Share:
Notifications
Clear all

எனதுயிரே 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் : 19

       கிட்டத்தட்ட சாணக்கியன் சொன்னது போல ஒரு வாரம் ஆகி விட்டது..இந்த ஒரு வாரமாக அவன் அவள் அருகே கூட வரவில்லை.. ஆனாலும் அவளை அந்த அறையை விட்டு எங்கேயும் விடவில்லை என்று தான் கூற வேண்டும்..

அவனுக்கு தேவையானது எல்லாம் சமயத்துக்கு வந்து விடும் ஆனால் அவளுக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே அவளுக்கு தெரியாது.. இதோ அவள் அவனருகே மணமகளாக அமர்ந்து இருக்கிறாள் அது மட்டும் தான் அவளுக்கு தெரியும்...

      சாணக்கியன் வெட்ஸ் அமிர்த வர்ஷினி  என்ற மிக பெரிய பேனர் சென்னை மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டு இருந்தது... ஆனால் அந்த திருமணத்தில் அவனின் பெற்றோர்களும் இல்லை அவளின் உறவுகளும் இல்லை அகிலனைத் தவிர..

கட்சியில் இந்த சிறு பையனை அரசியல் அறிவு இல்லாத ஒருவனை உள்ளாட்சி துறை அமைச்சர் ஆக்கியதும் மட்டும் இல்லாமல் இப்போது என் மகளை திருமணம் செய்து கொள்வான் என பார்த்தால் யாரோ ஒருத்தியை அவன் திருமணம் செய்து கொள்ள கார்மேகத்தை தலைமை தாங்க வைத்து விட்டானே என்று இருந்தது.. அவருக்கு மிகவும் எரிச்சல் படர்ந்த முகத்தில் அவர் அமர்ந்து இருந்தார்..

ஆம் நேற்று இரவு இங்கு நடந்த சம்பவத்தை எல்லாம் நெடுஞ்செழியன் காதுக்கு கார்மேகம் போட்டு வைக்க அவரோ தன் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்தானா என நம்ப முடியாமல் இருக்கிறார்..அதே நேரம் தன் மகன் மீது அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்தாலும் தன் நண்பரிடம், "எப்படியாவது என்னை வெளியே எடுக்கிற வழியை பாரு அதுக்கு பிறகு நான் எல்லாத்தையும் சரி பண்ணிகிறேன்..நான் வெளியே வந்து இவனுங்க கொட்டத்தை அடக்குறேன்" என நண்பனுக்கு சமாதான வார்த்தைகள் கூறி விட்டு அப்படியே தன் மகனை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டார் நெடுஞ்செழியன்..

இந்த பக்கம் கார்மேகம் தீவிரமாக தன் நண்பனை வெளியே கொண்டு வரும் வேலையை செய்ய துவங்கி விட்டார்..

தாமரை தன் மகனுக்கு திருமணம் என விக்கி மூலம் தெரிந்தும் அதிர்ந்து போய் மகன் தன்னை விட்டு மகன் விலகி இருப்பது ஏன் என புரியாமல் தவித்து நெடுஞ்செழியன் ஜெயிலுக்கு சென்றபின் தன்னை வந்து பார்க்காத மகனை தேடி தாமரையின் பெற்ற மனம் சென்றது..

ஆம் அவன் தன்னை ஏன் ஒதுக்குகிறான் என அவருக்கு தெரியவில்லை.. கடந்த ஒரு சில மாதங்களாக அவன் அவரோடு பேசுவதில்லை எறிந்து விழுந்து கொண்டிருந்தான்...வீட்டிற்கு வருவதில்லை.. போனில் அழைத்தால் போனை எடுப்பதில்லை அவரிடம் பேசுவதில்லை தந்தையிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தான் அவர் ஜெயிலுக்கு சென்று விட்டார் என்ற பிறகு கூட தன்னை வந்து அவன் பார்க்கவில்லையே என்று அவருக்கு இருந்தது மிகுந்த வருத்தத்தில் இருந்தார் தாமரை..

தனக்கு திருமணம் என தன்னிடம் கூட கூறாதது ஏன்? பாசம் கொடுத்து வளர்த்த பிள்ளை சாணக்கியன் ஆனால் தன்னை எதற்காக அவன் விலக்கி வைத்திருக்கிறான் என அவருக்கு சுத்தமாக புரியவில்லை..

அம்மா அம்மா என அவர் பின்னால் சுற்றி கொண்டிருந்த சாணக்கியன் திடீரென அவரிடம் விலக காரணம் என்ன என புரியாமல் மகன் அழைக்கவில்லை என்றாலும் அந்த திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக வந்திருந்தார் அவர்..

அந்த திருமண காவலுக்கு எப்போதும் போல காவலுக்கு அகிலனை அமைச்சர் சாணக்கியன் நிறுத்தி இருந்தான்..இது அவனின் வேலை தான்..

