Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

மந்தாரம் : 17

12 வருடங்களுக்கு முன்பு...

லண்டனில் ஒரு பிரசித்தி பெற்ற கேளிக்கை விடுதி ஒன்றில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து வயதை உடையவர்களும் தங்களது வாழ்க்கையை உல்லாசமாக கழித்துக் கொண்டிருந்த அந்த இரவு அங்கே ஆண்களும் பெண்களும் பேதமின்றி மக்கள் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தனர்.

அங்கே பதினாறு வயதான துருவன் மற்றும் அவனது நண்பர்களும் அடங்கியிருந்தனர்.அந்த பெரும் மக்கள் கூட்டத்தில் இவர்களுக்கு என்று ஒரு குட்டி கூட்டமும் இருந்தது அது தான் அவனுடைய உலகம் என்றே கூறலாம்.

அவர்கள் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் துருவனும் அடக்கம் துருவன் கைகளில் போதை மருந்து விளையாடிக்கொண்டிருக்க அதை போதை ஏற்றும் விழிகளோடு தன்னுள்ளே செலுத்தியவன் அது போதாதென்று மதுவையும் நாடினான்.

மதுவும் போதாது என்று அவனருகே அமர்ந்து இருந்த பெண்ணின் ஆடைக்குள் என்ன இருக்கிறது என்றும் பார்த்துக் கொண்டிருந்தான் அது வேறு விஷயம். பதினாறு வயதில் அனைத்து பழக்கங்களுக்கும் உடையவனாக இருந்தான் துருவன்...

அவனது நண்பர்களும் அதே நிலையில்தான் இருந்தனர். பதினாறு வயதில் அந்த நாட்டின் கலாச்சாரப்படி சுதந்திரமாக அவரவர் வாழ்க்கையை வாழலாம் என்பதை இவர்கள் தவறாக புரிந்துக் கொண்டு அவரவர் வாழ்க்கையை எப்படி எப்படியோ வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

அதில் துருவனும் அடக்கம் தன் தந்தை அவனுக்கு கொடுத்த சுதந்திரத்தை தேவையில்லாத வழிக்கு பயன்படுத்தி பதினாறு வயதிலேயே அவன் செய்யாத தவறுகள் இல்லை எனலாம்.

ஹோட்டல் வேலையில் பிஸியாக இருந்த வணங்காமுடி இப்பொழுது ஊரெல்லாம் அவரது ஹோட்டல் தான் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் அவர்களது பாரம்பரிய உணவை உண்ண இவர்களது ஹோட்டலை நாட அதில் பிசியாக இருந்த அவர் தன் மகனது செயல்களை கவனிக்க மறந்து போனார் என்று தான் கூற வேண்டும்.

இப்பொழுதெல்லாம் தாமதமாக வருகிறான் என மனைவி கூறும் பொழுதும் அதை பெரிதாக தன் மூளைக்குள் செலுத்திக் கொள்ளாத வணங்காமுடியின் அலைப்பேசி அலறியது அவரது மனைவி தான் அழைத்தார்.

"என்னங்க துருவனை போலீஸ் பிடிச்சிட்டாங்க அவன் மது அருந்திவிட்டு ரோட்ல பொண்ணுங்க கூட தப்பா இருந்தான்னு அவனை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க" என்று மனைவி பதறி கூற அதைக் கேட்ட வணங்காமுடி அதிர்ந்தார்.

"என்ன??" என அவர் கேட்க மனைவி பதறவும், "நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாதே" என்று மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷன் விரைந்தார் வணங்காமுடி.

நமது நாட்டில் என்றால் ஒட்டு துணி இல்லாமல் அமர வைத்து இருப்பார்களோ என்னவோ இங்கு மரியாதையாக தான் அமர வைக்கப்பட்டு இருந்தான் துருவன்.

