எனதுயிரே 21
.
அத்தியாயம் : 21
சில வருடங்களுக்கு முன் இன்றைய தாமரை நெடுஞ்செழியன் அன்றைய தாமரை அறிவழகனாக இருந்த சமயம் அது..ஆம் அப்படி தான் அவர் இருந்தார்..
வீட்டில் உள்ள பாத்திரத்தை எல்லாம் கீழே போட்டு ஆக்ரோஷத்துடன் உடைத்துக் கொண்டிருந்தார் தாமரை...அவருடைய விழிகளில் கோபம் நிறைந்து இருந்தது...வீட்டில் அரிசி, பருப்பு என எதுவும் இல்லை... எலும்பும் தோலுமாக ஒரு குழந்தை பசியால் அழுது கொண்டு இருந்தான்..அவனுடைய அழுகை அவருக்கு ஆத்திரத்தை கொடுத்தது..அவனின் தந்தை மீதுள்ள அவரின் கோபத்தை பாத்திரத்தை உடைத்து காட்டிக்கொண்டு இருந்தான்..அதை பார்த்து மேலும் அழுதான் குழந்தை அகிலன்..
அந்த குழந்தையின் தந்தை சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழையும் போது குழந்தை அழுது கொண்டிருக்க, அவரோ அந்த குழந்தையின் சத்தம் ஒவ்வொரு முறை அதிகமாகும் பொழுதும் பாத்திரத்தை தூக்கி கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.. அதைக் கண்டு பதறிய அறிவழகன் ஓடிச்சென்று குழந்தையை எடுத்து, "உனக்கு என்ன பைத்தியமா குழந்தை மேல பாத்திரம் பட்டா என்ன ஆகிறது?" என்று அவர் கேட்டார்..
அதைக் கேட்ட தாமரை, ஏன் யா கேட்க மாட்ட? வேலை வெட்டிக்கு போய் நாலு காசு கொண்டு வந்து குடும்பத்தை பார்க்க துப்பு இல்லை நாட்டை ஒழுங்கு பண்றேன்னு போயிடுற இங்கே என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா குழந்தை பசியில் அழுகையை நிறுத்தவே மாட்டேங்குறான் நான் என்ன பண்ணட்டும் உங்களுக்கு என்ன தெரியும் வீட்ல நடக்கிற நிலைமை? நீங்க அங்கே போராட்டம் எங்கே போராட்டம் என்று போயிடுறீங்க வீட்ல அரிசி இல்ல, பருப்பு இல்ல.. குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைதானா இதுல வேற இந்த குழந்தை இப்ப பாரு அழுதுகிட்டே இருக்கு.. இப்படிப்பட்ட வாழ்க்கை தான் பிடிச்சிருந்துச்சுன்னா என்னை ஏன் கல்யாணம் பண்ண? என்னோட வாழ்க்கையும் கெடுத்துட்ட நீ" என்று தாமரை கத்தினார்...
"குழந்தை அப்படின்னா அழ தான் செய்யும் பசியாத்த வேண்டியது தானே.. ஊரு நல்லா இருந்தா நாம நல்லா இருப்போம் ஏன் என் மேல உள்ள கோபத்தை குழந்தை மேல காட்டுற" என்க
"பசியாத்த ஏதாவது இருந்தா தானே? நீ என்ன அப்படியே சம்பாதிச்சு கொடுத்துட்டியா?" என தாமரை கத்தினார்.. அதைக் கேட்டு அறிவழகன் அதிர, "என்னையா பாக்குற வெள்ள வேட்டி வெள்ளை சட்டை போட்டுட்டு ஊருக்கு நியாயத்தை தேடி தரேன்னு கொடியை பிடிச்சிட்டு போனா பத்தாது வீட்டில் பொண்டாட்டி குழந்தை சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்க்கணும் வேலைக்கு போக துப்பில்லை.. கொடியை பிடிச்சிட்டு ஊருக்கு பஞ்சாயத்து பண்ண போயிட்டியோ? என்கிட்ட ஏதாவது பேசுற வேலை வெச்சுக்கிட்டு அவ்வளவு தான் சொல்லிட்டேன் இதோ உன்னோட மகன் இருக்கான் அவனுக்கு நீயே ஏதாவது வாங்கி குடு..இல்லை ஏதாவது ஆனால் என்கிட்ட கேட்காத குடும்பத்தை பார்க்க துப்பில்லை வந்துட்டான்" என்று ஆத்திரமாக கத்தினார்.. அதை கேட்டு அறிவழகனுக்கு கோபம் வந்தாலும் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றார்..
ஆம் அவருக்கு அறிவழகனை சுத்தமாக பிடிக்காது.. அவருடைய 17ஆவது வயதிலேயே பார்க்க தாமரை பெரிய பெண் போல இருக்க அந்த வயதின் தாக்கம் ஒருவனோடு காதல் வயபட்டு விட்டார்..
