Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 12

அவனோ, "சரிங்க உலக அழகி" என்றான்.

“என்ன நக்கலா? உன்னை நல்லா மீனை பொறிக்கிற மாதிரி பொரிச்சா தான் அடங்குவ போல" என்றாள் நக்கலாக.

"என்ன மீனை பொறிக்கிற மாதிரியா அக்கா… நான் எந்த வம்புக்கும் வர மாட்டேன் அக்கா" என்றான்.

"ஆஹ் இது நல்லா இருக்கு" என்று கூறியவளை கடந்துச் சென்ற துருவன் தன் லேப்டாப்பை எடுத்து வேகமாக தன் தந்தையிடம் அவன் செய்துக் கொண்டிருக்கும் வேலையை அவருக்காக அவன் பார்த்து க் கொண்டிருக்கும் வேலையை விடுவதாக வேகமாக ராஜினாமா கடிதம் எழுதி மெயில் செய்யும் முன் அவனது தந்தையிடம் இருந்து அவனுக்கு ஒரு மெயில் வந்தது.

அதில், "எப்படி இருந்தாலும் அடுத்து என்கிட்ட செய்யும் வேலையை நீ ராஜினாமா செய்வன்னு எனக்கு தெரியும். அதுக்கு முன்னே நானே உன்னை வேலையை விட்டு நீக்குறேன். இனி முதல் உன்னுடைய சேவை இந்த நிறுவனத்துக்கு வேண்டாம். நான் நித்தியை வைச்சு வேலை பார்த்துக்கிறேன்" என்று மெயில் செய்திருந்தார்.

அதை பார்த்தவன் மேலும் கடுப்படைந்து, ‘என்னை என்ன சொம்பைனு நினைத்து விட்டாரா? இவளை இங்கே கூட்டிட்டு வந்து விட்டுட்டா நான் என்ன இவ காலில் விழுந்து பூஜை பண்ணனுமா??’ என எண்ணியவனுக்கு இதை எல்லாம் எண்ணி தலை பாரமாக இருக்க காலையிலேயே சரக்கு அடிக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்ற வேகமாக பிரிட்ஜை திறந்தான்.

அதை பார்த்து வேகமாக ஓடி வந்தவள், “என்ன மாமா என்ன தேடுறீங்க??" என்று கேட்டாள்.

அவனோ தலையை பிடித்து அவளை பார்த்து முறைக்கவும், "என்ன மாமா தலை வலிக்குதா? நான் வேணா காபி போடவா??" என்க

"காவ்யா அப்படியே எனக்கு ஒரு காபி" என்று ஒரு தட்டில் சூடாக உப்புமாவை தின்றுக் கொண்டிருந்தான் கே.கே

அவனையும் தட்டையும் பார்த்த துருவனோ, "இப்போ தானே இதுங்க இரண்டும் சண்டை போட்டுட்டு இருந்துச்சுங்க... இப்போ என்ன தின்னுட்டு இருக்கான்" என அவன் கே.கேவை பார்த்து முறைக்க,

"இதோ அண்ணா போட்டு தரேன்" என்று கூறி துருவனை வேண்டும் என்றே ஒரு இடி இடிக்க... அவனோ காலையிலே இவளை கண்ட ஆத்திரமும் தந்தையின் வேலையையும் எண்ணியவன் பிரிட்ஜை திறந்து பீர் பாட்டிலை எடுத்து வைத்திருக்க அதற்குள் அவள் இடிக்கவும் அவள் மீதே மோத அவளோ அவன் விழுந்து விடாமல் இருக்க அவனை அணைக்கவும் அவனது முழு பாரமும் தாளாமல் அவனை அணைத்தபடி சமையல் அறையிலேயே அவள் மீதே அவன் விழுந்தான்.

விழுந்த விசையில் அவன் கையில் இருந்த பாட்டிலும் கீழே விழ
தன் மேல் விழுந்தவனை அவள் கைகள் தாங்கி பிடிக்க…அவளது உடலில் விழுந்தவன், எழ போக அவளது கைகளோ அவனை அணைத்து இருக்க அவளுள் கட்டுண்டு போக அவன் மனம் ஏனோ தவித்தது.

