நெஞ்சமெல்லாம் 25
மந்தாரம் : 25
காவ்யாவின் வெள்ளந்தி குணத்தில் அவனது கதறல் அப்படியே தேங்கியதால் மட்டும் தான் அவன் என்ன செய்தாலும் அவள் மாமா நல்லவன் என்ற எண்ணம் மேலோங்கி வர பதினான்கு அல்லது பதினைந்து வயதில் அவனது கதறல் அவளது ஆழ்மனதில் பதிந்ததால் மட்டுமே என் மாமா நல்லவராக தான் இருந்தார் சூழ்நிலை தான் அவரை மாற்றியிருக்கிறது அவரை பழையபடி என்னால் கொண்டு வரமுடியும் விஷயமறிந்த என்னால் மட்டும் தான் என் மாமாவுடன் நன்றாக வாழ முடியும் என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் காவ்யாவின் மனதுக்குள் இருந்தது.
அதை வெளிப்படுத்த தெரியாமல் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருக்க அவனுக்கு அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் இல்லை. அவனைப் பொருத்தவரை விஷயமறிந்து எல்லாம் தெரிந்தும் எதற்காக இந்த நாடகம் என்று மட்டும் தான் அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
இந்த நிலையில்தான் நிவேதாவின் வருகையைக் கண்டு அவன் அவளது அறையை அலங்கோம் செய்துக் கொண்டிருக்க அவள் வந்து தடுக்கவும் அவளது சிகையைப் பிடித்து அவளிடம் விஷயத்தை கூறவும் அவளும் நிவேதாவை இந்த நேரம் எதிர்பார்க்கவில்லை.
அவள் முகம் பச்சையாக அதை பிரதிபலித்தாலும் அதை உணர்ந்துக் கொள்ளும் நிலையில் அவன் இல்லை. "எதுக்காக டி எல்லாரும் சேர்ந்து என் வாழ்க்கையில் இப்படி விளையாடுறீங்க நான் தான் எதுவுமே வேண்டாம்னு ஒதுங்கி தானே இருக்கேன். உங்களுக்கு எல்லாம் அது புரியலையா எதுக்காக என்னை இப்படி படுத்துறீங்க??" என்று அவன் கேள்வி கேட்க மேலும் அவனால் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை ஓங்கி குத்தினான்...
அவன் குத்திய விசையில் அந்த கண்ணாடி உடைந்து சில்லு சில்லாய் சிதறி அவனது கையில் பதம் பார்த்தது. அதில் ரத்தம் வழிய அதை கண்ட அவளோ பதறி, "மாமா உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு??" என்று கூறி ஒரு துணியால் வேகமாக ரத்தம் வெளியே செல்லாமல் இருக்க துணியை கட்டினாள் காவ்யா.
"மாமா உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு எதுக்காக இப்படி உங்களை நீங்களே வருத்திக் கொள்றீங்க??" என்றவள் கேட்க
"வாயை மூடுடி எனக்கு எவளையும் நம்பணும்னு தோணல நம்பவும் மாட்டேன் நீங்க எல்லாம் சரியான கேடிங்க ஒருத்தி காதலிக்கிறேன் காதலிக்கிறேன் சொல்லி வேற ஒருத்தனை கட்டிக்கிட்டா, இங்கே ஒருத்தி மாமா மாமான்னு சொல்லி என்னை கல்யாணம் செய்துக்கிட்டு பாடா படுத்துறா அடுத்தவங்க உணர்வுகளை பத்தி உங்களுக்கு கவலை இல்லை தானே" என கேட்டான்.
"மாமா தயவு செஞ்சு இப்படி சொல்லாதீங்க மாமா எனக்கு நிவேதா அக்காவை பத்தி தெரியாது அந்த அக்கா உங்கள காதலிச்சாங்க உண்மைதான். அந்த அக்கா இப்போ கதிர் அண்ணாவை கல்யாணம் செய்துக்கிட்டாங்க அதுவும் உண்மைதான். ஆனா அவங்க இப்படி செய்திருக்கக் கூடாது எனக்கு அதுல வருத்தம் இருக்கு. அவங்க அப்படி உங்கள விட்டுட்டு போனாங்க அப்படிங்கிறதுனால
எல்லாரையும் நீங்க தவறா நினைக்காதீங்க மாமா நான் உங்கள ரொம்ப நேசிக்கிறேன் மாமா எனக்கு நீங்க வேணும் மாமா உங்கள நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் மாமா" என்றாள்.
