Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 5

மணமக்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வர கீதாவின் கேலி பார்வையை துருவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் காவ்யா அவளது தங்கை தான் இருந்தாலும் அவளுடன் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் இவளை போல ஒரு அரைவேக்காடை சொந்த தங்கை என்று கூறுவதையே அவள் அவமானமாக நினைத் தாள்.

அதே நேரம் துருவனை பார்க்கும் போது கேலி புன்னகை செய்யாமல் அவளால் இருக்க முடியவில்லை. ஏனெனில் துருவனின் நிலைக்கும் இவள் இருக்கும் நிலைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.

ஒரு காலத்தில் துருவன் மீது ஆசை கொண்டு அவனிடம் அவளுடைய விருப்பத்தை கூற அவனோ எடுத்த வாயில், "உறவுகளில் திருமணம் செய்ய விருப்பம் இல்லை கீது எனக்கு அதுவும் எனக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு அது படி தான் என் வாழ்க்கை அமையும் என் டேஸ்ட்டுக்கு நீ மேட்ச் ஆக மாட்ட" என்று கூறியது இதே துருவன் தான்.

அப்படி இருக்கும் போது இன்று என்ன ஆகியது என்று தான் அவள் ஏளனமாக சிரிக்க இங்கே இவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பாகியது.

அவனது கடுப்புகளை எல்லாம் தன்னருகே நிற்பவளின் தலையில் இறக்கியே ஆக வேண்டும் என்று எண்ணி அவன் காத்துக் கொண்டு இருக்க, ஒரு வழியாக திருமணம் எல்லாம் முடிந்து அவளது வீட்டுக்கு வந்து விட்டனர்.

திருமணத்துக்கு வராத உறவினர்களும் பிறகு சுப்பு எங்கேயாவது இறந்து விடுவாரோ என அவரை காண வரும் ஆட்கள் என வீட்டிலும் ஆட்கள் சூழ்ந்த மயமாக இருக்க…சாக போகிறேன் என கூறிக் கொண்டிருந்த சுப்புவோ பேர மகளுக்கு திருமணம் ஆனதும் வந்தவர்களை எல்லாம் பார்த்து தலை அசைத்து விட்டு டீவி சீரியலில் மூழ்கி விட்டார்.

இன்றைய எபிசோட் பார்க்கவில்லை என்றால் அவருக்கு தலை வெடித்து விடும் வேறு...அப்போது ஆக்ஸிஜன் மெஷின் எல்லாம் ஓரமாக வேறு கழற்றி வைத்து விட்டார். அதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க தாமரைக்கு தொண்டை வரை வந்தும் தன் மகனை எண்ணி வருந்தி தன் கணவர் மீதுள்ள பயத்தில் வாயை திறவாமல் இருந்தார்.

அவருக்கு காவ்யாவை பிடிக்கும். ஆனால் ரொம்ப வெகுளியாக இருக்கிறாளே என்ற வருத்தம் இவள் எப்படி தன் மகனுக்கு இணையாவாள் என்றும் நினைக்க மகனது குணத்துக்கு வேறு என்ன செய்ய இயலும் இதை தவிர என்றும் எண்ணி தன் மனதை தானே தேற்றிக் கொண்டு தன் மகனை காண சென்றார்.

துருவனோ அவனுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் அமர்ந்தவன் தன் தாயிடம் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

"இதோ பாருங்க எனக்கு இங்கே நடந்தது எதுவும் சுத்தமா பிடிக்கல சொல்லிட்டேன்" என்று கூறினான்.

அவருக்கும் தான் பிடிக்கவில்லை. ஆனால் மகனை போல வெளியே கூற முடியுமா முடியாதே அதனால், "தம்பி அது தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே காவ்யா நல்ல பொண்ணு பா கொஞ்சம் வெகுளி அதை சரி பண்ணிக்கலாம் பா" என்று ஆறுதல் கூறினார்.

"யாரு அந்த கிறுக்கியா அம்மா உங்களுக்கு எப்படி மா மனசு வருது இப்படி பேச என்னை கொண்டு எங்கே விட்டு இருக்கீங்க பாருங்க" என்று கூறினாலும் தன்னை தான் அவள் பைத்தியக்காரன் ஆக்கி இருக்கிறாள் என்ற உண்மையை தன் தாயிடம் கூற முடியாதே…

அதனால் துருவன் அமைதியாக இருந்தவன், "இதோ பாருங்க நான் உங்க விருப்பப்படி அவ கழுத்துல தாலி கட்டிட்டேன். இனி இதை சொல்லி அதை செய்ங்க இதை பண்ணுங்கன்னு வந்து நிற்காதீங்க அவ்ளோ தான் உங்க எல்லோருக்கும் மரியாதை… நான் இப்போவே போறேன் எனக்கு நாளைக்கு ஈவ்னிங் ஃபிளைட் என்னால இங்கே தங்க முடியாது ஹோட்டல்ல ரூம் போட்டு வைச்சு இருக்கேன்.

