Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் : 11

"நீ எங்கே இங்கே ??" என அதிர்ச்சியுடன் வினவினான் துருவன் அவன் அவளை எதிர்பார்க்கவில்லை என அவன் முகம் அவளுக்கு தெரிவிக்க…

அவளோ தன் மலர்ந்த முகத்துடன், "நீங்களா என்னை தேடி வர மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் மாமா…அதான் நானே வந்துட்டேன்" என்று தன் கலகல சிரிப்புடன் கூற

"எப்படி வந்த? யாரை கேட்டு வந்த??" என்றான் அவளது சிரிப்பை ரசிக்க கூட மனமின்றி.

"அவ யாரை கேட்டு வரணும். உன் பொண்டாட்டி தானே அவ?" என்ற குரல் அவளுக்கு பின்னால் இருந்து ஒலிக்க அவனோ அங்கு அவனது தந்தையை எதிர்பார்க்கவில்லை. அவனை மேலும் வெறுப்பேற்றும் விதமாக, "என்ன மச்சி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? சொல்லவே இல்லை.. உனக்கு போய் எந்த இளிச்சவாயன் டா பொண்ணை கொடுத்தது??" என்று கேட்டான்.

அதை கேட்டவனோ இவன் வேற என்று எண்ணி எரிச்சல் ஆனவன், "வாயை மூடு டா கே.கே" என்றான்.

"அப்பா நான் தான் எல்லாமே பேசிட்டேனே? எனக்கு இவ கூட இனி வாழ இஷ்டம் இல்லை" என்று அவரது முகத்தை பார்க்காமல் எங்கேயோ பார்த்து கூற

அதை கேட்ட அவரோ "அதுக்கு நீ அவ கூட வாழவே தொடங்கவே இல்லையே பா. எனக்கு அதெல்லாம் தெரியாது. உன் மனைவியை உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன். இனி நீ ஆச்சு அவ ஆச்சு என்னமோ செய்ங்க" என்றார்.

"அப்பா நீங்க செய்யறது சுத்தமா சரி இல்லை" என்று பொங்கினான் மகன்.

"நீ செய்ததும் தான்..! தம்பி என்னை பேச வைக்காதே" என்றார் வணங்காமுடி.

"என் மருமக உன்கூட தான் இருப்பா... இருக்கணும்! அவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சு.. முதலில் உன்னை எதிர்க்கிறது நானாக தான் இருக்கும்" என்று எச்சரிக்கை தொனியில் கூறினார் வணங்காமுடி.

“அப்பா நீங்க என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தலையிடுறீங்க இது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றான்.

"நீ என் பையன். உன் வாழ்க்கையில் நான் தலையிடாமல் யார் தலையிடுவா? நான் வரேன். அவளை பார்த்துக்கோ" என்று கூறி விட்டுச் சென்றார்.

"மாமாக்கிட்ட எதுக்கு மாமா கோபப்படுறீங்க? நான் தான் வந்தேன். மாமாக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாமா" என்றாள்.

"வாயை மூடு டி.! என் உயிரை வாங்க இங்கேயும் வந்துட்டியா?? வாயை மூடிட்டு ஓரமா என் கண் முன்னாடி வராமல் எங்கேயாவது மூலையில் கிட" என்று கூறி கோபமாக செல்ல
அவளோ, "யப்பா காலையிலேயே மிளகாய் பொடி தின்னது போல இந்த கோபமா இருக்கார் மாமா. இவ்ளோ கோபம் உடம்புக்கு ஆகாது மாமா" என்க திரும்பி பார்த்து முறைத்தான்.

முதன் முறையாக விமானத்தில் பயணித்தது எல்லாம் கனவு போல இருந்தவளுக்கு, இன்னும் அநம்ப முடியவில்லை ஒரு அந்நிய நாட்டில் நாம் வந்து இருக்கிறோம் என்று.!

வணங்காமுடியுடன் வரும் போதே பார்த்தவளுக்கு எங்கு பார்த்தாலும் வெள்ளைத்தோல் பூசிய முகங்கள் ஆகவே தென்பட அவளுக்கு மலைப்பாக இருந்தது. எப்படியாவது அவளுக்கு அவளது மாமாவிடம் வந்தால் போதும் என்று இருக்க... இதோ அது போல் வந்து விட்டாள்.

அவனுக்கு அவள் வந்தது இரண்டு வாரமாக தணிந்த அவனது கோபத்தை மீண்டும் கொழுந்துவிட்டு எரிய வைக்க பேசாமல் பால்கனிக்கு போய் நின்றுக் கொண்டான்.

அவன் பின்னாலேயே வந்த கே.கே, "மச்சான் என்ன மச்சான் நல்ல நாட்டு சரக்கா கட்டிட்டு வந்து இருக்க சொல்லவே இல்ல??" என்று கூற அவனை பார்த்து முறைத்த துருவன்,

"வாய மூடிட்டு இரு டா... ஆமா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டா. நான் தான் அவ கழுத்தில் தாலி கட்டி இருக்கேன் போதுமா.? அவ தான் என் பொண்டாட்டி போதுமா?" என்று கூறியவன், "ஆனா எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல" என்று கூற

அவனோ, "ஓஹோ பிடிக்கலையா? ஆனால் ஆள் பார்க்க நல்லா தான் டா இருக்காங்க" என்று அங்கு உலாத்திக் கொண்டிருக்கும் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அவன் கூற,

அதை பார்த்து, "டேய் அவ என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கேன்" என்று கே.கேவின் பார்வையை பார்த்து எரிச்சலாகி கூறியவன் மீண்டும் ஒரு முறை முறைக்கவும், "சாரி டா மச்சான் நீ தான் பிடிக்கலன்னு சொன்னியா? அதான் பார்த்தேன்" என்று கூறி விட்டு ஓடி விட்டான் கே.கே.

அங்கே இருந்தால் அவனிருக்கும் கடுப்பில் அடித்தாலும் அடிப்பான் என்று அவன் ஓடி விட

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளோ ஓடி வந்தவனிடம், "ஹே இங்கே வா" என்றாள்.

"யூ மீன் மீ??" என்று கே.கே வினவ

"ஆமாம் மீன்… நீ தான் மீன்... இங்கே வா" எனவும் அவன் வர

"யாரை பார்த்து நாட்டு சரக்குன்னு சொல்ற வகுந்துடுவேன்! இதோ பார் மரியாதையா இருந்தா என்கிட்ட இருந்து நல்ல சோறு கிடைக்கும். ஏதாவது பண்ணின அம்புட்டுத்தான்… நான் உனக்கு தங்கச்சி புரியுதா..? நான் நல்ல இருக்கேன் நல்லா இல்லைன்னு என் மாமா சொன்னா மட்டும் போதும் நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை" என்றாள்.



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top