நெஞ்சமெல்லாம் 30
அத்தியாயம் - 30
நேற்று எந்த கன்னங்களை அவனது கைகள் பதம் பார்த்ததோ இன்று அதே கைகள் அவள் கன்னங்களை ஏந்தி உதட்டால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்க அவனது வேகத்துக்கு சத்தியமாக சிறு பெண் ஈடு கொடுக்க முடியாமல் திண்டாட அவளை விடுவேனா என எண்ணியவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவர்கள் அறைக்குச் செல்ல அவள் காண்பது கனவா நனவா என புரியாமல் முழித்தவள் தன் கைகளை கிள்ளி கொள்ள அதற்குள் படுக்கை வரவும் அவளை படுக்கையில் இறக்கியவன் அவள் மேல் விழுந்தான்.
அவள் மீது விழுந்தவன் அவளை ஆலிங்கனம் செய்ய துவங்க இங்கே வந்ததில் இன்று தான் அவன் அவளருகே வரவும் காவ்யா தான் மாமா மாமா என்று அலைய அவன் ஹ்ம்ம் என்றாலே அவன் அருகே நாய்க்குட்டி போல ஓடி வந்து விடுவாள் இன்று எதுவுமே பேசாமல் அவளை நாடவும் அவளும் அவனோடு கலந்து போனாள்.
அவனின் விரலின் சிறு நுனி பட்டால் போதாதா அவள் அவனோடு கலந்து போக இதோ அவனோடு சுகமாக கலந்து போக அங்கே உணர்வுகளின் சங்கமம் நிகழ எல்லாம் முடிந்து அவளை விட்டவன் இப்போதும் அவள் முகம் பார்க்க கலைந்த கோலமாய் அவன் அருகே படுத்து இருந்தவளிடம், "நிவேதாவை சும்மா கிழிகிழி னு கிழிச்சுட்ட போல நல்லா வேணும் அவளுக்கு இப்போ புரிஞ்சு இருக்கும் அவளுக்கு என்னோட வேல்யூ அவளை நினைச்சாலே" என்று அவன் தொடங்கும் போதே இன்றைய நிகழ்வு எதற்காக என அவளுக்கு புரிந்து போனது. கூடவே மனதின் ஓரம் இலேசான வலியும் வர அவன் வேறு ஏதோ கூற வரும் போதே இடை நிறுத்தியவள்
ஒரு வேளை மாமா நிவேதா அக்காவை எண்ணி தான் தன்னுடன் இருந்தாரோ என எண்ணி, "நிவேதா அக்காவை பேசினதுக்கா மாமா இப்போ இப்படி?" என கேட்டவள் வேகமாக தன் உடைகளை எடுத்து உடுத்திக் கொண்டே, "இனி எனக்காக எப்போ உங்களுக்கு என்னை மனைவியா ஏத்துக்க முடியுதோ அப்போ என்கிட்ட வாங்க மாமா இப்படி மத்தவங்களுக்காக என்கிட்ட வராதீங்க மாமா" என்று கூறியவள் அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்துக் கொள்ள அவனுக்கு ஆத்திரம் வந்தது.
என்ன வார்த்தை என்னை பார்த்து கேட்டு விட்டாள் என கொதித்து தன் உடையை சரி செய்துக் கொண்டவனோ வேகமாக அவள் பின்னே சென்றவனோ, "ஹே நில்லு டி என்னை பார்த்தா எப்படி டி தெரியுது?? என்ன வார்த்தை டி கேட்ட??" என கேட்டான்.
"என்ன மாமா கேட்டுட்டேன் சொல்லுங்க. நான் உண்மையை தான் மாமா சொல்றேன் நீங்க என்னை மனைவியா ஏத்துக்கிட்டீங்களா இல்லையே? அப்புறம் எதுக்கு மாமா இதெல்லாம் சொல்லுங்க மாமா? உங்க மனசில் எப்போ நான் உங்க மனைவினு தோணுதோ என்னை மட்டும் நினைச்சிட்டு என்கிட்ட வாங்க மாமா மத்தவங்க மேல உள்ள வெறியை தீர்க்க வராதீங்க மாமா" என கூறியவள் அடுத்த நொடி இயல்பாகி அவனுக்காக உணவை சமைக்க போக இவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
அதே நேரம் அவள் கேள்வியின் பொருளும் அவனுக்கு புரிய தன்னை தானே அவன் கடிந்துக் கொண்டான்...அவனுக்கே அவனது அந்த செய்கை அவள் கூறிய பின் கொஞ்சம் அருவருப்பாக தான் இருந்தது. அவனும் அவளை நாட வேண்டும் என நினைக்கவில்லை அவள் அருகே வந்ததும் மெல்ல மெல்ல அவன் கரைந்து போனான் என்பதே உண்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை...
அப்படி இருக்க இரு நாட்களுக்கு பிறகு இங்கே வணங்காமுடியும் தன் மனைவியை அழைத்து விஷயத்தை கூற அவரும் இப்போது, "என்னங்க செய்யறது??" என்று கேட்டார்.
"தாமரை இனி நீ தான் ஏதாவது செய்யணும் உனக்கு முடியலன்னு சொல்லி உன் பையனை வர சொல்லு. அப்படியே உன் மருமகளையும் வர சொல்லு அவங்களை வாழ வைக்கிறது நம்ம பொறுப்பு. இன்னிக்கு சண்டை போட்டாலும் நாளைக்கு சேர்ந்து வாழ்வாங்க" என்று கூற அது தான் தாமரைக்கும் சரி என்று பட்டது அதனால் வேகமாக உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டார்.