நான் இன்னிக்கு அங்கே தான் ஸ்டே பண்ண போறேன். இதுக்கு யாராவது ஏதாவது பேசிட்டு வந்தா என்னோட சுயரூபத்தை பார்க்க வேண்டி இருக்கும். நீங்களே இங்கே இருந்து அந்த கிழவிக்கு செய்ய வேண்டிய சடங்கை செய்ங்க என்னை எதிர் பார்க்காதீங்க" என்றான்.

அதை கேட்டு அவருக்கு என்ன சொல்லி இவனை சமாளிப்பது என்று தெரியவில்லை. இனியும் இவன் அடங்கி போவான் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லாமல் போக, "சரி பா நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்று கூறி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவர் நேராக வணங்காமுடியை சந்தித்து விஷயத்தை கூற அவரோ, "அவனோட இஷ்டம் போல செய்யட்டும் ஆனால் அந்த பொண்ணை மட்டும் தனியா விட்டுட்டு போக வேண்டாம்னு சொல்லு" என்று கூறினார்.

அதை கேட்டு இதை எப்படி தன் மகனிடம் கூறுவது என தவித்தார் தாமரை.

வேறு என்ன வணங்காமுடியால் கூற இயலும் திருமணம் ஆகிவிட்டது இனியாவது அவனுக்கு நல்ல புத்தி கொடு பா என்று தான் வேண்ட முடியும். அவர் இப்போது இருக்கும் நிலைக்கும் அவரது உடல்நிலைக்கும் அவர் அவனிடம் ஒரு வாக்குவாதத்துக்கு நிற்கும் நிலையில் அவர் இல்லை.

அவரை உயிருக்கு உயிராய் வளர்த்த அவருடைய அத்தை அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கவே போராடினார் அதுவே அவருக்கு முதன்மையாக பட்டது.

அதில் ஜெயித்தும் விட்டார் மகனுக்கு காவ்யாவை பிடிக்கவில்லை என்று நன்றாக தெரியும். அவன் அளவுக்கு அவள் இல்லை என்றும் தான் இருந்தாலும் பின்னாளில் எல்லாம் சரியாகும். மகனின் குணத்துக்கு இவள் தான் சரி என்று நினைத்தார்.

அங்கு அவனோ ஒரு கேனசிறுக்கியை கட்டிட்டேனே என்று மனம் ஆறாமல் வெதும்பிக் கொண்டிருந்தவனை மேலும் வெறுப்பேற்றும் விதமாக அவன் இருந்த அறையின் கதவை தட்டினாள் காவ்யா.

அந்த நேரம் பார்த்து அவனோ, "ஆமாம் இன்னிக்கு நைட் டூ டூமாரோ ஈவ்னிங் வரை ஒரு ரூம் எவ்ளோ ஆனாலும் பரவாயில்லை எனக்கு ஒரு ரூம் இப்போவே வேணும் அண்ட் ஐ நீட் சம் ஹாட் ட்ரிங்ஸ் டூ" என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே கதவை தட்டியவள் கதவு திறந்து இருக்க வேகமாக உள்ளே நுழைந்தவள் காதுக்கு அவன் போனில் பேசியது கேட்டு விட, "எதுக்கு மாமா ரூம் யாரு வராங்க??" என்று கேட்டாள்.

அவனோ அவளை முறைக்க, "எப்போ பார் இப்படியே பார்க்காதீங்க மாமா... மாமா உங்களை பார்க்க மாரிமுத்து அண்ணே,கௌரி அக்கா,பர்வதம் பாட்டி எல்லோரும் வந்து இருக்காங்க வாங்க மாமா" ஒன்றுமே நடவாதது போல கூறினாள்.

அவனோ அவளை மேலும் கீழுமாக பார்க்க இன்னும் அதே அலங்காரத்தோடு தான் அவள் நிற்க அதிலும் அவன் அணிவித்த பொன் மஞ்சள் தாலியும் கூட அவள் கழுத்தில் மின்னி அவனை வெறுப்பேற்றுவது போல தான் அவனுக்கு தோன்ற அவளோ மீண்டும், "வாங்க மாமா அவங்க காத்துட்டு இருக்காங்க அவங்க ஊருக்கு போற கடைசி பஸ்சும் போயிடும்" என்று அவன் அருகே வந்து அவனது கையை பிடிக்க போக வெடுக்கென்று அவளை தொட விடாமல் தடுத்தவன் அவளது கழுத்தை பிடித்து இறுக்கினான்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top