நெஞ்சமெல்லாம் 20
அத்தியாயம் - 20
என்னவோ வெகு நாள் பழகிய ஆட்கள் போல அவளைப் பார்த்து "ஏய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க? நான் உன்னை தேடிட்டு இருக்கேன்" என்று கூறவும் அவள் திருதிருவென முழிக்க அவனோ அவளை பார்த்து தன் முகத்தை சுருக்கி கண்களாலேயே அவளிடம் நான் கூறுவது பொய் என்பது போல கூறவும் அவளோ அமைதியாக இருந்தாள்.
பிறகு அந்த கூட்டத்தை பார்த்து, "என்ன மச்சான் இவ என் ஆளுன்னு தெரியாதா??" என்று வினவ அவர்களோ அதிர்ந்து, "என்ன சொல்லவே இல்லை??" என்று கூறவும் அவனும், "ஆமாம் மச்சான் நாங்க தான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை" என்று கூறியவன்
அவளைப்பார்த்து, "இன்னும் ஏன் இங்கு நின்னுட்டு இருக்க போ கிளாஸுக்கு" என்று துருவன் கூற அவளோ வேகமாக தலையாட்டிவிட்டு கிளாஸுக்கு செல்ல அந்த கூட்டமும் சந்தேகமாக இவனை பார்க்கவும் அவனோ அவளை பார்த்து கையசைத்தான்...
அவளும் அதே சமயம் திரும்பி திரும்பி பார்க்கவும் இந்த கூட்டத்தின் சந்தேகம் தீர்ந்தது. பிறகு இதுவரை யாரையும் நிமிர்ந்து பார்த்திராத நிவேதா துருவனை தன் கண்களாலேயே தேடத் துவங்கினாள்.
அவனும் தான் அவளை நித்தமும் தேடிக் கொண்டு இருக்கிறானே.அவள் தன்னை தான் தேடுகிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட அவன் அவள் முன்னே போய் நிற்க அவளோ திடீரென அவன் தன் முன்னே வந்து நிற்பான் என்பதை அறியாமல் தடுமாறி போனாள்.
"என்னை தானே தேடுற??" என்று வினவ அவளோ ஆமாம் என்பது போல தலையை ஆட்ட அதை கண்டு சிரித்தவன், "சொல்லு எதுக்காக தேடின??" என்று கேட்கவும் அவளுக்கு முகம் குப்பென சிவந்தது.
அவள் இதுவரை எந்த ஆண் மகனிடமும் பேசி பழகியது இல்லை. அவளது வகுப்பில் கூட எந்த மாணவரிடமும் பேசமாட்டாள். அவள் வளர்ந்த சூழ்நிலை அவளுக்கு இதெல்லாம் தவறு என படிப்பித்து இருக்க அவளும் அதை எல்லாம் கடைபிடித்து தான் வந்தாள் துருவனை காணும்வரை இல்லை இல்லை துருவன் அவளுக்கு உதவி செய்யும் வரை...
இப்பொழுது துருவனை மிக அருகில் கண்டதும் நிவேதா அவனது அழகிலும் அவனது ஆண்மையிலும் அவன் அவளை காப்பாற்றிய விதத்திலும் அவன் மீது மையல் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனும் அதே சூழ்நிலையில் இருப்பான் போலும். இருவரின் கண்களும் பல கதைகள் பேச அவளும் அவனும் பிறகு எப்பொழுது காதலை பகிர்ந்தார்கள் என இருவரும் அறியர்.
ஆனால் இருவரும் காதலிக்க தொடங்கினர். துருவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறவில்லை அவளும் அவளைப் பற்றிய பொதுவான விஷயங்களை கூறினாள். அவனும் அவனது குடும்பத்தாரைப் பற்றி கூறினானே ஒழிய மற்றபடி அவன் செய்த தவறான விஷயங்களை எல்லாம் கூறவில்லை.
ஏனெனில் நிவேதாவுடன் பழகிய பின்னர் தான் அவளுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்காது என்பதை உணர்ந்துக் கொண்ட துருவன் அவளிடம் இதைப் பற்றி கூறுவதற்கு அஞ்சினான். ஒரு வேளை அவன் கூறினால் அவள் இவனை நிமிர்ந்து கூட பார்த்து இருந்திருக்க மாட்டாள் அது வேறு விஷயம்.
