Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 6

அவனது சட்டென்ற செயலால் அவள் கண்களில் நீர் கோர்க்க, "விடுங்க மாமா வலிக்குது" என்றாள்.

அவளது மெல்லிய முனகல் கூட அவனுக்கு எரிச்சலை கொடுக்க, "என்ன டி கல்யாணம் பண்ணினா ஓவரா உரிமை எடுத்துகிற கண்டவங்கள எல்லாம் நான் ஏன் டி பார்க்கணும்.
அவங்க பஸ் போயிடும்னா உன் அப்பனை கொண்டு போய் விட சொல்லு. இதோ பார் 2 மணி நேரம் தான் நான் இங்கே இருக்க போறேன் அதுவரை உன் முகத்தை நான் பார்க்க கூடாது புரியுதா? சும்மா அவன் வந்து இருக்கான் அந்த கிழவி செத்துடுச்சுன்னு வந்த உனக்கு பாடை கட்டிடுவேன் இனி இங்கே வராதே போடி" என்றான்.

ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் அவன் அழுத்த பூனையிடம் சிக்கிய கோழி போல தலையை மட்டும் அவள் அசைக்க என்ன நினைத்தானோ, "சீ போடி" என்று கூறினான்.

கழுத்தை அந்த பக்கம் இந்த பக்கமாக திருப்பியவளுக்கு கழுத்து நன்றாக வலிக்க அவன் விட்டதும் பெரிய மூச்சுகளை எடுத்து விட்டவளோ, "என்ன மாமா இப்படி வேற பிடிச்சு அமுக்கிட்டீங்க போட்டு இருந்த ஆரம் பாருங்க வளைஞ்சு போச்சு.வரலனா வரலன்னு சொல்லுங்க அதுக்கு போய் கழுத்தை அமுக்கிட்டீங்க மாமா" என்றாள்.

அவனோ, இவளை என்ன தான் செய்வது என்று முறைத்து பார்த்து ஒரு அடி எடுத்து வைக்க அதற்குள் தலைதெறிக்க ஓடி விட்டாள் காவ்யா. இவள் என்ன லூஸா இல்லை என்னை பைத்தியம் ஆக்குகிறாளா என எண்ணியவனுக்கு
மாலை வரை தான் அங்கு தாக்கு பிடிக்க முடிந்தது அதற்கு மேல் சுத்தமாக முடியவில்லை.

இந்த கூட்டமும் இந்த பேச்சு சத்தங்களும் இடையே காவ்யாவின் சிரிப்பு சத்தமும் எல்லாம் கலந்துக்கட்டி அடிக்க அதிலும் கீதா காவ்யா அவர்களின் தம்பி மணிமாறன் அவன் தான் இடையிடையே வந்து அவனிடம் உரையாடிச் சென்றான்.

எதையும் கேட்க கூடிய நிலையில் துருவன் இல்லாத காரணத்தினால் தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கும் போது "எங்கே தம்பி கிளம்பறீங்க? நீங்க போக கூடாது தம்பி சடங்கு எல்லாம் இன்னும் இருக்கு" என்று அவர் கூற

அவனோ அவர் கூறியதற்கு பதில் கூட அளிக்காமல் கார் இருக்கும் பகுதிக்கு செல்ல அவரோ என்னவென்று வணங்காமுடியிடம் வினவ அவரோ, "அவனை விடு பா அவன் சில சமயம் அப்படி தான் அவனே சரியாகிடுவான் நடந்தது திடீர் கல்யாணம் இல்லையா அதுனால அவன் அப்படி இருக்கான்" என்றார்.

அவரும் அவரிடம் அன்று வந்து துருவன் பேசியதை எண்ணி பார்த்தவர், "சரி பா" என்று கூற அதற்குள் மணிமாறன் மூலம் விஷயத்தை அறிந்தவளோ, "மாமா" என்று தலைதெறிக்க ஓடி வர அதை கேட்டு மேலும் எரிச்சல் ஆனவன் காரை வேறு ஸ்டார்ட் செய்ய இவன் எங்கே செல்கிறான் என எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் அவனுக்கு ஒரு அவசர மீட்டிங் என்று வாயை அடைத்த தாமரை இவள் ஓடிச் செல்லவும் இவள் என்ன செய்ய போகிறாளோ என நித்யாவுடன் பின்னாலே ஓட அவர்களுடன் கற்பகமும் வந்தார்.

இவளோ, "மாமா காரை நிறுத்துங்க மாமா நானும் வரேன்" என்று கூறியவள் வேகமாக காரை திறந்துக் கொண்டு ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

இவனோ ஏகத்துக்கும் கடுப்பாக இவளை ஏதாவது செய்தே தீர வேண்டும் என எண்ணி அவளையும் அழைத்துக் கொண்டு காரை எடுத்தான்.

