Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 3

"என்ன?? தாலி கட்டிட்டு சாவறதா அப்போ நீ சொன்னது எல்லாம் பொய்யா??" என்று நம்ப முடியாமல் நம்பியவன் அவளை பார்த்து அவன் முறைக்க அதை எங்கு அவள் பார்த்தாள்.

அவளுக்கு தான் நன்றாக தெரியுமே இனி அங்கு நின்றால் அவனிடம் வசமாக சிக்கிக் கொள்வோம் என்று அதனால், "ஐயோ பாட்டி உனக்காக தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் உனக்கு என்ன ஆச்சு?" என்று அனைவரும் கேட்கும் வண்ணம் கதறியவள் வராத அழுகையை வர வைத்து மேடையில் இருந்து எழுந்து ஓடியவள் வேகமாக அவள் பாட்டி சுப்பு என்கிற சுப்பம்மாளிடம் ஓடிச் சென்றவள், "ஐயோ பாட்டி!" என அவர் மீது விழ...

அவள் விழுந்த அடுத்த நொடியே அவர் பரலோகம் சென்று இருக்க வேண்டும் இருந்தாலும் அந்த காலத்து உடம்பு என்பதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஆக்சிஜன் உதவியோடு அவர் இருக்க அதனால் அவர் தப்பித்தாரோ என்னவோ பாட்டியை கட்டி பிடித்தவள் அவரது காதில் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், "கிழவி உன்கிட்ட என்ன சொன்னேன் நான் மாமாவை கல்யாணம் பண்ணின பிறகு தான் நீ சாகணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா இப்போவே நீ இப்படி இழுத்துகிட்டு இருக்க இனி ரிசப்ஷன் இருக்கு முதல் இரவு இருக்கு நாளைக்கு கோவில்ல நான் பொங்கல் வைக்கணும் மவளே, அதுக்கு முன்ன ஏதாவது ஆச்சு நீ செத்தாலும் உன்னை விட மாட்டேன்" என்று மிரட்டினாள்.

அதை கேட்டதும் பாட்டியோ பீதி அடைந்தாலும் அதன் பிறகு அவரது உடல் நிலை அதன் பிறகு மெல்ல இயல்புக்கு வர அவளது செயலை கண்டு அனைவரும் பதறினர்.

கூட்டத்தில் இருப்பவர்களோ, "என்ன தான் இருந்தாலும் பாட்டி அவ்ளோ சீக்கிரம் போயிருமா பா வளர்த்த பேர புள்ளையோட கல்யாணத்தையும் பார்த்து அவளோட குழந்தையை வளர்த்து ஆள் ஆக்கிட்டு தான் போகும்" என்று கூற அதை கேட்டு காவ்யாவுக்கு குளு குளுவென்று இருந்தது.

"போ மா நீ எல்லாம் வர கூடாது மேடையில போய் உட்கார் மா" என்று வணங்காமுடி அவளை அனுப்பி வைத்தார். அவளும் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் அருகே போய் அமர்ந்துக் கொள்ள துருவன், 'இவ என்ன டிசைன் நாம கோபப்படணும்னு நினைச்சா இவ என்ன இப்படி நடிக்கிறா குறும்புக்காரின்னு தெரியும் ஆனால் வில்லின்னு தெரியாமல் போச்சே என்கிட்டேயே இப்படி நடிச்சு இருக்கா!' என அவன் நினைத்துக் கொண்டுருக்க அவளோ வேகமாக ஒன்றும் அறியாதவள் போல தன் மாமனின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

இவள் சின்னப் பெண் என்று தான் அவன் நினைத்து இருக்க ஆனால் அவளோ அப்படி அல்ல என்பதை அவனுக்கு ஒவ்வொரு நொடியும் நிரூபித்துக் கொண்டு இருக்க இவளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என கருதி கொண்டான் துருவன்.

சுப்பு பாட்டியோ தாலி கட்டுமாறு கைகாட்ட அதை புரிந்துக் கொண்ட சாரங்கபாணி மற்றும் வணங்காமுடி இருவரும் மேடைக்கு வந்து, "நீ தாலி கட்டுப்பா" என்று கூற இனி வேறு வழி இல்லை என்பதை புரிந்துக் கொண்டவனோ, "கிழவி நீ இப்போ செத்தா தான் என்ன ??" என்று கடிந்து அவள் கழுத்தில் தாலியை கட்டினான் துருவன்.

