Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

மந்தாரம் : 23

அவளது தாய் நம்பி விட்டார் என்பதை அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ந்தனர்.ஏனெனில் இந்த மூன்று வருட காலத்தில் அவர்கள் இருவரும் பெரிதாக வெளியே எங்கேயும் சென்றதில்லை என்று கூறலாம். துருவனுக்கு பல ஆசைகள் உண்டு ஆனால் நிவேதாவுக்கு அது போன்ற ஆசைகள் இருந்தாலும் அவள் வளர்ப்பை மனதில் கொண்டு அவள் அதிலெல்லாம் அவனுக்கு அனுமதி அளிக்க மாட்டாள்.

அங்கே வளர்ந்த அவனுக்கு இவள் எதற்கெடுத்தாலும் அம்மா என்பதும் வீட்டுல தெரிஞ்சா திட்டுவாங்க என்பதும் அவனுக்கு வினோதமாக இருக்கும். அவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும் என்பதால் அவளுக்காக அவள் கூறுவதற்கு எல்லாம் தலையாட்டுவான் என்றே கூறலாம்.

இந்த ப்ராஜெக்ட் செய்யும் தினங்களில் தான் அவர்கள் இருவரும் அவர்களது கல்லூரிக்கு எதிரே உள்ள காபி ஷாப்பில் சந்தித்துக் கொள்கின்றனர் இல்லையேல் அதுவும் இருக்காது. அவர்கள் மற்ற காதலர்களைப் போல சந்தித்ததும் அங்கே இங்கே சுற்றுவது என்று திரிந்து நடப்பவர்கள் இல்லையே காதலின் ஆழம் கூட கூட அவருக்குள் புரிதல்களும் கூடின என்று தான் கூறவேண்டும். பரீட்சை முடிந்ததும் விடுமுறை என்ற நிலையில் இருக்க விழுந்து விழுந்து பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாள் நிவேதா.

பரீட்சைக்கு இரு நாட்கள் முன்பு நிவேதாவின் தாய் அவளை அழைத்து உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறினார். "பரீட்சை இருக்கே அம்மா பரீட்சை முடிந்ததும் வரேன்" என்று கூற அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.

"உடனே வான்னு சொல்றேன்ல படிப்பு எல்லாம் பிறகு பார்த்துக்கலாம்" என்று கடினமாக கூற நிவேதாவால் மறுக்க முடியவில்லை. மேலும் அவளது தாய் அவளது தாய் மாமாவை அனுப்பி வைத்து விட்டுதான் மகளிடம் விஷயத்தையே கூறியிருக்க

நிவேதாவுக்கு விஷயத்தை கூறும் முன் வாயிலில் அவளது தாய்மாமன் வந்து நின்றுக் கொண்டிருந்தார். இவளுக்கு எதுவுமே விளங்கவில்லை துருவனிடம் விஷயத்தை கூறக் கூட அவளால் முடியவில்லை.

"என்ன விஷயம் மாமா எதுக்காக அம்மா அவசரமா வர சொல்றாங்க??" என்று கேட்ட அவளிடம் கூட விஷயத்தை கூறாமல் அழைத்துச்சென்றார் அவளது தாய் மாமன்.

அவளுக்கு நெஞ்சமெல்லாம் திக் திக் என்று இருக்க நெஞ்சு அடைத்து இறந்துவிடுவோமோ என்று கூட அவள் எண்ணினாள்.யாருக்காவது ஏதாவது தெரிந்து இருக்குமோ என்ற பயம் அவளது நெஞ்சை போட்டு உலுக்கியது துருவனின் விஷயம் ஒரு வேளை தெரிந்து இருக்குமோ என பயந்தாள் அவள்.

அங்கே அவள் மதியம் வாக்கில் சென்றதும் அவளது தாய் அவளை பார்த்து, "நாளைக்கு உனக்கும் உன் மாமன் மகன் கதிருக்கும் கல்யாணம்" என்று ஒரு குண்டை தூக்கி போட, "என்னம்மா இப்படி சொல்றீங்க எனக்கு இரண்டு நாளில் பரீட்சை இருக்கு" என்று தன் அதிர்ச்சியை தன் தாயிடம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் நிவேதா கூற,

அவளது தாய் அதை எல்லாம் கண்டு கவலை கொள்ளாமல், "நிவேதா மாமாவுக்கு ஜாதகம் பார்த்தாங்க அதுல ஒரு வாரத்தில கல்யாணம் நடக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு தான் நாள் நல்ல நாளா இருக்கு அதனால கோவில்ல சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுக்கலாம்னு முடிவு செய்து இருக்கோம்" என்று அவளது அம்மா கூற அதை ஆமோதித்தார்கள் அவளது தாய் மாமனும் அத்தையும்.

"என்னம்மா சொல்றீங்க என்னோட படிப்பு முடிஞ்சு பார்த்துக்கலாம் அம்மா" என்று அவள் மென்மையாக கூறிப் பார்த்தாள்.

அவளால் உறுதியாக அவளது தாயிடமும் அவளது தாய் மாமாவிடம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூறிவிடமுடியாது அதனால் அவள் மென்மையாக கூற, "பொட்ட புள்ளைக்கு படிப்பு என்ன வேண்டி கிடக்கு.எப்படி இருந்தாலும் கதிர் தானே உன்னை கட்டிக்க போறான் அவன் தான் படிக்கட்டும் அத்தைன்னு சொன்னான் அதனாலதான் உன்னை நான் அங்கே படிக்க வைச்சேன் இல்லனா உன்னை படிக்க வைக்க மாட்டேன்" என்று அவளது அம்மா கூற அதைக் கேட்ட அவள் அதிர்ந்தாள்.

