நெஞ்சமெல்லாம் 18
அத்தியாயம் - 18
"கண்ணா நாம இந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க தான் வந்தோம் வந்த இடத்தில இங்கிருக்கிற நல்லதை எடுத்துக்க வேண்டாம்னு சொல்லலை ஆனா கலாச்சார சீரழிவுகளை நாம் எடுத்துக் கொள்ளணுமா சொல்லு??" என்று கேட்டார்.
அதை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. "உன் அப்பா நீ நல்லா வருவ அப்படின்னு ஆசை ஆசையா இருக்கேன் பா உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்" என்று உடைந்த குரலில் கூற அவனுக்கு எப்பொழுதும் அவனது தந்தையை ரொம்ப பிடிக்கும்.
ஏனோ 12 வயது வரை அவரில்லாமல் அவன் உறங்க கூட மாட்டான். எப்பொழுது 13 வயதுக்கு வந்தானோ அதிலிருந்து அவனிடம் சில சில மாற்றங்கள் வந்தது. அவன் வணங்காமுடியிடமிருந்து விலக துவங்கினான்.
அதை அன்றே கண்டுபிடித்து இருந்தால் இந்த நேரம் அவன் அவரது கையை விட்டு போயிருக்க மாட்டான். ஆனால் இப்பொழுது மகன் தன் கையை விட்டு போகிறானே என்ற நிலையில் அவர் மகனிடம் இறைஞ்ச மகன் தந்தையின் செயலைக் கண்டு, "அப்பா பிளீஸ் தயவு செஞ்சு என் கிட்ட கெஞ்சாதீங்க என்னால நீங்க கெஞ்சுவதை பார்க்க முடியல" என்று மறுத்தான்.
அவரோ மீண்டும் அதையே செய்ய, "உங்களுக்கு என்னதான் வேண்டும்??" என இறுதியில் அவன் வினவ, "நீ தயவு செஞ்சு இங்கே இருக்காத" என்க அவனோ மறுக்க அந்த நொடி மகன் இப்படி மாறிவிட்டானே என எண்ணியவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல இருக்க அவர் முகம் மாறுவதை கண்டு "என்னப்பா ஆச்சு!" என பதறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு அவருக்கு மைனர் அட்டாக் என்று கூற அப்போது துருவன் அதிர்ந்தான் கிட்டத்தட்ட ஒரு வார காலம் என்ன நடந்தது என்று அவனுக்கு நினைவு இல்லை. தந்தை உயிரோடு வருவாரா மாட்டாரா என்ற நிலைக்கு அவன் செல்ல உயிர் பிழைத்தார் வணங்காமுடி.
கண்விழித்தவர் தன் முன் அமர்ந்திருந்தவனின் கையை பிடித்து, "தம்பி நீ நம்ம ஊருக்கு போ அங்க போய் படிச்சிட்டு வா எனக்கு அது போதும்" என்று மீண்டும் கூறி மகனை இந்த ஊரில் இருந்தே விரட்ட அவர் முடிவு செய்தார். அவனோ ஆரம்பத்தில் மறுக்க பிறகு தந்தை பேசிப்பேசி மகனை மாற்றினார்.
தந்தை ஒன்று கேட்டார் எனில் அவனால் அதை மறுக்க முடியாது. அதனால் சரி என்று அவன் லண்டனிலிருந்து அவனது தாய் நாட்டிற்கு வந்தான். அதிலும் இரண்டு வருடம் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்து பள்ளி படிப்பை முடித்தவர் பிறகு தன் மகனை தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு மிக சாதாரண கல்லூரியில் மகனை சேர்த்து விட்டார்.அதற்கு ஒரு காரணமும் உண்டு பணத்திமிரால் தான் வளர்ந்த சூழ்நிலையிலும் மகன் இப்படியெல்லாம் செய்து விட்டானோ என எண்ணி சாதாரண மக்களின் வாழ்வை மகன் அறிய வேண்டும் என்று மகனை தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கே சென்னையில் பெரியதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் ஒரு நடுத்தர கல்லூரியில் மகனை சேர்த்துவிட்டு, "இங்கே நீ நாலு வருஷம் படிக்க போற நான் தான் உன்னுடைய அப்பானு நீ யாருக்கும் சொல்ல வேண்டாம். உன்னுடைய ஐடென்டிட்டி இல்லாம நீ சுகமாயிரு இந்த நாலு வருஷமும் உன்னை நான் எந்த தொல்லையும் செய்ய மாட்டேன். நீ நீயாகவே இருக்கலாம் ஆனால் எந்த சூழ்நிலையிலும் இந்த மாதிரியான தவறுகள் செய்ய மாட்டேன்னு மட்டும் எனக்கு சத்தியம் செய்து கொடு" என்று கூறினார் வணங்காமுடி.
அதன்படி அவனும் தன் தந்தையின் வாக்குப்படியும் அவருக்கு அவன் செய்து கொடுத்த சத்தியத்தின்படியும் அந்த கல்லூரிக்கு படிக்கச் சென்றான். அவனுக்கு அந்த கல்லூரியில் பயில சுத்தமாக விருப்பமே இல்லை இதுவரை அவன் அங்கு இருந்துவிட்டு இங்கு புதிய சூழ்நிலையில் இருக்க அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
மேலும் அவனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள அவன் அரும்பாடுபட்டான்.
ஆனாலும் தன் தந்தைக்கு செய்து கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக அவன் தன்னைத்தானே அமைதிப் படுத்திக் கொள்ள யாரிடமும் பேச்சும் இன்றி அமைதியாக தன் கல்லூரிப் படிப்பை ஒரு வருடம் எப்படியோ கடந்து விட்டான்.
அதில் ஓரிரு நண்பர்கள் அவனுக்கு கிடைத்து விட்டனர். ஆனால் தந்தைக்கு கொடுத்த வாக்குப்படி அவன் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை இதோ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வந்தது.
அதற்குள் அவனும் அவனது நண்பர்களும் நல்ல கூட்டாக இருக்க இன்றுதான் புதிய மாணவர்கள் கல்லூரிக்கு வந்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் புதிதாக ஒரு மாணவர்களை ராகிங் செய்யலாம் என காத்துக் கொண்டிருக்க லண்டனில் அவன் செய்யாத வேலைகள் இல்லை என்றாலும் இங்கே மிக நல்ல பையனாகத்தான் அவன் தன்னை உருவகப் படுத்திக் கொண்டிருந்தான்.
அனைவரிடமும் அனுசரித்து செல்லும் சுபாவம் உடையவனாக தான் இருந்தான். ஏனெனில் அவன் தந்தையிடம் இந்த நாலு வருட காலமும் நான் நீங்க சொன்னது போல இருக்கேன். என்னால் இருக்க முடியலனா நாலு வருஷம் கழிச்சு நீங்க என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று கூறியே தான் இங்கு வந்திருந்தான்.
அப்படி தன் ஒழுங்கான வாழ்க்கைக்கு முயன்றுக் கொண்டு தன் நண்பர்களுடன் அவன் நின்றுக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவள் வந்தாள் அவள் நிவேதா.
மந்தாரம் தெளியும்...
