நெஞ்சமெல்லாம் 31
மந்தாரம் : 31
ஆம் அவனுக்கு என்ன வேண்டும் என அவனுக்கே புரியவில்லை. மேலும் அவள் கேட்ட கேள்வி நியாயம் தானே அவன் இவளை மனைவியாக ஏற்றுக் கொண்டுதான் அவளிடம் உறவாடினானா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
அதிலும் அவள் எப்படி அவனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்கலாம் என்பதே அவனுக்கு கோபத்தை கொடுத்தது. இவள் என்ன என்னை பெண்பித்தன் என்று நினைத்து விட்டாளோ என்று தான் அவன் எண்ணி அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான். ஆனால் அதற்கும் அவனது மனைவி விடவில்லை.
ஆம் அவள் அருகே தான் அவன் உறங்க வேண்டும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தன் பிரச்சனையை சற்றுநேரம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எண்ணி அவன் அமைதியாக இருக்க அவளோ உறங்கும் பொழுது அவன் மீது காலை போட்டு இவனது நிம்மதியை கெடுத்து நிம்மதியாக உறங்கி அவனை தொல்லை படுத்துவாள்.
அதாவது அவளே அவன் அருகில் வருவாள். அவன் ஏதாவது ஒரு நிமிடத்தில் அவள் அருகே தெரியாமல் சென்று விட்டால் அவனை வைத்து செய்து விடுவாள். இது தான் தற்போது அங்கு நடந்துக் கொண்டு இருக்கிறது.
அதுபோன்ற ஒரு இரவில் எப்பொழுதும் போல அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவனருகே வந்து படுத்தவள் எப்பொழுதும் போல அவன் மீது காலை தூக்கி போட அவனோ காலை மாற்றி விட்டு படுத்தான்.
மீண்டும் அவள் விடாமல் அவன் அருகே சென்று காலை தூக்கி போட அவள் புறமாக திரும்பியவன் அவள் முகத்தை பார்க்க கண் விழித்தாலும் குழந்தைதான் கண்மூடி உறங்கினாலும் குழந்தை போல உறங்கும் அவளது முகம் அவனுக்கு என்னவோ செய்தது திட்ட வேண்டும் என அவள் புறம் திரும்பி படுத்தவனுக்கு அவளது முகத்தை பார்த்ததும் அவ்வாறு திட்ட கூட முடியவில்லை.
இவள் குழந்தையா குமரியா என அறிய கூட அவனால் முடியவில்லை. ஆனால் அவன் மீது மிகுந்த ஆசையை அவள் வைத்து இருக்கிறாள் என்பதையும் அவனால் உணரமுடியவில்லை. எதுக்காக இந்த பெண் இப்படி என்னை போன்ற ஒருவனை திருமணம் செய்துக் கொண்டாளோ என எண்ணிக் கொண்டவனுக்கு ஏனோ அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது.
அதேநேரம் அவர்களுடைய முதல் இரவில் நடந்த நிகழ்வுகளும் அவனுக்கு மனக்கண்ணில் வந்து போனது. அன்றைய இரவு அவளை பயம் காட்ட வேண்டும் என அவன் நினைக்க முன்னேறி முன்னேறி செல்லும் பொழுதும் அவள் அவனை தடை விதிக்காமல் அவளது அன்பை வாரி வழங்க அவனுக்கே என்னடா இது என்பது போல தான் தோன்றியது.
மேலும் அனைவர் முன்னும் எத்தனை முறை அவளை அவமானப்படுத்தி இருக்கிறான் அதை கூட பொருட்படுத்தாமல் இருக்கிறாளே இதே அவளது இடத்தில் தான் இருந்தால் அவளை போல நடந்துக் கொள்வோமா என்பது கூட அவனுக்கு சந்தேகம் தான் இருந்தும் தன்னை விட்டு கொடுக்காமல் நிவேதாவிடம் பேசினாளே என்ன சிறு சிறு தொல்லைகள் செய்கிறாள் தான்.