அதைக் கேட்ட அவனோ அவளை பார்த்து "ஓ அப்படியா இதை நான் நம்பணும் அப்படி தானே?? சொல்லு டி உன்னையும் நம்பி இருந்தேன் ஆனால் இப்போ இல்லை" என்று கூறியவன், "எனக்காக என்ன வேணாலும் செய்வியா??" என்று கேட்டான் இதே கேள்வியைத்தான் இவர்களது முதலிரவு அன்றும் கேட்டான்.
இன்றும் லேசான போதையிலும் வெறுப்பிலும் ஆத்திரத்திலும் கேட்கிறான் ஆனால் என்னவென்று புரியாமல் அவளும், "ஆமாம் மாமா நான் உங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன். நிவேதா அக்கா எதுக்காக வேண்டுமானாலும் இங்கே வந்திருக்கலாம். அவங்களை விடுங்க அவங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க உங்க வாழ்க்கையில் இருந்து அவங்க போயிட்டாங்க. அவங்கள பத்தி நீங்க இனி நினைக்க வேண்டாம் என்னை பத்தி மட்டும் நினைங்க நான் உங்கள உங்க விருப்பம் இல்லாம கல்யாணம் செய்துக்கிட்டேன். அதுக்காக உங்க ஆத்திரத்தை என் மேல காட்டுங்க அதில் மட்டுமே கவனம் செலுத்துங்க மாமா" என்று கூற,
அதைக்கேட்ட அவனும் அதிர்ந்தான். என்ன இவள் இப்படி சொல்கிறாள் என அவன் இவளை பார்த்து லூஸா இல்லை நம்மள லூசு ஆக்கிறாளா என எண்ணியவன், "என்ன மாமா அப்படி பார்க்கறீங்க உண்மைதான் உங்களுக்கு அப்படி என் மேல உங்க ஆத்திரங்களை கொட்டினா உங்க மன வேதனைகள் குறையும் அப்படின்னா நான் அதுக்கும் தயாராக தான் இருக்கேன்" என்று கூறியவள் வேகமாக அந்த அறையை விட்டுச் சென்று அந்த இரவிலும் அவனுக்கு சூடாக பால் ஆற்றிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு, "இதை குடிங்க மாமா" என்று கூறிவிட்டு அவன் சேதப்படுத்திய அறையை சுத்தம் செய்ய துவங்கினாள்.
அவன் இவளை என்ன விதமாக ஏற்றுக்கொள்வது என புரியாமல் மீண்டும் திண்டாடினான். இவள் நிலையில் அவன் இருந்தாலும் கொஞ்சமாவது ரோசம் இருக்கும் தானே இந்த பெண் என்ன இப்படி இருக்கிறாள் என அவன் யோசித்து யோசித்து அந்த குழந்தை காவ்யா முகம் அவன் கண் முன் வந்து போய் அவனது தலை மீண்டும் சூடாகிப் போனது தான் உண்மை. அவளுக்குள்ளும் எதுக்காக இப்போ இந்த நிவேதா அக்கா இங்கே வரணும் என்று அவள் மீதும் தேவையில்லாமல் கோபம் தான் வந்தது.
ஆமா எப்பொழுது கதிரை திருமணம் செய்துக் கொண்டாளோ அதன் பின்னர் நிவேதாவை காண இவள் சென்றது இல்லை என கூறலாம். அவளது மாமாவை வேண்டாம் என ஒதுக்கி கதிரை திருமணம் செய்த நிவேதாவை அவளுக்கும் பிடிக்கவில்லை.
என் மாமாவை வேண்டாம்னு சொன்னீங்க இல்ல நீங்க எனக்கும் வேண்டாம் அவ்வளவுதான் என எண்ணி அவள் முகம் பாராமல் இருந்தவள் சுப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்ததும் சாரங்கபாணி உடன் சேர்ந்து சாரங்கபாணியின் வீட்டிற்கே குடிபெயர்ந்து விட்டனர்.
அதோடு அவர்களுடன் உண்டான உறவும் முடிவுக்கு வந்தது. அப்படி இருக்க இதுவரை நிவேதாவை பற்றி எண்ணி இருக்காத காவ்யா இப்பொழுது அவள் இங்கு எதற்காக வந்திருக்கிறாளோ என எண்ணி குமைந்து போனாள்.
எப்படி இருந்தாலும் என் மாமா எனக்கு மட்டும் தான் என்று முடிவு செய்துக் கொண்டே அவன் முன்னே அந்த அறையை சுத்தம் செய்ய அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனின் கண்கள் அவள் தேகத்தில் படிந்தது.
