Share:
Notifications
Clear all

எனதுயிரே 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.

அத்தியாயம் : 15

பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக துவங்கி இருந்தது..குழந்தைகள் எல்லாம் பல பல வண்ண வண்ண உடைகள் உடுத்தி தங்களின் பள்ளி ஆண்டு விழாவை சிறப்பிக்க தயாராக இருந்தார்கள்..

ஆசிரியர்கள் எல்லாம் ஒரே போல புடவை அணிந்து வரும் விஐபிகளையும், பெற்றோர்களையும், குழந்தைகளையும் வரவேற்று கொண்டு இருந்தார்கள்.. அமிர்தாவும் தாளாளர் அருகே பூங்கொத்துகளை பிடித்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்..

அந்த சமயத்தில் கருப்பு நிற ஜாகுவார் ஒன்று பள்ளிக்குள் நுழைந்தது..அந்த காரை பார்த்ததும் பள்ளி தாளாளர் குஷியாகி விட்டார்..அமைச்சர் மகனின் கார் அல்லவா அது அதனால் வேகமாக அங்கு நின்று கொண்டு இருந்த அமிர்தாவை பார்த்து, "ஹே அமிர்தா வாங்க என்கூட ஒரு பொக்கே எடுத்துக்கோங்க" என கூற அதை கேட்டு அவளும் ஏதோ கெஸ்ட் என வேகமாக ஓட அவள் ஓடி வருவதை காருக்குள் இருந்து பார்த்தான் சாணக்கியன்..

அவன் விழிகளில் அவளை கொல்லும் ஆத்திரம் நிறைந்து இருந்தது..ஆனாலும் அவளை எதிர்த்து நிற்க வேண்டும் என்றே அவன் வந்து இருக்கிறான்..தாளாளர் வந்ததும் கதவை திறக்க அவனும் காரிலிருந்து இறங்கினான்..

அவளோ அரக்க பறக்க பொக்கே எடுத்து கொண்டு வந்தவள் அவனை பார்க்க அப்படியே திகைத்து நின்று விட்டாள்..

"இவனா????" என பார்த்தாள்.. காலையில் கலைந்து  இருந்த கேசத்தோடு இருந்தவன் இப்பொழுது பார்க்கவே வேறு மாதிரியாக இருக்க, அவளுக்கே குழப்பமாக இருந்தது..அவள் கையில் வேறு பொக்கே இருக்க தாளாளர் வேறு, " பொக்கேவை கொடுங்க அமிர்தா" என கூற அவளோ அதை கேட்காமல் சிலை போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

இது அவன் தானா என அவளோ முழித்து கொண்டு இருக்க, அவனோ அவளை  அழுத்தமாக பார்த்து, "என்ன மேடம் என்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?" என  அழுத்தமாக கேட்டான்..அதை கேட்டு அவளோ திகைத்தாள்..இது அவனே தான் என அவள் திகைத்து நிற்க, "பூவை தரீங்களா இல்லை நீங்களே வைச்சுக்கறீங்களா?.. ஐ திங்க் இந்த பூ எனக்கானதுன்னு நினைக்கிறேன்"  என அவன் மீண்டும் பூ என்பதை அழுத்தமாக கூறினான்..

அதை கேட்டவள் மேலும் திகைத்து இவன் எப்படி இங்கே என பார்க்க, அதற்குள் தாளாளர் அவளை பார்த்து, "என்னம்மா மொச மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க பொக்கேவை கொடுங்க மா" என கூற, அதை கேட்டு அவள் தாளாளரிடம் அவனைப் பார்த்துக் கொண்டே கொடுக்க அவனும் அவளைப் பார்த்து நக்கல் புன்னகையுடன் தாளாளரை பார்க்க,

அவரோ, "சார் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை" என அவள் முன்னிலையில் கூற அதை கேட்டவன் நொடி பொழுதில் அவளை பார்த்தான்..

அவளது திகைத்த விழிகளும் அவளின் அதிர்ந்த முகத்தையும் அவனை ஏனோ  அவனுக்கு ஐஸ்கட்டியை தலையில் வைத்து போல இருந்தது.. அவள் இடிந்து போய் இருப்பதை பார்ப்பவனின் அகங்காரம் கூடியது...அவளை ஏதாவது செய்ய வேண்டும் என அவன் நினைத்து இருந்தான்..

தாளாளர் அவளிடம்,  "சார்க்கு குடிக்க ஜூஸ் கொண்டு வர சொல்லுங்க அமிர்தா" என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு செல்ல அவனுடைய பார்வை அவள் மீது யாரும் பார்க்காத வண்ணம் படிந்தது..அவளோ இவனா சாரா பொறுக்கியை எல்லாம் சார்னு சொல்றாங்க... என நினைத்தாள்..

