எனதுயிரே 18
.
அத்தியாயம் : 18
அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து பார்க்க இதழ் ஒற்றி கொண்டிருந்த அவனோ இவன் என்ன பேசுகிறான் என்பதை பார்த்து அப்படியே திகைத்து நிற்க அதை பார்த்தவன், "இனி அமிர்தா கிட்ட உன் வாலை ஆட்டுன அவ்வளவு தான்" என அகிலன் கூறினான்..
அதை கேட்டதும் அவனுக்கு புரிந்து போனது கூடவே அவளின் பெயரை கேட்டதும் அவனின் ஈகோ தலைக்கு ஏறியது..அதை விட அவனுடைய பேச்சு எல்லை மீறி இருப்பதாகவும் தன்னை அனைவர் முன்னும் அவமானம் செய்ததாகவும் அவன் நினைத்தான் இதை அப்படியே விட அவனுக்கு மனமில்லை..
தன்மேல் படர்ந்திருந்த அவளை பிரித்து எரிந்து தன் வாயில் சிகரெட்டை எடுத்து வைத்தவன் அதை எடுத்து பற்ற வைத்து, "மறுபடியும் சொல்லு அவ பேர் என்ன அமிர்தா அப்படித்தானே?" என்க
அதைக் கேட்ட அகிலனுக்கு ஆத்திரம் வந்தது... "ஓ நீதான் அவளுடைய காதலனா?" என நக்கலாக கேட்டான் சாணக்கியன்..
"காதலன் மட்டுமல்ல கல்யாணம் பண்ணிக்க போறவன் அவ மேல உரிமை உள்ளவன்.. எனக்கு உரிமையான எதையும் நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. என்ன தைரியம் இருந்தா அவ மேல கைய வைத்திருப்ப?" என பொங்கி வந்த ஆத்திரத்தை அவனுடைய சட்டையை பிடித்து கேட்டான் அகிலன்.. ஏனெனில் சாணக்கியனின் நக்கல் அவனை வெகுவாக சீண்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது அதனால் கை வைத்து விட்டான்..
அதற்குள் விக்கி ஓடி வந்து, "யார் மேல கைய வச்ச இவன் யாரு தெரியுமா மினிஸ்டர் நெடுஞ்செழியனோட மகன்" என கூறவும், "டேய் யாரா இருந்தா எனக்கென்ன என் வீட்டு பொண்ணு மேல கைய வச்சா சும்மா வேடிக்கை பார்க்க சொல்றியா? நான் யாரு தெரியுமா? டிசிபி அகிலன் அறிவழகன்" என்று கூறினான்..
அதை கேட்டதும் விக்கி திகைக்க தன்னுடைய சட்டை அகிலன் பிடித்திருந்தாலும் வாயில் பற்ற வைத்த சிகரெட் இழுத்து அதன் புகையை அவன் முகத்திலேயே மிகத் திமிராக விட்ட சாணக்கியனின் மூளை சாணக்கியத்தனமாக சிந்திக்க துவங்கியது.. அதிலும் அகிலன் வார்த்தைக்கு வார்த்தை அவள் என்னவள் என்று கூறுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஏதோ ஒன்று சாணக்கியனை தடுத்தது என்று தான் கூற வேண்டும்..
"காதலியை கல்யாணம் பண்ணிக்க போறவன் நீ அவ்வளவு தானே இன்னும் கல்யாணம் பண்ணலையே? தாலி கட்டினால் மட்டும்தான் உனக்கு உரிமை ஆன பொண்ணு.. அதுவரைக்கும் யார் வேணாலும் சீண்டலாம் தப்பு இல்ல.. அவள் என்கிட்ட மோதினா நான் திருப்பி பதிலுக்கு திருப்பி அடிச்சேன்.. அதோட முடிஞ்சு போச்சு மறுபடியும் என்னை சீண்டினால் அதை அவளும் தாங்க மாட்டாள் நீயும் தாங்க மாட்ட என்னை பத்தி உனக்கு தெரியாது" என சாணக்கியன் கூறினான்..
அதை கேட்ட அகிலன் அடிகுரலில், "உன்னை பத்தி என்னை விட யாருக்கும் தெரியாது.. நீங்க என்ன எல்லாம் செய்யரீங்க என்ன எல்லாம் செய்ய போறீங்க எல்லாம் எனக்கு தெரியும்.. உங்களை கையும் களவுமா பிடிக்கத்தான் நான் காத்துகிட்டு இருக்கேன்.. கொஞ்சம் பழைய கணக்கு அதிகமா இருக்கு அதை தீர்க்காமல் நாம் விடமாட்டேன்.. இது உனக்கும் பொருந்தும் உன்னோட அப்பனுக்கும் பொருந்தும்" என்று அகிலன் நிமிர்வாக கூறினான்..
