Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 24

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 24

அவளோ, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அக்கா துருவன் மாமா நைட்டோட நைட்டா வந்து உங்கள கூட்டிட்டு போயிடுவாங்க நான் சொல்றேன் அக்கா" என்று கூற அதைக் கேட்ட நிவேதா பதறி, "அவனை வர வேண்டாம்ன்னு சொல்லிடு இனி இதுதான் என்னோட வாழ்க்கை" என்று உடைந்து கூற "என்னக்கா இத்தனை வருஷம் பழகின பழக்கத்தை நீங்க இப்படி தூக்கி எறிஞ்சிட்டீங்களே.துருவன் மாமா பாவம் அக்கா" என்று காவ்யா கூற,

அதைப்பார்த்த அவளோ, "நீ சொல்றபடி எங்க இரண்டு பேரோட கல்யாணம் நடந்தால் நானும் துருவனும் சந்தோஷமா இருப்போம். இந்த கல்யாணம் நடக்கல அப்படினா எங்க குடும்பமே நல்லா இருக்கும். அவங்க சந்தோஷமா இருப்பாங்க காவ்யா உனக்கு ஒன்னு தெரியுமா என்னோட அம்மா இந்த கல்யாணம் நடக்கலைன்னா செத்துப் போயிடுவாங்க. எங்க அம்மா எங்க மாமா குடும்பத்துக்கு வாக்கு கொடுத்து வந்த உடனே இதோ உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடிதான் என்கிட்ட வந்து சத்தியம் வாங்கிட்டு போனாங்க.

எல்லாருக்கு முன்னாடியும் எனக்கு கதிர் மாமாவை பிடிச்சிருக்குன்னு சொல்லவும் சொல்லிட்டாங்க. நானும் கதிர் மாமாவை பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டேன் கதிர் மாமாவும் வந்து எங்கிட்ட கல்யாணத்துக்கு விருப்பமானு கேட்டுட்டு போனார். நானும் தலையை ஆட்டி விட்டேன். என் மனசை நானே கொன்னுட்டேன். துருவன் மனசையும் சேர்த்து கொல்ல போறேன் இந்த நிமிஷம் செத்தா என்னன்னு தோணுது" என்று அழுதாள்.

அதைக்கேட்ட காவ்யா, "என்னக்கா இது பைத்தியக்காரத்தனமா இருக்கு அப்போ உங்களையே நினைச்சிட்டு இருக்க என்னோட மாமாவை நினைச்சு பார்த்தீங்களா??" என்று கேட்க, "என் மனசு பூரா துருவன் தான் நிறைந்து இருக்கான் காவ்யா, ஆனா என்னால என் குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. நானும் நினைச்சேன் படிச்சு முடிச்சிட்டு வீட்ல பேசி துருவனை கல்யாணம் பண்ணிடலாம்னு ஆனால் இப்படி என் மாமாவை கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்வாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என்னை மாதிரி வீட்டுக்கு அடங்கின பொண்ணுங்க காதலிக்க கூடாது.அது எவ்ளோ வலிக்கும்னு இப்போ எனக்கு புரியுது" என்றாள்.

அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் காவ்யா இல்லை எப்படியாவது இவளை துருவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என எண்ணினாள்.

"நீங்க கவலைப் படாதீங்க நீங்க எதையும் யோசித்து குழம்பாதீங்க மூணு வருஷமா நீங்க காதலிச்ச காதலை மட்டும் நினைச்சு பாருங்க அக்கா. நான் சின்னப் பொண்ணு தான் எனக்கே நீங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கும் போது எங்க மாமானால இதை தாங்கிக்க முடியாது" என்று கூறியவள் நிவேதா வீட்டிலிருந்து வெளியே வந்து வேகமாக அவளது வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

துருவனின் அலைப்பேசி எண்ணுக்கு அழைக்க அந்தப் பக்கம் போனை எடுக்கவே இல்லை மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள் காவ்யா.