மேலும் அவனுக்கும் அவன் செய்வது தவறு என்றும் அவளுடன் பழகியப்பின் புரிபட துவங்கியது. ஏனெனில் அவள் தந்தையும் இது போல சிற்றின்பத்தில் தன்னை மாய்த்துக் கொண்டு இப்போது அவள் அவளது தாயுடன் இருக்கிறாள்.
அதனால் அவளிடம் கூற அவனுக்கு பயமாக இருக்க அவன் அந்த கடந்து போன காலங்களை மறக்கவே எண்ணினான். மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிவேதாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் பின்னிப் பிணைந்து அந்த கல்லூரிக்கு இவர்கள் இருவரும் காதலர்கள் என தெரிய தொடங்கியது. இந்த ஒரு வருட காலத்தில் அவளை 12 முறை முத்தமிட்டு இருக்கிறான். 10 முறை அணைத்து இருக்கிறான் இதுவே அவன் கெஞ்சி கூத்தாடி தான் அவளிடம் காரியம் சாதித்து இருக்கிறான் அதில் எல்லாம் அவள் கறார் பேர்வழி.
நிவேதாவுடன் இருக்கும் பொழுது அவன் மேலும் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டான். தாய் தந்தையரை இடையிடையே அழைக்க துவங்கினான். அவர்களும் மகன் தங்கள் மீது கோபத்துடன் தான் இருப்பான் என நினைத்த பொழுது மகன் அழைத்து பேசவும் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வணங்காமுடியும் தான் செய்தது சரி என்று தான் நினைக்க துவங்கினார்.
அப்படி இருக்கும் பொழுது தான் அந்த வருடத்தின் கல்லூரி முடிந்து விடுமுறைக்காக மாணவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். வணங்காமுடி கூட தன் மகனை லண்டன் வருமாறு அழைத்தார். ஆனால் அவனோ வர மறுத்தான்.
அவர் என்னவென்று கேட்க அவனோ, "எனக்கு இங்கே இருக்க பிடிச்சிருக்கு நெக்ஸ்ட் டைம் நான் வரேன்" என்று கூறி அவரது வாயை அடைக்க அவரும் எப்படியாவது மகன் சரியாகி விட்டால் போதும் இனி அவனது விருப்பமே என ஒதுங்கிக் கொள்ள அப்பொழுதுதான் நிவேதா அவளது சொந்த ஊருக்கு செல்வதாக கூறினாள்.
அவளது ஊர் என்னவென்று விசாரிக்க அவளும் கூறிவிட அவனும் அங்கு சென்றான் பெயரை கேட்டதுமே அவனுக்கு புரிந்து போனது. மேலும் இந்த ஊருக்கு தான் அவனது தந்தை இடையே போக சொன்ன போது மறுத்துவிட்டான்.
"நான் இந்தியா போகணும்னா நான் யார் வீட்டிலேயும் தங்க மாட்டேன் யார் கூடவும் இருக்க மாட்டேன். ரிலேஷன் யார் வீட்டிலேயும் நான் இருக்க மாட்டேன் யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்" என்று கோபமாக கூறியவன் இந்த இரு வருட காலமாக யாருடைய வீட்டுக்கு போகாமல் இருந்தவனுக்கு ஊர் பேரை கேட்டதும் தலை சுற்ற காதலி அவனை விட்டுச் சென்றாலும் அவனுக்கு இங்கு இருக்கும் ஒரே உறவு அவளை பார்க்காமல் அவனால் இருக்க முடியாதே!
அது போல அவளுக்கும் அவனை காணாமல் இருக்க முடியாதே மூக்கை உறிஞ்சிக் கொண்டு தான் அவள் செல்ல முதன்முதலாக காதலியை பார்க்க அவளது சொந்த ஊருக்குச் சென்றான்.
இது அவனது விதியோ அல்லது விதி செய்த சதியோ என தெரியவில்லை நிவேதாவின் ஊரும் காவ்யாவின் ஊராக அமைந்தது.
மந்தாரம் தெளியும்...
Currently viewing this thread 2 guests.
