Share:
Notifications
Clear all

எனதுயிரே 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 17

   "ஏய் எதுக்கு டி அழுதிட்டு இருக்க உன்னால நடந்ததை விட்டு வெளியே வர முடியலையா?" என கேட்டான் அகிலன்..

"அகி என்னால முடியல அகி காசு இருக்குன்னு என்ன வேணா பண்ணலாமா அகி..?" என அவள் மூக்கை உறிஞ்சி கேட்டாள்..

"ஏய் விடுடி அம்மு அவன் என் கையில சிக்காமலா போவான் அப்போ வெச்சு செஞ்சிடறேன்.. என் கண்ணும் அவன் மேல தான் இருக்கு" என்று ஒருவித வன்மத்தோடு அகிலன் கூறினான்..

"என்ன சொல்ற?" என மூக்கை உறிஞ்சி கொண்டே அவள் கேட்க, "அவங்க எல்லாம் இல்லிகல் பிசினஸ் செஞ்சிட்டு இருக்காங்க எப்படி இருந்தாலும் அவங்களை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன்" என அவன் உள்ளுக்குள் வன்மத்தை வைத்து கூறியவன் மனதில் தான் காதலித்து திருமணம் செய்ய இருக்கும் அமிர்தாவை தொட்டு இருக்கிறான் என்றதும் அகிலனுக்கு ஆத்திரம் வந்தது என்னவோ உண்மைதான் ஏற்கனவே பல ஆத்திரங்களுக்கு நடுவே அவன் இருக்க அதில் இதுவும் குடி புகுந்து கொண்டது..

தனக்கு உரிமையானவளை இவன் எப்படி தொடலாம் என எண்ணினான்..

அவளுக்கோ நடந்த விசயத்தை எளிதாக மறக்க முடியவில்லை..அவனை கொலை செய்யும் ஆத்திரம் வந்தது..இந்த விசயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று எண்ணித்தான் அகிலனிடம் சொன்னாள்..அவள் பொதுவாக அகிலனிடம் எதையும் மறைப்பது இல்லை..

ஆம் அவனை தான் அவள் திருமணம் செய்ய போகிறாள்..அறிவழகன் வந்து இதை பற்றி பேசியது முதல் அவளுக்கும் ஏன் அகிலனை திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் அவனை மறுக்க அவளிடம் பெரிதாக காரணங்கள் இல்லை.. அதே போல அகிலனுக்கும் இல்லை என்பதாலும் அவனின் சிறு வயது தோழியே அவனுக்கு துணையாக வருவதில் அவனுக்கு எந்த விதமான பிரச்சனை இல்லை என்பதாலும் சிறுவயதிலிருந்தே இருவரும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதால் தன் தந்தையிடம் சொல்லாத விஷயத்தை கூட அமிர்தா அவனிடம் சொல்வாள்..

அப்படி இருக்க இப்போதும் அவளுக்கு அகிலனை தான் மனம் தேடியது.. அவனிடம் விஷயத்தைக் கூறி அகிலன் ஆறுதல் செய்த பின் தான் அவள் மனம் லேசாக மாறியது...

அதன் பின் அகிலன் அவள் அருகே அமர்ந்து, "நீ ஒன்னும் கவலைப்படாதே இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன் இனி அவன் மூலமா உனக்கு எந்த பிரச்சனையும் வராது" என்று ஆறுதல் செய்தான்..

"ஆனால் அவளோ அவனை சும்மா விடாதே அகி எனக்கு அவனை நினைச்சாலே வெறுப்பா இருக்கு..கண்ணை மூடினால் அவன் மட்டும் தான் என் மனதில் வரான்..அவனை நான் மறக்கணும் என் வாழ்க்கையிலேயே நான் மறக்கனும்" என அவள் கூறினாள்.. ஆனால் அது நடவாத காரியம் என அவளுக்கு அப்போது விளங்கவில்லை..

அதை கேட்டவன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தி, "இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு கல்யாணம் ஆக போகுது இன்னும் ரோட்ல போற ஏதோ ஒன்னு நம்மளை கடிக்க வந்ததுன்னு சொல்லி அதையே நினைச்சு அழுதுட்டு இருக்கிறது முட்டாள்தனம் அந்த நாயை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நீ கவலைப்படாதே.." என்றான் அவன்..

என்ன தான் ஆறுதல் செய்தாலும் கொலைவெறி அவன் மனதில் நிறைந்து இருந்தது..

