நெஞ்சமெல்லாம் 27
மந்தாரம் : 27
"என்னை புரிஞ்சிக்கோ துருவன்" என்று அவள் கூற
அதைக்கேட்ட அவனுக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. "ஏ சீ வாயை மூடு. உன்னை புரிஞ்சு எனக்கு என்ன ஆக போகுது ஏதாவது பேசின இங்கேயே ஓங்கி அறைஞ்சுடுவேன். அடுத்தவன் பொண்டாட்டிய பார்க்குறது கூட தப்புனு நினைக்கிறவன் நான் அதனால அமைதியா இருக்கேன். உனக்கு உன்னோட பேமிலி பத்தி நல்லா தெரியும் உனக்கு உன் குடும்பம்ன்னா இப்படித்தான் இருக்கும்னு உனக்கு நல்லா தெரியும். எல்லாம் தெரிஞ்சும் நீ எதுக்குடி லவ் பண்ண??
லவ் பண்ணி மூணு வருஷம் கழிச்சு ஒரு நாள் அம்மா சொன்னாங்கனு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்ற?? இதெல்லாம் நடக்கும்னு தெரியுற உனக்கு எதுக்கு காதல்? நான் உன்கிட்ட சொல்லும் போதே எனக்கு இது சரி வராதுன்னு சொல்லிட்டு போய் இருக்க வேண்டியது தானே.
அப்படி கட்ஸ் இல்லாதவ எதுக்குடி நம்பிக்கையை வளர்த்த?? எல்லாம் இவங்க பண்ணுவாங்களாம் கடைசியில அம்மா வந்து சத்தியம் வாங்கி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ணிட்டு போயிடுவாங்களாம். கடைசில நாங்க இவங்க எந்த தப்பும் பண்ணல என்னை புரிஞ்சுக்கோன்னு சொல்லி கேட்டா புரிஞ்சுக்கணும் அப்படித்தானே புரிஞ்சிக்கிட்டேன் கிளம்பு" என்று கூற அவளோ அதிர்ச்சியாக பார்த்தாள்.
"துருவன்" என்று மீண்டும் அவள் அவள் பாகத்தை தெளிவுபடுத்த வர, "என் பெயரைச் சொல்லக் கூட உனக்கு அருகதை கிடையாது புரியுதா??" என்று அவன் கூறவும்,
"நீ சொல்றது எல்லாம் உண்மை தான் நான் பாவி தான்" என்றாள்.
"ஹலோ ஹே நடிக்கிறதா இருந்தா ஓரமா உட்கார்ந்து நடி" என்று கூற இவளுக்கு இங்கே கோபம் வந்தது.
"நான் சொல்றதை கேட்கிற நிலையில் நீ இல்லை ஒரு பொண்ணா பிறந்தா எதையும் தூக்கி எறிஞ்சிச்சிட்டு வந்திட முடியாது அப்படி என்னால வாழ முடியாது. நான் அன்னிக்கு வந்து இருந்தா என்னோட அம்மாவை உயிரோட பார்க்க முடியாது எல்லோர்க்கும் காதலிச்ச வாழ்க்கை அமையறது இல்லை.அதுபோல தான் எனக்கும் ஆனால் என்னோட கதிர் மாமா என்னை புரிஞ்சு நடத்துறார்" என்றாள்.
"யம்மா உன் புருஷன் உன்னை நல்லா வைச்சு இருந்தா சந்தோஷமா இரு மா இங்கே வந்து புராணம் பேசிட்டு இருக்க. நான் ஏதும் உன் குடும்ப வாழ்க்கையில் வந்து தொல்லை பண்ணிடலையே நீ காதலை மறந்து கழுத்தை அறுத்துட்டு போன மாதிரி நான் ஒன்னும் செய்யலையே?? இல்லை உன்னை பார்த்ததும் எதுக்கு இப்படி செஞ்சன்னு நியாயம் கேட்கலையே. உங்களுக்கு எல்லாம் ஒரு வாழ்க்கை மாதிரி என்னையும் என்னோட வாழ்க்கையை வாழ விடுங்கன்னு தான் சொல்றேன்" என்றாள்.
இவன் எதை சொல்ல வந்தாலும் கேட்கவே மாட்டேன் என்கிறான் என எண்ணிய அவளோ, "நீயும் இப்போ சும்மா இல்லையே காவ்யாவை கல்யாணம் செய்துட்ட தானே பழைய காதலை நினைச்சு அவ கூட வாழாமல் இல்லையே??" என்று வினவினாள்.
அதைக்கேட்ட அவனோ கோபம் கொண்டு, "நான் ஏதாவது சொல்றதுக்குள்ள கிளம்பிடு அசிங்கமாக கேட்டுட போறேன் சீ போடி வந்துட்டா என் வாழ்க்கையை பத்தியோ என் பொண்டாட்டியை பத்தியோ நீ பேச தேவையில்லை. நான் கல்யாணம் பண்ணி வாழுறேன் வாழாமல் போறேன் உனக்கு என்ன வந்தது?? தேவையில்லாமல் பேசிட்டு இருக்க ?? அப்படி எனக்கு ஒண்ணு செய்யணும்னு இருந்தா நீ இனி என்னை தேடி வராதே. இது உன் மேல உள்ள காதல்னு தயவுசெய்து நினைச்சுக்காத எனக்கு உன்னை பார்க்க சுத்தமா பிடிக்கல இனியும் அடுத்தவன் பொண்டாட்டி கூட கனவில வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று கூறி விட்டுச் சென்றான்.