காவ்யா கும்பிட்ட தெய்வம் எல்லாம் அவளுக்கு கைகொடுத்து மேலே இருந்து அவளை ஆசிர்வதித்தது போல அவளுக்கு இருக்க பாட்டியும் தன் கண்களை துடைத்துக் கொண்டார்.

ஆம் சுப்பம்மாள், காத்தவராயன் ஒரு வயித்து பிள்ளைகள். காத்தவராயன் தன் சகோதரி சுப்பம்மாள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார் ஒரு வயதானதும் தாய் மற்றும் தந்தை இழந்தவர்கள் தாங்களாகவே யாருடைய உதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் அண்ணனும் தங்கையும் வாழ்ந்து வந்தவர்களுக்கு பெற்றோர்கள் சிறு வயதில் சென்று விட்டார்களே ஒழிய சொத்து சுகத்துக்கு ஒன்றும் குறைவு இல்லை.

அப்படி இருக்கும் போது திருமணம் வயதை அடைந்த சுப்பம்மாளுக்கு அந்த ஊரிலேயே கொஞ்சம் நல்லவன் என்ற பெயர் உள்ள மார்க்கண்டேயனை திருமணம் செய்து வைக்க மார்க்கண்டேயனை பொறுத்தவரை பெரிதாக சொத்து பத்துக்கள் இல்லை என்றாலும் நல்ல மனிதன்…

அப்படி இருக்க தன் தங்கை போற இடத்தில் நன்றாக வாழ வேண்டும் என காத்தவராயன் தனக்கும் தன் தங்கைக்கும் உள்ள சொத்தில் முக்கால் பாகத்தை தன் தங்கை பெயரில் எழுதி வைத்து, "நீ நம்ம வீட்டு மகாலட்சுமி டா எப்போவும் சந்தோஷமா இருக்கணும்" என்று கூறி விட,சுப்பம்மாளுக்கு அழுகை முட்டியது.

அப்போது கண்ணீர் விட்டவர் அதன் பிறகு மார்க்கண்டேயன் என்ற வெகுளி ஏமாளி என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம் அப்படி காத்தவராயன் கொடுத்த அவர்களின் குடும்ப சொத்தான முக்கால் பாகத்தை அழித்தார் இல்லையேல் அவரை ஏமாற்றினார்கள் என்றே கூறலாம்.

அப்படி ஒன்றும் இல்லாத நிலைக்கு மாறி இருந்த சுப்பம்மாளுக்கு தனக்கு என்று ஒதுக்கி வைத்த மீதம் உள்ளதையும் கொடுத்து, "சுப்பு கண்ணு உன் புருஷன் நல்லவன் தான் ஆனா அவனுக்கு பொறுப்பு இல்லை அதுனால இனி நீ தான் உள்ளதை வைச்சு பொழைச்சுக்கணும் அவனை நம்பினா இதுவும் போயிடும் அதுனால உன் பேரில எழுதி வைக்கிறேன்" என்று தன் பெயரில் உள்ளதையெல்லாம் எழுதி வைக்க அவரோ, "அண்ணே அப்போ உனக்கு??" என்று கேட்க

"எனக்கு தான் கையும் காலும் இருக்குல்ல" என்று அவர் கூற

"அண்ணே அண்ணி வேற இந்த நிலையில் இருக்காங்க" என்று அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை குறிப்பிட்டு கூற

"அண்ணி என்னை அவங்க பார்த்துப்பாங்க.நம்ம வீட்டு மகாலட்சுமி நீங்க கஷ்டப்பட்டா எங்களுக்கு வருத்தமா இருக்கும் நீங்க தான் பொம்பளை பிள்ளையை வைச்சு இருக்கீங்க கல்பனா வேற இன்னும் இரண்டு மூணு வருஷத்துல பெரிய பிள்ளை ஆகிடுவா உங்களுக்கு தான் இப்போ இது தேவைப்படும் நாங்க எப்படி இருந்தாலும் பொழைச்சுக்குவோம்" என்று தைரியம் கூறினார்.

அதே போல காத்தவராயன் மனைவிக்கு அவர் வீட்டில் கொடுத்த சிறு காணி நிலத்தில் பயிரிட்டு உழைக்க ஆரம்பிக்க இங்கே மார்க்கண்டேயனை நம்பாமல் சுப்பு அவருடைய அண்ணன் கொடுத்த சொத்துக்களை பாதுகாத்தார்...