ஆம் வேண்டும் என்று தான் நிறுத்தி இருந்தான்..அவனுடைய காதலிக்கு சாணக்கியன் தாலி கட்டுவதை அகிலன் காண வேண்டும் என்றே அவன் இதை செய்து இருந்தான்...அவளோ குனிந்த தலை நிமிராமல் அவள் அமர்ந்து இருந்தாள் அமிர்தா..

இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் அவளுடைய அப்பா, மற்றும் அண்ணன் பலியாவர்கள் அதற்கு அவள் காரணம் ஆக கூடும் எனக் கருதி அமைதியாக இருக்க அதற்கும் அவன் அவளை விடவில்லை என்று தான் கூற வேண்டும்...

ஆனால் இந்த திருமணம் மேற்கண்ட காரணங்கள் இல்லை என்றாலும் நடக்கும் அகிலனை பழி வாங்க அகலனின் அந்த சண்டைக்கு பிறகு தான் இவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி சாணக்கியனுக்கு வந்தது அகிலன் எங்கு அடித்தால் எங்கு சாணக்கியன் விழுவான் என தெரிந்து அடித்திருந்தான் அதேபோல விழுந்து விட்டான் அதில் அகிலன் வெற்றி பெற்று விட்டான் ஆனால் அவனை வெற்றி பெற விடக்கூடாது என மீண்டும் எழுந்து அகிலனை அடிக்க தயாராகி விட்டான் சாணக்கியன் இதுதான் உண்மை ஆனால் பாவம் அமிர்தாவுக்கு இது எதுவும் தெரியாது அமிர்தா அவனிடம் மோதியதால் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்னவோ அகிலனோடு அவனுக்கு பிரச்சனை அதற்கு என்னை பழி வாங்குகிறான் என்றுதான் பாவம் அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் அவள் அறியாத பக்கங்களும் உண்டு என்பதை அவளிடம் யாருமே கூறவில்லை...

"என்ன வருத்தமா உன் காதலனை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு வருத்தமா?" என அவள் அருகே அமர்ந்து கொண்டு சாணக்கியன் ஊசியில்லாமலேயே அவளை குத்த தொடங்கினார்...

அவளோ அமைதியாக இருக்க, "அவனை இப்போ நீ சிரிச்ச முகத்தோட திரும்பி பார்க்கிற" என அவன் கூறினான்..

அதை கேட்ட அவள் அவனை பக்கவாட்டாக பார்த்து, "என்னை ஏன் இப்படி தொல்லை பண்ற அது தான் நான் அமைதியா இருக்கேன் தானே ஏன் உனக்கு அது பிடிக்கலையா?" என்க

"சத்தியமா பிடிக்கல எனக்கு நிமிர்ந்து நீ எல்லாரையும் பார்த்து சிரிச்ச முகத்தோடு இருக்கணும்.. உனக்கு பிடிக்கலைனாலும் நான் சொல்றதெல்லாம் செய்யற நிலைமையில் தான் நீ இருக்க..உன்னையும், அவனையும் ஆட்டி வைக்கிற இடத்தில் நான் இருக்கேன்..அதனால நீ செஞ்சு தான் ஆகணும்" என அவன் சிரித்த முகத்தோடு மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கூறினான்..

அதை கேட்ட அவள் அவனை சலிப்பாக பார்க்க அவன், "இப்போ செய்றயா உன்னோட அண்ணன் கழுத்தில் வேறொரு பக்கம் ஓட்டை போடவா?" என கேட்டான்..

அதைக் கேட்டதும் அன்று தன் அண்ணன் கழுத்துக்குள் கத்தியை இறக்கியது ஞாபகத்துக்கு வர வேண்டாம் என்பது போல தலையாட்ட  அவனோ சிரித்தபடி, "நான் சொல்றதெல்லாம் செஞ்சிடு இல்ல நான் ரொம்ப மோசமானவன் ஏதாவது செஞ்சுருவேன்" என அவள் காதில் கூறினான்..

அதை கேட்டு நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு எதிரே அகிலன் நின்று கொண்டிருந்தான்.. அவனை பார்த்ததும் அவளுக்கு அளவில்லா வருத்தம் வந்தது..அதை கண்ட அவளுக்கு அழுகை தான் வந்தது..அவனின் வருத்தத்தை அவளால் பார்க்க முடியவில்லை..இப்படி அவனுக்கு எதிரே அவனை ஏமாற்றுகிறோமோ என எண்ணினாள் அவள்..

அவளுக்கு அவனை பார்த்து பேச வேண்டும் என இருந்தது..ஆனால் அவள் பேச முடியாமல் தவித்தாள்..அவனோ இறுகிய முகத்தில் இப்போது கூட கெட்டு போகல ஒரு நொடி எழுந்து என்கிட்ட வா எல்லாத்தையும் நான் மாத்திடறேன் என மனதில் கூறினான்..அவளுக்கு அது புரியாமல் இல்லை..ஆனாலும் பேச முடியாமல் நின்றாள்...

அதை பார்த்து நக்கல் புன்னகையோடு கெத்தாக சாணக்கியன் அமர்ந்து இருந்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top