நெஞ்சமெல்லாம் 13
மந்தாரம் : 13
ஜேம்ஸ் அழைக்கவும், ‘இவன் எதுக்கு அழைக்கிறான்?’ என எண்ணி அவன் முகம் மாற… அதைப்பற்றி கவலை இல்லாமல் ரிச்சர்ட்டும் அழைத்து,
"என்ன பாஸ் போனே எடுக்க மாட்டேங்குற? நாங்க உன் வீட்டுல இருக்கோம். நீ எங்கே மேன் இருக்க?? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாமே! சொல்லவே இல்லை. லாஸ்ட் வீக் கூட டீனாவோட உன்னை பார்த்தேன். அப்போ கூட சொல்லல? உனக்கு கல்யாணம் ஆன விஷயம் அவளுக்கு தெரியுமா இல்லையா???" என நக்கலாக வினவினான்.
துருவனின் முகம் கருத்ததது. "என்ன டா அமைதியா இருக்கே??" என்று ஸ்பீக்கரில் போட்டு ஜேம்ஸ் வினவ…
இவனோ கோபம் கொண்டு, "இப்போ உங்களுக்கு என்ன வேணும்??? ஆமாம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு போதுமா? எவகிட்ட வேணாலும் சொல்லுங்க. அவங்க தான் என் பின்னாடி சுத்துறாங்க. நான் இல்லை" என்றான் கோபமாக.
"ஓ செம்ம கோபமா இருப்ப போல? அதெல்லாம் ஓகே.! நீ நேரிடையாக வா பேசுவோம். உன் மனைவி ரொம்ப அழகு ரொம்ப வெகுளியா இருக்காங்க டா, உனக்கு ஏத்த ஜோடி தான். முதல்ல நீ சீக்கிரம் வா.. வரும் போது கே.எஃப்.சி அண்ட் பர்க்கர் வாங்கிட்டு வா" என்றான்.
அவனும் சரி என்று கூறினாலும் காவ்யாவை எண்ணி அவனுக்கு சற்று கலக்கம் தான். அதனாலேயே வேகமாக செல்ல வேண்டும் என்று எண்ணினான். இது கே.கேவின் வேலையாக தான் இருக்கும் என்று தன் நண்பனின் மீதும் கோபம் கொண்டான்.
இங்கே இவளோ வந்தவர்களுக்கு எல்லாம் காபி பஜ்ஜி என்றெல்லாம் போட்டுக் கொண்டிருந்தாள்.
துருவனின் நண்பர்களில் இருவர் தமிழ் நாட்டு ஆட்கள். மேலும் இருவர் வடநாட்டவர். அடுத்து இருவர் இந்த நாட்டை சேர்ந்த வெள்ளையர்கள். அப்படி இருக்க அவள் பஜ்ஜி செய்துக் கொண்டு வரவும், அதில் ஒரு தமிழ்நாட்டு நபரும் வடநாட்டு ஒருவரும் என்னவோ பஜ்ஜியை உண்டதே இல்லை என்பது போல நடிக்க இரண்டு லண்டன் வாசிகளும் மீதமுள்ள இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவள் தயார் செய்த உணவை விழுங்கினர்.
அந்த சமயம் பார்த்து தான் கே.எஃப்.சி மற்றும் பர்கர் வாங்கிக்கொண்டு துருவன் வந்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் சிரித்த முகமாக இருந்த மனைவியை பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
அவர்கள் முன்னால் சேலை கட்டிக்கொண்டு தலையில் ஒரு லிட்டர் எண்ணெய் ஊற்றி மஞ்சள் அரைத்து பூசி, பூதம் போல இருக்க இவனுக்கு ஆத்திரமாக வந்தது. இடத்துக்கு இடம் தகுந்தது போல வாழ கூட தெரியவில்லையே என எண்ணினான்.
ஆனால் அவனது நண்பர்கள் அவளது கோலத்தை பெரிதாக கண்டு கொண்டது போல தெரியவில்லை. ஒருவன் மட்டும் துருவனை கேலியாக பார்த்தான்.
