Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 32

அது அவனது தலையில் ஏறவில்லை இவர்கள் அனைவரும் என்னை என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என எண்ணி அவள் அருகே சென்றவன் வேகமாக அவள் சிகையை பிடித்தவனுக்கு சற்று முன் அவளை பற்றி நல்லதாக நினைத்தது எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை. மாறாக இவள் எப்படி இப்படியெல்லாம் கூறலாம் என்பதே அவனுக்கு பிரதானமாக இருக்க, "உங்களுக்கு எல்லாம் என்னை பார்த்தா எப்படி டி தெரியுது பொம்பளை பொறுக்கி மாதிரி தெரியுதா?? பொண்ணுங்க தோல் இல்லாமல் என்னால இருக்க முடியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?? ஒருத்தி விட்டுட்டு போனா அதை விடு. ஆனால் அவங்களை விட நீ தான் டி இப்போ என்னை அசிங்கப்படுத்துற.

ஆமாம் டி நான் தப்பு பண்ணிட்டு இருந்தேன் போதுமா என்னை திருத்தணும்ன்னு என் அப்பா என்னை இந்தியா போக சொன்னார். எப்போ நான் நிவேதாவை பார்த்தேனோ அப்போ இருந்து நான் எவளுங்க தோளையும் உரசல. அப்போ இருந்து நான் ஒருத்தியை தொட்டேன் அப்படின்னா அது நீ தான் டி கல்யாணம் கட்டின பிறகு உன்னை மட்டும் தான் டி நான் தொட்டு இருக்கேன் போதுமா? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது இரண்டு உடம்பு உரசுற சுகத்துக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்னு நினைப்பா?" என்று ஆக்ரோஷமாக கேட்டான்.

அதை கேட்டவள் மனதுக்குள் அவன் சொல்வது உண்மையா என்பது போல பார்க்க, "என்ன டி இன்னும் நம்பிக்கை வரலல?? அப்படி பார்க்கிற எனக்கு நானே தவறானவன் அரிதாரம் பூசி கொண்டேன் டி, என்னால அவளை மறக்க முடியல அதுனால வெளி உலகத்துக்கு நான் அப்படி இருந்தேன். ஏன்னா என்னால வேற பொண்ண நினைச்சு கூட பார்க்க முடியாது.

அதுமட்டுமல்ல எனக்கு யாரும் வேண்டாம்னு ஒதுங்கி இருந்தேன். அதுக்கும் விடாமல் உன்னை என் தலையில் கட்டி வைச்சிட்டாங்க அப்புறம் நடந்தது எல்லாம் தான் உனக்கு தெரியுமே. இப்போ என் மனசில் அவ இல்லை ஆனாலும் நான் எனக்கு பிடிச்ச மாதிரி வாழ பிறர் பார்வைக்கு தவறாக நடந்துக் கொண்டேன்.

ஆனால் அதைப்பத்தியே பேசி கொல்றீங்க மத்தவங்க சொல்றது எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால் நீயும் இப்போ தொடங்கிட்டியே நீ தான் கேட்டுட்டே இருக்கியே நீங்க என்னை மனைவியா ஏத்துக்கிட்டீங்களான்னு ஏத்துகிட்டேனான்னு தெரியல உனக்கு இப்படிப்பட்டவன் வேண்டாம்னு தோணினா கிளம்பு" என்று கூறியவன் அத்தோடு முடித்துக் கொண்டான்.

அவன் கூறுவதை கேட்டு மகிழ்ந்து, "மாமா நீங்க சொல்றது எல்லாம் உண்மையா மாமா எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா மாமா? நீங்க மத்த பொண்ணுங்க கூட இருக்கிற மாதிரி தான் என்கூட இருக்கீங்கன்னு நினைச்சுட்டேன் மாமா ஆனால் இப்போ தானே தெரியுது நீங்க நடிச்சிட்டுட்டு இருக்கீங்க ஏன் மாமா இப்படி செய்யறீங்க?" என்று கண்கள் மிளிர அவள் கேட்க அதற்கு அவன் எந்த பதிலும் கூறவில்லை.

அவளது கண்களை பார்த்தே உணர்வுகள் அடையும் கிளர்ச்சியை விட உள்ளத்தால் நிகழும் கிளர்ச்சியை அவள் எதிர் பார்க்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் அவளை தீர்க்கமாக பார்த்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

அதை கண்டதும் அவள் மாமாவுக்கு என்ன ஆச்சு பதிலே சொல்லாமல் போறாங்க என்று யோசிக்க அவனோ அதன் பிறகு அவள் புறம் திரும்பவே இல்லை. அது அவளுக்கு மீண்டும் வருத்தத்தை தான் கொடுத்தது.