அதற்கு தாமரையின் பெற்றோர் அவரைவிட வயதில் குறைந்தது 20 வயதுக்கு மேல் உள்ள அறிவழகனை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.. அவருக்கும் தாமரையின் வயது ஆரம்பத்தில் தெரியவில்லை பிறகுதான் தாமரை தன்னை காட்டிலும் வயது குறைவான பெண் என நினைக்கும் போது தாமரை கர்ப்பிணி ஆகி விட்டார்..ஆனால் தாமரைக்கு அவரை பிடிக்கவில்லை என்றாலும் அவருக்கு தாமரையை பிடிக்கும்..
ஆனால் அவருக்கு அறிவழகனையும் சரி அவர்களுக்கு பிறந்த அறிவழகனை உரித்து வைத்திருக்கும் அகிலனையும் சரி சுத்தமாக பிடிக்காது...
தான் பெற்ற பிள்ளையை யாருக்காவது பிடிக்காதா என கேட்டால் ஒரு வேளை அவருக்கு பிடித்திருக்க கூடும் அறிவழகன் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டு மனைவியின் தேவைகள் அறிந்து குடும்பத்தை நடத்தி இருந்தால் அவருக்கு பிடித்து இருக்க கூடும்..
ஆனால் அவரோ பொது வாழ்க்கை என சுற்றிக் கொண்டிருக்க ஏற்கனவே பிடிக்காத பந்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தாமரைக்கு அந்த வாழ்க்கையே வெறுமையாக இருந்தது அஞ்சுக்கும், பத்துக்கும் ஓடி ஓடி வாழ்க்கை நடத்துவது போது போல அவருக்கு இருந்தது..அந்த வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை..அவருக்கு பிடித்த வாழ்க்கையை அறிவழகனால் கொடுக்க முடியவில்லை..அவருக்கு பொது வாழ்க்கை தான் முக்கியமாக இருந்தது..
அப்படி இருக்க, அந்த வாழ்க்கையே வெறுத்து போனது..தாமரையின் மனது புரிந்தாலும் அறிவழகன் அதற்கு ஒரு தீர்வு காணாமல் இருந்தார்...அவருக்கு பொது வாழ்க்கை தான் பிரதானமாக இருந்தது..
அப்படி இருக்கும் போது தான் அவரின் முதல் காதலனான நெடுஞ்செழியனை கண்டார்..ஆம் நெடுஞ்செழியனின் காதலி தான் தாமரை..நெடுஞ்செழியன் முகத்தை கண்டதும் அவருக்கு பழைய காதல் துளிர் விட்டது..அவருக்கும் தாமரையின் கோலம் உலுக்கியது என்று தான் கூற வேண்டும்..
ஆம் தண்ணீர் லாரி முன் தண்ணீர் பிடித்து இடுப்பில் இருந்து இறங்க மாட்டேன் என அடம்பிடிக்கும் அகிலனை இறக்கி விடவும் முடியாமல் தண்ணீர் குடத்தை தூக்கவும் முடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தார் தாமரை.. அதை பார்த்த நெடுஞ்செழியன் நேராக தாமரை முன் போய் நின்றார்..
தாமரை நெடுஞ்செழியனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் ஏனெனில் அவர் காதலிக்கும் பொழுது ஏதோ ஒரு கேசில் அவரை ஜெயிலுக்கு சென்று விட்டார்.. அந்த இடைப்பட்ட தருணத்தில் தான் தாமரைக்கு அறிவழகனோடு திருமணம் முடிந்தது..
அப்படி இருக்க இப்படி ஒரு சூழலில் தன் காதலியை பார்த்ததும் அவர், "என்ன தாமரை என்ன கோலமிது?" என கேட்க
"என்னை என்ன பண்ண சொல்றீங்க? உங்களை நான் மறுபடியும் பார்ப்பேனு நான் நினைச்சு கூட பார்க்கல.. உங்களை மறுபடியும் பார்த்திட மாட்டேன் என்று தவிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள என் வாழ்க்கை வேறொரு கையில போயிடுச்சு.. நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன் இந்த கல்யாணத்தை நடத்த விடாமல் இருக்க நான் ரொம்ப முயற்சி செய்தேன்.. ஆனால் எதுவுமே நடக்கல என்னோட அப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்னு சொல்லி வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டார்.. அவரும் வீட்டுக்காக எதுவும் செய்யறது இல்லை கையில் ஒரு குழந்தை அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல்பட்டு இருக்கேன்.. என்னோட வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு இருக்கு..
மனசுல உங்களை வச்சுக்கிட்டு வேறொரு வாழ்க்கையில அல்லல்பட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்" என்று அவர் கூறவும் அதைக் கேட்ட நெடுஞ்செழியன் ரொம்ப தவித்து போனார்..
"என்னை மன்னிச்சிடு நான் எதிர்பார்க்காத சமயத்துல என்னை கைது பண்ணிட்டு போயிட்டாங்க இப்ப நான் ஒரு கட்சியில் இணைந்து இருக்கேன்.. இப்போ என்னோட வாழ்க்கை நல்லா இருக்கு.. நாம காதலிக்கும் போது எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சோமோ அந்த மாதிரி என்னுடைய வாழ்க்கை மாறிட்டு இருக்கு நான் உன்னை தேடாத இடமில்லை" என்று அவர் கூறினார்...