அதன் தாக்கம் எப்படி சாணக்கியன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது என அவனுடைய மூளை வேலை செய்ய துவங்கியது..

அதன் படி தினமும் இரவு அவன் பப்புக்கு செல்வது அவனுக்கு தெரிந்தது..அதனால் அவனும் போலீஸ் உடையில் அல்லாமல் சாதாரணமாக உடை அணிந்து பப்புக்கு செல்வது போல சென்றான்..முதன் முறையாக நேருக்கு நேராக சாணக்கியனை சந்திக்க தயார் ஆகி விட்டான் அகிலன்... அவன் மனதில் சாணக்கியன் மீது பல வண்ணங்கள் இருந்தாலும் அதில் மிகப் பெரியதாக அமிர்தா விஷயம் ஊடுருவ அமிர்தா விடயம் அவனின் தனிப்பட்ட விசயம் என்பதால் தனியாக காண சென்றான்..

அங்கு விக்கி மற்றும் அவனுடைய ஆண், பெண் நண்பர்களுடன் சில் செய்து கொண்டு இருக்க அதை எல்லாம் பார்த்து கொண்டே உள்ளே நுழைந்த அகிலன் நேராக சாணக்கியன் அருகே சென்றான்..

அவனோ அவனை கண்டு கொள்ளாமல் ஒரு பெண்ணின் இடையில் என்ன ருசி இருக்கும் என்பதை தன் கைகளால் உணர்ந்து கொண்டு இருக்க ஒரு சின்ன பியரை கையில் வைத்து கொண்டே, "சாணக்கியன்" என்றான் அகிலன்..

அவனோ திரும்பி அகிலனை முதன் முறையாக பார்த்து, "என்ன?" என்பது போல திமிராக பார்க்க, "எனக்கு உன்கிட்ட பேசணும்" என்றான்..

அவனோ பதிலுக்கு, "நான்தான் முக்கியமான வேலையில இருக்கேன் இல்ல நீ யாருன்னு தெரியாது அப்படின்னு பேசணும் எது பேசினாலும் இங்கேயே பேசு.. என்கிட்ட பேசுற அளவுக்கு உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறிவிட்டு தன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் அந்த பெண் அவளை மேலும் இழுத்து பிடித்து அவளுடைய இதழ்களில் இதழொற்ற அதை பார்த்த அகிலனுக்கு ஓங்கி முகத்திலேயே குத்த வேண்டும் என இருந்தது..

ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, "உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் என்ன தைரியம் இருந்தா அமிர்தா மேல கைய வைத்திருப்ப? கண்ட கண்ட பொண்ணுங்களை தொட்ட கையோட உன்னுடைய வீரத்தை எனக்கு மட்டும் உரிமையான பொண்ணு கிட்ட நீ காட்டியிருக்க இனி அவ மேல உன்னுடைய கை பட்டுச்சு உன் மரியாதை கெட்டுடும்.. அப்படி உனக்கு அரிப்பு தேவைப்பட்டுச்சுன்னா உன் மேல இப்படி சாய்ஞ்சு இருக்கிற பொண்ணுங்களா பார்த்து தேடி போ... அவளை தொட்ட கையில் உடைக்கலாம் வந்தேன் ஆனால் ஒரு எச்சரிக்கை குடுத்துட்டு போவோம் என்று நினைக்கிறேன்...

நீ பெரிய இவனா இருக்கலாம் ஆனால் எனக்கு சொந்தமான எதையும் யாரும் தொடுவது எனக்கு பிடிக்காது.. இப்ப கூட உன்னை இழுத்து நாலு அறை விடுவேன்.. எனக்கு பயம் கிடையாது ஆனால் உன்னை மாதிரி ஒருத்தனை அடிச்சு அதுல வர பெயர் எனக்கு வேண்டாம் அதனால தான் எச்சரிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. இனி மறுபடியும் அவளுக்கு தொல்லை கொடுத்த அவ்வளவுதான் வீடு தேடி வந்து சாவடிச்சிடுவேன் சொல்லிட்டேன்.. இதை பேசிட்டு போலாம்னு தான் தனியா கூப்பிட்டேன் ஆனால் உனக்கு தான் எல்லாரும் முன்னாடியும் பேசணும் பேசிட்டேன் நான் வரேன்" என்று அத்தனை பேரும் முன்னிலையிலும் மார்பில் கையை கட்டி அவன் சொன்னது போல கூறினான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top