சதும் இல்லாமல் என்கிட்டயே கோபப்பட்டு பேசுறியா என்ன திமிர் இருக்கும் உனக்கு?" என அவளும் கேட்டாள்..
அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனை திட்ட அது எல்லாம் அவனுக்கு கவலை இல்லை.. தன்னை இவள் அறைந்து தன்னை அசிங்கப்படுத்தி விட்டாள் என நினைத்த அவன் அவள் மீது கையை வைத்தவன் அருகே திருட்டு முழி முழித்து கொண்டு இருக்க ஓங்கி அவனை ஒரு அறை அறைய சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக வாயை மூடி கொண்டனர்..
"தொலைச்சிடுவேன்... உன்னை தொட்டது இவன்" என கூற அவளோ நம்பாத பார்வை பார்த்தாள்..அவள் சாணக்கியன் தான் இதை செய்தான் என்று முடிவு செய்து விட்டாள் அவளின் பார்வையை பார்த்த அவனுக்கு ஆத்திரம் மேலோங்க அவளை நோக்கி கையை ஓங்கியவன், "இனி நீ அனுபவிப்ப.. என்ன மனசுக்குள்ள பெரிய ரதி என்று நினைப்பா? உன் பின்னாடி நிக்கிற ஆளுங்க எல்லாம் உன்னுடைய இடுப்பை பிடிக்கிறது தான் வேலை நினைச்சுட்டு இருக்கியா... இப்பவும் சொல்றேன் உன்னுடைய இடுப்பை பிடிக்கிற அளவுக்கு நீ இல்ல..என்னை தொட்ட நீ எங்கே போனாலும் என் முன்னாடி நீ அவமானப்பட்டு நிக்க போற.. இதுக்கு நீ அனுபவிப்ப டி.. ஆள் தெரியாமல் மோதிட்ட" என்றவன் அப்படியே பஸ்ஸில் இருந்து இறங்க, அவளோ அவன் பேச்சுக்கு சற்றும் தளராமல், "செய்யறதையும் செஞ்சிட்டு பேச்சை பார்" என்றவள் அவளும் பயணத்தை தொடர்ந்தாள்..
ஆனால் என்ன தான் பேசி எதிர்த்து நின்றாலும் அவனுடைய பார்வை அவளுக்கு கிலியை கொடுத்தது..அவனுடைய செய்கை அவளை அருவருக்கத்தக்க வகையில் இருக்க இனி அவள் வாழ்கையில் இனி இவனை போல ஆளை சந்திக்கவே கூடாது என அவள் நினைத்தாள்..ஆனால் அது நடக்கவே நடக்காது என்பது போல ஒரு செய்கை மீண்டும் அவள் வாழ்கையில் நிகழ்ந்தது..
பஸ்ஸில் நடந்த விசயமே அவனுடைய தலைக்குள் ஓடி கொண்டு இருக்க அவள் யார் அவளுக்கு என்னை தைரியம் இருக்கும் என எண்ணியவன் ஆத்திரத்தின் விளிம்பில் நிற்க அந்த சமயம் பார்த்து இவனை தேடி ஆட்டோவில் விக்கி வந்தான்..
"என்ன பூ கிடைச்சுதா?" என சிரித்து கொண்டே கேட்க மீண்டும் ஒரு அறை அவனுடைய கன்னத்தில் அறைந்து இதுதான் கிடைத்தது என தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அந்த பூவை எடுத்து காட்டினான்.. அவனுடைய கோபத்தை பார்த்தவன், "என்ன ஆச்சு டா ஏன் டா அடிக்கிற" என கேட்க,
"எல்லாம் என்னால தான்டா நாயே வந்தது? பந்தயம் வைக்கிறான் பாரு பரதேசி... உன்னால தான் டா கண்டவள் கிட்ட எல்லாம் நான் பேச்சு வாங்கிட்டு வரேன்" என்று கொதித்து எழுந்து கூறினான் சாணக்கியன்.. அதைக் கேட்டு விக்கி எதுவும் புரியாமல் வாயை மூடிக்கொண்டான்...
அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த ஐடி கார்டில் பெயரை சொல்லி, "இந்த ஸ்கூல் எங்கே இருக்கு அப்படின்னு எனக்கு விசாரிச்சு சொல்லு" என்ன தைரியம் இருந்தா அவ இப்படி செஞ்சிருப்பா என நினைத்து அமிர்தா மீது கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தான் சாணக்கியன்..
அவன் சொன்னது போல அந்த பள்ளியின் விலாசம் கிடைத்துவிட்டது.. அந்தப் பள்ளியில் யார் யார் வேலை செய்கிறார்கள் என்பது வரை அவன் கையில் கிடைத்த விட அதில் அவளுடைய புகைப்படம் இருக்க, அதை கவனித்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் விக்கி, "இன்னைக்கி அந்த ஸ்கூல்ல ஆனுவல் டே நமக்கு கூட ஒரு இன்விடேஷன் வந்து இருக்கு நாம இந்த ஸ்கூலுக்கு கொஞ்சம் போன வருஷம் டொனேஷன் கொடுத்திருக்கோம்" என்று விக்கி கூறினான்.. அதைக் கேட்டவன், "இந்த வருஷம் ஆனுவல் டேக்கு போயே ஆகணும்" என்று அவளை எதிர் கொள்ளவே சாணக்கியன் அங்கு செல்ல நினைத்தான்…