அதெல்லாம் குழந்தைத்தனமாக அவனுக்கு இப்போது தோன்றினாலும் பல நேரத்தில் அவள் குமரியாகவும் ஒரு பெண்ணாகவும் தோன்ற வைத்திருக்கிறாள் என இப்பொழுதெல்லாம் சுய அலசலில் இருக்கும் அவனுக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் வந்து இருக்கும் பொழுது இவள் வேறு இவ்வாறு செய்யவும் அவனுக்கு அவர்களது முதல் இரவு இன்று ஞாபகத்தில் வர அதற்கு ஏதுவாக அவள் அவன் மீது தன் கையை தூக்கி போட்டாள்.
அவனோ கையை மெல்ல விலக்க போக அவனது நெஞ்சில் தலை வைத்து அவனருகே அவளது மூச்சுக்காற்று படும் அளவிற்கு வந்து படுத்துக் கொண்டாள்...
அவன் மனதிற்குள் உணர்ச்சிகள் கிளம்பிக் கொண்டிருந்த தருணத்தில் அவள் இவ்வாறு செய்ய அவன் ஒரு அடி அவள் அருகே நெருங்கி படுத்தான்.இப்போது அவன் அவளது மூச்சுக்காற்றை உள்வாங்கும் அளவுக்கு நெருங்கி படுத்து இருக்க அவள் முகம் தன் முகத்தை உரசும் அளவுக்கு நெருங்கி படுத்தான் துருவன்.
எதற்காக செய்கிறான் என அவன் அறியான் ஆனால் அவனுக்கு செய்ய வேண்டும் என தோன்ற அவ்வாறு செய்யவும் அந்த உணர்வில் கண்ணை திறந்தவளோ வேகமாக அவனிடமிருந்து விலகியவள், "என்ன மாமா செய்யறீங்க??" என்று வினவினாள்.
அவனோ அதில் முகம் கருத்தவனுக்கு என்னவோ அவள் அப்படி வினவவும் அவனுக்கு என்னவோ அசிங்கமாக இருந்தது.
"நான் ஒன்னும் செய்யலையே??" என்றான்.
காவ்யாவின் முகம் நொடி பொழுதில் மாறி, "மாமா நீங்க என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டீங்களா மாமா??" என அவனது முகத்தை பார்த்து கேட்கவும் அந்த கேள்விக்கு அவனிடம் விடை இல்லை ஆனால் அந்த கேள்வி அவனை உறுத்தியது.
அதனால், "மனைவியா இல்லாமல் தான் நீ என் பக்கத்தில் படுத்துட்டு இருக்கியா??" என்றான் கோபமாக.
"எனக்கு தேவை உண்மையான பதில் மாமா எனக்கு நீங்க புருஷன் தான் ஆனால் நான் உங்களுக்கு மனைவி இல்லை மாமா.நான் உங்க பக்கத்தில் மனைவியா தான் படுக்கிறேன். ஆனால் நீங்க என்னை அப்படி நினைக்கல உங்களால அடிச்சு சொல்ல முடியுமா கடைசியா என்னை தான் தொட்டீங்கன்னு சொல்ல முடியுமா மாமா?
உங்களால முடியாது மாமா ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு பொண்ணு வேணும் மாமா நான் உங்க வாழ்க்கையை தப்பா சொல்லல.உங்க வாழ்க்கை உங்க இஷ்டம் ஆனால் என் புருஷன் எனக்கு மட்டும் தான்னு எனக்கு தோணுது மாமா ஒவ்வொரு முறையும் நீங்க கிட்ட வரும் போதும் அது தான் தோணுது" என்றாள்.
அதை கேட்டவனுக்கு அகம்பாவம் கூட, "ஆமாம் டி என்னால பொண்ணுங்க இல்லாமல் இருக்க முடியாது தான். அப்புறம் எதுக்கு என்கூட இருக்க கிளம்பி போக வேண்டியது தானே?? இடமாவது காலியாகும் வேறொருத்தியை கூட்டிட்டு வர வசதியா இருக்கும்" என்றான் ஆத்திரத்தோடு.
அதை கேட்டவளோ, "நான் போக மாட்டேன் மாமா நீங்க எனக்கு வேணும் மாமா நீங்க என்னை ஏத்துக்கிட்டு வாங்க மாமா அதுவரைக்கும் நான் இங்கே தான் இருப்பேன். உங்களுக்காக காத்திருப்பேன் எவளையும் விடவும் மாட்டேன்" என்க அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.