இடையிடையே இவளது செய்கையை கண்ட சுப்பு கூட, "யாருக்கு டி இந்த நேரத்துல போன் பேசிட்டு இருக்க??" என்று திட்டிவிட்டுச் செல்ல அவளோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துருவன் எப்படியாவது போனை எடுத்து விட மாட்டானா இரவோடு இரவாக வந்து அந்த அக்காவை அழைத்துச் செல்ல மாட்டானா என எண்ணி அவனை அழைக்க இந்த முறை அவன் போனை எடுக்க அவனிடம் விஷயத்தை மடமடவென அவள் கூற அதைக் கேட்ட துருவனும் அதிர்ந்தான்.

"என்ன சொல்ற நீ சொல்றதெல்லாம் உண்மையா??" என்று அவன் நம்பிக்கை இல்லாமல் கேட்க, "ஆமாம் மாமா என் மேல சத்தியமா உண்மைதான் இந்த கல்யாணத்துல அந்த அக்காவுக்கு துளியும் விருப்பம் இல்லை" என்று கூறினாள்.

அவன் அதிர்ந்து, "நான் உடனே வரேன்" என்று கூறி கிடைத்த பஸ்ஸை பிடித்து அவன் வந்தான் கிட்டத்தட்ட திருமணம் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திற்கு வந்து சேர அங்கே சிரித்த முகத்துடன் தன் மாமாவுக்கு மாலையை அணிவித்துக் கொண்டு இருந்தாள் நிவேதா.

அதைக் கண்ட அவனும் அதிர, "மாமா நான் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் மாமா, ஆனா அக்கா பாவம் அவங்க மேல தப்பு இல்லை மாமா அவங்க வீட்ல சொல்லும் போது அவங்க என்ன செய்வாங்க மாமா" என்று அவளுக்கு துணையாக பேச அவன் எதுவுமே பேசாமல் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் அவர்களது தோட்டத்திற்கு சென்றவன் அங்கே சரிந்து வீழ்ந்தான்.

அவளும் அவன் பின்னே ஓடிச் சென்றாள் என்னவோ அவள் மனம் மிகவும் பதறியது.

"மாமா நில்லுங்க மாமா நில்லுங்க??"

அவன் உடைந்து அழுதான். அவனால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை வெறிபிடித்தவன் போல இருந்தான் துருவன். அவன் என்ன செய்ய நினைக்கிறான் என அவனுக்கே விளங்கவில்லை.

"எப்படி அஞ்சு மா அவளால முடிஞ்சது இப்படி செய்ய? அவளுக்காக அவ சொல்ற எல்லாத்துக்கும் நான் ஒத்துக்கிட்டேன். அவளுக்கு இங்கேதான் இருக்கப் பிடிக்கும்னு சொன்னா நான் சரின்னு சொன்னேன். அவளுக்கு நான்வெஜ் பிடிக்காதுன்னு சொன்னா நானும் மூணு வருஷமா சாப்பிடல. அவளுக்கு கருப்பு கலர் பிடிக்காதுன்னு சொன்னா நான் மூணு வருஷமா கருப்பு கலர் சட்டை போடல. அவளுக்கு தண்ணி சரக்கு எதுவுமே பிடிக்காதுனு சொன்னா நானும் மூணு வருஷமா அதை கண்ணால கூட தொடல.

அவ என் கிட்ட உங்க அப்பா சம்பாத்தியத்தில் நீங்க முன்னேற கூடாது. உங்க உழைப்புல இருக்கணும் நம்ம வாழ்க்கை அப்படின்னு சொன்னா. நானும் அதுக்காக இதோ ப்ராஜெக்ட் கூட சீக்கிரமா முடிச்சுட்டேன். இனி எனக்கு எங்க வேணாலும் வேலை கிடைச்சிடும். ஆனா அவ கிடைப்பாளா இவ்வளவும் செஞ்சுட்டு அவளால எப்படி போக முடிஞ்சது.

என்கிட்ட எதுவுமே சொல்லலையே அஞ்சுமா மாமா இருக்காரு அவருடைய கல்யாணம் முடிஞ்சதும் நாம வீட்டில பேசலாம் அப்படின்னு சொன்னா, எனக்கான நம்பிக்கை அவதான் கொடுத்தா எப்படி என்னோட நம்பிக்கையை உடைத்து விட்டாளே அஞ்சு மா?

