Share:
Notifications
Clear all

எனதுயிரே 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 16

ஆனால் அந்த பஸ்ஸில் இருந்த 60 பேருக்கு மேலான நபர்கள் அந்த காட்சியை பார்த்து விட்டார்கள் அதற்கு காரணம் இவள்.. 60 பேர் முன்னிலையில் என்னுடைய மானத்தை வாங்கி விட்டாள் இந்த 60 பேர் 600 பேரிடம் சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம்? என யோசித்தவனுக்கு இவள் இதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என அவன் முடிவு செய்து விட்டான்..

அதன் படி தான் அவன் இன்று அவனின் நிலையை அவளுக்கு உணர்த்தி யாரிடம் மோதி இருக்கிறாய் பார் என அவளுக்கு காட்டத்தான் அவன் இங்கு வந்து இருக்கிறான்..

அப்படி இருக்க, ஒரு பக்கம் விழா நடந்து கொண்டிருக்க அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க ஆண்டு விழாவில் அந்த ஆண்டில் சிறப்பாக விளையாட்டு மற்றும் கல்வியில் இருந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.. அவனிடம் தான் பரிசளிக்க சொல்ல அந்த பரிசுகளை எல்லாம் எடுத்துக் கொடுக்கும் வேலை அமிர்தாவுக்கு வந்தது..

அமிர்தாவுக்கோ ஆத்திரம் தாங்கவில்லை...இவன் எல்லாம் ஒரு ஆள் என அழைத்து இருக்கிறார்கள் பார் என கொந்தளித்து கொண்டே  பரிசை எடுத்து அவனிடம் கொடுத்து கொண்டு இருக்க, அவளோ அருகிலுள்ள டீச்சர், "ஏன் டி இன்னும் காலையில நடந்ததை தான் யோசிச்சிட்டு இருக்கியா?" என பரிசு பொருளை எடுத்து கொடுத்துக் கொண்டே அவளிடம் மென் குரலில் கேட்டார்..

அதை கேட்டதும் அவள் அதே மென் குரலில், "எப்படி அக்கா மறக்க சொல்றீங்க அதுக்கு காரணமானவர்களை திரும்பத் திரும்ப பார்க்கும்போது அது ஞாபகத்துக்கு வந்துட்டுதானே இருக்கும்" என்று அவள் கூறினாள்..

"அந்த ராஸ்கல் இங்கே வந்து இருக்கானா?" என மேடைக்கு கீழே தேடி பார்த்தவருக்கு தெரியாது மேடையிலேயே அவர்கள் அருகில் அவன் நின்று கொண்டிருக்கிறான் என அவனோ தன்னை பற்றி தான் அவர்கள் பேசுகிறார்கள் என கருதி மேலும் இறுகிப்போய் அவனுடைய தொண்டையை கணைக்க அதை உணர்ந்த அந்த டீச்சர் "சரி விடு எல்லோரும் பார்க்கிறாங்க" என அவர் கூற,

அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், "அப்படி எல்லாம் அமைதியா இருக்க முடியாதுக்கா.. எனக்கு கோபம் கோபமா வருது.. இந்த காலத்துல எல்லாம் யாரை தான் சீஃப் கெஸ்ட்டா கூப்பிடனும்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு.. போயும் போயும் இவங்களை எல்லாம் கூப்பிட்டு இந்த பிள்ளைகளுக்கு என்ன நல்லதை செய்ய போறானுங்க.. பருப்பு விக்கிறவங்க, புண்ணாக்கு விக்கிறவங்க எல்லாம் தொழிலதிபர் அப்படின்னு சொல்லி வந்துடுறாங்க இதுல அரசியல் வேற.. எல்லாம் கலிகாலம் ஆட்சி இவங்க கிட்ட இருக்குன்னு என்ன வேணாலும் செய்யலாமா?" என்று அவனுடைய காது படவே அவள் வேண்டுமென்றே அவனின் ஈகோவை தூண்டி விட அவள் பேசினாள்..

அவளுக்கு என்னமோ மனம் ஆறாமல் அருகில் உள்ள ஆசிரியரிடம் பேச அவருக்கு இவன் அருகில் அனைத்தையும் கேட்டு விட்டான் என்ற பதட்டம் வேறு வந்துவிட்டது அதுவும் அவள் ஆத்திர மிகுதியில் கொஞ்சம் சத்தமாக பேச அவனுடைய காதுக்கு விழுந்து விட்டது.. அது அவனுடைய ஈகோவை தூண்டி விட்டது..

அதுவும் அவனுடைய அவளுக்கான தண்டனை பட்டியலில் சேர்ந்து கொண்டது.. அவனின் முகம் இறுக சபை நாகரிகம் கருதி பரிசுகளை கொடுத்தவன் பிறகு பள்ளித்தாளாளரிடம் ஒரு கட்டத்தில் போதும், "இனி நீங்க கொடுங்க தனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான்..அவன் செல்லவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.. போகட்டும் இவனை எல்லாம் யாரு இங்க நிக்க சொன்னா என அவள் மீண்டும் முணுமுணுக்க அவனுடன் அவன் அருகே அவளால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியாமல் தான் தவித்து புலம்பி வர அதை அவன் கேட்டு அவன் முகம் இறுகியது..

