Share:
Notifications
Clear all

எனதுயிரே 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.
அத்தியாயம் :20

அவளின் தவிப்பை பார்த்து, "போதும் போதும் காதல் பொங்கி வழியுது..போதும் நிறுத்து என்ன பார்த்தாலும் ஒரு ஆணியும் இரண்டு பேராலயும் புடுங்க முடியாது" என்றான் நக்கலாக பார்க்கச் சொன்னதே அவன் தான் இப்பொழுது பார்த்ததையும் குறை சொல்கிறான் என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை...

அவனுக்கு மற்றவர்களை பற்றி துளியும் கவலை இல்லை அதன் வெளிப்பாடே இது.. என்ன ரகம் இவன் யாரை பற்றியும் அவர்களின் மனதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் இருக்கும் இவன் என்ன மாதிரியான பிறவி என அருகில் இருக்கும் அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை...

அவள் மனம் வேகமாக ஓடிச் சென்று தன் எதிரே இருக்கும் அகிலனிடம் விஷயத்தை எல்லாம் கூறி ஆறுதல் தேட வேண்டும் என தோன்றியது.. ஆனால் அவள் கால்கள் கயிறே இல்லாமல் கட்டிப்போட்டது போல வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி இருப்பது போல அவள் அமைதியாக இருந்தாள்..

அகிலன் மட்டும் என்ன அவள் அருகே செல்ல பல வழிகளில் போராடினான்.. ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்று தான் கூற வேண்டும்..

தன் தந்தையிடம் எப்படியாவது அமிர்தாவை காப்பாற்றி விடுவேன் என்று கூறியிருந்தான்.. ஆனால் அதை செய்ய முடியாத ஆத்திரத்திலும் தன்முன்னே அவளுக்கு திருமணம் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவித்து வந்தான் அகிலன்..

அவனின் தவிப்பை அழகாக ரசித்தான் சாணக்கியன்.. அதில் இன்பமும் கண்டான் என்று தான் கூற வேண்டும்..

அவன் அமைச்சர் ஆகி விட்டதால் அவனால் அவனை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்க, அவன் சொன்னது போல அவளை அவன் உரிமையாக்க போகிறான் என்ற கொலை காண்டில் அகிலன் இருந்தாலும் ஒரு முறையாவது அவளை சந்தித்து அவளிடம் பேசி விட முடியாதா என இருக்கும் போது தான் தாமரை அந்த திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார்..

அவர் முகம் மிகவும் வாடி போய் இருந்தது.. ஏன் என்று தெரியாமல் மகன் தன்னை ஒதுக்கி வைக்கிறான் என தவித்து கொண்டு அவர் நுழையும் போது அங்கு எதிரே அகிலன் நின்று கொண்டு இருக்க அவனை பார்த்த அவரின் கால்கள் தள்ளாடியது..அவரின் முகமெல்லாம் ஏனோ வியர்க்க துவங்கியது..

அவனோ அவரை கண்டதும் இறுகிய முகத்தில் நிற்க அவரோ அவனை எதிர்பார்க்காதது போல நின்றான்...அவர் உள்ளே செல்ல அங்கு சாணக்கியன் செய்யும் வேலைக்கு அவரை பார்த்து அவருக்கு வழி சொல்வது போல அருகே வந்தவன், "மகன் கல்யாணத்துக்கு வாழ்த்த வந்தீங்களா? அடுத்தவன் குடியை கெடுக்காம உங்களால எல்லாம் இருக்கவே முடியாது அப்படித்தானே..உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணாமல் இருக்க முடியாது போல.." என எரிச்சலாக கூறினான்.. சாணக்கியனை பேச முடியாததை தாமரையை பார்த்து அகிலன் பேசினான்...

அவரோ திகைத்து, "என்ன சொல்ற?"

