Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 16

அதே நேரம் ஒரு பாரில் மூச்சு முட்ட குடித்துக் கொண்டிருந்தான் துருவன். அவனுக்கு என்ன செய்வதென்று சுத்தமாக புரியவில்லை. அவளுடன் எப்படி இருந்தாலும் அவன் வாழ்க்கையை வாழ அவன் தயாராக இல்லை. அவன் அவளை தீண்டி இருக்கிறான் தான் இல்லை என்று அவன் மறுக்கவில்லை. ஆனால் அவனால் அவளுடன் தன் முழு வாழ்க்கையையும் வாழ முடியாது.

மேலும் அவள் அவன் நினைத்தது போல இல்லை. ஏதோ ஒரு முடிவோடுதான் தன்னை திருமணம் செய்திருக்கிறாள் என்று அவன் நினைக்க... முழு போதையில் இருந்தவன் பிறகு அந்த பாரை விட்டு செல்லலாம் என வெளியே வந்தான்.

அவனது கால்கள் அதிக போதையில் தள்ளாட அவன் அளவுக்கதிகமாக குடித்து இருக்கிறான் என அவன் உணர்ந்த அந்த நொடி இப்படியே வண்டியை செலுத்த அவனால் முடியாது என்பது அவனுக்கு தெரியும்.

பாரிலிருந்து அவனது கார் பார்க்கிங் வரை செல்லத்தான் அவன் யோசிக்கிறான். ஆனால் அதுவே அவனால் இயலாமல் போக காருக்குள் சென்று சிறிது நேரம் உறங்கி விட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என எண்ணி மெல்ல அடி எடுத்து வைக்க அங்கே ஒரு கல் தடுக்கி யார் மீதோ மோதினான்.

மோதியது ஒரு பெண் என்றும் அதுவும் அவள் இவனைக் கண்டதும், “ஹே பார்த்து" என்று தமிழில் உரையாடியது அவனது செவியில் கேட்கவும் மெல்ல நிமிர்ந்து பார்த்தான்.

அது அவள்..! அவளேதான் அதிகமான போதையிலும் அவள் முகத்தை அவனால் மறக்க முடியாது. அவளை பார்த்தவனின் பார்வையில் அவளை கொலை செய்யும் ஆத்திரம் வந்தது. அவன் வாழ்க்கையில் எந்த முகத்தை மறுபடியும் பார்க்க கூடாது என நினைத்து இருந்தானோ...

அந்த முகம் இவள் தான்… இவனுடைய வாழ்க்கையின் இந்த நிலைக்கும் காரணமும் இவள் தான் என்ற ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது.

அந்த பெண்ணுக்கும் அதே அதிர்ச்சி இருக்கிறதோ என்னவோ அவள் அவனை நன்றாக கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்க, இன்னும் அவள் தன்னை தொட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்டு அவளிடமிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொண்டவன் அவளது கையை தட்டிவிட…

அந்த பெண்ணோ, “துருவ்" என்று அழைக்க… அவனோ திரும்பியும் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான். காரை எடுக்க முடியாத போதையில் அவன் சற்றுமுன் இருந்தாலும், இப்பொழுது அவனது போதை சற்று இறங்கி இருப்பது போல அவனுக்குத் தோன்ற காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் செல்லும் திசையையே பார்த்து கொண்டு அவள் நிற்க, "என்ன பார்க்கறீங்க? சரியான பொறுக்கி இவன். இவனுக்கு போய் ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து வைச்சுட்டாங்க" என்று கூறினான் நரேந்திரன்.

"என்ன துருவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா??" என அந்த பெண் கூற,

"ஆமாம் இவனை உங்களுக்கு தெரியுமா? அவளோட அப்பா வீட்டுக்கு பக்கத்தில் தான் என் வீடு. நான் கூட அவளோட கல்யாணத்துக்கு போனேன். இவன் தான் மாப்பிள்ளை. இவன் சரியில்லைன்னு சொல்லியும் இவளை இவனுக்கு பிடிச்சு தள்ளிட்டார். பாவம் காவ்யா" என்று கூறினான்.

அதை கேட்டு அதிர்ந்த அவள், "என்ன பேர் சொன்னிங்க??" என்று கேட்டாள்.

"காவ்யா" எனவும் அந்த பேரை கேட்டதும் அவளுக்கு எல்லாமே விளங்கி போனது. எப்படியாவது துருவனை சந்தித்தே ஆக வேண்டும் என எண்ணினாள் அவள். மேலும் அவள் பார்வையும் துருவனின் கார் செல்லும் திசையிலேயே இருந்தது.

அதே நேரம் அங்கே வீட்டிலோ கே.கே அவளிடம், "இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு தேவையா? பொண்ணுனா இப்படி அடங்கித்தான் போகணுமா? அவன் நாய போட்டு அடிக்கிற மாதிரி அடிக்கிறான் அதெல்லாம் சரினு சொல்ல வரியா? இதே இந்த ஊர்ல இந்த மாதிரி அவன் செய்தான்னா இங்க இருக்க பொண்ணுங்க அவன போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடுவாங்க உனக்கு தெரியுமா? நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். அவனுக்கு சுத்தமா உன்னை பிடிக்கல எதுக்காக இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படற??