அந்த நேரம் பார்த்து அவள் வீட்டின் பக்கத்தில் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்களிடம் எல்லாம், "எங்க கண்ணு போறீங்க??" என்று அவர்கள் எதார்த்தமாக வினவ, "எங்க மாமா ஹோட்டல ரூம் போட்டு இருக்காங்க முதல் இராத்திரிக்கு" என்று அவள் கத்த

"அட பாருப்பா" என்று பெரியவர்கள் சிரிக்க இவளோ கையை காட்டிக் கொண்டே செல்ல அவனோ ஏகத்துக்கும் கடுப்பானவன் 'முதல் இரவா டி வேணும் உனக்கு வா டி காட்டுறேன்' என நினைத்தவன் பறக்க

அவளோ வண்டியில் ஏறியது முதல், "மாமா ஏன் மாமா என்கூட பேசவே மாட்டேங்கறீங்க? முன்ன எல்லாம் நல்லா பேசுவீங்களே எதுக்கு மாமா கடல் போல வீட்டை வைச்சிட்டு ஹோட்டல போய் இருக்கீங்க. எனக்கு நீங்கனா ரொம்ப பிடிக்கும் மாமா உங்களுக்கு என்னை பிடிக்குமா மாமா நான் உங்களை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு உங்களுக்கு கோபமா மாமா?

ஆனால் என்னால நீங்க இல்லாமல் இருக்க முடியாதே மாமா உங்களுக்கு இப்போ தானே மாமா என்னை பிடிக்கல. ஆனால் உங்களுக்கு எப்போவும் என்னை பிடிக்குமே மாமா அஞ்சலி குட்டின்னு கூப்பிட மாட்டீங்களா மாமா" என்று கூற அவன் அவளது கேள்வி எதற்கும் பதில் அளிக்கவில்லை.

அவளோ "என்ன மாமா நான் பேசிட்டே இருக்கேன் நீங்க எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க??" என்று அவள் வினவ அவனுக்கு அவளது கேள்விகள் எல்லாம் எரிச்சலை கிளப்பினாலும் ஒன்றும் பேசாமல் இருந்தவனுக்கு கடைசியாக அவள் இந்த திருமணத்தை நடத்தியது தான் சுத்தமாக பிடிக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டல் வர காரில் இருந்து இறங்க இவளோ இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு எல்லாம் சென்றது இல்லை என்றாலும் யாரும் அழைத்து போனது இல்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த இரண்டு வருடமாக தானே அவள் ஈரோட்டில் இருக்கிறாள் அவளை பொறுத்தவரை அவள் இன்னும் 20 வருடம் பின்னோக்கி தான் இருக்கிறாள். அதனால் அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியாது அப்படி நாம் நினைத்தால் எல்லாம் தெரிந்தது போல இருப்பாள். புரியாத புதிரோ ஆனால் அவள் குணத்துக்கு எதிரான அவளது கணவன் காரில் இருந்து இறங்க அவளும் காரில் இருந்து இறங்கியவள் வேகமாக அவனுடன் செல்ல அவன் சொன்னபடி ரூமில் எல்லாம் செட் செய்து இருக்க...

இவளோ அந்த அறையை பார்த்து வாயை பிளந்தவள், "மாமா சூப்பரா இருக்கு மாமா இந்த ரூம்… இங்கேயா நாம இருக்க போகிறோம்?" என்று கேட்டாள்.

அவனுக்கு இந்த நொடி சரக்கு அடித்தால் தான் அவனுக்கு ஏறி இருக்கும் போதை தெளியும் என எண்ணியவன், "இதோ பார் லொடலொடன்னு பேசிட்டு இருக்காத உன்னை பார்க்கவே எரிச்சலா இருக்கு" என்றான்

"என்ன மாமா?"

"என்ன டி என்ன மாமா உனக்கு என்னன்னு தெரியாதா???" என்றவன், "தேவையில்லாமல் என்னை பேச வைக்காதே" என்று அவன் அருகே இருந்த பாட்டிலை எடுக்க போக

"மாமா இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க நான் தான் எல்லாம் சொல்லிட்டேனே எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு அதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்" என்று கொஞ்சமே கொஞ்சம் சத்தமாக கூறினாள்.

அதை கேட்டுக் கொண்டே அவனுக்காக வருவிக்கப்பட்டு இருந்த பாட்டிலை எடுத்து அவசரம் அவசரமாக அருந்தியவன் அவளை பார்த்து கோபமாக, "உனக்கு பிடிச்சா மட்டும் போதுமா டி மத்தவங்க விருப்பம் எல்லாம் உனக்கு தேவையில்லையா ரொம்ப சுலபமா சொல்லிட்ட?? என்னோட தகுதி என்ன உன்னோட தகுதி என்ன டாமிட் பிடிச்சு இருக்காம் கல்யாணம் பண்ணினாளாம்??" என்று கேட்டான்.