அவளது மாமன் மகன் கதிர் கூட, "அத்தை உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு படிக்காத நான் எங்க படிச்ச அவ எங்க? அவளை போய் எனக்கு கல்யாணத்துக்கு முடிவு செய்யறீங்க??" என்று அவளது முகத்தை பார்த்து அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று புரிந்துக் கொண்டு அவன் கூற,

அதைக்கேட்ட அவனது அத்தையும் அவனது தந்தையும், "நீ பேசாமல் இரு உனக்கு எதுவும் தெரியாது இது நாங்க எப்போவோ முடிவு செய்தது தான்" என்று கூறி அவனது வாயை அடைத்து விட்டனர்.

ஆனால் கதிருக்கு நிவேதா என்றால் உயிர் சிறுவயதில் இருந்தே அவளை நேசிக்கிறான். ஆனால் அவளிடம் தன் மனதை திறந்து கூறியதில்லை அப்படியிருக்க ஜாதகம் வேறு இவனுக்கு எதிராக அமையவும் அவனது குடும்பத்தார் நிவேதாவை அவனுடன் சேர்த்து வைக்க எண்ணினர். நியாயப்படி பார்த்தால் கதிர் இந்த செய்தியை கேட்டதும் சந்தோஷப்பட்டு இருக்கத்தான் வேண்டும்.

அவனும் சந்தோஷம் கொண்டான் நிவேதா வீட்டிற்கு வரும்வரை. ஆனால் நிவேதாவை பார்த்ததும் அவள் முகம் பயத்தில் வெளிறி இருப்பதை கண்டதும் அவள் இந்த கல்யாணம் வேண்டாம் என சொல்ல துடிப்பதையும் அவளது முக பாவத்தை வைத்து பிறருக்கு புரியவில்லை என்றாலும் அவளை நெடுநாள் நேசித்த கதிருக்கு தெள்ளத் தெளிவாக விளங்க அவன் தன் மனதை மறைத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் என மறுக்க வீட்டு பெரியவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

அதனால் மறுநாள் திருமணம் என இரவோடு இரவாக அக்கம்பக்கத்து வீட்டிற்கு தகவல் கூறப்பட்டது நிவேதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை மரியாதை நிமித்தமாக பக்கத்து வீட்டுக்காரர் ஆன சுப்பு பாட்டியிடமும் விஷயத்தைக் கூற நிவேதாவின் தாய் வந்தார்.

விஷயத்தைக் கேட்ட சுப்பு, "என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு நாளைக்கு கல்யாணம்னு சொல்ற?? அப்படி என்ன டி அவசரம்?" என்று அவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து நிற்க அதைக்கேட்ட காவ்யா, "என்ன சொல்றீங்க நிவேதா அக்காவுக்கு கல்யாணமா??" என்று கேட்டாள்.

அவளின் அதிர்ச்சியை பொருட்படுத்தாது "ஆமாம் காவ்யா அவளுக்கு கல்யாணம் தான் இனி பயமில்லை அக்கா இங்கே தான் இருக்கப் போறா நம்ம கதிர் தான் மாப்பிள்ளை இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுதான் அக்கா படிக்க போறானு அழுதவள் ஆச்சே இனி நிவேதா இங்கே தான் இருக்கப் போறா இப்போ சந்தோசம் தானே" என்று கூற அதைக் கேட்ட காவ்யா மேலும் அதிர்ந்தாள்.

அவளது மனக்கண்ணில் 'இந்த விஷயம் துருவனுக்கு தெரியுமா தெரியாதா??' என்ற எண்ணம்தான் மேல் எழும்பிக் கொண்டிருந்தது.

"நான் அக்காவை பார்த்திட்டு வரேன் பாட்டி" என்று வேகமாக ஓட,

"இந்த பிள்ளைக்கு அவசரத்தை பாருங்களேன்" என்று கூறி சிரித்தார் நிவேதிதாவின் தாய். மேலும் சுப்பு பாட்டியும் அவர்கள் குடும்பம் அவர்களது முடிவு என்று அவர் பாட்டுக்கு இருந்து கொள்ள நிவேதாவை தேடி வந்த காவ்யா, "அக்கா உங்க அம்மா சொல்றதெல்லாம் நிஜமா??" என்று அவசரம் அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்கும் வீட்டை பார்த்துக் கொண்டே வினவ கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்த நிவேதா இவளது கேள்வியில் உடைந்து அழுதாள்.

பிறகு யாராவது வந்து விடப்போகிறார்கள் என எண்ணி வேகமாக அவளது அறையின் கதவை தாழிட்டு ஜன்னலையும் அடைத்தவள், "எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை. ஆனால் இதுதான் நடக்கப் போகுது எனக்கு துருவன் கிட்ட இதை சொல்லணும் நீ தயவு செஞ்சு அவன்கிட்ட விஷயத்தை சொல்றியா?? நீ அவன்கிட்ட சொல்லு நான் அவனை ஏமாத்த போறேன். அவனோட நம்பிக்கையை உடைக்க போறேன்னு சொல்லு காவ்யா, அவன் கூட சாகுற வரைக்கும் கூட வருவேன்னு சொன்ன என்னால இவனை காதலிக்கிறேன் தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ல முடியல காவ்யா" என்று சொல்லி அழுதாள்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top