அங்கே மகனை போலீஸார் அமர வைத்து இருக்க அந்த காட்சியை கண்டு அதிர்ந்தார் வணங்காமுடி. இன்று வரை இங்கு வந்த காலம் தொட்டு போலீஸ் ஸ்டேஷன் கண்டிராத பரம்பரையை சேர்ந்த வணங்காமுடி தன் மகனுக்காக போலீஸ் ஸ்டேஷன் ஏறவும் அதுவும் மகன் சுயநினைவு இல்லாமல் இருப்பதை கண்டவர் அதிர்ந்தார்.

போலீஸார் அவரை பார்த்து, "உங்க பையன் போதை மருந்து எடுத்திருக்கார் விசாரணையில் அவரை பிடித்து இருக்கோம்" என்று கூற அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி 2 மாதம் சிறையில் அடைக்க 16 வயதில் சிறை சென்று இருந்தான் துருவன்.

அதன் பிறகு எவ்வளவோ போராடியும் மகனை வெளிக்கொண்டுவர அவரால் முடியவில்லை. நமது ஊர் போல காசு கொடுத்ததும் அங்கே வெளியே விடும் ரகம் இல்லையே அதனால் அவரால் முடியாமல் போக இரண்டு மாதம் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த தன் மகனிடம், "துருவா என்னப்பா இது??" என்று கேட்க மகனும் அதை கேட்கும் நிலைமையில் இல்லை.

இரண்டு மாத காலம் அவன் இந்த போதை பழக்கங்களை விட்டிருந்தாலும் அவனால் இங்கே இருக்கும் பொழுது அந்த பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் அவன் தந்தை கேட்டும் அவருக்கு பதில் அளிக்காமல் வெளியே சென்று இருந்தான்.

அவனுக்கு அவன் செய்யும் விஷயங்கள் தவறென்று புரியவில்லை. ஆனால் அவனது குடும்பத்தார் பார்வை தான் தவறு தன்னை குற்றவாளி போல நடத்துகிறார்கள் என அவன் எண்ணி அவன் செல்ல அவனது நண்பர்கள் கூட்டமும் அங்கு தான் இருந்தது.

அவனுடன் போலீஸில் பிடிபட்ட இருவர் மற்றும் போலீஸை பார்த்ததும் ஓடிய இருவர் என அவர்கள் அமர்ந்து இருக்க மீண்டும் அவர்கள் அதே நிலையில் தான் இருந்தனர்.என்ன ஒன்று அவர்கள் நடுரோட்டில் எதையும் வைத்துக் கொள்ளவில்லை.நண்பனின் வீட்டில் வைத்துக் கொண்டனர் துருவன் அங்கேயே கிடந்தான்.

வணங்காமுடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவனை அழைக்கச் செல்ல அவனோ வர மாட்டேன் என மறுத்தான்.

"தயவு செஞ்சு என்னை விடுங்க என்னால இது இல்லாம இருக்க முடியாது யு நோ ஒன் திங் நான் இப்படித்தான் டாடி என்னால என்னை மாத்திக்க முடியல.நான் ஒரு பொண்ணு கூட நடுரோட்டில் இருக்கும்போதுதான் போலீஸ் என்னை பிடிச்சது எனக்கு அது தப்பா தெரியல. என்னோட ஃபீலிங்ஸை நான் அந்த பொண்ணு கூட ஷேர் பண்ணிட்டு இருந்தேன். இது என்னுடைய லைஃப் இதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை" என்று கூற அதைக் கேட்ட தந்தை அதிர்ந்தார்.

"என்ன தம்பி சொல்ற உனக்கு 16 வயசு ஆகுது நீ இந்த வழியில போறது ரொம்ப தப்பு அதுவும் நீ இன்னும் குழந்தை" என்று கூற, "குழந்தையா விட்டா நீங்க ஃபீடிங் பாட்டில் கொடுத்து என்னை உட்கார வச்சுடுவீங்க போலயே இப்போ நான் டீனேஜ் அதை மறந்துடாதீங்க. என்னோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம் என்னால இது இல்லாம இருக்க முடியாது இப்படித்தான் என்னால இருக்க முடியும்" என்று அவன் கூற இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என அவருக்கு தெரியவில்லை.

மேலும் இவனிடம் எகிறினால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததும் அவர் அவனிடம் பணிந்து போனார்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top