"மாமா எனக்கு என்ன மாமா குறைச்சல்??"

இவள் தெரிந்து தான் பேசுகிறாளா இல்லை என்னை பைத்தியம் ஆக்குகிறாளா என கடுப்பானவன் கையில் இருந்த பாட்டிலை ஓங்கி சுவற்றில் எறிந்தான்.

அவளோ அதிர, "முதல்ல கண்ணாடில பார் உனக்கும் எனக்கும் என்ன தகுதின்னு என்ன டி நான் பார்த்துட்டே இருக்கேன் என்னமோ நடிச்சிட்டு இருக்க. இந்த அளவுக்கு பிளான் பண்ணி எல்லாம் பேசுற எல்லாமே பண்ணி இருக்க. அப்படினா உன்னை பாவம் ஊர் உலகம் தெரியாதவனு நான் நினைப்பேன்னு நினைச்சிட்டு இருக்கியா? இடியட் என்ன சொன்ன கார்ல இருந்து வரும் போது உங்களை பிடிக்கும் அதுனால இப்படி செய்துக்கிட்டேன் மாமா அப்படின்னு தானே?"

"ஆமாம் மாமா" என்று கம்மிய குரலில் அவனது கோபத்தை கண்டு அதிர்ந்து அவள் கூற

"அப்போ எனக்காக நீ என்ன வேணாலும் செய்வ அப்படி தானே?"

"ஆமாம் மாமா செய்வேன் உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் மாமா நீங்க வேணும்னு தான் மாமா நான் இந்த கல்யாணமே செய்துக்கிட்டேன்" என்று கூற

"அப்போ உன் பாட்டிக்காகனு சொன்ன??"

"அது வந்து சும்மா மாமா... பாட்டி எல்லாம் இப்போ சாகாது மாமா நீங்க வேணா பாருங்க நாளைக்கே எழுந்து உட்கார்ந்துக்கும்" என்று அப்போதும் அவள் இலகுவாக கூறினாள்.

அதை கேட்டவனோ, "ஓ அப்போ குடும்பமே சேர்ந்து தான் இதை செய்து இருக்கீங்க??"

அவளோ, "இல்லை மாமா நான் மட்டும் தான் அவங்களுக்கு இதில் எந்த விதமான சம்மந்தமும் கிடையாது" என்றாள்.

"ஹ்ம்ம் அப்போ நீ தான் எல்லாத்துக்கும் காரணம். எனக்கு வேண்டி எதுவும் செய்வ என்னை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்க பார்க்க கேனச்சி மாதிரி இருந்தாலும் பக்காவா காய் நகர்த்தி இருக்க" என்று மீண்டும் மீண்டும் புரியாத புதிர் பட ரகுவரன் போல துருவன் மீண்டும் கூற

"மாமா உங்களை எனக்கு பிடிக்கும் மாமா உங்களை எப்படி அடையறதுன்னு தெரியல நானா என் விருப்பத்தை சொல்ல முடியாது அதுனால தான் இப்படி செஞ்சிட்டேன்" என்றாள்.

"ஓ அப்போ எனக்காக என்ன வேணாலும் செய்வ தானே அப்போ இப்போ உன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நில்லு நீ சொல்றதை நான் நம்புறேன்" என்று கூற அவளோ அதிர அந்த அதிர்வு தான் அவனுக்கு வேண்டுமோ அதை கண்டு கொள்ளாமல் அவன் மார்பில் கையை கட்டி கொண்டு சிலை போல நின்றான்.

அவளோ அதை கேட்டு, "மாமா!" என்று அதிர்ந்து தயங்கவும் அவனோ, "என்னமோ எனக்காக பிளான் எல்லாம் பண்ணி எனக்காக என்னை கல்யாணம் பண்ணி இருக்க. எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் நீ ஊர் பூரா சொல்லிட்டு வந்த மாதிரி நமக்கு முதல் இரவு நடக்க போகுது அதுக்கு நான் தயாராக வேண்டாமா சோ நில்லு" என்று கூறினான்.

அவளோ ஐயோ இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே என்பது போல திருதிருவென முழிக்க அவனோ நில்லு என்பது போல நின்றுக் கொண்டான்.அவனுக்கு அதை கூறும் போது கூச்சம் எதுவுமில்லை ஆனால் அவளுக்கு இருக்கிறது அல்லவா அவளோ தயங்க அவனோ, "நீ ரொம்ப வெட்கப்படுற நான் வேணா ஹெல்ப் பண்ணவா?" என்று கூறி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் துருவன்.

தான் அணிந்து இருந்த புடவையை தன்னோடு சேர்த்து முறுக்கி பிடித்துக் கொண்டாள் காவ்யா.

மந்தாரம் தெளியும்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top