இரு நாட்களாக அவன் தான் செய்ததை மறந்து காவ்யாவின் மீது கோப முகம் பூசி சுற்றினாலும் அவள் அவனுடன் எப்போதும் போல இருக்க அவனுக்கு தன் தவறு புரிந்தாலும் அதை ஒப்புக் கொள்ள மனமின்றி அவனும் விறைப்பாக இருக்க அந்த நேரம் பார்த்து நித்யா அழைத்து தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூற அதைக் கேட்டதும் பதறினான் துருவன்.
"அம்மாவுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க
"தெரியல அண்ணா காலைல மயக்கம் வருதுன்னு சொன்னாங்க நான் பதறி அப்பாவுக்கு அழைச்சு சொன்னேன். அப்பா டாக்டரை கூட்டிட்டு வந்து காட்டினார் அப்போ இருந்து உங்கள பார்க்கணும்னு ஒரே அழுகை நீங்க கொஞ்சம் வர்றீங்களா??" என்று கேட்டாள்.
மகளிடமும் விஷயத்தை கூறாமல் வணங்காமுடியும் தாமரையும் நடிக்க அவள் பதறி கூறியதை கேட்ட துருவன், "இதோ நான் வரேன்" என்றான்.
"அண்ணா வரும்பொழுது அண்ணியையும் கூட்டிட்டு வாங்க அண்ணா" என்று கூற பாவம் துருவன் அடுத்த சிம்பதி என்னும் கூண்டில் விழ தயாராகி விட்டான்.
அதன்படி அன்றைய நாள் காவ்யாவை அழைத்துக்கொண்டு அவன் அவனது வீட்டிற்கு சென்றான். அங்கு அவனது தாய் படுத்து இருக்க அவரோ ஐந்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் 50 ரூபாய்க்கு நடித்து மகனின் அனுதாபத்தை பெற்றார்...
"அம்மா உங்களுக்கு என்னமா பண்ணுது??" என்று வினவ, "தம்பி உங்களையெல்லாம் விட்டு போய்விடுவேனோன்னு பயமா இருக்குப்பா எனக்கு என்னென்னமோ செய்யுது என்னனு சொல்ல தெரியல" என்றார்.
"அம்மா வாங்க ஹாஸ்பிடல் போகலாம்" என்று கூற காவ்யா தனது அத்தையை பார்த்து, "அத்தை உங்களுக்கு என்ன ஆச்சு அத்தை? அந்தக் கிழவி மாதிரி படுத்த படுக்கையா இருக்கீங்களே நான் என்ன செய்வேன்??" என்று கத்தி னாள்.
அதைப்பார்த்ததும் தாமரைக்கு கொஞ்சம் பீதியானது. ஏதாவது தனக்கு ஆகிவிடுமோ என பயப்பட, "எனக்கு ஒன்னும் ஆகாதுமா பயப்படாதே" என்று அவரே ஆறுதல் கூறினார்.
பிறகு தன் மகனிடம் "தம்பி ஒரு வாரம் என் கூட இருப்பியா பா இனி என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது பா" என்று கேட்க அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.
"என்னது ஒரு வாரமா நாங்க உங்க கூட தான் இருக்கப் போறோம் நீங்க கவலை படாதீங்க" என்று கூறியவள், "என்ன மாமா முழிச்சிட்டு இருக்கீங்க சொல்லுங்க அத்தை தான் பாவம் சொல்றாங்களே இருக்கேன்னு சொல்லுங்க" என்று அவள் கொஞ்சம் கூற அவனும் தலையை ஆட்டினான்.
அவனுக்கு தன் தந்தையுடன் தான் பிரச்சனை ஆகிவிட்டது எப்படி இருப்பது என அவன் முழிக்க தாயும் தந்தையும் சேர்ந்து அவனை பிளான் செய்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்து விட்டனர். தங்கள் மகன் தங்கள் கண்முன்னே இருப்பான் அல்லவா என்று அவர்கள் நினைத்து அதை செயலாற்றியும் விட கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தது.
அவன் வீட்டில் தான் இருக்கிறான் ஆனால் அவனுக்கு அன்னியமாக இருக்க ஆனால் காவ்யாவிற்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் அதை சுத்தம் செய்கிறேன் இதை சுத்தம் செய்கிறேன் என அவள் சிட்டாக பறந்துக் கொண்டிருந்தாள்.
அவளை பொறுத்தவரை மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள். நேற்று நடந்ததை நேற்றோடு விட்டுவிடும் ரகம் ஆனால் இவன் தான் அனைத்து விஷயங்களையும் மனதில் போட்டுக் கொண்டு அவனை வருத்திக் கொள்வான். எதுவுமே நடக்காதது போல அவள் அவனிடம், "மாமா இதை சாப்பிடுங்க மாமா அதை சாப்பிடுங்க" என ஏதாவது அவனுக்கு கொடுக்க அவனோ பெற்றவர்கள் முன்னால் முறைக்கவும் முடியாமல் தடுமாறினான்.
இதையெல்லாம் விட அவனுக்கு இரவு தான் மிகவும் பிரச்சனையாக இருந்தது...
மந்தாரம் தெளியும்...
