நெஞ்சமெல்லாம் 29
மந்தாரம் : 29
கணவன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமலேயே இவர்கள் இருவரையும் லெஃப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தாள் காவ்யா.
அதோடு நில்லாமல், "இதோ பாருங்க நிவேதா அக்கா நீங்க பண்ணினது ஒருவகையில் நல்லதா தான் போச்சு எனக்கு என்னோட மாமா கிடைச்சுட்டாங்க நான் இப்படி சொன்னதும் நீங்க பதற வேண்டாம். நீங்க என் மாமாவை வேண்டாம்னு சொன்ன அந்த நொடி என் மாமா உங்களுக்காக அழுத அந்த நொடி இதுதான் என் மாமா மேல எனக்கு பாசம் வந்த நொடியும் அதுதான். இப்போ என் மாமா எனக்கு மட்டும் தான் இப்போ நீங்க என் மாமாவை வேண்டாம்னு விட்டுட்டு போனதுனால தான் என் மாமா எனக்கு கிடைத்திருக்கிறார்.
அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி தான் சொல்லணும் இனி இந்தப் பேச்சை விட்டுடுங்க இத்தனை வருஷம் கழிச்சு இதை பேசி என்ன ஆகப் போகிறது. இனி நாம இதைப்பற்றிப் பேசுவது நமக்கு முட்டாள் தனமா தான் இருக்கும் அக்கா விட்டுடுங்க. அப்புறம் நரேந்திரன் அண்ணா உங்களுக்கு என் மேல இருக்கிற அக்கறைக்கு நன்றி. ஆனா நான் எல்லாம் தெரிஞ்சு தான் இறங்கி இருக்கேன் நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி ஒன்னும் என் மாமா ரொம்ப மோசம் எல்லாம் இல்லை" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் காவ்யா.
கே.கேவும், "என்னடா எல்லாம் கேட்டியா உன்னுடைய மனைவி பேசுறதை கேட்டியா இனியாவது கொஞ்சம் மாறுற வழிய பாரு" என்று கூறிவிட்டு போனை அணைத்து விட்டான்.
கே.கேவும் அவர்களைப் பார்த்து யார் என்று விசாரித்து விஷயத்தை கேட்டறிந்துக் கொண்டே அவளிடம் "உன் புருஷனை சொன்னா பத்ரகாளியை ஆயிடுவ போல??" என்று கிண்டல் பண்ணிக் கொண்டே அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டான். அதே நேரம் அவள் பேசியது எல்லாம் காது கொடுத்து கேட்ட துருவன் மனதுக்குள் தன் மனைவியின் மீது நல்ல அபிப்பிராயம் வந்தது.
தான் என்ன செய்தாலும் தான் செய்வது தவறு என்றாலும் அவர்கள் முன்னால் விட்டுக்கொடுக்காமல் பேசிய மனைவியை எண்ணி அகமகிழ்ந்து போனான் துருவன். ஆனால் இத்தனை காலம் கழித்து தன் மனதுக்குள் என்னதான் கதிர் உடன் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் துருவனுக்கு தான் செய்த துரோகத்தை எண்ணியும் அவனது காதலை எண்ணியும் தினம் ஒரு முறையாவது அவனை எண்ணிக் கொள்ளும் நிவேதாவுக்கு அவனிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு கடைசிவரை அது நிறைவேறவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
அவள் எப்படியாவது எந்த வகையிலாவது தன் மனதை அவனிடம் புரிய வைத்துவிட வேண்டும் என அரும்பாடு பட்டாலும் அது கடைசி வரை நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இனியும் அவர்களை தொல்லை செய்ய வேண்டாம் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் என நிவேதா ஒதுங்கிக் கொண்டாள்.
இங்கே துருவன் நிவேதாவையும் தன் மனதுக்குள் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு தான் செய்வது அனைத்தும் தவறு தான் இருந்தாலும் இவள் பிறரிடம் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாளே அவளது நம்பிக்கைக்கு தான் பாத்திரமா என்ற கேள்வி அவனுக்குள் வந்தது.