"என்ன மச்சி உன் மனைவி இப்படி இருக்காங்க? நீயோ இப்படி அவங்க பக்கா பட்டிக்காடு... பக்கா மேட்ச் தான் மச்சான்" என்று கூறி சிரிக்க…
அவன் முகம் கருக்க ஒன்றும் கூறாமல் உணவை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தவன் தன் மனைவியை பார்த்து, "தண்ணி எடுத்துட்டு வா" என அவளை அவ்விடம் விட்டு நகர்த்த முடிவு செய்ய,
அவளோ, "ஐயோ மாமா... என்கிட்ட பேசிட்டாங்களே!! சரி மாமா" என்று உள்ளே சென்றவள் அடுத்த நொடியே வெளியே வந்து
"மாமா நான் தான் காப்பி ரெடியாகி வச்சிருக்கேன். அதை குடிங்க" என்று பாசமாக கூற, அவனோ அவளை எப்படியாவது இவர்களின் பார்வையில் அகற்ற வேண்டும் என நினைக்க, அதை புரிந்துகொள்ளாமல் அவள் அவனிடம் வளவளத்து நின்றாள்.
ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக அவனது முகத்தை அவளால் சரியாக பார்க்க முடியவில்லை என்பதாலும் இப்பொழுது தான் அவன் வந்திருக்க... அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்ததாலும் மேலும் அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததாலும் அவள் அங்கேயே ஒட்ட வைத்த பசை போல இருக்க இங்கே தகதகவென எரிந்துக் கொண்டிருந்தான் துருவன்.
அந்த நேரம் பார்த்து தான் அது நடந்தது. ஆம் அவன் அவள் செய்த உணவை எல்லாம் ஒதுக்கி வைத்தவன் "இதோ நீங்கள் கேட்ட பர்கர்" என்று துருவன் தன் நண்பர்களிடம் கூறினான். எப்படியாவது இவர்களை விரட்ட வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டு இருக்க.
கே.கே "எனக்கு பஜ்ஜி போதும்" என்றவன் தன் நண்பன் அவனது மனைவியை ஒதுக்குகிறான் என்பதை அறிந்து, "காவ்யா வா மா உன் புருஷன் பக்கத்துல வந்து உட்கார்" என்று கூற துருவன் கே.கேவை முறைத்தான்...
அதை கண்டுகொள்ளாமல் அவன் ஜேம்ஸ்ஸிடம் பேசிக் கொண்டிருந்தான். கே.கேவிற்கு தான் தன் நண்பனின் குணம் தெரிமே... அவளோ துள்ளிக்குதித்து அவன் அருகே வந்து அமர்ந்தாள். அவனால் அவள் வந்து அமர்ந்ததை மறுக்க முடியவில்லை. அவளும் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்து என்னவோ எல்லாம் புரிந்தது போல தலை ஆட்டிக் கொண்டிருக்க... அவர்கள் இங்கேயே வளர்ந்தவர்கள் என்பதால் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்க.. அவளோ புரியாமல் தலையை சொரிந்துக் கொண்டிருந்தாள். கேகே தான் அவளுக்கு அவர்கள் பேசுவதை மொழிபெயர்ப்பு செய்துக் கொண்டிருக்க...
அதில் ஜேம்ஸ் அவனிடம் "கல்யாணம் பண்ணினது சொல்லியிருக்கலாம் டா. அதுவும் இப்பேர்ப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கிறது நீ சொல்லி இருக்கணும்" என்று கூற அவன் நக்கல் செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட துருவன்,
"எனக்கு யார்கிட்டயும் சொல்லணும்னு தோணல. அதுதான் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சுல... அப்புறம் என்ன??" என்று முகத்தில் அடித்தது போல கூற அவனது கோபத்தை உணர்ந்து வாயை அடைத்துக் கொண்டான்.