"அமிர்தா சார் கார் வரைக்கும் அவரை வழி அனுப்பி வைச்சிட்டு  வாங்க" என  அவள் பக்கமாக திரும்பி பள்ளியின் தாளாளர் கூற, "மீண்டுமா ஐயோ இவருக்கு வேற வேலையே இல்லையா?" என எண்ணினாலும் சொன்ன வேலையை செய்தாக வேண்டிய நிலைமையில் அவள் இருக்கிறாளே அதனால் அவள் பின்னால் செல்ல அவனும் அவளுக்காக தான் காத்து இருக்கிறான் போல ஒரு கட்டிடத்தின் மறைவில் அவள் அவனோடு எதுவும் பேசாமல் அவனுக்கு இரு அடி பின்னால் வரவும் யாருமில்லாத இடம் என்பதை உணர்ந்தவன் சட்டென்று யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் அவளின் கையை பிடித்து இழுக்க எதிர் பாராத இந்த செயலால் அவள் திகைத்தாள்...

அவனோ யாருமில்லை என்பதை உறுதி செய்தவன், "என்ன டி நினைச்சிட்டு இருக்க ஓவரா என்னை சீண்டிட்டு இருக்க?" என கேட்க

அவளோ, "மரியாதையா கையை விடு உன் லட்சணம் அவங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் எனக்கு நல்லா தெரியும் நீ ஒரு பொறுக்கி அப்படின்னு அதுதானே இந்த மாதிரி வேலையை செஞ்சுட்டு இருக்க" என அவள் கேட்க

அவனுடைய கோபம் பன் மடங்காகியது.. பிறகு அவன் எதுவும் யோசிக்கவில்லை .. அவளின் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து இழுத்தவன், "நான் தொட்டு பாக்குற அளவுக்கு நீ இன்னும் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது.. நான் செஞ்ச தப்பையே தப்புன்னு ஒத்துக்க மாட்டேன்..

ஆனால் நான் செய்யாத தப்பை செஞ்சேனு நீ என்னை குறை சொல்ற? என்னோட ஈகோவை டச் பண்ணி இருக்க உன்னை அவ்வளவு சீக்கிரம் நான் விடமாட்டேன்..

  காலைல நீ எதுக்கு என்னை அடிச்சியோ அதே விஷயத்தை செய்யறேன் நீ வேடிக்கை பார்க்க போற உன்னால என்ன பண்ண முடியும் பஸ்ஸுக்குள்ள இருந்தது ஒரு 60 பேர் இருக்குமா?

இப்போ ஆயிரக்கணக்கான பேர் உன்னை சுத்தி இருக்காங்க உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு போ உன்னை ஏதாவது பண்ணிட்டு அப்படியே விடனும் தான் நினைச்சுட்டு இருந்தேன்..

ஆனால் உன்னை இனி அவ்வளவு சீக்கிரம் நான் விட மாட்டேன் ஏண்டி என்ன திமிரு இருந்தா என்னையவே அடிச்சிருப்ப" என்று அவன் அவளின் மீதுள்ள ஆத்திரத்தை அவளின் இடையில் அழுத்தத்தோடு பிடித்து அவன் கூற, அவனின் இந்த செயலை அறவே வெறுத்த அவள் அவனிடமிருந்து விலகப் போராட அதிலும் அவன் பேசியதை  கேட்ட அவள், "என்னை யார் என்று தெரியாமல் என்கிட்ட மோதாதே அவ்வளவுதான் சொல்லிட்டேன் போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்.. மரியாதையா சொல்றேன் என் மேல இருந்து கையை எடுத்துட்டு" என அவள் வெகுண்டு கூறினாள்...

"ஏய் அப்படி தாண்டி தொடுவேன் உன்னால முடிஞ்சத செய்...இப்பவே போய் கம்ப்ளைன்ட் குடுடி எவன் என்னை தொட்டுப் பார்க்கிறான் என்று நானும் பார்க்கிறேன்" என்றான்..

பிறகு அவள் போராடி முடியாமல் போக அவனாக அவளை விட்டவன் தன் பாக்கெட்டில் இருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவள் முகத்தில் விட்டெறிந்து, "முதல் முறையா முழுசா தொடாமல் இடுப்பை தொட்டதுக்கு மட்டும் ஒரு பொண்ணுக்கு காசு கொடுக்கிறேன்" என்று கூறிவிட்டு அவளை வேண்டுமென்று அவமானப்படுத்திவிட்டு சென்றான் அவன்..

அவன் பேசிய வார்த்தைகளும் அவன் செய்த செயலும் அவளை அப்படியே சிலை போல நிற்க வைத்தது…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top