நெஞ்சமெல்லாம் 15
மந்தாரம் : 15
அவனது கோபத்தை புரிந்துக் கொள்ள முடியாதவளுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று கூட தெளிவாக விளங்கவில்லை. அப்போதும் எழ முடியாமல் எழுந்தவள், "மாமா நான் ஒண்ணுமே செய்யலையே மாமா" என கூற
அவள் இரு கன்னமும் வீங்கி இருப்பதை பார்த்து ஒரு நொடி அவன் அதிர்ந்தாலும் அதை நினைக்க கூட முடியாத அளவுக்கு அவள் தன்னை திருமணம் செய்துக் கொண்டாளே என்ற ஆத்திரம் வர, "நீ என்ன செய்யறன்னு உனக்கு புரியுதா இல்லையா? இல்ல என்னை அசிங்கப்படுத்தணும்ன்னு நினைச்சிட்டு இருக்கியா? நீ என்ன செய்யற என்னன்னு உனக்கு தெரியாது அப்படித்தானே? இதோ பார் நீ என்ன செய்வ ஏது செய்வன்னு எனக்கு தெரியாது மரியாதையா இங்கே இருந்து போயிடு.
இல்ல அப்படின்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நான் ரொம்ப நல்லவன் அப்படின்னு நினைச்சு இருக்கியா? நான் அப்படியெல்லாம் கிடையாது. புரியுதா இல்லையா? இது தான் நான். இது தான் என்னோட குணம் புரியுதா??
என்னமோ நான் கல்யாணம் செஞ்சுகிட்டா நான் திருந்திடுவேன்ன்னு எங்க அப்பா பிளான் பண்ணி உன்னை என் தலையில கட்டினாரு. நான் திருந்திடுவேன்னு நினைப்பா இல்ல உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னை மாத்திடலாம். அப்படியே நான் உன்கூட வாழ்ந்திடுவேன் அப்படின்னு கனவு கண்டு என்னை கல்யாணம் பண்ணிட்டா நான் வாழ்ந்துடுவேன்னு நினைப்பா? நான் தான் சொல்றேனே.
உன்னை எனக்கு பிடிக்கல! உன் கூட வாழ பிடிக்கல! என் வாழ்க்கையில் யாரும் வேண்டாம்ன்னு ஒதுங்கி இருக்க விட மாட்டீங்களா? என்ன நான் நல்லவன்னு நினைப்பா எனக்கு தண்ணி தம்மு பொண்ணுங்க எல்லா பழக்கமும் இருக்கு. நீ வரதுக்கு முன்னாடி வரைக்கும் நான் பொண்ணுங்க கூட தான் இருந்தேன். இருக்கேன். இருப்பேன்.. புரியுதா? அடுத்த பொண்ண தொட்ட கை தான் உன்னையும் தொட்டுச்சு. இப்ப சொல்லு உனக்கு நான் தேவையா?? நீ பார்த்த துருவன் இல்லை நான் புரியுதா உன் மரமண்டைக்கு?" என்று அவன் வெடித்தான். அப்படியாவது அவள் தன்னை விட்டு போய் விட வேண்டும் என அவன் நினைக்க…
அவளோ அவன் கூறுவதை கேட்டு அதிர்ந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு, "நான் உங்கள விட்டு போகணும் அப்படின்னு தானே மாமா இதையெல்லாம் சொல்றீங்க. ஆனா நான் இப்படித்தான் சொல்லவும் ஒரு தைரியம் வேணும் மாமா. நான் நல்லவன் இல்ல அப்படின்னு சொல்றதுக்கு ஒரு தைரியம் வேண்டும். அது என் மாமாவுக்கு இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும் நீங்க ரொம்ப நல்லவங்க தான் மாமா... நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் மாமா" என்று கூற
"என்னடி நான் சொல்லிட்டு இருக்கேன்ல... திரும்பத் திரும்ப மாமா மாமான்னு உருகிட்டு இருக்க. என்கூட வாழ உனக்கு என்ன டி தகுதி இருக்கு சொல்லு டி… என் பக்கத்தில நிற்க கூட உனக்கு அருகதை கிடையாது. இடியட்! நான் வரதுக்குள்ள நீ இங்கே இருக்க கூடாது. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" என்று அவன் கூற,
"நீங்களா இந்த வீட்டை விட்டு துரத்துற வரை நான் போக மாட்டேன் மாமா" என்று அவள் கூறினாள்.