"என்னை பழிவாங்க நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவளை இவன் கல்யாணம் பண்ணிட்டு இருக்கான்..இதை எல்லாம் கேட்க மாட்டீங்களா நீங்கதான் பெரிய பணக்காரங்களாச்சே.. உங்ககிட்ட தான் எல்லா பதவியும் இருக்காச்சே.. உங்களுக்கெல்லாம் தகுந்த மாதிரி பொண்ணை பார்க்க மாட்டீங்களா? இப்படித்தான் அடுத்தவனுக்கு நிச்சயம் பண்ணின பொண்ணை கல்யாணம் பண்ணிப்பானா உங்க பையன்?" என கேட்டான்..

அதை கேட்டு அவரோ, "எனக்கு இவனுக்கு கல்யாணம் ஆக போதுனு இன்னைக்கு தான் தெரியும் நானே என்ன பண்றதுன்னு தெரியாம தான் வந்து இருக்கேன் எனக்கு எதுவும் தெரியாது" என கூற

"இதை என்னை நம்ப சொல்றீங்களா? உங்களுக்கு தான் முதுகுல குத்துறது எப்படின்னு தெரியுமே உங்களுக்கு எல்லாம் சுயநலம் தானே முக்கியம் சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்க தானே உங்களுக்கு தப்பாமல் பிறந்து இருக்கான் உங்க மகன்.. அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கணும்னு எப்படித்தான் எண்ணம் வருதோ.. அது எப்படி நீங்களும் அப்படித்தானே இருக்கீங்க? அப்போ உங்க பையனும் அப்படித்தானே இருப்பான் வித்தியாசம் இருக்காதே?" என கடுப்பாக பேசினான்..

அதை கேட்டதும் அவருடைய கண்கள் கலங்க அதை மேடையில் இருந்த சாணக்கியன் கவனித்தானோ என்னவோ அவனுக்கு அவனின் அம்மா வந்தது பிடிக்கவில்லை என்றாலும் விக்கியை அனுப்பி அவரை அழைத்து வர சொன்னான்..

விக்கி தான் தாமரை தடுமாறி நிற்பதை பார்த்து, "வாங்க மா" என கூற, "என்ன விக்கி இங்க நடக்குது இவன் கல்யாணம் பண்றேன்னு சொல்லி இருக்கான் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?" என்று விக்கியிடம் கேட்க,

"அம்மா நானும் இதைப் பற்றி அவன் கிட்ட கேட்டேன் இது என்னுடைய பர்சனல் அதுல யாரும் தலையிடக்கூடாதுன்னு சொல்லிட்டான்" என்றான் விக்கி..

"அதுக்குன்னு அம்மா கிட்ட கூட பேச கூடாதுன்னு இருக்கா என்ன? "என அவர் இயலாமையுடன் அகிலன் பேசியதெல்லாம் வைத்து அவர் கேட்டார்..

அதற்கு விக்கி, "அம்மா எனக்கு எதுவும் தெரியாது.. அவன் பார்க்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கான்.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.. அவன் என்ன நினைக்கிறானோ அதைத்தான் செய்யணும்னு இருக்கான் இந்த கல்யாணத்திற்கு கூட அந்த பொண்ணுக்கு விருப்பமில்லை ஆனால் பழிவாங்கத்தான் கல்யாணம் பண்றான்" என்று கூற அதை கேட்டதும் அகிலன் சொன்னது சரிதான் என்பதை புரிந்து கொண்ட தாமரை, "எதுக்காக இப்படி கல்யாணம் பண்ணிக்கணும்?" என்றார்..

"அது அவனுடைய இஷ்டம்னு சொல்றான்" என்று விக்கி தாமரையின் செவிகளில் மென்மையாக கூற, "அவன் அப்பா ஜெயில் இருக்கிறார் என்று தெரிந்தும் கூட இப்படி பண்ணி இருக்கான்.. இவன் என்ன அனாதையா யாரும் இல்லாமல் கல்யாணம் பண்ணிக்க? இங்கே இருக்க என்கிட்டயும் சொல்லல அவங்க அப்பா கிட்டையும் சொல்லல அப்படின்னு திமிர் இவனுக்கு" என்று தாமரை அடக்கப்பட்ட குரலில் கேட்டார்..