இரு உடல்களும் உரச அந்த உரசல்களே இருவரின் உடல்களுக்கும் ஒரு வித தவிப்பை கொடுக்க,

அந்த மோன நிலையில் அடுத்து அவன் கைகள் அவன் பேச்சை கேட்காது என்பதை உணர்ந்த அவனோ, வேகமாக எழ போனவன் கைகள் தாமாக மீண்டும் அவள் மீதே அவனுடல் உரசும் அளவிற்கு விழ... அவள் இதழில் அவன் இதழ் வேண்டும் என்றே உரசியதோ இல்லை அவளாக உரச வைத்தாளோ தெரியவில்லை.
ஆனால் உரசிக் கொள்ள அன்றைய கூடலுக்கு பின்னான இருவரின் உரசல்களும் ஒரு தவிப்பை கொடுக்க அவனுக்கு இதெல்லாம் பழக்கப்பட்டதோ என்னவோ அவளது இதழை நூலிழைக்கும் குறைவான நொடியில் தீண்ட… அவனது உடலை தன் கைகளால் இறுக்கிக் கொள்ள அதை உணர்ந்தவன் வேகமாக அவளிடம் இருந்து விடுபட, அவளோ கள்ள புன்னகை புன்னகைத்தாள். அவளுக்கு தான் தெரியுமே அவன் என்ன செய்தான் என்று,

தன் தவறை மறைத்துக் கொள்ள, அவனோ, "ஹே பார்த்து வர மாட்டியா டி" என்று கூறி எழ,

அவளும் நொடி பொழுதில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், "ஐயோ பாட்டில் உடைஞ்சு போச்சே" என்றவள், "காபி இப்போ போடவா மாமா?" என்று கண் சிமிட்டி விட்டு ஓடினாள்.

இவனோ அதை கண்டு, "இம்சை இம்சை" என்று முனகிக் கொண்டு போக அவளோ அவனை பார்த்து சிரித்தாள்.

அவனுக்கு இவளை கண்டது முதல் ஒரே பரபரப்பாக இருக்க... இங்கு இருந்தால் சரி வராது என்று அடுத்த பத்தாவது நிமிடம் வெளியே கிளம்பி விட இரவு எப்போது வந்தான் என அவளுக்கு தெரியாது.

கே.கே தான் அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுப்பது என்று செல்ல அவன் ஏற்கனவே வேலை செய்த இடத்தில் அவன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை தனக்காக தேடிக் கொண்ட துருவன் எப்போது வருகிறான் என அவளுக்கு தெரியாது.

இவனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என தன் குடும்பம் தடுத்தும் இவனே கதி என்று காவ்யா வந்து இருக்க அவனோ இவளை நிமிர்ந்து கூட பார்ப்பது இல்லை. வீட்டுக்கு எப்போது வருகிறான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. எப்போது செல்கிறான் என்றும் அவளுக்கு கண்டு பிடிக்கமுடியவில்லை.

இப்படி தான் இவன் ஒரு வாரத்தை ஓட்டிக் கொண்டு இருக்க... இந்த ஒரு வார காலமும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்களோ இல்லையோ கே.கே மற்றும் காவ்யா நல்ல நண்பர்கள் ஆகி இருக்க... கே.கேவிற்கு தெளிவாக புரிந்து போனது இவர்களுக்கு இடையில் பெரிதாக ஒன்றும் இல்லை.

ஆனாலும் காவ்யாவின் நல்ல மனதை புரிந்துக் கொண்டவனும் ஒரு வாரமாக நல்ல உணவு உண்ட நன்றிக்கடனுக்கும் சேர்த்து இதை எல்லாம் கவனித்து வந்த கே.கே நண்பனை எப்படி மடக்குவது என்று புரியாமல் முழித்தவனுக்கு ஒரு எண்ணம் உதிக்க அதை செயலாற்ற எண்ணினான்.

அதன் படி அவர்களுக்கு இருக்கும் பொதுவான நண்பர்களை வீட்டுக்கு அழைத்தான். ஆம் தன்னை போல யாரிடமும் தனக்கு திருமணம் ஆனதை கூறி இருக்க மாட்டான் என எண்ணி அவர்களை அழைக்க அவர்களும் வந்தனர்.

இது அறியாத துருவனிடம் "டேய் மச்சி எங்கே டா இருக்க.? நாங்க எல்லாம் உன் வீட்டுக்கு வந்து இருக்கோம் நீ எங்கே இருக்க ??" என்று ஜேம்ஸ் அழைக்க... அதை கேட்டதும் அவனது முகமே மாறி போனது.
எல்லோர்க்கும் தெரிந்து விட்டதா என அவன் நினைக்க, கணவனிடம் நல்ல பெயர் வாங்கி அவன் மனதில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என அவள் நினைத்து, அவனுடைய நண்பர்களை எல்லாம் சிறப்பாக கவனிக்க எண்ணினாள்.

ஆனால் அவள் ஒன்று நினைத்தால் தெய்வம் வேறு நினைக்க துவங்கி விடுமே...!!

மந்தாரம் தெளியும்…



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top