அதைக் கேட்ட அவன் தன் தந்தையை கூறியதும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. அதனால் அவன் கூலாக சிகரெட்டை இழுத்து விட்டு கொண்டே, "அவளை ஒரு மிரட்டு மிரட்டி விடலாம் தான் நினைச்சேன் ஆனால் நீ ரொம்ப ஓவரா பொங்கறியே? பெரிய போலீசா இருப்பியோ? உனக்கு ஏதாவது பண்ணியே ஆகணுமே? உன்னோட கல்யாணத்துக்கு ஒரு கிப்ட் வேண்டாமா? இனி நீ என்ன பண்ணாலும் அவளை நான் விடமாட்டேன்? உன்னால முடிஞ்சதை பண்ணு போ? இதுதான் உன்னோட கல்யாணத்துக்கு நான் கொடுக்க போறேன் கிப்ட்டா இருக்கும்" என கூற அதற்குள் விக்கி, "நான் வேணா அங்கிளுக்கு கால் பண்ணவா?" என இவர்கள் பேசுவதை கேட்டு விக்கி கூற,
அகிலன் கொதித்து எழுந்து,"மப்டில வந்து இருக்கேன் இல்ல நடக்கிறதே வேற உன்னால முடிஞ்சதா செய்டா பார்ப்போம்" என கூற,
"விக்கி உனக்கு என்ன பைத்தியமா இந்த சின்ன பிரச்சனைக்கு எல்லாம் அப்பாவை கூப்பிட்டு இருக்க நானே இவனையும் பார்த்துக்கிறேன்.. இவனோட காதலியையும் பாத்துக்குறேன் மிஸ்டர் அகிலன் உன்னோட காதலி எங்கேயும் போக மாட்டா என்கூட தான் இருப்பா. நான் அவள் கூட இனியும் மோதிக்கிட்டே இருப்பேன் அவகிட்ட.. உன்னால முடிஞ்சதை செய் என்னை மிரட்டி பார்த்தா என்ன நடக்கும்னு வேடிக்கை மட்டும் பாரு.. நான் சாதாரணமா சொன்னாலே கேட்க மாட்டேன்.. நீ என்னை மிரட்டி காரியம் சாதிக்கணும்னு நினைக்கிறேன் அது நடக்குமா என்ன? கண்டிப்பா நடக்காது உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ.." என திமிராக கூற,
அதை கேட்ட அகிலன், "உன்கிட்ட ஒரு பண்பை எதிர்பார்த்து வந்தேன் அது உன்கிட்ட இல்லைன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. தெரிஞ்சும் உன்னை தேடி நேர்ல பேச வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்.. உன்னோட குடும்பத்தோட ஈன புத்தி தானே உன்கிட்ட இருக்கும் அதை தெரிந்தும் உன்னை தேடி வந்தது என்னோட தப்பு தான் முடிஞ்சா அவளை தொட்டுப்பார் அவள் மட்டுமல்ல அவளுடைய நிழலை தொடக்கூட உன்னை நான் விடமாட்டேன்" என்று கிட்டத்தட்ட அவர்கள் இருவரும் பேச்சாலேயே மோதிக்கொண்டனர்...
அதற்கு அவனோ, "அவள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன் நான்தான் வேணும்ன்னு" என்க
அதற்குள் அகிலன் அடிகுரலில் சாணக்கியனை சீண்டும் விதமாக ஒரு விஷயம் சொன்னான்.. அதைக் கேட்டதும் சாணக்கியனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.. என்ன டா சொன்ன என கூறி அவ்வளவு நேரம் சட்டையை பிடிக்காதவன் இப்பொழுது அகிலனின் முகத்தில் ஓங்கி குத்து விட பாய்ந்தான்..
அங்கிருந்து ஆட்கள் எல்லாம் அகிலனை வெளியே அனுப்ப, சாணக்கியன் தலைக்கு ஏறி இருந்த ஆத்திரத்தில், "போடா வெண்ணை வந்துட்டான்.. காதலி மண்ணாங்கட்டின்னு.. இனியும் தொடு வேண்டாம் உன்னால முடிஞ்சதை பார்.. இனி அவள் உனக்கு கிடைக்க மாட்டா உன்னால முடிஞ்சதை செய் நீ இப்போ என்கிட்ட பேசுனது ஆகவே அவள் ஜென்மத்துக்கும் என்கிட்ட தான் இருப்பா" என கத்தினான் சாணக்கியன்..
இருவரின் ஈகோவும் மிக அருமையாக தூண்டப்பட்டு இருந்தது.. சும்மாவே ஆடும் சாணக்கியன் காலில் சலங்கை கட்டி விட்டால் ஆடாமல் இருப்பானா அடுத்த ஒரு வாரத்துக்குள் அவள் யார் அவள் குடும்பம் என்ன அவள் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் இந்த அகிலன் யார் என்பது வரை விசாரித்து வைத்து விட்டான்..
அதன் பிறகு என்ன ஒரு பக்கம் அகிலனோடு அவளுக்கு திருமனை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் வேறொரு பெரிய விசயம் நடக்க அந்த ஆத்திரத்தில் சாணக்கியன் தான் நினைத்தது நடக்க வேண்டும் என கருதி இந்த பக்கம் அவளையே தூக்கி அவளையே முழுதாக அடைந்து விட்டான்..
எப்படி தன்னை கடத்தினான் என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது சடன் பிரேக் போல அவளின் நினைவுகளை தடை செய்யும் விதமாக அந்த அறை கதவு திறக்க அங்கு சாணக்கியன் நிற்கவும் கனவுலகில் இருந்து நினைவு உலகம் வந்து அடைந்தாள் அம்ரிதா..
அவனோ அவளை ஆழமாக பார்த்து, "என்ன கனவு கண்டிட்டு இருக்கியா? எப்படி இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கியா?" என்று நக்கலாக கேட்டுக் கொண்டே கதவை அடைத்தான்.. அவளோ இறுகிய முகத்தோடு, "நான் ஏன் உன்னை முதன் முதலில் பார்த்தேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்" என்று எங்கோ வெறித்துக் கொண்டு அவள் கூற
"அதை நீ என்கிட்ட மோதுவதற்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.. இப்ப யோசிச்சு பிரயோஜனம் இல்ல சரி கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன் தயாரா இரு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்" என்று மேலும் அவள் இருதயத்தில் இடியை இறக்கிவிட்டு அவன் சென்று விட்டான்..
தனக்கு ஒரு மனம் இருக்கிறது என்பதை அவன் மறந்து விட்டானா என்ன? இப்படி தன்னை கொலையாக கொல்கிறான் என அவள் யோசித்தாள்..
