Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 7

கோயம்புத்தூர் விமான நிலையம்

காலை பத்து மணி ஆகியும் பிசனஸ் லாஞ்ச் விளக்குகளால் மின்னிக் கொண்டிருக்க ஒரு கப் ஸ்டார்ப்க்ஸ் காபியை ஆழ்ந்து சுவைத்துக் கொண்டிருந்தான் துருவன்.

லண்டன் செல்லும் விமானத்துக்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்க அந்த ஒரு மணி நேரத்தை கடந்தால் போதும் இனி இந்தியா வாசத்தை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவன் நுகர போவது இல்லை என்று முடிவு செய்த தருணம்.

இப்போது தான் அவனுக்கு இனிமையாக இனிக்க துவங்கிய காலைநேரம்.மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் எனக்கு செய்ததற்கு நான் திருப்பி செய்தேன் அவ்வளவு தான் என எண்ணி தன்னை தானே தேற்றிக் கொள்ள ஒரு சிலர் அவனையே பார்ப்பது போன்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் கண்டு கொள்ளாமல் காபியை சுவைத்துக் கொண்டிருந்தான்...

காலை முதலே அவனது போனை அணைத்து வைத்திருந்தான். யாரும் இனி என்னை தொடர்பு கொள்ள கூடாது யாருமே எனக்கு வேண்டாம் யாரும் எனக்கு தேவையில்லை என அணைத்து வைக்க அவன் அருகே அமர்ந்த ஒருவர் அவரது போனை ஆன் செய்யவும், "மாமா எங்க இருக்கீங்க??" என்ற சத்தம் அவனது செவிப்பறையை கிழித்துக் கொண்டு வர அவனுக்கு குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது.

இது அவளது சத்தம் தானே என எண்ண மீண்டும் அவனுக்கு எதிரே இருந்தவரின் எண்ணில் இருந்து, "எங்க மாமா போய்ட்டீங்க?" என்ற குரல் வர அது அவளே தான்.

அந்த நபர் வீடியோவில் வரும் போட்டோவை பார்த்து அவனையும் பார்த்து, "சார் இது நீங்க தானே?" என்று காட்ட அவனோ அவசரமாக அதை பார்க்க ஆம் அது அவனே தான்…

நேற்று இவர்களின் திருமணத்தில் எடுத்த புகைப்படம் அதற்கு பின்னால் அவளது குரல்… எழுப்புவதோ காவ்யா அந்த வீடியோவில், "மாமா எங்கே மாமா போனீங்க? நான் தூங்கி எழுறதுக்குள்ள உங்களை காணோமே மாமா சீக்கிரம் வந்திடுங்க மாமா" என்று கூற அதை கேட்டவனுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை மிளகாய் அரைத்தது போல இருக்க அதிலும் அவளது குரல் அவனை மேலும் எரிச்சலாக்கி இருக்க அவனுக்கு இப்போது விளங்கியது அனைவரும் எதற்காக அவனை பார்த்தார்கள் என்று...

அதிலும் அவனுக்கு எதிரே இருந்த நபரோ "நீங்களா சார் உங்க மனைவியா சார் இவங்க அவங்களை விட்டுட்டு வந்துட்டீங்களா சார்??" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, "உங்க வேலையை பாருங்க சார்" என்று கூறியவன் இத்தனை நேரமாக ஆன் செய்யாத அவனது போனை ஆன் செய்ய பல நூறு குறுஞ்செய்திகள் போன் கால்கள் என்று இருக்க அவள் மீண்டும் மீண்டும் அவளது வேலையை காட்டுகிறாள் என்றே அவனுக்கு தோன்றியது வேண்டும் என்றே இதை செய்து என்னை அவமானப்படுத்தி இருக்கிறாள் என்றே அவன் நினைத்தான்.

அவள் மட்டும் இந்த செயலை செய்ததுக்கு கையில் கிடைத்தால் கொன்றே போட்டு இருப்பான். இவளை போய் நான் வெகுளி என்று எண்ணி விட்டேனே எப்படி அசிங்கப்படுத்தி இருக்கிறாள் பார் என எண்ணியவனுக்கு நேற்றைய இரவும் அந்த நேரம் பார்த்து ஞாபகத்துக்கு வந்து போனது.

ஆம் நேற்றைய இரவு அவளிடம் அவ்வாறு கூறியதும் அவள் திருதிருவென முழிக்க அவள் மனதில் மாமாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க அதன் பிறகு நடக்கும் எதையும் அவள் யோசித்து கூட பார்த்தது இல்லை திடீரென அவன் இப்படி சொல்லவும் அதிர்ந்த காவ்யா,

"முதல் இரவுன்னா என்ன மாமா?" என்க அவனுக்கு அடித்த போதை கூட இறங்க அவளோ பாவமாக அவனை பார்க்க,

இவனுக்கு தான் பைத்தியம் பிடித்து விடும் போல இருக்க மீண்டும் ஒரு பாட்டில் சரக்கை எடுத்து தன் வாயில் ஊற்றியவன், "உனக்கு முதல் இரவுனா என்னன்னு தெரியாதா டி?" என்க

"தெரியாது மாமா நான் அந்த ராத்திரியில் தூங்கினது இல்லை மாமா" என்றாள்.