'வந்தவங்களை ஒதுக்கினதுனால தான் இப்படி கண்டுக்காமல் இருக்காங்களா?' என எண்ணினாள். மேலும் அவன் அவளிடம் கோபத்தில் என்றாலும் தான் களங்கமற்றவன் என்று கூறியது எவ்வளவு பெரிய ஆறுதலை அவளுக்கு அளித்தது என்று கூறினால் மிகையாகாது. அவளது மனபாரம் எல்லாம் குறைந்தது என்று தான் கூற வேண்டும்.

அவனது பாராமுகம் தான் அவளை வெகுவாக வாட்டியது. அதிலும் முன்பெல்லாம் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பான்.
ஆனால் இப்பொழுது எல்லாம் அவளை கண்டு கொள்வதே இல்லை. அவள் அவனது வீட்டில் தானே இருக்கிறாள் பாதுகாப்பாக இருக்கிறாள் அது போதும் என்று நினைத்துவிட்டானோ என்னவோ ஆபீஸே கதி என இருந்து கொண்டான்.

அது இவள் அல்லாமல் பெரியவர்களையும் வாட்டியது என்றே கூறவேண்டும். தாமரை மீண்டும் மகனை அழைத்து, "தம்பி என்னால முடியல" என்று கூற அம்மா, "உங்க ஆக்டிங் இந்த முறை வேலை செய்யலமா மூணு நாளா நான் உங்களை... நீங்க என்ன செய்துட்டு இருக்கீங்கன்னு மானிட்டர் பண்ணிட்டேன். சோ நடிக்காதீங்க மா நான் கண்டு பிடிச்சுட்டேன் இதற்கு எல்லாம் காரணம் உங்க புருஷன் தான்னு எனக்கு தெரியும்" என்றான்.

உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்துக் கொண்ட தாமரை, "தம்பி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வராம மட்டும் இருக்காத தம்பி, அந்த பொண்ணு எப்பவும் சிரிச்சிட்டு கலகலன்னு இருக்கும். ஆனா இப்போ ரொம்ப வாடிப் போய் இருக்கா எதுவா இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு வாழ்க்கையே வாழ பாரு தம்பி" என்று கூற அவன் பதில் ஏதும் கூறவில்லை...

ஆம் ஒரு வாரமாக அவன் பாராமுகமாக இருக்க அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாமரையும் நித்யாவும் சேர்ந்து துருவனுக்கு அவளை பிடிக்கும் விதத்தில் மாற்றும் முயற்சியில் இறங்கி விட்டனர். ஆம் ஒரு பக்கம் அவளது நடை, உடை, அலங்காரம் என மாற்றினால் மறுபக்கம் அவளுக்கு ஆங்கிலம் முதல் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் பழக வேண்டும் என மாற்றிக் கொண்டிருக்க இதை எல்லாம் செய்தால் தான் உன் புருஷன் உன்னை தேடி வருவான் என்றும் கூறி விட பாவம் அந்த பெண் அதை எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள் தன் கணவன் தன்னிடம் வர வேண்டும் என கருதி இதை எல்லாம் பார்த்த வணங்காமுடி தன் மகனை அழைத்தார்.

அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவனை அழைத்த வணங்காமுடி , "தம்பி" என்க எப்பொழுதும் அந்த குரலில் வீழ்ந்துவிடும் துருவன் இன்றும் அந்த குரலில் விழுந்து போனான்.

"சொல்லுங்கப்பா"

"தம்பி நீ என் மேல கோபத்துல இருப்பேன்னு தெரியும் நீ என்னதான் கோபத்துல இருந்தாலும் என் பையன் நல்லா இருக்கணும்னு தான் நான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யறேன். ஆனால் அது எல்லாம் இப்படி ஆகிடுது நாம எந்த ஒரு விஷயத்தையும் இது நல்லபடியாக நடக்க கூடாதுன்னு சொல்லி ஆரம்பிக்க மாட்டோம். 16 வயசுல நீ தவறான பாதையில் இருக்கும் போது அதை மாத்த உன்னை நான் இந்தியாவுக்கு அனுப்பினேன்.

ஆனால் அதுக்கு கிடைச்ச பலன் நீ என்னை விட்டு விலகியதுதான். வேற எதுவுமே நடக்கல தயவுசெஞ்சு பழைய துருவனா என்கிட்ட வந்து விடு தம்பி போதும். அந்த பொண்ணு பாவம் யா" என்று உடைந்த குரலில் கூறினார்.

கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக தன்னை பற்றிய சுய அலசலில் இருந்த துருவனுக்கு தந்தையின் குரல் ஒருபக்கம் தாயின் பரிதவிப்பு மறுபக்கம் எல்லாம் கலந்து, "சரி அப்பா நான் வரேன் உங்க மகனா நான் வருவேன் கவலைப்படாதீங்க இனி ஒரு முறை நீங்க என்கிட்ட கெஞ்சாதீங்க பா தயவுசெய்து கெஞ்சாதீங்க" என்று மட்டும் கூறினான்.

மந்தாரம் தெளியும்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top