அவளுக்கு இன்னும் அவனை கண்ட அதிர்ச்சி மாறவில்லை.. காலையில் என்னிடம் அத்து மீறியவன் இன்று ஆயிரம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எப்படி ஒரு சீப் கெஸ்ட் ஆக வர முடியும்? யார் இவன் ஏன் இவ்வளவு கேவலமான மனிதர்களை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? இவர்களுக்கு வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கக் கூடாதா? என்று இருந்தது..

அவனை கண்டதும் அவளுடைய மொத்த சந்தோஷமும் வடிந்தது போல இருந்தது.. 

அவனைக் கண்டதும் மைக்கில் வேறு தொழில் அதிபர் சாணக்கியன் வருகிறார் அவரை இந்த பள்ளி மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது என்று அவருடைய வரவை அறிவுறுத்த அதைக்கேட்ட அவளுக்கு மேலும் கடுப்பாகியது...

இவனை எல்லாம் யார் வர சொன்னார்கள்? என்ன இவன் தொழிலதிபரா? காலையில பிச்சைக்காரன் மாதிரி இருந்தான் இவன் தொழிலதிபரா? பருப்பு விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்கள் காசு கொடுத்தாங்கன்னு சொல்லி வர சொல்லிடறாங்க.. ஆனால் அவங்க குணம் நல்லா இருக்கணும் இல்ல.. படிக்கிற குழந்தைகளுக்கு ரோல் மாடலா அவங்க இருக்கணும் இல்ல என வாய் வழியாகவே குழம்பிக் கொண்டு அவள் செல்ல யாரடி புலம்பிட்டு இருக்க அதை கேட்டதோ அருகில் உள்ள வேறு ஒரு ஆசிரியர்..

அவளோ அப்பொழுதுதான் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்து, "யார் அக்கா அது?" என அவனை கை காட்டி கேட்டாள்..

அவனும் மேடையில் விழா துவங்கி இருந்தாலும்  அவனது பார்வை அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது..அதற்கு தானே அவன் வந்து இருக்கிறான் அந்த வேலையை தானே அவன் பார்த்தாக வேண்டும்...

அவள் அருகில் இருந்த அந்த ஆசிரியர், "அவர் தான் அமைச்சர்  நெடுஞ்செழியனின் மகன் சாணக்கியன்.. அவர்களுக்கு பல தொழில்கள் இருக்கு.. அந்த தொழில் எல்லாம் இவர் தான் பாத்துக்கிறாரு.. அப்பா அரசியலில் மகன் தொழிலையும் கவனிச்சிக்கிறாங்க.. நம்ம ஸ்கூலுக்கு எப்பவும் ஒரு பெரிய டொனேஷன் அமௌன்ட் அவங்க கிட்ட இருந்து வரும்.. எப்பவும் இந்த மாதிரி விழாவுக்கு அனுப்பு நேர்ல போய் கொடுத்தாலும் வரமாட்டார்.. ஆனால் இந்த முறை என்னாச்சுன்னு தெரியல வந்து இருக்காங்க" என அவனை பற்றி தனக்கு தெரிந்ததை   அவர் கூற அதை கேட்டவளின் விழிகள் விரிந்தது..

"அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவன்?" என வாய்விட்டேன் அவள் முனகினாள்..

'என்ன அமைச்சர் பையன் கிட்டயா மோதி இருக்கோம்?' என எண்ணியவள் அடுத்த நொடியே, "என்ன இருந்தாலும் அவன் செய்தது தப்பு.. யாரா இருந்தா என்ன என்கிட்ட மோதினா இப்படித்தான் நடக்கும்" என மீண்டும் அவள் இறுகி கொண்டாள்..

அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் கவனித்து வந்தான்.. அவனுக்குள் ஆத்திரம் இவள் கையால் அடி வாங்கி விட்டோமே என்ற ஆத்திரம் குமைந்து கொண்டே இருந்தது.. அதை ஏதாவது ரீதியில் வெளிக்காட்டி விட வேண்டும் என அவன் நினைத்துக்கொண்டு இருந்தான்..

முதலில் அவன் அந்த தவறை செய்யவில்லை..அவன் தவறானவன் தான் இல்லை என்று மறுப்பதற்கில்லை தொழிலுக்காக பல தவறுகள் செய்தவன் தான் ஆனால் யார் என்று தெரியாத ஒரு பெண்ணின் இடையை பிடித்து இழுக்கும் அளவுக்கு அவனுக்கு காமவெறி இல்லை.. அவனைத் தேடி வரும் பெண்கள் தான் ஏராளம் அவனாக எந்த பெண்ணையும் தேடி சென்றது இல்லை..

அப்படி இருக்க, அவன் அந்த தவறை செய்தே இருந்தாலும் ஒரு பெண்ணின் கையால் அடி வாங்கியதை அவனால் அவ்வளவு பெரிதாக ஏற்றுக் கொள்ள முடியாது.. இதில் அவன் வேறு தவறே செய்யவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top