அவன் உனக்கு தகுதியானவன் கிடையாது. நான் உன்னோட வெகுளி தனத்தை வைத்தோ இல்ல உன்னால இங்கே இருக்க சமூகத்துக்கு கூட வாழ முடியாது அப்படிங்கிறதன்னால நான் சொல்லல. அவன் உனக்கு சரியானவன் கிடையாது. அவன் உன்னை மாதிரி ஒழுக்க சீலன் கிடையாது" என்று கூற…

அதைக்கேட்ட அவளோ, "தயவு செஞ்சு அதையே சொல்லி என்னை வேதனை படுத்தாதீங்க. எனக்கு தெரியும் என் மாமா எல்லா தப்பும் பண்ணிட்டு இருக்காரு அப்படின்னு… இருந்தாலும் எனக்கு என் மாமா தான் வேணும். என் மாமா நல்லவரு மாறிடுவார்" என்று அவள் கூற அவனோ இந்தப் பெண்ணிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என திண்டாடிக் கொண்டிருக்க... அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தான் துருவன்.

அவன் காதில் இவர்கள் இருவரும் பேசியது கேட்டு இருக்குமோ என எண்ணினான் கே.கே. ஆனால் துருவனின் பார்வையும் இருவரையும் துளைத்தெடுத்தது.

அதில் இன்னும் அவள் இருப்பதை பார்த்து, "நீ இன்னும் போகலையா??" என்று கேட்க கேகேவிற்கு கோபம் வந்தது.

“அவ எதுக்காக போகணும்? நீ செய்யறது சுத்தமா சரியில்ல. அவ உன்னுடைய மனைவி. அவ இங்க தான் இருப்பா அப்படி போகணும்னு நீ சொன்னா உன்னோட அப்பாவை வர சொல்லு அனுப்பி வைக்கிறேன்" என்று கூறினான்.

அதை கேட்ட துருவன், "இப்ப நீயும் இவ கூட கூட்டு சேர்ந்துட்டியா? எல்லாரும் என்னை தனியா ஆக்கிட்டீங்க தானே? நான் தனிமரம் தானே" என்று ஒரு மாதிரி குரலில் கூறியவன் மெல்ல இருவரையும் ஒரு பார்வை பார்க்க அவளையும் ஒரு பார்வை பார்த்தான் தான்.

அவளோ, "மாமா" என நாய்க்குட்டி போல அவன் அருகே செல்ல ஒரு அடி எடுத்து வைக்க, "பேசாதடி" என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அவளோ முகம் வாடி போக அதைக்கண்ட கே.கே, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அவன் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை. அவ்வளவுதான்.! என் நண்பன் அவனை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எப்படி இருந்தாலும் நான் அவன் கூடத்தான் இருப்பேன். ஆனால் அவன் உனக்கு செய்யற துரோகத்தையும் என்னால மன்னிக்க முடியாது.

இனி நீயாச்சு உன் வாழ்க்கை ஆச்சு. அவனை உன்னை ஏத்துக்க வைக்கிறது உன்னுடைய பொறுப்பு. எனக்கு தோணுது நீ அதுக்காக தான் இங்க வந்து இப்படி இருக்கன்னு… ஓகே நீ உனக்கு என்ன தோணுதோ அதை செய். உனக்கான எல்லா உதவிகளும் நான் செய்கிறேன். என்னை உன்னோட சொந்த அண்ணாவா நினைச்சுக்கோ" என்று கூறிக்கொண்டு கே.கே வெளியே சென்று விட்டான்.

இவளோ இனி என்ன செய்வது என புரியாமல் கையை பிசைந்துக் கொண்டு இருக்கும் நேரம் துருவனின் அறைக்குள் இருந்து சத்தம் கேட்க.. வேகமாக அவள் ஓட அங்கே அவனது அறையை அவன் நாசம் செய்துக் கொண்டிருந்தான்.

வெறி பிடித்தவன் போல அவன் அந்த அறையை அலங்கோலம் செய்ய சத்தத்தை கேட்டு ஓடி வந்தவள் கதவை திறக்க அங்கே அவன் வெறி பிடித்தவன் போல நிற்க அவளோ, "மாமா.. என்ன மாமா இப்படி பண்றீங்க?" என கூறி அவனது செய்கையை தடுக்க அவளது சிகையை கொத்தோடு பிடித்தவன்,

"என்ன டி நடிச்சிட்டு இருக்கியா?? எதுக்கு டி நீ இங்கே வந்து இருக்க?? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.. இன்னிக்கு யாரை பார்க்க கூடாதோ அவளை பார்த்தேன் டி. என்ன டி விஷயம் நீயும் அவளும் என்ன நாடகம் போட இங்கே வந்து இருக்கீங்க?" என்று மொட்டையாக கூற

அவளுக்கு தெளிவாக விளங்கவில்லை, "யாரை பார்த்தீங்க மாமா?? எனக்கு புரியலை" என்று அவள் குழப்பமாக வினவி னாள்.

அதை கேட்டவனோ, "உனக்கு எது தான் டி புரிஞ்சு இருக்கு... நிவேதா.! சொல்லு டி அவளை தெரியாதுன்னு சொல்ல போறியா?" என்றான் உக்கிரமாக.

அந்த பேரை கேட்டதும், "என்னது? நிவேதா அக்காவா!" என காவ்யாவும் அதிர்ந்தாள்...

மந்தாரம் தெளியும்...



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top