அதற்குள் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோட விக்கி அவருடைய கையைப் பிடித்து, "அம்மா" எனக் கூறவும் தாமரை சுற்றும் முற்றும் பார்க்க பல பெரிய ஆட்கள் எல்லாம் வந்திருந்தார்கள் அதனால் அவர் அமைதியாக இருந்தார்..

அவனோ இங்கு நடக்கும் எதை பற்றி கவலை கொள்ளாமல் ஐயர் வேதங்கள் ஓதி தாலி எடுத்து கொடுக்க, அதை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான் சாணக்கியன்.. தாலி கட்டி முடிக்கும் போது அவள் கண்ணில் கண்ணீர் வழிய அவனோ அதை கவனித்து அவளின் கண்ணீரை துடைப்பது போல துடைத்து சபையினர் முன்னே அவளின் நெற்றியில் ஆறுதல் கூறுவது போல இதழ்களை பதித்தான் சாணக்கியன்.. அது வெற்றி குறியோ என்னவோ?

இதை தடுக்க முயன்றும் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அகிலன்...அவள் ஒரு வார்த்தை எதிர்த்து பேசி இருந்தால் ஏதாவது செய்து இருப்பான் ஆனால் எதுவுமே பேசாமல் இருக்கும் போது இவனெப்படி எதிர்க்க முடியும்... அதுவும் அவள் பார்வையாலேயே அவனிடம் எல்லாம் உன்னால் தான் எனக்கு இப்படி எல்லாம் நடக்குது என கூறுவது போல அவனுக்கு இருக்க அகிலனால் எதையுமே செய்ய முடியாமல் திகைத்து நின்றான்.. அதற்கு காரணமும் உண்டு அவன் சாணக்கியனிடம் பேசிப் பார்க்காமல் இல்லை பேசி அதில் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்துதான் இங்கு சிலை போல நின்று கொண்டிருக்கிறான்..

ஆம் சற்று முன் தன் ஈகோவை விட்டு சாணக்கியனை சந்திக்க அவன் சென்றான்..

அவனோ அங்கு தயாராகி கொண்டு இருக்க அவன் உள்ளே செல்லவும் அவனை கண்ட சாணக்கியன் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு அவனை பார்த்து நக்கலாக, "என்ன உன்னோட கல்யாணம் எப்போ? கல்யாண பொண்ணு கல்யாண பையனும் ஒரே இடத்தில் இருக்க கல்யாண பொண்ணுக்கு வேறொருத்தங்கூட கல்யாணம் எப்படி இருக்கு" என நக்கலாக கேட்டான்..

அதை கேட்ட அகிலன் கொதித்து எழுந்து, "இதோ பார் உனக்கும் எனக்கும் நிறைய பிரச்சனை இருக்கு அதுக்கு இடையில அவளை கொண்டு வராத"

"அப்படித்தான் கொண்டு வருவேன்.. ஏன்னா நான் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கேன்.. உண்மையில் அவள் நினைச்சுட்டு இருக்கா அவள் என்கிட்ட மோதினதுக்காக இந்த கல்யாணம் அப்படின்னு கண்டிப்பா இல்ல நீ என்னோட ஈகோவை டச் பண்ணிட்ட அதுக்கு தான் இந்த முடிவு என்னோட முடிவு சரியா இருக்கலாம் தப்பா இருக்கலாம் ஆனால் எல்லாம் என்னை சார்ந்ததாகவே இருக்கணும் அது தான் எனக்கு வேணும்" என்க

"தயவு செஞ்சு அவளை என்கிட்ட திருப்பி கொடுத்துவிடு.. இவளை நீ இதுக்குள்ள இழுக்காத.."