"அதையும் நான் பார்க்கிறேன் டி. உன்னை எப்படி இங்க இருந்து துரத்தணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று அவளிடமே கூறியவன்,
“நானா வெளியே அனுப்பினா போவேனு தானே சொன்ன... இதோ அனுப்பறேன் வெளியே போ" என்று கூறியவன் அவளை இழுத்துக் கொண்டு அவன் வீட்டை விட்டு வெளியே விட்டவன் அவள் முகத்தை பார்த்து “இதோ உன்னை வெளிய விட்டு விரட்டிட்டேன் வெளியே போ" என கூறி அங்கிருந்து சென்று விட… அவளோ அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளியே வர அந்த வீட்டு வாயிலில் நின்றபடியே அவளும் அழுதாள்.
அவளுக்கு தெரியும் தனது மாமனுக்கு தான் உகந்த ஆள் இல்லை என்று. ஆனாலும் அவனது வாழ்க்கை பக்கத்தை அறிந்தவளுக்கு தன்னை விட வேறு யாராலும் தனது மாமாவுடன் இருக்க முடியாது, மேலும் அன்று அவன் பேசிய வார்த்தைகள் இன்றும் அவளுக்கு காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
என்ன தான் இவள் வெள்ளந்தியாக இருந்தாலும் அதை வெள்ளந்தி குணம் தான் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
அவன் என்ன செய்தாலும் பொறுமையாக போக வைக்கிறது என்பதை உணர்ந்தும் உணராமலும் இப்பொழுதும் தனது மாமாவுக்கு அவளை பிடிக்கவில்லை என்றாலும், நான் எனது மாமாவை விட்டு போக மாட்டேன் என எண்ணி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.
தான் ஒன்று நினைக்க நடந்தது வேறொன்றுமாகி போக... விவரம் இல்லாத ஒரு பெண் இங்கே வந்தால் படித்த எருமை மாடுகள் அவளை நடத்தும் விதத்தை எண்ணி கே.கே எரிச்சலுற்று அவனது நண்பர்களை திட்டி அனுப்பி வைத்தவன், வீட்டுக்குள் வர அப்போது தான் துருவன் வீட்டை விட்டு வெளியேற்றவும் அவள் வாசலில் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தவன், அவள் அருகே வந்து அவள் முகத்தை பார்த்து அதிர்ந்தவன் மனதுக்குள் தன் நண்பனை திட்டி, "வா மா உள்ளே வா" என்க,
அவளோ அவனை பார்த்ததும் அழ, "மா இங்கே நின்னு அழாத மா.. உள்ளே வா பேசுவோம்" என்றான்.
"இல்லை அண்ணா.. அவர் உள்ளே வர கூடாதுன்னு சொல்லி இருக்கார்" என்றாள்.
"அப்போ வெளியேவா அவன் வரும் வரை நிற்க போற??" என்க அவளோ," வேற என்ன செய்யறது" என்றாள்.
"இங்கேயே நின்னு அழுதிட்டு இருந்தா, அதை யாராவது பார்த்து போலீஸ்கிட்ட சொன்னா உன் புருஷன் தான் ஜெயிலுக்கு போக வேண்டியது இருக்கும். அப்புறம் உன் இஷ்டம்" என்றான்.
"என்ன நான் அழுதா மாமாவை போலீஸ் பிடிக்குமா??" என்றவள் வேகமாக தன் கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே வர அதை கண்டவனோ சிரிக்க…
காவ்யாவோ அவனை பார்த்து முறைக்க "என்கிட்ட மட்டும் முறை உன் புருஷன் உன்னை அடிச்சிட்டு போறானே? அவனை இழுத்து நாலு அறை அறைய வேணாமா??" என்று கேட்டான்.
அவளோ, "என்னது கட்டின புருஷனை அடிக்கவா??" என அதிர்ச்சி அடைந்து கேட்டாள்.
"உன்னை அடிக்கிற புருஷனை அடிக்கலாம் தப்பு இல்லை" என்று கூற அதை கேட்டவளின் முகம் தொங்கி போனது.
"இப்போ சொல்லு இவன் உனக்கு தேவையா? இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இவனை போல ஒருத்தன் உனக்கு வேணுமா? அவன் சொல்றது எல்லாம் உண்மை தான். அவனுக்கு எல்லா பழக்கமும் இருக்கு" என்றான்.
அதை கேட்ட அவளோ "அவரு கொலையே செஞ்சு இருந்தாலும் எனக்கு அவரு தான் வேணும்" என்று வெடித்தாள். என்ன இவள் இப்படிப்பட்ட பெண்ணாக இருக்கிறாள் என கே.கே அதிர்ந்து அவளை பார்த்தான்.