காலப்போக்கில் சுப்புவுவின் மூத்த மகள் கல்பனாவுக்கு பன்னிரெண்டு வயது மற்றும் இளைய மகன் சாரங்கபாணிக்கு ஐந்து வயது இருக்கும் போது மார்க்கண்டேயன் இறக்க,

காத்தவராயனுக்கோ அந்த சமயம் இரு குழந்தைகள் பிறந்து இருந்தது. ஐந்து வயதான வணங்காமுடியும் ஒரு வயதான கற்பகமும் பிறந்து இருக்க அவர் தான் தன் தங்கை குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டார்.

சுப்புவும் தன் அண்ணனுக்கு பாரம் வைக்காமல் தன்னால் ஆன உதவிகளை செய்து கொடுத்து வாழ்ந்து வர அந்த சமயம் பார்த்து தன் மக்களை தங்கை வீட்டில் விட்டுவிட்டு மனைவியும் கணவனும் சேர்ந்து ஒரு விசேஷத்திற்கு பேருந்தில் பயணம் செய்ய பேருந்து ஒரு பாலத்தில் மரிந்து விழுந்து அந்த பேருந்தில் பயணம் செய்த காத்தவராயன் மற்றும் அவரது மனைவி முதல் அனைவரும் இறக்க சுப்புவின் தோளில் மீண்டும் பாரம் கூடியது.

அவர் ஒருவர் தான் அவருடைய பிள்ளைகளையும் அண்ணன் பிள்ளைகளையும் சேர்த்து நான்கு பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்க அவரோ அதுவரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தவர் அன்றிலிருந்து இரும்பு பெண்மணியாக மாறி யாரும் தன்னை நெருங்க விடாமல் இருக்க தனக்கு தானே வேலி போட்டுக் கொண்டு, "ஐயோ அந்த அம்மாவா சரியான ராட்சஷி" என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டவர் தன் பிள்ளைகளோடு அண்ணன் மக்களையும் ஒரு போல வளர்த்தார்.

தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை படிக்க வைத்தவர் தன்னுடைய மூத்த மகளான கல்பனாவுக்கு பணம் இல்லை என்றாலும் குணம் உள்ள ராசு கண்ணுவை மணம் முடித்து கொடுத்தார்.

அடுத்து சில காலம் ஆன பின் தன் அண்ணன் மகளை தன் மகனான சாரங்கபாணிக்கு மணம் முடித்து கொடுத்து தன் வீட்டு மருமகள் ஆக்கியவர் வணங்காமுடிக்கு அயலூரில் தாமரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுத்து தன் கடமை முடிந்து விட்டது என எண்ணினார்.

வணங்காமுடி மட்டும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பின் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தவர் அங்குள்ள அனைத்து வேலைகளையும் கற்றுக் கொள்ள சிறு வேலைக்கு சென்ற அவர் மேனேஜர் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

சாரங்கபாணியும் கைத்தறி தொழிலை தனக்கான தொழிலாக ஏற்றுக் கொண்டு அந்த பாதையில் உழைத்துக் கொண்டு இருந்தார்.

அந்த சமயம் பார்த்து தான் சாரங்கபாணி மற்றும் வணங்காமுடிக்கு திருமணம் நடைபெற வணங்காமுடியின் மனைவி தாமரை கல்யாணம் ஆன அடுத்த மாதத்திலேயே துருவனை கருவுற அவனை கருவுற்ற நேரமோ என்னவோ தெரியவில்லை அதுவரை சாதாரண நிலையில் அந்த ஹோட்டலில் வேலை செய்துக் கொண்டு இருந்தவருக்கு ஒரு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

லண்டனில் ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவர் அங்கு அவரை வேலை செய்ய அழைக்க அந்த நபரே எல்லா உதவிகளையும் வணங்காமுடிக்கு செய்து விட வணங்காமுடி எல்லாம் தன் மனைவி கருவுற்ற நேரம் தான் என எண்ணி தன் மனைவி தாமரையையும் தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்.

அங்கேயே அவர் கிட்டத்தட்ட செட்டில் ஆகி விட்டார் என்று தான் கூற வேண்டும். ஆரம்பத்தில் அந்த ஹோட்டலில் வேலை செய்தவர் அந்த ஹோட்டல் முதலாளி முதுமை காரணமாக ஹோட்டலை விற்கிறார் என தெரிந்ததும் அவரிடம் அந்த ஹோட்டலை விலைக்கு பேசி வாங்கி விட்டார்.

அன்றிலிருந்து அவருடைய எண்ணம் முழுவதும் அந்த ஹோட்டலை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக இருக்க அவர் அப்படியே தன் குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகி போனார்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top