இப்பொழுது அவன் மனம் முழுவதும் காவ்யா அவள் மட்டுமே நிறைந்திருக்க அவளை காண வேண்டும் என எண்ணி அந்த நொடியே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டான். அவன் நேராக வீட்டிற்கு செல்ல அங்கே அவள் இன்னும் வந்திருக்கவில்லை வேகமாக கே.கேவை இருமுறை அழைத்து விட்டான். அவனும் வந்துட்டு தான் இருக்கோம் என பதிலளிக்க சொன்னது போல நண்பன் வாசல் வரை மனைவியை கொண்டு வந்து விட்டுவிட்டு அவர்களுக்கு தேவையான தனிமையை கொடுத்துவிட்டு கே.கே சென்றுவிட்டான்.
இருவரும் மனது விட்டு பேசட்டும் என எண்ணி அவன் ஒதுங்கிக்கொள்ள இந்த நேரத்தில் அவனை எதிர் பார்க்காத காவ்யா அவனை கண்டதும் "என்ன மாமா என்ன விஷயம் சொல்லுங்க இந்த நேரத்தில வந்திருக்கீங்க உடம்புக்கு ஏதாவது முடியலையா???" என்று வேகமாக அவள் அவனது கையை பார்க்க அவனோ அவளது முகத்தை பார்த்து, "எனக்கு ஒன்னும் இல்லை" என்று கூற
"அப்புறம் எதுக்கு மாமா வந்தீங்க??"
"சும்மா தான் வந்தேன்" என்று கூறியவன் அவளை தீர்க்கமாக பார்க்க, "என்ன மாமா அப்படி பார்க்கறீங்க??" என்று கேட்டாள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் பதிலேதும் கூறாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க என்ன மாமா இப்படி பார்க்கிறார் என எண்ணியவள் அடுக்களைக்குள் செல்ல அவள் பின்னாலே வந்தவன் நொடி பொழுதில் அவளை பின்னால் இருந்து அணைத்து, "தேங்க்ஸ் டி" என்று கூறியவன் அவளது கழுத்து பகுதியில் தன் இதழ்களை பதிக்க அவளோ அவனது அவசர முத்தத்தில் அதிர்ந்து கூசி சுவரோடு ஒட்டி நின்றாள்.
அவனோ அவளது இடையை வளைத்து அவள் முகத்தை சட்டென்று திருப்பி அவள் முகத்தை நொடி பொழுதில் தன் கைகளில் ஏந்தி அவளது கன்னத்தில் தன் இதழ்களை பதித்தவன் அவளை இறுக அணைத்து மூச்சு விட கூட முடியாத அளவுக்கு அவளை அணைத்தவன் அவளது நெற்றியில் தன் இதழ்களை பதித்தான்.
அவளுக்கோ கூச்சம் எழ "மாமா" என்று அவனது சட்டையை பிடித்தாள்.
அவனது திடீர் தாக்குதலில் நிலை குலைந்தவளோ மெல்ல அவனது கைக்குள் அடங்கி போக அவனோ அவளது வெண்பளிங்கு கன்னங்களில் தன் இதழ்களை பதிக்க அவன் இதழ் ஒற்றிய ஓசை அந்த அறையை நிறைக்க அவளுக்கு என்ன தான் நடக்கிறது என புரியவில்லை என்றாலும் அவன் அருகாமை அவளுக்கு பிடித்து இருந்தது.
அவள் முகத்தை தன் கைகளில் வைத்துக் கொண்டு அவளது இதழை தன் விரல்களால் அளக்க நொடி பொழுதில் சிவந்து போன அவள் அதரத்தை நோக்கி குனிந்தவன் அவள் இதழ்களை பற்றி இழுக்க அவனது அதரங்களின் நர்த்தனத்தில் கட்டுண்டு போனவளின் உணர்வுகளை தூண்டிக் கொண்டு இருந்தவனுக்கும் உணர்வுகள் ஆட்கொள்ள என்றோ ஒரு நாள் இவளை தொட்டு தன் கோபத்தை இவளிடம் நிலை நாட்டியவன் இன்று அவளை மனமுவந்து நாட எண்ணியவனுக்கு அவள் இதழை விடும் மனமின்றி போனது.