துருவன் அவளை பார்க்க கூட வேண்டாம் என்ற நிலையில் தான் அவன் அவ்வாறு பேசினான். மேலும் நேற்று இரவெல்லாம் அவன் யோசனை செய்து அவன் மனக்கண்ணில் வந்து போன கேள்விகளை தான் அவளிடம் கேட்டபின் அவன் தெளிவானான்.
அவனாக அவளிடம் பேச வேண்டும் என எண்ணவில்லை என்றாலும் தானாக அவள் வரவும் மனதில் தோன்றியதை கேட்டு விட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் அவன் சென்று விட்டான்.
அவன் மனம் பாரம் இறங்கியது போலவும் அவன் பார்வைக்கு இப்போது நிவேதா சந்தர்ப்பவாதி சுயநலம் கொண்டவள் போல தோன்ற அவளிடம் அப்படி பேசியது அவனுக்கு வருத்தமாக இல்லை. ஆனால் அவளுக்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது இவன் இப்படி எல்லாம் பேசுவானா என அவள் எண்ணினாள்.
அதற்கிடையே வணங்காமுடியிடம் சென்ற கே.கே, "ஏங்க எதுக்கு இப்படி சேராத இரண்டு பேரை சேர்த்து வைக்க நினைச்சு அவங்கள படாதபாடு படுத்துறீங்க அவங்களை சேர்க்காமல் இருந்து இருந்தா அவங்க பாட்டுக்கு இருப்பாங்க இல்ல" என்று கேட்டுவிட
அவனது பேச்சில் உள்ள நியாயத்தை புரிந்துக் கொண்ட அவரும், "ஏய் என்னடா ஆச்சு சொல்லு டா அங்க ஏதாவது அவன் பிரச்சனை பண்ணிட்டானா??" என்று அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்தவர் கே.கே வரவும் அவனிடம் வினவினார்.
"இல்லடா நீ சொல்றது உண்மை தான். ஆனால் காவ்யா தான் என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டா" என்று கூற
அதை கேட்டவனோ, "என்னமோ பண்ணி தொலைங்க என்ன குடும்பம்னு தெரியல அந்த பொண்ணை பார்க்க எனக்கு பாவமா இருக்கு" என்று கூறியவனோ "என்னமோ பண்ணி தொலைங்க ஏதாவது ஆகிடுச்சுனா என்கிட்ட வந்து கேட்காதீங்க" என்று கூறி விட்டுச் செல்ல வணங்காமுடிக்கு பயம் தொற்றிக் கொண்டது.
இனி இவர்களை தனியாக விட்டால் ஆகாது என எண்ணியவரோ மகனையும் மருமகளையும் இனி அவரது வீட்டுற்கு வர வைத்தே ஆக வேண்டும் என எண்ணி கொண்டார்.
அதற்கிடையே இங்கே இவரை வந்து பார்த்து விட்டுச் சென்ற கே.கே வீட்டிற்குச் செல்ல அங்கே அவள் கூலாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்து கே.கே சுற்றும் முற்றியும் பார்த்து, "என்ன இன்னைக்கு கலவரம் ஒன்னும் நடக்கல போல??" என்று கேட்க
"ஏன் கலவரம் நடக்க ரொம்ப ஆசையா இருக்கா உங்களுக்கு??" என்று வினவினாள் காவ்யா.
"இல்லையே இந்நேரம் ஒரு சீரியல் அழுகாச்சி நடந்து இருக்கணுமே நேத்து அப்படித்தானே நடந்துச்சு. இன்னைக்கு காலையில் வரதுக்குள்ள எல்லாம் சுபமாய் இருக்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு?? எங்கே உன் புருஷன்?" என்று கூறிக்கொண்டே துருவனின் அறையை திறக்க,
அங்கு எல்லாம் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டது போல இருக்க நேற்று உடைக்கப்பட்ட பொருட்கள் வைத்த இடமெல்லாம் பொருட்கள் எதுவுமின்றி இருப்பதை கண்டு அதிர்ந்த கே.கே "இங்கே இருந்த கண்ணாடியை காணோம் எங்கே??" என்று பதறி கேட்டான்.
"அது தான் நேத்து உடைஞ்சிடுச்சு சும்மா அதையே கேட்டுட்டு இருக்காதீங்க. வாங்க வெளியில போய் ஒரு கண்ணாடி அப்புறம் உடைஞ்ச பொருள் எல்லாம் வாங்கி வச்சிடலாம். எங்க மாமாக்கு காலையில எந்திரிச்சா தலை சீவ முகம் பார்க்க கண்ணாடி இல்லை பாவம் மாமா" என்று கூற அவனோ அவளை பார்த்து முறைத்தான்.
"உன் புருஷன் உடைக்கிறது எல்லாம் உடைப்பான் வாங்கி வைக்கிறது நானா??நானெல்லாம் வரல அவனையே கூட்டிட்டு போ" என்று அவன் கூற,
"ஏன் நீங்க வர மாட்டீங்க நீங்க வந்து தான் ஆகணும் ஆமாம் நீங்க தான் வாங்கணும் இல்லை சோறு கிடையாது இன்னிக்கு மீன் குழம்பு செய்ய போறேன்" என்று அவனுக்கு ஆசைகாட்டி, "வாங்க போலாம்" என்று கூறிவிட்டு அவனையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
அவன் என்னதான் செய்தாலும் அவனை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் இவள் அவனுடன் இயைந்து வாழ்வாள் இவள் அவனையும் மாற்றி விடுவாள். எப்படியோ நல்லா இருந்தா சரி என்று எண்ணிக்கொண்டு அவளை ஒரு ஹோம் சென்டருக்கு அழைத்துச் சென்றான் கே.கே.