"அப்புறம் எதுக்கு டி ஊர் பூரா சொல்லிட்டு வந்த??" என்று வினவினான்.

"அதுவா நாம வெளியே போறோம்ல நாலு பேர்கிட்ட சொல்ல வேணாமா மாமா என் அம்மா வேற இன்னிக்கு உங்களுக்கு முதல் இரவு போய் குளிச்சு புடவை மாத்துன்னு சொன்னாங்க.அதுக்குள்ள தான் நீங்க கிளம்பிட்டீங்க மாமா அதான் நான் அப்படியே ஓடி வந்துட்டேன் மாமா" என்றாள்.

இவனுக்கு தான் தலை சுற்றியது. இவன் மீது ஆசை என்கிறாள் ஆனால் தாம்பத்தியம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறாள். என்னை கூமுட்டை ஆக்குகிறாளா பாவம் சிறு பெண் என இவளை எண்ண கூடாது இவள் தில்லாலங்கடி என எண்ணியவன் மேலும் தன் வாயில் சரக்கை ஊற்றியவன், "முதல் இரவுன்னா என்னன்னு தானே தெரியாதுன்னு சொன்ன. இதெல்லாம் வாய்ல சொல்லி தரக்கூடாது செயல்ல காட்டி இதோ இப்போ சொல்லி தரேன்" என்றவன் ஆழ்ந்து பார்த்து அவள் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க தன் மாமனின் பார்வை மாறியதை எண்ணியவளுக்கு ஏனோ கால்கள் பின்னோக்கி செல்ல அவனும் இன்று ஒரு முடிவோடு தான் இருந்தான்.

"மாமா அப்படி பார்க்காதீங்க மாமா எதுக்கு மாமா இப்படி நடந்து வரீங்க?"

"பார்த்தா என்ன?? நீ தான் என்னை ஆசைப்பட்டு கட்டினவளாச்சே நீ என்கிட்ட ஒரு விஷயத்தை கேட்டா செய்யாமல் இருக்க முடியுமா?" என்று கூறிக் கொண்டே அவள் அருகே வந்தவன் நெருங்கி நிற்க மூச்சடைத்தது.

அவன் நெருங்கியதும் அவளது கை கால்கள், "மாமா" என்று வார்த்தையே அவளுக்கு வர மறுக்க அவனோ அவளது இடுப்பில் கை வைத்தான். ஜிவ்வென்ற உணர்வு அவளுள்ளே அவளது தலை முதல் கால் வரை ஊடுருவியது.

அவளது மென் வயிற்றில் ஏதோ பட்டாம் பூச்சி ஊர்வது போல அவளுக்கு தோன்ற அவளோ வேகமாக கண்களை மூடிக் கொள்ள இடுப்பை தொட்ட அவனது விரல்கள் மெல்ல அவளது இடை நோக்கி ஊடுருவி செல்ல...

இங்கே சிறு பெண் அவனது சிறு செயலையே தாங்க முடியாமல் தவித்தவளுக்கு மூளை மட்டும் தன் மாமன் தன்னை நெருங்குகிறான் என தோன்ற இனியும் அவன் அருகே இருந்தால் மேற்கொண்டு ஏதாவது செய்வான் என மூளை அவளுக்கு அறிவுறுத்த அவள் மாமனை தடுக்கும் எண்ணமும் அந்த நேரம் அவளுக்கு இல்லை.

"மாமா வேண்டாம் மாமா" என்று அவள் முனக

கண்களை மூடிக் கொண்டு அவள் கூறுவதை கேட்டவனோ அவனது பிடியில் அழுத்தம் கூட்டி மிக அருகில் இருந்து கொண்டு அவள் முகத்தை ஆராய பளிங்கு போல முகம் அந்த சிறு வயதிலேயே துறுதுறுவென விழிகளை கொண்டவள் மிக லட்சணம் பொருந்தியவள் இன்று நல்ல அழகியாக தான் வளர்ந்து நிற்கிறாள்.

அவளது அந்த ட்ரேட் மார்க் மேக்கப் மட்டும் போடவில்லை என்றால் அவள் மிக அழகானவள் தான் அவளது தேகம் மிக மினுமினுப்பானது போல… அவளது வழவழப்பான இடையை அவன் தொட்டதும் அவன் உணர அவன் விரல்கள் அவன் பேச்சை கேட்காமல் அவளது அங்க வளைவுகளை தேடி முன்னேறிக் கொண்டே சென்றது.

அவனது மூளையோ அவனிடம் 20 வயது சிறு பெண் தான் வெகுளி தான் என்றாலும் இந்த அளவுக்கு அவள் இறங்கி இருக்கிறாளே என மேற்கொண்டு தொடருவோமா என எண்ணியவனுக்கு இது போல அறிவுரை கூற அவனோ மேற்கொண்டு இவளுக்கு பாடம் புகட்டியே தீர வேண்டும் என எண்ணி மேற்கொண்டு முன்னேறினான்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top