என்னை நினைச்சுட்டு அவன் கையால கழுத்துல தாலியை வாங்கும்பொழுது எப்படி அவளால சிரிச்சிட்டு இருக்க முடிஞ்சது??" என்று கூற சிறு பெண்ணானாலும் காவ்யா, "இல்ல மாமா நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க அக்காவுக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை அக்காவுக்குமே கல்யாணம் நடக்கப் போகுதுன்னு தெரியாது" என்று நேற்று நடந்த எல்லாத்தையும் அவனிடம் விவரித்தாள்.

அதைக்கேட்ட அவனோ, "இதையெல்லாம் நம்ப சொல்றியா அஞ்சுமா? எப்படி அஞ்சுமா மனசுல ஒருத்தன் கூடவும் வெளியில ஒருத்தன் கூட வாழ முடியும் சொல்லு? அதுக்கு அவ செத்து இருந்தா கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். பொண்ணுங்கன்னா இப்படிதான்னு அவ எனக்கு புரிய வைத்துவிட்டாள். இப்படியெல்லாம் பொண்ணுங்க செய்வாங்க அப்படின்னும் அவதான் எனக்கு புரிய வச்சு இருக்கா.

என் வாழ்க்கையில சந்தோஷத்தையும் துக்கத்தையும் சேர்ந்து கொடுத்துட்டா இனி பொண்ணுங்கள நம்பக் கூடாதுன்னு அவ எனக்கு கத்துக் கொடுத்துட்டா, யாருக்கும் உண்மையா இருக்க கூடாது தானே என்னை ஏன் எல்லோரும் இப்படி சென்டிமெண்ட்ல அடிக்கிறாங்க. நான் இந்த மாதிரி மத்தவங்க ஃபீலிங்ஸை மதிக்கும் போது யாருமே என்னோட ஃபீலிங்ஸை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே" என்று உடைந்து கூறியவன்,

"இனி அவ இல்லாம நான் எப்படி அஞ்சுமா இருப்பேன். என் காதல் செத்துப்போச்சு அஞ்சு மா யாரையும் நம்ப கூடாது என்னோட வாழ்க்கையில யார் சொல்றதையும் கேட்க கூடாதுன்னு இப்போ எனக்கு புரியுது ஐயோ என்னால தாங்க முடியலையே" என அழுதான் துருவன்.

அவன் கண்களில் விழும் ஒவ்வொரு துளி நீரும் காவ்யாவின் நெஞ்சில் விழுந்தது. அவனது ஒவ்வொரு துடிப்பும் அவளின் இதயத்தில் ஆழமாக இறங்கியது. அவனது ஒவ்வொரு குமுறலும் அவள் உள்ளே தவிப்பாக இறங்க, "இனி எனக்கு யார் இருக்கா என் வாழ்க்கையில் ஏன் இப்படி நடக்குது?" என அவளை பார்த்து அவன் கண்ணீரோடு வினவினான்.

அந்த கேள்வி அவளுள்ளே இறங்கினாலும் அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. "மாமா உங்களுக்கு நான் இருக்கேன் மாமா நீங்க அழாதீங்க மாமா" என்றவள் வருந்தி கூறினாள்.

அதை அவள் உள்ளத்தில் இருந்து தான் கூறினாள். அவளால் அவனது கதறலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனை அந்த வயதிலேயே அந்த நொடியிலே அவளது உள்ளத்தில் நிறைத்துக் கொண்டு கூறியவள் மனதில் எந்த சூழலிலும் இனி தன் மாமாவை நான் விட மாட்டேன் என அவள் நினைக்க அவனோ வேறு விதமாக இருந்தான். இனி யாருக்காகவும் என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என நினைத்து மீண்டும் பழையபடி ஆகி போனான்.

பெண் என்பவள் சுகத்துக்கு மட்டுமே கூட வாழ்வதற்கு அல்ல என எண்ணி 16 வயதில் அவன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தானோ அதே நிலையில் மீண்டும் துருவன் மாற என்ன ஆனாலும் என் மாமா நல்லவர் தான் என எண்ணி அவனுக்கு நான் இருக்கிறேன் என காவ்யா துருவனின் பின்னால் செல்ல நினைக்க அதற்கும் அவன் தடை விதிக்க அதை அவளது வெள்ளந்தி குணத்தால் உடைத்து எறிந்து வருகிறாள் காவ்யா...

மந்தாரம் தெளியும்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top