"சான்சே இல்ல"

"நான் அவளை கூப்பிட போறேன்"

"அவள் நீயா கூப்பிட்டா கூட வர மாட்டா உனக்கு தெரியாதா? அவரோட அப்பா அவ அண்ணன் என் கஸ்டடியில இருக்காங்க ஒருவேளை அவள் ஏதாவது செஞ்சான்னு வை அவங்களை பொட்டுன்னு போட்டு விடுவேன் சொல்லித்தானே கூட்டிட்டு வந்து இருக்கேன்.. அதை மீறி அவள் செஞ்சுடுவாளா என்ன?" என்று அகிலன் முன்னாள் ஆடாமல் அசையாமல் கூற அவனும், "வேணாம் சாணக்கியன் விட்டுடு.. நீ எதுக்காக இதெல்லாம் செய்கிறேன் என்று எனக்கு தெரியும் உனக்கும் எனக்கும் உண்டான பிரச்சனைக்கு இடையில் இவங்களை தயவு செஞ்சு இழுக்காதே" என கூறினான்..

"ஏன்டா இவ்வளவு பெரிய போலீசு உன் முன்னாடியே நடந்த விஷயத்தை சொல்றேன் உன்னால எதுவும் எனக்கு எதிரா செய்ய முடியல இனியும் எதுவும் செய்ய முடியாது அப்படி இருக்கும்போது வேடிக்கை மட்டும் பாரு.. உன்னால எதுவும் என்னை மீறி செய்ய முடியாது செய்யவும் விடமாட்டேன்" என கூறினான்..

"ஒரு வேளை அவள் என்னை தேடி வந்தா  என்ன பண்ணுவ?" என கேட்டான் அகிலன்

"அது வரும் போது பார்த்துக்கலாம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை" என தன் கையை தூக்கி எட்டி முறித்து சாணக்கியன் நக்கலாக கூற, "அவளை என்னை தேடி வர வைப்பேன் அவள் எப்படி இருந்தாலும் நான் அவளை கண்டிப்பா ஏத்துப்பேன்" என கூறினான் அகிலன்..

"அதுக்கு நீ மறுபடியும் பொறக்கணும் இப்போ போய் காவல் காக்கிற வேலையை மட்டும் பாரு புரியுதா?" என கூறி பேச்சு முடிந்தது என்பது போல கதவை திறந்து விட அவனும் வெளியே செல்ல வேண்டியது ஆகி விட்டது..

அதை மனதுக்குள் வைத்துவிட்டு தான் ஆத்திரத்தில் தாமரையிடம் பேசினான்.. அவன் ஆத்திரத்தில் பேசினாலும் ஏனோ தாமரையும் அவனிடம் அடக்கி வாசிக்கிறார் அதற்கு பின்னால் என்ன மர்மம் இருக்கிறது..

அறிவழகனுக்கு நெடுஞ்செழியன் மீது கோபம் நெடுஞ்செழியனுக்கு அறிவழகன் மீது கோபம்.. இருவருக்கும் இடையே ஏதோ ஒரு பகை இருக்கிறது அதற்காக விஷயம் தெரிந்த அகிலன் நெடுஞ்செழியனை கைது செய்தான்.. அகிலனை பழிவாங்க சாணக்கியன் அகிலனின் காதலியை கடத்தி திருமணம் செய்தான்...இதற்கெல்லாம் காரணம் என்ன? அப்படி என்ன தான் இவர்கள் வாழ்க்கைக்குள் நடந்தது???

இது வெறும் அரசியல் கட்சி பிரச்சனை மட்டும் அல்ல போலவே??? அப்படி இவர்களுக்கு இடையே என்ன நடந்து இருக்கும்???? அப்படி கடந்த காலத்தில் என்ன நடந்து இருக்கும்??



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top